Monday, January 12, 2009

எடுத்ததில் பிடித்தது பல..பார்வைக்கு இங்கே சில..[PiT Jan-போட்டிக்கு]

நினைவுகளைப் பதியவே புகைப்படங்கள் என்றிருந்த நம்மை திறமையுடன் பதிந்திடவும் என உணர்த்தி அதை ஒரு கலையாகப் பார்க்க வைத்து பாடம் நடத்தி போட்டிகள் வைத்து ஆர்வத்தை வளர்த்து வருபவர்கள் PiT குழுவினர். 17 டிசம்பர் 2008 ஆனந்த விகடனில் ‘விகடன் வரவேற்பரை’யில் அவர்கள் கெளரவிக்கப் பட்டதை பலரும் பார்த்திருப்பீர்கள். ஆயில்யன் வாழ்த்துப் பதிவிட்டிருந்தார். பார்க்கத் தவறியவர்களுக்கு வாழ்த்த வழி செய்ய இங்கும் பதிந்துள்ளேன்:


***இம்முறை எடுத்ததில் பிடித்ததைத் தரலாம் என தீபா அறிவித்து விட்டார்கள். ஆனால் 'எது நேர்த்தி எனக் கருதுகிறீர்களோ அதை..' என்கிற போது வந்ததே குழப்பம். சரியென நேர்த்தியை மட்டும் பார்க்காமல் மனதுக்கு நெருக்கமாக.. நேசமாக.. உணர்ந்த பலவற்றுள் சிலவற்றை வைத்து விட்டேன் உங்கள் பார்வைக்கு:

கீழ் வரும் முதல் படமானது இதுவரை போட்டிக்கு தரப் படாவிட்டாலும் "எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]" என்ற என் பதிவில் இடம் பெற்று பலரின் பாராட்டையும் பெற்றது. தியானத்தின் மேன்மையை அண்ணாந்து வியப்பது போல் அமைந்த காமிரா கோணமும், ஆன்மீகத்தின் அடையாளமாய் தெரிகிற அந்த வானமும் படத்துக்கு ஒரு சிறப்பைத் தருவதாயும் எனக்குத் தோன்றுகிறது. இதுவே இம்மாதப் போட்டிக்கான எனது தேர்வு:
வான மண்டலத்தை
நோக்கி உயர்ந்து நிற்கும்
தியான மண்டபம்

தென்குமரிக் கடலினிலே-
விவேகத்துக்கு வழிகாட்டிய
விவேகானந்தா உட்கார்ந்து
தியானித்தப் பாறையிலே-
தியானத்தின் மேன்மையை
உலகுக்கு உணர்த்திடவே-
எழுந்து நிற்கும் மணிமண்டபம்.
***


செயற்கை குளமும்
பின்னே
இயற்கை வளமும்

கட்டுக்குள் அடங்கிய நீச்சல் குளமும்
கட்டுக்குள் அடக்க இயலா அலைகடலும்
[க்ளிக்கிட்டுப் பார்க்கத் தவறாதீர்]
***


பஞ்ச பாண்டவர் மண்டபம் மேல்
வஞ்சனை இன்றி கதிரொளி வீசுகிறார்
கர்ணனின் தந்தை!

[படத்தின் மேல்பாகம் ஓவர் எக்ஸ்போஸ்டாக இருந்தாலும் அந்த ஒளிக் கீற்றுகள்..அற்புதமாகப் பட்டன.]
***


கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா!


ராஜா செஞ்ச சிலைகளிலே தாய்மையை
உணர்த்துவதுதான் இந்த சிற்பத்தின் ஜோரா?
***


அணில்ஜிக்கும் பிடித்தது பார்லே-ஜி!

***


இலவு காக்கும் கிளியா
இல்லையேல்
தனிமையில் காணும் இனிமையா?

***


(கொக்கு பறபற கோழி பறபற) வாத்து பறபற!

சிறகுகள் சிலிர்த்து பறக்க முயல்கிறதா?
குளித்து முடித்து இறகுகளை உலர்த்துகிறதா?
***


மன்னிக்க மாட்டாயா
உன்
மனம் இரங்கி?


