விநாயகா போற்றி!
தருவாய் வெற்றி!
தருவாய் வெற்றி!
***
சிரிக்கும் புத்தர் சிலைகள்
உறங்குபவர் வீட்டிலே அலங்காரப் பொம்மைகள்
உழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள்
உழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள்
***
தங்கத்தில் தகதகவென்றிருக்கும் தாமரை
கண்ணாடியானாலும் கவர்ந்திழுக்கும் கமலம்
முத்துவின் ரசிகைகள்
சொல்கிறார்கள்..
ரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!
ரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!
***
சாந்தம்
'இவர் முதத்தில் தவழும் அமைதி
உலகம் முழுவதும் நிலவட்டும்'
-சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?
***
உலகம் முழுவதும் நிலவட்டும்'
-சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?
***
பெங்களூரு 'கருடா மால்' வாசலில்...
மங்களகரமாய் பொம்மைகளின் அணிவகுப்பு!
இவ்வருட நவராத்திரிக்கான சிறப்பு!
***
இவ்வருட நவராத்திரிக்கான சிறப்பு!
***
எல்லோருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
***
***
அப்டேட்ஸ்:
18 அக்டோபர் 2009
PiT-அக்டோபர் 2009-போட்டி படங்களின் அணிவகுப்பு
26 அக்டோபர் 2009
வந்து விட்டார் எனது விநாயகரும் TOP 15-க்குள், பாருங்கள் இங்கே:
PiT அக்டோபர் 2009 - முதல் குட்டைப் பட்டியல்
இரண்டாவது முறையாக முதல் சுற்றில் என் படமும்:)!
***முத்துவின் ரசிகைகள் சொல்கிறார்கள்..
பதிலளிநீக்குரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!***
:-))))
ஜப்பானில் ரஜினிக்கு அடுத்து "முத்துச்சரம்" தான் பாப்புளர்னு சொல்லுங்க :-))
**************
மனிதர்களை போலில்லாமல் பொம்மைகள் காலத்தால் அழியாத அழகு தாங்க, ராமலக்ஷ்மி!
உங்களுக்கு வெற்றிமீது வெற்றியை (முடிந்தால் அமைதிக்கு நோபலையும் :) ) இந்த அழகு பொம்மைகள் வாங்கித்தர வாழ்த்துக்கள்!
தக தக தக தக தகவென ஆடவா ,வெற்றி வெற்றி வெற்றியென்று பாடவா
பதிலளிநீக்குஉறங்குபவர் வீட்டிலே அலங்காரப் பொம்மைகள்
பதிலளிநீக்குஉழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள்
உழைப்பவர்கள் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்களே ராமலஷ்மி.
மிக அற்புதமாக இருக்கிறது.
பதிலளிநீக்குசொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
பதிலளிநீக்குநோபல் பரிசு எனக்கும் :( !?!?
நச் நச் !!!!
போட்டிக்கு எது?
பதிலளிநீக்குவிநாயகர் வெற்றி தருவார்.
என் என்ட்ரி, காரைப் பார்த்தீர்களா?
சகாதேவன்
விநாயகர் & ரெண்டாவது ரசிகை என்னை வெகுவாய் கவர்ந்திருக்கிறது சூப்பரேய்ய்ய்ய் :)
பதிலளிநீக்குதீபத்திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி!!
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குபொற்றாமரையும் , புத்தனும் ரொம்ப பிடிச்சுருக்கு...
பதிலளிநீக்குநானும் ஒரு படம் அனுப்பிருக்கேன் ஆனா இவ்ளோ அழகா எடுக்கலை....
இனிப்பாய் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குதகதகன்னு இருக்கும் தாமரை நல்லா இருக்கு. (பொன் பிடிக்காத பெண் உண்டா:))
பதிலளிநீக்குபடங்களில் நேர்த்தி தெரிகிறது. முதலான ஆனைமுகன் படம் அருமை. சிரிக்கும் புத்தர்களும், முத்துவின் ரசிகைகளும் ஆனைமுகனைத் தொடருகிறார்கள்.
பதிலளிநீக்குதலைப்பு பொம்மை எனில், தங்கத் தாமரை எப்போது பொம்மைகளுள் சேர்ந்தது :))
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.
நான் தான் பர்ஷ்ட்டுனு நினைக்கிறேன் :)) பார்க்கலாம் !
பதிலளிநீக்குநல்லாயிருக்கு... வாழ்த்துகள்
பதிலளிநீக்கு//ரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
பதிலளிநீக்குராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!***//
முத்துவின் ரசிகைகள்னு படிக்கும்போதே இப்படி தோணிச்சு, நீங்களே சொல்லிட்டீங்க :)
எனக்கு எப்பவும் பிடிச்ச பிள்ளையார்தான் இப்பவும்! :) அந்த நிழலோட சேர்த்து அழகா இருக்கார். ஆனால் ஒவ்வொண்ணும் பார்க்க பார்க்க அதை விட இது அழகோன்னு தோணும்படி இருக்கு!
வெற்றி பெற வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!
//முத்துவின் ரசிகைகள்
பதிலளிநீக்குசொல்கிறார்கள்..
ரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!//
கண்டிப்பாக... நான் முத்து (ரஜினி)மற்றும் முத்துச்சரம் இரண்டுக்கும் ரசிகன்... இருவரும் என்னை மகிழ்விப்பதால்... அவர் படம்... நீங்கள் பதிவு...
பிள்ளையார் தொடர்ந்து வரும் சிரிக்கும் புத்தர் ஆகிய இரண்டு படங்களும் நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது...
தகதக தங்க தாமரை பளபளவென்று ஜொலிக்கிறது... சின்ன அம்மிணி சொன்னது போல், பொன் பிடிக்காதோர் உண்டோ..??!!