மன்னிப்பு-தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’! ‘ரமணா’வின் திரைவசனம் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவையாகப் பயன்படுத்தப் பட்டது. அதை அப்படி நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ளுதல் நலம். மன்னிக்கவே முடியாத சமூகக் குற்றங்கள் வேறு. தொழிலில் நட்பில் உறவில் சூழ்நிலை சந்தர்ப்பங்களால் சில துரோகங்கள் சில தப்பான புரிதல்கள் சில தவறுகள் நேர்ந்து பின் மன்னிப்பை நாடி நிற்கும் மனித மனங்கள் வேறு. உணர்ந்து அவர்கள் திரும்பி வருகையில் அந்த வாத்தைப் போல முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல் மன்னியுங்கள். ‘மன்னிப்புக் கேட்பவனே மனிதன். மன்னிக்கத் தெரிந்தவனோ இறைவன்’! யார் சொன்னது என்று தெரியாது. ஆனால் மன்னியுங்கள். மன்னித்துப் பாருங்கள்! தவறு உங்கள் பக்கம் இருந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். இதனால் இறுகிய மனங்கள் இளகும். இணைய வேண்டும் என ஏங்கி மருகிய மனங்கள் மலரும்.
***

"சரியான வாத்துக்கள்"

'சரியான வாத்து'
எவரையும் வையும் முன்
சற்றே நிதானிக்கலாம்
எவரிடமும் உண்டு
கற்பதற்கு நற்பண்பு.
நடைபோடும் வாத்துக்கள்
கடைப் பிடிக்கிற
'வரிசையில் ஒழுங்கு'
பலநேரம் நமக்கு
வாராத் ஒன்று!
***


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
ஜெய்ஹிந்த்!

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்:

கேள்வி:"செஸ் காய்களில் உங்களுக்குப் பிடித்தது எது?"

பதில்:"சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்து கொண்டே இருப்பார். பிஷப், ராஜாவைக் காப்பாற்ற வியூகங்கள் வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால், ஒரு சிப்பாய்தான் தன் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிரைக் கொடுத்துப் போராடுவார். அவர் ஒரு போதும் பின்வாங்க மாட்டார். செஸ் ஒரு மெளன யுத்தம். நான் செஸ் விளையாடும்போது என்னைச் சிப்பாயாகக் கற்பனை செய்துகொள்வேன். அதனாலேயே என் ராஜாவைக் காப்பாற்ற நான் முடிந்த அளவு போராடுவேன்"

எவ்வளவு உண்மை. அப்படித்தான் பின் வாங்காமல் போராடி 26/11 மும்பை நிகழ்வில் மக்கள் உயிர் காக்க தம் இன்னுயிர் நீத்தார் நம் காவலர். நாட்டின் தலைமை, உள்துறை செயலகம் [ராஜா? பிஷப்?]அறைக்குள் முன்னும் பின்னும் நடந்தபடி பிறப்பித்த உத்திரவுகளை, பின் வாங்காமல் முன் நின்று அன்று முடித்தவருக்கும் அப்பணியிலே தம் வாழ்வையே முடித்திட நேர்ந்தவருக்கும் நம் வீர வணக்கங்கள்!
***

51 comments:

 1. மணிமண்டபம்
  மனதைக் கவர்கின்றது.

  இயற்கையும்
  செயற்கையும்
  சேர்ந்து
  இன்பத்தை அளிக்கிறது.

  மன்னிப்பின் வரிகளும் படமும்
  இறுக்கிய மனதையும்
  இளக வைக்கின்றது

  வாத்துக்களின் வரிகளில்
  வாழ்கைக்கான வழிகளைச் சொல்லுகிறது.

  சிப்பாயின் வரிகளுக்கு
  சொல்ல வார்த்தை இல்லை.

  எனக்கு
  மணிமண்டபம் தான்
  பிடித்துள்ளது

  ReplyDelete
 2. கீழ் வரும் முதல் படமானது இதுவரை போட்டிக்கு தரப் படாவிட்டாலும் "எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]" என்ற என் பதிவில் இடம் பெற்று பலரின் பாராட்டையும் பெற்றது.

  முதல் படம்
  பாராட்டை மட்டுமல்ல
  வெற்றியையும் பெற்று தரும்

  வாழ்த்துகள்

  தமிழ்மணம் விருதுகள் 2008 : காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) பகுதியில்
  எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று- கட்டமைப்பு க்கு] என்னும்
  தங்களின் பதிவு வெற்றி பெறுவது மட்டுமல்ல பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்பதை உண்மை

  ReplyDelete
 3. @ திகழ்மிளிர்

  அத்தனை படங்களையும் பொறுமையாக ரசித்து ஆத்மார்த்தமாக விமர்சித்திருப்பதற்கு என் நன்றிகள் பல திகழ்மிளிர்.

  //மன்னிப்பின் வரிகளும் படமும்
  இறுக்கிய மனதையும்
  இளக வைக்கின்றது//

  அதுதான் நான் எதிர்பார்ப்பது.

  //வாத்துக்களின் வரிகளில்
  வாழ்கைக்கான வழிகளைச் சொல்லுகிறது//

  பார்த்து நாம் கற்றுக் கொள்ளலாம்தானே:)!

  //சிப்பாயின் வரிகளுக்கு
  சொல்ல வார்த்தை இல்லை.//

  நம் வீர வணக்கத்தை செலுத்துவோம்.

  //எனக்கு
  மணிமண்டபம் தான்
  பிடித்துள்ளது//

  அப்போ, என் தேர்வு சரிதான்:)!

  ReplyDelete
 4. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
  உங்களது தேர்வை மறுபரிசீலனை செய்வதாயின் எனது ஓட்டு..
  ”செயற்கை குளமும் பின்னே இயற்கை வளமும்” க்கே...

  அப்படியே எனது வலைக்கும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்..

  ReplyDelete
 5. திகழ்மிளிர் said...
  //தமிழ்மணம் விருதுகள் 2008 : காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்) பகுதியில்
  எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று- கட்டமைப்பு க்கு] என்னும்
  தங்களின் பதிவு வெற்றி பெறுவது மட்டுமல்ல பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்பதை உண்மை//

  எனக்கும் நான் இட்ட புகைப்படப் பதிவுகளிலே அது பிடித்தமான ஒன்று. விருது கிடைக்கிறதோ இல்லையோ உங்களைப் போன்றவர்களின் பாராட்டே பெரும் பரிசு. 'எல்லா புகழும் PiT-க்கே’ என்பதால்தான் வீர வணக்கங்களுடன் முடியும் இப்பதிவை குரு வணக்கத்துடன் தொடங்கினேன்.

  மிக்க நன்றி திகழ்மிளிர்!

  ReplyDelete
 6. //படத்தின் மேல்பாகம் ஓவர் எக்ஸ்போஸ்டாக இருந்தாலும் அந்த ஒளிக் கீற்றுகள்..அற்புதமாகப் பட்டன.//

  உண்மை தான்

  //அணில்ஜிக்கும் பிடித்தது பார்லே-ஜி!//

  :-)))

  //மன்னிக்கவே முடியாத சமூகக் குற்றங்கள் வேறு. தொழிலில் நட்பில் உறவில் சூழ்நிலை சந்தர்ப்பங்களால் சில துரோகங்கள் சில தப்பான புரிதல்கள் சில தவறுகள் நேர்ந்து பின் மன்னிப்பை நாடி நிற்கும் மனித மனங்கள் வேறு. உணர்ந்து அவர்கள் திரும்பி வருகையில் அந்த வாத்தைப் போல முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல் மன்னியுங்கள்.//

  சும்மா நச்சுனு கூறி இருக்கீங்க.இது பற்றி தான் ஒரு தொடர் பதிவு எழுதி கொண்டு இருக்கிறேன் :-)

  ராமலஷ்மி ..படம் உங்கள் விருப்பம்..:-)

  படத்திற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் கமெண்ட் பற்றி கூறியே ஆக வேண்டும்.. அனைத்தும் அருமை.. வார்த்தைக்காக கூறவில்லை.. உண்மையிலேயே சூப்பர். நீங்கள் இதை போல பதிவுகளும் இடலாம் படம் மற்றும் கமெண்ட்.