//goma said...
உறங்குபவர் வீட்டிலே அலங்காரப் பொம்மைகள்
உழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள்
உழைப்பவர்கள் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்களே ராமலஷ்மி.//
கோமா சொன்னது மிகவும் நன்றாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது...
//சாந்தம்
'இவர் முதத்தில் தவழும் அமைதி
உலகம் முழுவதும் நிலவட்டும்'
-சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?//
இந்த நல்ல சிந்தனை இருந்தால் நோபல் என்ன...அதைவிட பெரிய பரிசு இருப்பினும் கிடைக்கும்...
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்...
(என் வலைப்பக்கம் வந்து, தீபாவளி பரிசு பெற்று சென்றமைக்கு நன்றி...ஹீ...ஹீ)
குட்டி கணபதியும் முத்துவின் முதல் ரசிகையும் கொள்ளை அழகு.
பதிலளிநீக்குகண்ணாடி தாமரையும் நல்லா இருக்கு.கருடா மால் பத்தி எழுத போட்டோக்கள் எடுத்திருக்கேன்...ஆனா உங்களுடையதை பார்த்துட்டு எழுதறதா வேண்டாமானு தயக்கம் வந்திருச்சு.
விநாயகர் அழகு.
பதிலளிநீக்குI like budda. Diwali wishes.
பதிலளிநீக்குபுள்ளையார்தான் கொள்ளையடிக்கிறார்
பதிலளிநீக்குமனதை!
வருண் said...
பதிலளிநீக்கு//:-))))
ஜப்பானில் ரஜினிக்கு அடுத்து "முத்துச்சரம்" தான் பாப்புலர்னு சொல்லுங்க :-))//
ஹிஹி..
---------------------
//மனிதர்களை போலில்லாமல் பொம்மைகள் காலத்தால் அழியாத அழகு தாங்க, ராமலக்ஷ்மி!//
அழகான கருத்து.
---------------------
//உங்களுக்கு வெற்றிமீது வெற்றியை (முடிந்தால் அமைதிக்கு நோபலையும் :) ) இந்த அழகு பொம்மைகள் வாங்கித்தர வாழ்த்துக்கள்!//
இந்த அழகுப் பொம்மைகள் உங்களையெல்லாம் இங்கு அழைத்து இழுத்து வந்து வாழ்த்த ரசிக்க வைத்திருப்பதே வெற்றியும் பரிசும்:)!
goma said...
பதிலளிநீக்கு//தக தக தக தக தகவென ஆடவா ,வெற்றி வெற்றி வெற்றியென்று பாடவா//
நீங்கள் ஆடினாலும் அருமையாய் இருக்கும். பாடினாலும் இனிமையாய் இருக்கும். ரசிக்கக் காத்திருக்கிறோம்:)! வாழ்த்துப் பாடலுக்கு நன்றி:))!
goma said...
பதிலளிநீக்கு// *** உறங்குபவர் வீட்டிலே அலங்காரப் பொம்மைகள்
உழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள் ***
உழைப்பவர்கள் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்களே ராமலஷ்மி.//
உங்கள் கருத்து ரொம்பச் சரி. ஆனால் பாருங்கள், நம்பிக்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு பொம்மைகள் எங்கே எப்படியாக இருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். கேட்டதால் ஒரு சிறிய விளக்கம்:
கொள்ளைச் சிரிப்பில்
உள்ளம் தொலைத்துக்
கொண்டு வருவார்
அலங்காரத்துகென-அது
உழைப்பவர் வீடெனில்
அதிர்ஷடப் பொம்மையாய்
அருள்புரிவார் அழகாய்ச்
சிரித்தபடி புத்தர்!
கொள்ளை கொள்ளையாய்
கொட்டும் பணமென
வாங்கி வைத்துவிட்டு
உறங்குவார் வீட்டில்
அலங்காரப் பொம்மையாகவே
வீற்றிருப்பார் எள்ளி
நகைத்தபடி புத்தர்!
natpu valai said...
பதிலளிநீக்கு// மிக அற்புதமாக இருக்கிறது.//
என் நன்றிகள் நட்பு வலை:)!
goma said...
பதிலளிநீக்கு// ***சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?***
நச் நச் !!!!//
நன்றி:))!
கொஞ்சம் லேட்டு போல நான்...
பதிலளிநீக்குபரவாயில்லை லேட்டஸ்ட்டா ஒரு கம்மென்ட் போடறேன்...
"இவர் முதத்தில் தவழும் அமைதி
உலகம் முழுவதும் நிலவட்டும்'"
இதற்கும் உங்கள் எழுத்தே பதில்...
"சிரிக்கும் புத்தர் சிலைகள்"
எல்லாமே சூப்பருங்க. இதே விநாயகர் ப்ளான்ல தான் நானும் இருக்கேன். சனிக்கிழமை காலையில எடுக்கணும். எப்படி வருதுன்னு பாக்கலாம் :-)
பதிலளிநீக்கு1) விநாயகா போற்றி தருவாய் வெற்றி
பதிலளிநீக்குவெற்றி நிச்சியம் .
2)சிரிக்கும் புத்தர் சிலை அழகு.
3)//உறங்குபவர் வீட்டில் அலங்காரப்
பொம்மைகள்
உழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள்.//
உழைப்பவருக்கு அதிர்ஷடத்தை அள்ளிக் கொடுக்கும் பொம்மைகள்
4)உங்களுக்கு தங்கத்தாமரை விருது நிச்சியம் என்பதை உணர்த்துகிறது.
5)அடுத்தது காட்டும் பளிங்கு போல்
உங்கள் முத்துசரம் அனைவரையும்
கவரும் என்பதை கண்ணாடி கமலம்
உணர்த்துகிறது.