  படிக்க சுவாராசியமாக இருந்தது. நகைச்சுவையாகவும் அதே சமயம் கருத்துக்களோடும்

  ReplyDelete
 7. 'சரியான வாத்துக்கள்' எனக்குப் பிடித்திருந்தது.

  தியான மண்டமும், மேகமும் அருமை. ஏங்கிள் சூப்பர்.

  எல்லாப் படமும், படத்தின் கீழ் வரிகளும் ஜூப்பர்.

  குறிப்பா, செஸ்ஸைப் பத்தின ஆனந்தின் விளக்கம் அபாரம் :)

  ReplyDelete
 8. நாலும் அஞ்சும் நம்ம ஆளால்லே இருக்கு:-)))))


  வெற்றிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 9. படங்கள் கண்ணைக் கவருகின்றன, வரிகள் கருத்தைக் கவருகின்றன. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துககள்

  ReplyDelete
 10. சர்க்கரைப் பொங்கலில் தேன் மாரிப் பெய்தது போல் உங்கள் படமும் அதற்கான காப்ஷ்னும் அருமை.

  பாராட்டுக்கள்.

  மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. Ŝ₤Ω..™ said...

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
  //உங்களது தேர்வை மறுபரிசீலனை செய்வதாயின் எனது ஓட்டு..
  ”செயற்கை குளமும் பின்னே இயற்கை வளமும்” க்கே...//

  அந்த குளத்தின் கட்டமைப்பு, அதில் நீந்தும் போது கடலிலே நீந்துவது போன்ற உணர்வைத் தருவதாய் இருக்கும்.

  //அப்படியே எனது வலைக்கும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்..//

  பார்த்தேன். 'தியாகச் சுடர்’ படத்துக்கு வாக்கும் அளித்தேன்.

  ReplyDelete
 12. அணில்ஜி..அச்சாஜி
  மன்னிப்பை எல்லோருக்கும் பிடித்த வார்த்தையாக மாற்றிய வாத்துகளும் ஜோர்!
  இயற்கையும் செயற்கையும் நல்லாருக்கு.
  நா சொல்ல மாட்டேன்...நா சொல்லமாட்டேன்...! உங்களுக்குப் பிடித்ததே நடுவர்களுக்கும் பிடிக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 13. உங்க பதிவை படிச்சுட்டு வரேன் ஆனா பின்னூட்டம் இதுவரை போட்டது இல்லை. இயற்கையும் செயற்கையும் போட்டோ சூப்பர்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. எல்லாப் படங்களுமே சூப்பர்!!
  அணிலும், கிளியும், வாத்துக்களும் இயற்கையில் அதன் அழகிலேயே படம் பிடித்தது சிறப்பு!! மணிமகுடம் போல் வாழ்த்துரைகள்..பரிசுகள் பெற வாழ்த்துக்கள்! இந்தக் கலெக்ஷ்னை பப்புவிடம் காட்டுகிறேன்!! பகிர்ந்தமைக்கு நன்றி, ராமலஷ்மி!!
  படங்களை எடுத்த கைகளுக்கு ஒரு முத்துசரத்தை தொடுக்கிறேன், கற்பனையில்!!

  ReplyDelete
 15. //17 டிசம்பர் 2008 ஆனந்த விகடனில் ‘விகடன் வரவேற்பரை’யில் அவர்கள் கெளரவிக்கப் பட்டதை பலரும் பார்த்திருப்பீர்கள். ஆயில்யன் வாழ்த்துப் பதிவிட்டிருந்தார். பார்க்கத் தவறியவர்களுக்கு வாழ்த்த வழி செய்ய இங்கும் பதிந்துள்ளேன்://

  நான் பாக்கலேங்க. share பண்ணதுக்கு ரொம்ப நன்றி.

  படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு. ரெண்டாவது படம் எங்க எடுத்தீங்க? இடம் நல்லா இருக்கு. :)

  ReplyDelete
 16. கிரி said...

  ////உணர்ந்து...வருகையில்... மன்னியுங்கள்.//

  சும்மா நச்சுனு கூறி இருக்கீங்க.இது பற்றி தான் ஒரு தொடர் பதிவு எழுதி கொண்டு இருக்கிறேன் :-) ////

  மிக நல்ல விஷயம். செய்யுங்கள். மன்னிப்பின் மகத்துவத்தை மனித மனங்கள் உணரட்டும்.

  //நீங்கள் இதை போல பதிவுகளும் இடலாம் படம் மற்றும் கமெண்ட்.//

  ஏற்கனவே இப்படி ஒரு எண்ணம் உண்டு, ‘பேசும் படங்கள்’ என்று வகைப் படுத்தி. செயல் படுத்தும் ஊக்கத்தை உங்கள் வார்த்தைகள் தந்துள்ளன. படங்களுடன் கமெண்டுகளையும் ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு நன்றி கிரி.

  ReplyDelete
 17. SurveySan said...

  //'சரியான வாத்துக்கள்' எனக்குப் பிடித்திருந்தது.//

  ஆமாங்க, அவை ‘சரியான வாத்துக்கள்’தான். நாமதான் தவறா ஒரு பதத்தை பயன்படுத்துகிறோம்:)!

  //தியான மண்டமும், மேகமும் அருமை. ஏங்கிள் சூப்பர்.

  எல்லாப் படமும், படத்தின் கீழ் வரிகளும் ஜூப்பர்.//

  நன்றி சர்வேசன்.

  //குறிப்பா, செஸ்ஸைப் பத்தின ஆனந்தின் விளக்கம் அபாரம் :)//

  மிக அற்புதமான விளக்கம். அந்த விளக்கத்தை அனைவருடன் பகிர்ந்திடவே அந்தப் படத்தைப் பதிவிடத் தோன்றியது.

  ReplyDelete
 18. புகைப்படக் கலை பற்றி (மீதி கலைகள் போலவே) அதிகம் தெரியாது. கண்ணுக்கு குளிர்ச்சி. நாள் சொல்ல வந்தது, நீங்கள் போடும் விமர்சனம். குறிப்பாக 'மன்னிப்பு' பற்றி எழுதியதும், ஆனந்த் 'சிப்பாய்' பற்றி சொன்னதை நினைவு கூர்ந்ததும். போட்டி பற்றி எல்லாம் எங்களுக்கு அவ்வளவு அக்கறையில்லை. எங்களைப் பொறுத்தவரை நீங்கள் எப்போதும் 'வின்னர்'. வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 19. வான் நோக்கி
  செயற்கையை அனுபவித்து
  கலைகளில் மூழ்கி
  இயற்கையை ரசித்து
  வாத்துக்களில் தத்துவம் சொல்லி
  சதுரங்கத்தில் நிறுத்தி ....

  வழக்கம் போலவே சத்தான வரிகள், மட்டும் இனிமையான படங்கள்.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  !!! பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 20. படங்கள் எல்லாம் அருமை!

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. உழவர் திருநாள் வாழ்த்துகள் தங்களுக்கும் வீட்டினரனைவருக்கும்!!

  ReplyDelete
 22. துளசி கோபால் said...

  //நாலும் அஞ்சும் நம்ம ஆளால்லே இருக்கு:-)))))//

  அணிலும் ஆனையும் உங்களுக்குப் புடிக்காது போகுமா:)))?

  வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 23. அமுதா said...

  //படங்கள் கண்ணைக் கவருகின்றன, வரிகள் கருத்தைக் கவருகின்றன. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துககள்//

  உங்கள் கண்ணும் மனதும் குளிர்ந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு:)! மிக்க நன்றி அமுதா!

  ReplyDelete
 24. புதுகைத் தென்றல் said...

  // சர்க்கரைப் பொங்கலில் தேன் மாரிப் பெய்தது போல் உங்கள் படமும் அதற்கான காப்ஷ்னும் அருமை.//

  அருமையான உவமை. நன்றி தென்றல். உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. நானானி said...

  // அணில்ஜி..அச்சாஜி//

  பிடிச்சுதாஜி?

  //மன்னிப்பை எல்லோருக்கும் பிடித்த வார்த்தையாக மாற்றிய வாத்துகளும் ஜோர்!//

  வாத்துக்களுக்கு வெற்றி:)!

  //இயற்கையும் செயற்கையும் நல்லாருக்கு.
  நா சொல்ல மாட்டேன்...நா சொல்லமாட்டேன்...!//

  எனக்குப் புரிந்து விட்டது...எனக்குப் புரிந்து விட்டது...!


  //உங்களுக்குப் பிடித்ததே நடுவர்களுக்கும் பிடிக்க வாழ்த்துகிறேன்.//

  ஒவ்வொரு முறையும் எதை எனத் திகைத்த பின்னரே கொடுப்பது வழக்கம். இம்முறை முடிவு எடுத்த பின்னரே இட்டேன் பதிவு:)!

  கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நானானி:)!

  ReplyDelete
 26. sindhusubash said...

  //உங்க பதிவை படிச்சுட்டு வரேன் ஆனா பின்னூட்டம் இதுவரை போட்டது இல்லை.//

  பாருங்க உங்களை நான் எவ்வளவு சரியா நினைவில் வைத்திருக்கிறேன் என்று. நீங்கள்தான் மறந்து விட்டீர்கள், புதுவருடத்தின் எனது முதல் பதிவாகிய ‘முதல் நாளில் முதல் கவிதை’க்கு வந்திருந்து பெரிய பட்டமெல்லாம் சூட்டியதை:)!

  //இயற்கையும் செயற்கையும் போட்டோ சூப்பர்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

  நன்றி சிந்து:)!

  ReplyDelete
 27. சந்தனமுல்லை said...

  //எல்லாப் படங்களுமே சூப்பர்!!
  அணிலும், கிளியும், வாத்துக்களும் இயற்கையில் அதன் அழகிலேயே படம் பிடித்தது சிறப்பு!! மணிமகுடம் போல் வாழ்த்துரைகள்..பரிசுகள் பெற வாழ்த்துக்கள்!//

  நன்றி சந்தனமுல்லை. இயற்கையையும் விலங்கு, பறவைகளையும் ரசிக்காதவர் இருக்க முடியாது.

  //இந்தக் கலெக்ஷ்னை பப்புவிடம் காட்டுகிறேன்!!//

  மிக்க மகிழ்ச்சி. அவளுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும் என நம்புகிறேன்.

  //படங்களை எடுத்த கைகளுக்கு ஒரு முத்துசரத்தை தொடுக்கிறேன், கற்பனையில்!!//

  எனக்கு மிகவும் பிடித்த பரிசு:)! நன்றி நன்றி!

  ReplyDelete
 28. Blogger Truth said...
  // //17 டிசம்பர் 2008 ஆனந்த விகடனில் ‘விகடன் வரவேற்பரை’யில் அவர்கள் கெளரவிக்கப் பட்டதை பலரும் பார்த்திருப்பீர்கள். ஆயில்யன் வாழ்த்துப் பதிவிட்டிருந்தார். பார்க்கத் தவறியவர்களுக்கு வாழ்த்த வழி செய்ய இங்கும் பதிந்துள்ளேன்://

  நான் பாக்கலேங்க. share பண்ணதுக்கு ரொம்ப நன்றி. // //

  பார்க்காமல் விட்டவர்களும் இருக்கக் கூடுமென்றுதான் பதிந்தேன், வாழ்த்துவோம் அவர்கள் பணியை!

  //படங்கள் அனைத்தும் நல்லா இருக்கு. ரெண்டாவது படம் எங்க எடுத்தீங்க? இடம் நல்லா இருக்கு.:)//

  நன்றி ட்ரூத். இரண்டாவது படம் சென்னை GRT Temple Bay Resort-ல் எடுத்தது.

  ReplyDelete
 29. அனுஜன்யா said...