6)ரஜனியின் முத்துக்கு மட்டும் ரசிகைகள் இல்லை ராமலக்ஷ்மிக்கும்
ரசிகைகள் தான் உண்மை.
7)அமைதி தவழும் புத்தர் உலக அமைதியை தரட்டும்.
அன்பர்களின் பாராட்டு எனும் நோபல்
பரிசை முதலில் பிடியுங்கள் ராமலக்ஷ்மி.
தீபத்திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடுப்பத்தார் அனைவருக்கும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புள்ளையார் தான்...சூப்பரு ;))
பதிலளிநீக்குஇரண்டு தாமரைகளும் இதயத்தை அதிகமாக வருடின :)
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள்!
என் கவிதைகளும் கட்டுரைகளும்தான் இது வரை உங்களை உசுப்பி கார சாரமான ஹிட் கவிதை கட்டுரைக்கு வழி செய்து வந்தன .இப்பொழுது என் பின்னூட்டம் கூட ஒரு நீரோடையென சலசலக்கும் கவிதைக்கும் வழி காட்டியிருக்கிறதே.
பதிலளிநீக்குதக தக தக தக தகவென ஆடவா ,வெற்றி வெற்றி வெற்றியென்று பாடவா.. என்ற என் பின்னூட்டத்துக்கு உங்கள் பதில் இது...
பதிலளிநீக்குநீங்கள் ஆடினாலும் அருமையாய் இருக்கும். பாடினாலும் இனிமையாய் இருக்கும். ரசிக்கக் காத்திருக்கிறோம்:)! வாழ்த்துப் பாடலுக்கு நன்றி:))!
ஓஹோ நீங்கள் அப்படி வருகிறீர்களா . பாட வா! ஆட வா!என்று நான் உங்களை அழைக்கிறேன் .
எல்லா படங்களும் அருமை :-)
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துகள்.
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//போட்டிக்கு எது?
விநாயகர் வெற்றி தருவார்.//
வெற்றி தருவார் என நீங்கள் ஆசி நல்கிய விநாயகரேதான்:)!
//என் என்ட்ரி, காரைப் பார்த்தீர்களா?//
பார்த்தேன், மினியேச்சர் கார் வெகு அழகு. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//விநாயகர் & ரெண்டாவது ரசிகை என்னை வெகுவாய் கவர்ந்திருக்கிறது சூப்பரேய்ய்ய்ய் :)//
நன்றி ஆயில்யன். இரண்டாவது ரசிகை இரண்டே இன்ச் உயரமுள்ள ஒருகுட்டிப் பொம்மை. பின்னால் மேக்னட் இருக்கும். வெள்ளை டி-ஷர்ட் பின்னணியில் பின்னால் ஸ்டீல் ஸ்கேல் கொண்டு பொம்மையை நிறுத்தி, மேக்ரோ மோடில் எடுத்தது.
ஹி.. இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால்தான் நாமளும் வல்லுநர் என நினைத்துக் கொள்வார்கள்:)))!
அக்கா நீங்களா
பதிலளிநீக்குஎன்ன எடுக்கரதுன்னு இன்னும் முடிவுவே பண்ணாம இருக்கேன் நான்
நீங்க செம மிரட்டு மிரட்டீருகீங்க
எல்லாப்படங்களும் அருமையா எடுத்திருகீங்க.
கலக்குங்க.
வாழ்துக்கள் :-))
முதல் பிள்ளையார் அமர்ந்திருக்கும் கண்ணாடி மேஜையின் மேல் தளம் ,இரண்டு லேயர் கண்ணாடிகள் கொண்டதா?
பதிலளிநீக்குஇரண்டு பிம்பங்கள் தெரிகிறதே
பிள்ளையார் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
///கண்ணாடியானாலும் கவர்ந்திழுக்கும் கமலம்///
பதிலளிநீக்குஅருமை!
முதல் படமாக இருக்கும் முழு முதற் கடவுள் கலக்கல்.. அதிலும் அதில் இருக்கும் ரிஃப்ளக்ஷன் அருமை..
பதிலளிநீக்குஇது வரை நான் பார்த்திராத பிள்ளையார்...
பதிலளிநீக்குஎல்லாமே அருமை.
உங்களுக்கு நிச்சயமா பரிசு கொடுக்கலாம்.
மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா.
தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குNo Time..I come later :-)
பதிலளிநீக்குதீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி...!!
பதிலளிநீக்குRAMYA said...
பதிலளிநீக்கு//படங்கள் அனைத்தும் அருமை!//
பாராட்டுக்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி ரம்யா!
பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு//பொற்றாமரையும் , புத்தனும் ரொம்ப பிடிச்சுருக்கு...//
படம் எடுத்ததன் பலன் வீணாகவில்லை. நன்றி வசந்த்:)!
// நானும் ஒரு படம் அனுப்பிருக்கேன் ஆனா இவ்ளோ அழகா எடுக்கலை....//
பார்த்தேன், அந்த வியாபார் கான்செப்ட் எனக்குப் பிடித்தே இருந்தது. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு//தகதகன்னு இருக்கும் தாமரை நல்லா இருக்கு. (பொன் பிடிக்காத பெண் உண்டா:))//
நன்றி அம்மிணி:)! சொல்லியிருக்கும் காரணம் சூப்பர்:))!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//படங்களில் நேர்த்தி தெரிகிறது.//
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம் PiT புண்ணியத்தில்:))!
//முதலான ஆனைமுகன் படம் அருமை. சிரிக்கும் புத்தர்களும், முத்துவின் ரசிகைகளும் ஆனைமுகனைத் தொடருகிறார்கள்.//
நன்றி நன்றி, வாழ்த்துக்களுக்கும்:)!
//தலைப்பு பொம்மை எனில், தங்கத் தாமரை எப்போது பொம்மைகளுள் சேர்ந்தது :))//
பாயிண்டை பிடிச்சிருவீங்களே:))?
பொம்மைகள் யாவும் சிறிய அளவு சிலைகள்.
சிலைகள் யாவும் பெரிய அளவிலான பொம்மைகள்.
என திவாவின் பிட் பதிவிலே ஒப்புக் கொள்ளப் பட்டு கோயில் சிற்பங்கள் கூட வேலிட் எண்ட்ரியாக நிற்கிறது பாருங்கள் இம்மாதப் படங்களில்:)!
//நான் தான் பர்ஷ்ட்டுனு நினைக்கிறேன் :))//
இரவில் பதிவைப் போட்டு விட்டு பதிவர் தூங்கப் போய் விட்டால் அப்படித்தான் ஏமாந்து விடுவோம்:)! எனக்கும் இந்த அனுபவம் உண்டு:)!
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு//நல்லாயிருக்கு... வாழ்த்துகள்//
நன்றி ஞானசேகரன்.
வந்துட்டேன், வந்துட்டேன்!
பதிலளிநீக்குமுதல் படம் பிள்ளையார் ரிப்லெக்ஷன்ல பிள்ளையா மட்டுமே இருக்கார்.ர் காணோம். ரிஜெக்டட்.
அடுத்து புத்தர்.2 வது படம்ல நிழல் கெடுக்குது. தங்கத்தாமரை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா பொம்மை.???? ம்ம்ம்ம்.. கண்ணாடி தாமரை பிடிக்கலை.ஜப்பான் பெண்மணிகளும் விசேஷமா தோணலை. கடேசி படத்திலே ஒண்ணும் பெரிசா இல்லை.
என் ஓட்டு முதல் புத்தருக்கே! கருப்பு பின்புலம் பொம்மையை எடுத்துக்காட்டுது. வாழ்த்துக்கள்!
கவிநயா said...
பதிலளிநீக்கு//முத்துவின் ரசிகைகள்னு படிக்கும்போதே இப்படி தோணிச்சு, நீங்களே சொல்லிட்டீங்க :)//
ஒரே அலைவரிசை:)?
// எனக்கு எப்பவும் பிடிச்ச பிள்ளையார்தான் இப்பவும்! :) அந்த நிழலோட சேர்த்து அழகா இருக்கார்.//
உங்களுக்குப் பிடிக்குமெனத் தெரியும்.
//ஆனால் ஒவ்வொண்ணும் பார்க்க பார்க்க அதை விட இது அழகோன்னு தோணும்படி இருக்கு!
வெற்றி பெற வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//
நன்றி கவிநயா!
R.Gopi said...
பதிலளிநீக்கு//கண்டிப்பாக... நான் முத்து (ரஜினி)மற்றும் முத்துச்சரம் இரண்டுக்கும் ரசிகன்... இருவரும் என்னை மகிழ்விப்பதால்... அவர் படம்... நீங்கள் பதிவு...//
நன்றி:)!
// பிள்ளையார் தொடர்ந்து வரும் சிரிக்கும் புத்தர் ஆகிய இரண்டு படங்களும் நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது...//
பின்னணியும் ஒரு காரணம்.
--------
//தகதக தங்க தாமரை பளபளவென்று ஜொலிக்கிறது... சின்ன அம்மிணி சொன்னது போல், பொன் பிடிக்காதோர் உண்டோ..??!!//
அதானே:)?
------------
//கோமா சொன்னது மிகவும் நன்றாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது...//
அழகாய் மட்டுமின்றி அர்த்தத்துடனும்தான் சொல்லியிருக்கிறார்கள்.
-------
(என் வலைப்பக்கம் வந்து, தீபாவளி பரிசு பெற்று சென்றமைக்கு நன்றி...ஹீ...ஹீ)
பரிசு என்றால் விட்டு விடுவோமா என்ன:))? உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோபி:)!
sindhusubash said...
பதிலளிநீக்கு//குட்டி கணபதியும் முத்துவின் முதல் ரசிகையும் கொள்ளை அழகு.
கண்ணாடி தாமரையும் நல்லா இருக்கு.//
நன்றி சிந்து.
//கருடா மால் பத்தி எழுத போட்டோக்கள் எடுத்திருக்கேன்...ஆனா உங்களுடையதை பார்த்துட்டு எழுதறதா வேண்டாமானு தயக்கம் வந்திருச்சு.//
நானே கத்துக்குட்டி லெவலில்:)! இதைப் பார்த்தா தயக்கம்? கண்டிப்பாக எழுதுங்கள்.
SurveySan said...
பதிலளிநீக்கு// விநாயகர் அழகு. //
நன்றி சர்வேசன்.
உங்கள் பதிவில் கொடுத்திருந்த யோசனைகளைப் பின்பற்றியே எடுத்தேன். அதற்கும் நன்றி.
தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு// I like budda. Diwali wishes.//
பலருக்கும் புத்தர் பிடித்திருக்கிறார். விநாயகர் போட்டிக்குச் சென்று விட்டார்.
தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன்:)!
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//புள்ளையார்தான் கொள்ளையடிக்கிறார்
மனதை!//
‘ஆனை’ முகன் அல்லவா:)? நன்றி மேடம்!
ஈ ரா said...
பதிலளிநீக்கு//"இவர் முதத்தில் தவழும் அமைதி
உலகம் முழுவதும் நிலவட்டும்'"
இதற்கும் உங்கள் எழுத்தே பதில்...
"சிரிக்கும் புத்தர் சிலைகள்"//
உண்மைதான் ஈ.ரா! சிரிப்பாய் சிரித்துத்தான் கிடக்க்கிறது, உலகிலே அமைதி:(! நாம் நம் ஆதங்கத்தை விடாமல் வெளிப்படுத்தியபடி..!
Truth said...
பதிலளிநீக்கு// எல்லாமே சூப்பருங்க. இதே விநாயகர் ப்ளான்ல தான் நானும் இருக்கேன்.//
விநாயகர் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும் வழக்கம் போலவே.
//சனிக்கிழமை காலையில எடுக்கணும். எப்படி வருதுன்னு பாக்கலாம் :-)//
ஆர்வமாய் காத்திருக்கிறோம், எழுந்தருளப் போகும் உங்கள் விநாயகரை எதிர்நோக்கி! வாழ்த்துக்கள் கிரண்:)!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//1) விநாயகா போற்றி தருவாய் வெற்றி
வெற்றி நிச்சியம் .
2)சிரிக்கும் புத்தர் சிலை அழகு.//
நன்றிம்மா, ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு ரசித்ததை விவரித்துப் பாராட்டியிருப்பதற்கு.
//தீபத்திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடுப்பத்தார் அனைவருக்கும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
கோபிநாத் said...
பதிலளிநீக்கு// புள்ளையார் தான்...சூப்பரு ;))//
நன்றி கோபிநாத்:)!
" உழவன் " " Uzhavan " said...
பதிலளிநீக்கு// இரண்டு தாமரைகளும் இதயத்தை அதிகமாக வருடின :)//
இதயத் தாமரைகள்:)? தாமரை என்றும் அழகுதான்.
//தீபாவளி வாழ்த்துக்கள்!//
நன்றி உழவன்!
goma said...
பதிலளிநீக்கு// என் கவிதைகளும் கட்டுரைகளும்தான் இது வரை உங்களை உசுப்பி கார சாரமான ஹிட் கவிதை கட்டுரைக்கு வழி செய்து வந்தன.//
எதையும் காரசாரமென உணர்ந்து எழுதியதில்லை:)! அழுத்தம் திருத்தமாய் சொல்லப்படும் கருத்துக்கள் சிலவேளைகளில் அப்படியொரு தோற்றத்தைத் தந்திருக்க வாய்ப்பிருக்கிறது!
//இப்பொழுது என் பின்னூட்டம் கூட ஒரு நீரோடையென சலசலக்கும் கவிதைக்கும் வழி காட்டியிருக்கிறதே.//
அப்போ, நீரோடையை ஏதேனும் இதழ்களை நோக்கித் திரும்பி விட்டிடலாமா? பாருங்கள், முதல் பின்னூட்டம் கவிதையையும் அடுத்தது நல்ல யோசனையையும் தந்துள்ளது:)! நன்றி.
//ஹிட் கவிதை//
எனது ‘பால் நிலா’ கவிதை கூட உங்களுடனான ஒரு உரையாடலில் பிறந்ததே. படைப்புக்கான பொறி எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பிறக்கக் கூடும் என்பதற்கான இன்னொரு உதாரணம்:)!
goma said...
பதிலளிநீக்கு//முதல் பிள்ளையார் அமர்ந்திருக்கும் கண்ணாடி மேஜையின் மேல் தளம் ,இரண்டு லேயர் கண்ணாடிகள் கொண்டதா? இரண்டு பிம்பங்கள் தெரிகிறதே//
ஒரே லேயர்தான். இதை நீங்கள் வீட்டிலே பரீட்சித்துப் பாருங்களேன். எந்தக் கண்ணாடி மேலும் வைக்கப் படும் பொருளின் பிம்பம் ஓரத்தில் இரண்டு லேயருடனேதான் தெரிகிறது.
// பாட வா! ஆட வா!என்று நான் உங்களை அழைக்கிறேன் .//
ஹை, அப்போது இடைவெளி விடாமல் கேட்டு விட்டு, இப்போதுதான் அழைப்பை வைக்கிறீர்கள்:))!
சிங்கக்குட்டி said...
பதிலளிநீக்கு// எல்லா படங்களும் அருமை :-)
தீபாவளி வாழ்த்துகள்.//
நன்றி சிங்கக்குட்டி:)! உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.
கார்த்திக் said...
பதிலளிநீக்கு//அக்கா நீங்களா
என்ன எடுக்கரதுன்னு இன்னும் முடிவுவே பண்ணாம இருக்கேன் நான்
நீங்க செம மிரட்டு மிரட்டீருகீங்க//
நானேதான்:), மிரட்டவெல்லாம் இல்லை, சற்றே மெனக்கிட்டிருக்கிறேன் அவ்வளவுதான். எல்லா ஷாட்டும் பெர்ஃபக்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது, இருந்தாலும் ஜாலியாக பார்வைக்கு வைத்தாயிற்று:))!
//எல்லாப்படங்களும் அருமையா எடுத்திருகீங்க.
கலக்குங்க.
வாழ்துக்கள் :-))//
நன்றி கார்த்திக்:)! உங்கள் எண்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்!
திகழ் said...
பதிலளிநீக்கு// பிள்ளையார் அருமை
வாழ்த்துகள்//
நன்றி திகழ்:)!
ஜீவன் said...
பதிலளிநீக்கு*** ///கண்ணாடியானாலும் கவர்ந்திழுக்கும் கமலம்///
அருமை! ***
வாசகமா படமா? எப்படியானாலும் நன்றி ஜீவன்:)!
வெண்பூ said...
பதிலளிநீக்கு//முதல் படமாக இருக்கும் முழு முதற் கடவுள் கலக்கல்.. அதிலும் அதில் இருக்கும் ரிஃப்ளக்ஷன் அருமை..//
நன்றி வெண்பூ.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//முதல் படமாக இருக்கும் முழு முதற் கடவுள் கலக்கல்.. அதிலும் அதில் இருக்கும் ரிஃப்ளக்ஷன் அருமை..//
நன்றி வெண்பூ.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//முதல் படமாக இருக்கும் முழு முதற் கடவுள் கலக்கல்.. அதிலும் அதில் இருக்கும் ரிஃப்ளக்ஷன் அருமை..//
நன்றி வெண்பூ.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//முதல் படமாக இருக்கும் முழு முதற் கடவுள் கலக்கல்.. அதிலும் அதில் இருக்கும் ரிஃப்ளக்ஷன் அருமை..//
நன்றி வெண்பூ!
சுசி said...
பதிலளிநீக்கு//இது வரை நான் பார்த்திராத பிள்ளையார்...
எல்லாமே அருமை.
உங்களுக்கு நிச்சயமா பரிசு கொடுக்கலாம்.
மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா.//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சுசி!
நசரேயன் said...
பதிலளிநீக்கு//தீபத் திருநாள் வாழ்த்துக்கள்//
நன்றி நசரேயன்.
கிரி said...
பதிலளிநீக்கு// No Time..I come later :-)//
மெதுவாய் வரலாம்:)!
லவ்டேல் மேடி said...
பதிலளிநீக்கு//தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி...!!//
நன்றி மேடி:)! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
திவா said...
பதிலளிநீக்கு//வந்துட்டேன், வந்துட்டேன்!//
வாங்க மிஸ்டர் சுப்புடு வாங்க:))!
//முதல் படம் பிள்ளையார் ரிப்லெக்ஷன்ல பிள்ளையா மட்டுமே இருக்கார்.ர் காணோம். ரிஜெக்டட்.//
அதற்குக் காரணம் இருக்கிறது. தும்பிக்கை முன் வந்தும் முகம் உள்ளடங்கியும் இருக்கும் அமைப்புடைய பொம்மை என்பதால் தும்பிக்கை வரைதான் பிம்பத்தில் தெரியும். ர் எனும் உச்சி தெரியார்.
//அடுத்து புத்தர்.2 வது படம்ல நிழல் கெடுக்குது.//
லைட்டிங் சீராக இல்லைதான்.
// தங்கத்தாமரை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா பொம்மை.???? //
பெரிய சைஸ் பொம்மை:)? எங்கேயோ கேட்ட குரல்:)?
//ம்ம்ம்ம்.. கண்ணாடி தாமரை பிடிக்கலை.//
ஹூம்... பல ஷாட்டுகளுக்குப் பின் ஓரளவு ஓக்கேயானது இதுதான்:(! இதை அடியில் டார்ச் மூலம் ஒளி பாய்ச்சி எடுக்கும் ஐடியா இருக்கிறது:)! சரியாக வந்தால் ஃபிளிக்கரில் போடுகிறேன்:)!
//ஜப்பான் பெண்மணிகளும் விசேஷமா தோணலை.//
அந்த வாசகத்துக்காக சேர்த்ததுன்னு வைத்துக் கொள்ளுங்கள்:)))!
//கடேசி படத்திலே ஒண்ணும் பெரிசா இல்லை.//
ரைட், எடுத்ததாலே போட்டது!
//என் ஓட்டு முதல் புத்தருக்கே! கருப்பு பின்புலம் பொம்மையை எடுத்துக்காட்டுது. வாழ்த்துக்கள்!//
ஆமாம், பலருக்கும் பிடித்தும் உள்ளது. ஆனால் அதற்குப் பின்னணியில் வலப்பக்கம் மடிப்பு ஒன்று தெரிவதால் என் பார்வையில் ரிஜெக்ட் ஆகி விட்டது:(!
அரிச்சுவடி க்ளாஸில்தானே இருக்கிறேன்(றோம்?) :)? போகப் போக பெர்ஃபக்ஷனுக்கும் ட்ரை செய்யலாம்:)!
உங்கள் விரிவான விமர்சனங்களுக்கு மிக்க நன்றி திவா!
ஹை, அப்போது இடைவெளி விடாமல் கேட்டு விட்டு, இப்போதுதான் அழைப்பை வைக்கிறீர்கள்:))!
பதிலளிநீக்குமச்சி கவுத்திட்டியே மச்சி
எனது ‘பால் நிலா’ கவிதை கூட உங்களுடனான ஒரு உரையாடலில் பிறந்ததே
பதிலளிநீக்குபால்நிலாவும் அப்படித்தானா...
இதோ வாசிச்சிட்டு வாரேன்
பால்நிலா பார்த்து வந்தேன்
பதிலளிநீக்குஎன் பங்களிப்பு எதுவென்று தெரியவில்லை.
தங்கத் தாமரை மகளே
பதிலளிநீக்குவாழுமே:)
தட்டிக் கொண்டு வருமே
முதல் பரிசைத்தானே.
அட்வான்ஸ் வாழ்த்துகள். &தீபாவளி வாழ்த்துகள்..
/*சொல்கிறார்கள்..
பதிலளிநீக்குரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!
*/
:-))
அழகான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள்
goma said...
பதிலளிநீக்கு//மச்சி கவுத்திட்டியே மச்சி//
:))!
தனி உரையாடலில் பிறந்து 'பால் நிலா’வாக வானத்தில் மிதந்த கதையை தனி மடலில் விளக்குகிறேன்:)! பொறுத்திருங்கள்:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு// தங்கத் தாமரை மகளே
வாழுமே:)
தட்டிக் கொண்டு வருமே
முதல் பரிசைத்தானே.
அட்வான்ஸ் வாழ்த்துகள். &தீபாவளி வாழ்த்துகள்..//
உங்கள் பாராட்டே பரிசு. உங்கள் வாழ்த்துக்களே தந்திடுகிறது மகிழ்ச்சியை, மிக்க நன்றி வல்லிம்மா!
அமுதா said...
பதிலளிநீக்கு// :-))//
ரசிகைகளை ரசித்தமைக்கும்...
//அழகான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள்//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அமுதா!
சர்வேசன் ஒரு தட்டையான பிள்ளையாரை பயன்படுத்தி போட்டோ எடுத்தாரு. நம்ம குண்டு ...ம்ம்ம் அப்படி ஒண்ணும் குண்டு இல்லை.. சரிப்படமாட்டார்!
பதிலளிநீக்குதிவா said...
பதிலளிநீக்கு//சர்வேசன் ஒரு தட்டையான பிள்ளையாரை பயன்படுத்தி போட்டோ எடுத்தாரு.//
நல்ல அப்சர்வேஷன். ஆமாம், ஆகையால்தான் உச்சி வரை பிம்பத்தில் காட்சி தந்தா'ர்':)!
//நம்ம குண்டு ...ம்ம்ம் அப்படி ஒண்ணும் குண்டு இல்லை.. சரிப்படமாட்டார்!//
ஆம், நாம் எடுத்தது அழகான ‘தொந்தி’க் கணபதி! ஆனாலும் என்ன, பிம்பத்தில் முழுமையாய் தெரிந்தே ஆகணும் என்கிற கட்டாயம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். எப்படியோ எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துப் பதிவில் அருள் பாலித்து விட்டார் என்பதில் எனக்குப் பெரும் திருப்தியே:)! நன்றி திவா!
திவா
பதிலளிநீக்குராமலஷ்மி
அது என்ன குண்டு தட்டை தொந்தின்னு ,பிள்ளையாரைச் சொ..ல்.ல்.ல்.ல்.ரா மா ஆ ஆ..திரி ...யாரைச் சொல்லிட்டு இருக்கீங்க...
என்ன இது சின்னப் பிள்ளத் தனமா.இருக்கு?.உங்க பொம்மையை ஸ்டேஜில் வச்சாச்சுல்ல ..ரிசல்ட் வர்ர்ர வரைக்கும் கப் சிப்
//முத்துவின் ரசிகைகள்
பதிலளிநீக்குரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!//
என்னைப்போல ரசிகர்களும் தான் ... :-)
//சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?
***//
ஹா ஹா போட்டு தாக்குங்க!
//ராமலக்ஷ்மி said...
ஆயில்யன் said...
//விநாயகர் & ரெண்டாவது ரசிகை என்னை வெகுவாய் கவர்ந்திருக்கிறது சூப்பரேய்ய்ய்ய் :)//
நன்றி ஆயில்யன். இரண்டாவது ரசிகை இரண்டே இன்ச் உயரமுள்ள ஒருகுட்டிப் பொம்மை. பின்னால் மேக்னட் இருக்கும். வெள்ளை டி-ஷர்ட் பின்னணியில் பின்னால் ஸ்டீல் ஸ்கேல் கொண்டு பொம்மையை நிறுத்தி, மேக்ரோ மோடில் எடுத்தது.
ஹி.. இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால்தான் நாமளும் வல்லுநர் என நினைத்துக் கொள்வார்கள்:)))//
ஹா ஹா ஹா ரொம்ப ரசித்தேன் ராமலக்ஷ்மி.... இதை போல நகைச்சுவைகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்
நீங்க படம் எடுப்பதில் நன்கு தேறி வருகிறீர்கள் ராமலக்ஷ்மி..இது டெம்ப்ளேட் பாராட்டு அல்ல.
எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம்..உங்க ஆர்வத்தை நினைத்து.
நாம் இருவரும் ஒருமுறை படம் போட்டிக்கு அனுப்பினோம் நினைவிருக்கிறதா! நீங்க கூட ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தீர்கள்..நான் அதன் பிறகு விட்டு விட்டேன்..நீங்கள் தொடர்வது ரொம்ப சந்தோசம்.
தீபாவளி திருநாளை போல உங்கள் பதிவுகளும் வண்ணமயமாக (Note this point) இருக்க வாழ்த்துக்கள்.
ரா அக்கா மானிட்டர் கோச்சுக்கிறாங்க..கப் சிப்!
பதிலளிநீக்குசந்தடி சாக்கிலே இதையும் பாருங்க!
http://chitirampesuthati.blogspot.com/2009/10/blog-post_17.html
@ கோமா,
பதிலளிநீக்கு// தொந்திக் கணபதி வா வா வா
வந்தேன் ஒருவரம் தா தா தா
கந்தனின் அண்ணா வா வா வா
கனிவுடன் ஒருவரம் தா தா தா
ஆனை முகத்துடன் வா வா வா
அவசியம் ஒருவரம் தா தா தா
பானை வயிற்றுடன் வா வா வா
பரிவுடன் ஒருவரம் தா தா தா//
-------
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
செங்கட் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர்
..கதிர்காமா!
--------
என்றெல்லாம் பாடல்களே உள்ளனவே, கோமா! சரி வகுப்புத் தலைவி நீங்கள் சொன்னபடியே கேட்டுக் கொள்கிறோம்:)! முடிவு வரக் காத்திருக்கிறோம். நன்றி:)!
கிரி said...
பதிலளிநீக்கு//**ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!**
என்னைப்போல ரசிகர்களும் தான் ... :-)//
தன்யை ஆனேன்:)!
-------------------
***/ //சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?//
ஹா ஹா போட்டு தாக்குங்க!/***
நாம தாக்கி எதுவும் நடக்கப் போவதில்லை என்றாலும் நம்ம கருத்தை முன் வைத்தாகணுமே:)!
---------------------
//ஹா ஹா ஹா ரொம்ப ரசித்தேன் ராமலக்ஷ்மி.... இதை போல நகைச்சுவைகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்//
பதிவுகள்தான் எப்போதும் சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ஃபோட்டோ பதிவுகளும் பின்னூட்டங்களுமாவது கலகலப்பாக இருக்கட்டுமே:)!
----------------------
//எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம்..உங்க ஆர்வத்தை நினைத்து.//
எல்லாப் புகழும் PiT-க்கே. பதிவுலகில் நுழைந்த மாதத்திலிருந்து ஒரு மாதம் கூட விடாமல் இதுவரை போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளேன்.
-------------------------
//நான் அதன் பிறகு விட்டு விட்டேன்..//
அவ்வப்போதாவது கலந்து கொள்ளலாமே?
-------------------------
வாழ்த்துக்களுக்கும் [noted your point:)] விரிவான கருத்துக்களுக்கும் நன்றி கிரி.
திவா said...
பதிலளிநீக்கு// ரா அக்கா மானிட்டர் கோச்சுக்கிறாங்க..கப் சிப்!//
சொன்னதைக் கேட்போம்:)!
//சந்தடி சாக்கிலே இதையும் பாருங்க!
http://chitirampesuthati.blogspot.com/2009/10/blog-post_17.html//
பார்த்தேன் திவா. தலைப்பும் படங்களும் கலக்கல். விடா முயற்சியாய் ஒன்றிற்கு மூன்று பதிவுகள் கொடுத்துவிட்டீர்கள் இம்மாதத் தலைப்புக்கென. எந்தப் படம் கடைசியில் போட்டிக்குப் போகிறதென ஆவலுடன் பார்த்திருக்கிறோம். வாழ்த்துக்கள்!
பிள்ளையாருக்கு எக்ஸ்ட்ரா கொழுக்கட்டை,சுண்டல் பாயாசம் எல்லாம் ரெடியா வையுங்க...பிட் பரிசுக்கு நன்னி சொல்லணும்
பதிலளிநீக்குவாவ்!அருமையான புகை படங்கள்.வாழ்த்துக்கள் மக்கா.
பதிலளிநீக்குஎல்லாமே எக்சலண்ட் எனினும் மனசைகொள்ளைகொள்கிறார் அந்தப்பிள்ளையார்! பாராட்டுக்கள் ராமலஷ்மி!
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
@ கோமா,
பதிலளிநீக்குபரிசைத் தாண்டி உங்கள் அனைவரின் பாராட்டுக்களிலேயே மனம் நிறைந்து விட்டது:)! நன்றி.
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு// வாவ்!அருமையான புகை படங்கள்.வாழ்த்துக்கள் மக்கா.//
நன்றி ராஜாராம்.
ஷைலஜா said...
பதிலளிநீக்கு//எல்லாமே எக்சலண்ட் எனினும் மனசைகொள்ளைகொள்கிறார் அந்தப்பிள்ளையார்! பாராட்டுக்கள் ராமலஷ்மி!//
பிள்ளையாரை எல்லோருக்கும் பிடித்த வண்ணம் எடுத்துப் பதிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. பாராட்டுக்களுக்கு நன்றி ஷைலஜா!
butterfly Surya said...
பதிலளிநீக்கு//அருமை...
வாழ்த்துகள்..//
தங்களது முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சூர்யா!
மின்னஞ்சல் வழியாக..:
பதிலளிநீக்குHi Ramalakshmi,
Congrats!
Your story titled 'பொம்மை [அக்டோபர் PiT போட்டிக்கு]' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th October 2009 08:12:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/125439
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
15க்குள் வந்த பிள்ளையாருக்கு 15 கொழுக்கட்டை பார்சல்
பதிலளிநீக்குgoma said...
பதிலளிநீக்கு//15க்குள் வந்த பிள்ளையாருக்கு 15 கொழுக்கட்டை பார்சல்//
நீங்கள் முன்னரே சொன்னது போல சுடச் சுட சுண்டலோடு இதோ ரெடியாகிக் கொண்டே இருக்கிறது:), மிக்க நன்றி கோமா!
மயிலை நம்பி தோற்ற முருகனைப் போல் நானும் தோற்றேன் என்பதை மிக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு@ கோமா,
பதிலளிநீக்குஉங்கள் உவமையை ரசித்தேன்:)!
PiT-யைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் போட்டியில் நாம் கலந்து கொள்வதும், அங்கு அணி வகுக்கும் படங்களிலிருந்து பல விஷயங்களை வியப்புடன் கற்றுக் கொள்வதுமாய் தொடர்கின்ற நல்ல அனுபவங்களே பரிசுதானே கோமா?
கேட்டதால் ஒரு சிறிய விளக்கம்:
பதிலளிநீக்குகொள்ளைச் சிரிப்பில்
உள்ளம் தொலைத்துக்
கொண்டு வருவார்
அலங்காரத்துகென-அது
உழைப்பவர் வீடெனில்
அதிர்ஷடப் பொம்மையாய்
அருள்புரிவார் அழகாய்ச்
சிரித்தபடி புத்தர்!
கொள்ளை கொள்ளையாய்
கொட்டும் பணமென
வாங்கி வைத்துவிட்டு
உறங்குவார் வீட்டில்
அலங்காரப் பொம்மையாகவே
வீற்றிருப்பார் எள்ளி
நகைத்தபடி புத்தர்!
nice to notice ,that the kavithai written, as answer to the goma's question ,is sparkling in youthfulvikatan.
@ கோமா,
பதிலளிநீக்கு//nice to notice ,that the kavithai written, as answer to the goma's question ,is sparkling in youthfulvikatan.//
ஆமாம் உங்கள் கேள்வியில் பிறந்த கவிதை, இப்போது யூத் விகடனில். எழுப்பிய கேள்விக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமா:)!