  //புகைப்படக் கலை பற்றி (மீதி கலைகள் போலவே) அதிகம் தெரியாது. கண்ணுக்கு குளிர்ச்சி.//

  மனதுக்கும் மகிழ்ச்சி பகிர்ந்து கொள்வதில். மற்றபடி எனக்கும் டெக்னிகலாக பிரமாதமாய் ஏதும் தெரியாதுங்க.

  //நீங்கள் போடும் விமர்சனம். குறிப்பாக 'மன்னிப்பு' பற்றி எழுதியதும், ஆனந்த் 'சிப்பாய்' பற்றி சொன்னதை நினைவு கூர்ந்ததும்.
  போட்டி பற்றி எல்லாம் எங்களுக்கு அவ்வளவு அக்கறையில்லை. எங்களைப் பொறுத்தவரை நீங்கள் எப்போதும் 'வின்னர்'. வாழ்த்துக்கள்.//

  நன்றி அனுஜன்யா. ‘வின்னிங்’ குறிக்கோளாக அன்றி பங்களிப்பே முக்கியம் என்கிற உற்சாகத்தில்தான் கலந்து கொள்கிறோம் பலரும். உங்கள் அனைவரின் இத்தகைய பாராட்டுக்களே பரிசுதானே:)!

  ReplyDelete
 30. சதங்கா (Sathanga) said...

  //வான் நோக்கி
  செயற்கையை அனுபவித்து
  கலைகளில் மூழ்கி
  இயற்கையை ரசித்து
  வாத்துக்களில் தத்துவம் சொல்லி
  சதுரங்கத்தில் நிறுத்தி ....//

  ..விட்டேன் ஒருவாறாக, இல்லையா:)? படங்கள் அதிகம்தான் வழக்கம்போல. அத்தனையையும் ரசித்து இட்டிருக்கிறீர்கள் கருத்தினை!

  //வழக்கம் போலவே சத்தான வரிகள், மட்டும் இனிமையான படங்கள்.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  !!! பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!//

  நன்றி சதங்கா. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 31. ஜீவன் said...

  //படங்கள் எல்லாம் அருமை!

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!//

  நன்றி ஜீவன். உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. சந்தனமுல்லை said...

  // உழவர் திருநாள் வாழ்த்துகள் தங்களுக்கும் வீட்டினரனைவருக்கும்!!//

  மிக்க நன்றி சந்தனமுல்லை. பப்புவுக்கும் வீட்டிலுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்!

  ReplyDelete
 33. படங்கள் அருமை! தனிமை பறவை எனக்கு ரொம்ப புச்சிருந்துச்சு :))

  ReplyDelete
 34. ஆமா முதல் பதிவுக்கு போட்டிருக்கேன். வயசாகிட்டே வருது அதான் ஞாபகமறதி.இனிமே கவனிக்கறேன்.

  ReplyDelete
 35. படங்களும் கூடவே பொருத்தமாக அளித்திருக்கும் கருத்துகளும் அருமை. எனக்கென்னவோ இயற்கையும் செயற்கையும் பிடிச்சிருக்கு :) வெற்றி பெற வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 36. ஓ. மனம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளும்...

  ReplyDelete
 37. படங்கள் அருமை.. நம்ம பிட் விகடன்ல வந்ததுல ரொம்ப சந்தோஷம்..

  படிச்சவுடனே எனக்கும் ஆனந்தோட அந்த வரிகள் டக்குன்னு மனசுல ஒட்டிகிச்சு.. எவ்வளவு பெரிய விஷயத்த சிம்பிளா சொல்லிட்டாரு மனுசன்..

  ReplyDelete
 38. ஆயில்யன் said...

  //படங்கள் அருமை! தனிமை பறவை எனக்கு ரொம்ப புச்சிருந்துச்சு :))//

  ஆயில்யனுக்கு அது ரொம்ப பிடித்துப் போனது தனிமையில் காணும் இனிமையாலா? வரும் வருடம் துணையுடன் காணும் இனிமை அமைய வாழ்த்துகிறேன்:))!

  ReplyDelete
 39. sindhusubash said...

  //ஆமா முதல் பதிவுக்கு போட்டிருக்கேன். வயசாகிட்டே வருது அதான் ஞாபகமறதி.இனிமே கவனிக்கறேன்.//

  சிந்து, எல்லோருக்கும் வயதாகிக் கொண்டேதான் வருகிறது. மனதை இளமையுடன் வைத்து உற்சாகமாய் இருப்போம். வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 40. கவிநயா said...

  //படங்களும் கூடவே பொருத்தமாக அளித்திருக்கும் கருத்துகளும் அருமை. எனக்கென்னவோ இயற்கையும் செயற்கையும் பிடிச்சிருக்கு :)//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிநயா. உங்களைப் போலவே பலரும் அப்படமே பிடித்துள்ளதாகக் கூறியிருக்கிறார்கள்.

  உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 41. வெண்பூ said...

  //படங்கள் அருமை..//

  நன்றி வெண்பூ.விடுப்பு முடிந்து மறுபடி தாங்கள் வலைக்குள் வலம் வர ஆரம்பித்திருப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. என் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  //நம்ம பிட் விகடன்ல வந்ததுல ரொம்ப சந்தோஷம்..//

  ‘நம்ம’ என்பதிலேயே உங்கள் சந்தோஷத்தின் அளவு தெரிந்து விட்டது:))!

  //படிச்சவுடனே எனக்கும் ஆனந்தோட அந்த வரிகள் டக்குன்னு மனசுல ஒட்டிகிச்சு.. எவ்வளவு பெரிய விஷயத்த சிம்பிளா சொல்லிட்டாரு மனுசன்..//

  ஆமாங்க அற்புதமாய் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லுகையில் அது இன்னும் ஆழமாய் மனதில் பதிகிறது.

  ReplyDelete
 42. மணி மண்டபம் வெற்றிமணி அடிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. goma said...

  //மணி மண்டபம் வெற்றிமணி அடிக்க வாழ்த்துக்கள்//

  உங்கள் மணியான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 44. எல்லா படங்களும் அருமை. ஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசித்து எடுத்திருக்கிறீர்கள் அக்கா.

  ReplyDelete
 45. கடையம் ஆனந்த் said...
  //எல்லா படங்களும் அருமை. ஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசித்து எடுத்திருக்கிறீர்கள் அக்கா.//

  உண்மைதான் ஆனந்த், ரசித்துப் பிடித்து எடுத்தவைதான் அத்தனையும். மிக்க நன்றி.

  ReplyDelete
 46. me the 46th
  from cheena sir home... :))

  ReplyDelete
 47. @ தமிழ் பிரியன்,

  நன்றி நன்றி. சென்ற இடத்தில் கிடைத்த நேரத்தில் தந்த வருகைக்கு மிக்க நன்றி:)!

  சீனா சாருக்கும் செல்வி அம்மாவுக்கும் என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 48. இந்தமாசம் உங்களுது டாப் திரீல இடம் பிடிக்கும்னு நம்புரேன்.

  அருமையா வந்திருக்கு.

  வெற்றிபெற வாழ்துக்கள்.

  ReplyDelete
 49. கார்த்திக் said...

  //இந்தமாசம் உங்களுது டாப் திரீல இடம் பிடிக்கும்னு நம்புரேன்.

  அருமையா வந்திருக்கு.

  வெற்றிபெற வாழ்துக்கள்.//

  நன்றி கார்த்திக். பங்களிப்போடு நம்ம பங்கு முடிந்தது:))! இம்முறை அவரவருக்கு எடுத்ததில் பிடித்ததென அசத்தியிருக்கிறார்கள், உங்களதையும் சேர்த்துதான்:)! கலந்து கொள்ளும் படங்களிலிருந்தே எவ்வளவு கற்றுக் கொள்ள முடிகிறது, இல்லையா?

  ReplyDelete
 50. அனைத்து புகைப்படங்களையும் பார்த்து ரசித்தேன்.

  ReplyDelete
 51. @ உழவன்,

  மிக்க நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin