முதல் நான்கு படங்கள் மட்டும் நிழல்களுக்காகவே முயற்சித்தவை.
மற்றவை முன்னரே எடுத்தவை; என் ஆசைக்கு வைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு.
'முதலிரண்டில் ஒன்றை'ப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன்.
வரிவரியாய் கவிபாடும் நிழல்கள் கீழே!
தெரிகிறது நிஜத்தின் பிம்பம் மேலே!
வளைந்து குழைந்த திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன நேர்க்கம்பியின் நிழல்கள்
பார்த்துப் பழகு
நேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
நீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்- சென்று நீ
சேர்கின்ற கூட்டத்தார்
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!
குருவியின் குடை
வெள்ளிக் கம்பிகளாய் அருவி வீழ்கின்ற நீரிலே
விரிந்து மலர்ந்திருக்கிறது உச்சி மரத்து நிழலே!
அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
கண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!
குன்றிலே கோபுரம் ஒளி வெள்ளத்தில்!
குளிர்வாய் பாறை அடிவாரத்தில்!
மறுகோடியில் கொளுத்தும் கோடையில் கடல்
மாறாக இப்பக்கம் மரங்களின் அருளாலே குளுகுளுவென்று நிழல்
ஊடுருவி நலம் விசாரிக்கிறது ஆங்காங்கே வெயில்
நிழல் நிரம்பிய சோலையும்
வளைந்து திரும்பும் சாலையும்!
உள்ளம் கொள்ளை போகுதே
கடலும் வானும் அலையும் மணலும்
மரமும் நிழலும் புல்லும் செடியும்..
உள்ளம் துள்ளுது நெஞ்சை அள்ளுது !
‘பார்த்துப் பழகு’ கவிதை நான் எடுத்த படத்துடனேயே ‘நேர்க் கம்பியின் நிழல்கள்’ ஆக ஏப்ரல் 2009 'மனிதம்' மின்னிதழில்:
வந்தாட்ச்சி...
பதிலளிநீக்கு\\பார்த்துப் பழகு
பதிலளிநீக்குநேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
நீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்- சென்று நீ
சேர்கின்ற கூட்டத்தார்
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!\\
ம்ம்ம் ... நல்லாயிருக்கே.
\\அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
பதிலளிநீக்குகண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!\\
வார்த்தைகள் அழகாயிருக்கு.
ஆனால் பார்த்தால் பயமாயிருக்கு.
[ஹலோ பாறை]
அழகாயிருக்கிறாய்
பயமாயிருக்கிறது.
இப்பல்லாம் நானும் மீ த ஃபஸ்ட் வரேன்!!
பதிலளிநீக்குரெண்டாவது படமும் குருவியின் குடையும் நல்லாருக்கு. இப்ப என்ன செய்வீங்க...இப்ப என்ன செய்வீங்க?
பதிலளிநீக்குவெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!
அது என்னோட வெல்லக்கட்டி பாறையல்லோ?
பதிலளிநீக்கு\\கடலும் வானும் அலையும் மணலும்
பதிலளிநீக்குமரமும் நிழலும் புல்லும் செடியும்..
உள்ளம் துள்ளுது நெஞ்சை அள்ளுது !\\
கடலில் மட்டுமல்ல
உங்கள் வலையிலும்
வார்த்தை அலை மோதுது.
அந்த முதல் போட்டோ போட்டிக்கு அனுப்பத் தகுதியானது...ரொம்ப நல்லாருக்கு.
பதிலளிநீக்குஅன்புடன் அருணா
nice :)
பதிலளிநீக்கு-Surveysan
அக்கா, வந்துட்டேன்.. கவிதைகளெல்லாம் சூப்பரா இருக்கு... ;) பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நினைப்புக்கு ஒரு சல்யூட்!
பதிலளிநீக்குவரிவரியாய் இருக்கும் முதல் படம் அனுப்புங்க போட்டிக்கு
பதிலளிநீக்குஎன் தேர்வு இரண்டாவது படம்.
பதிலளிநீக்குமுதல் படத்தில் கதவின் தாள்பாழ் நிழலைப் பாழ் படுத்திகிறது
வாழ்த்துக்கள்
எல்லாமே சூப்பர்.
பதிலளிநீக்குஎனக்குப் பிடிச்சது குருவியும் குடையும்:-))))
ராமலக்ஷ்மி வெறும் பங்களிப்பு என்ற வார்த்தை என்பது உங்கள் அடக்கம். உண்மையிலேயே போட்டிக்கான படங்கள் சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் தரும் படத்தின் தரம் அதிகரித்து கொண்டு செல்கிறது. வாழ்த்துக்கள்
படம் எல்லாமே அருமை. அதே போல வரிகளும்....
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மிக அழகு!
பதிலளிநீக்குவெற்றிபெற வாழ்த்துகள்!!!
//
goma said...
என் தேர்வு இரண்டாவது படம்.
//
நினைத்தேன், goma சொல்லிட்டாங்க:-)
//நேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
பதிலளிநீக்குநீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்-///
அற்புதமான வரிகள்!
அழகாய் இருக்கிறது நிழல்கள் படங்களும் கவிதைகளும்!
எனக்கு பிடித்தது கவிதையாய் இருக்கும் நேர்கம்பியின் நெளிந்த நிழல்கள் :)
ரொம்ப பிடிச்சது முதல் இரண்டும், குருவியும்! நீங்க சொல்லலைன்னா குருவியை நான் கவனிச்சிருக்கவே மாட்டேன்! :-) படங்களும், வார்த்தைச் சரமும் அழகு!
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்!
//வெள்ளிக் கம்பிகளாய் அருவி//
பதிலளிநீக்குபடமும் அங்கே நானிருக்கிற பீலிங்கைத் தருகிறது! நல்ல படம்!
படங்கள் அழகு..
பதிலளிநீக்குபோட்டிக்கு அனுப்ப 2,3 ஆவது படங்கள் பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
முதல் படத்தில் ஜன்னலின் பின்புறம் தெரியும் காட்சியும் கதவும் கொக்கியும் கருவினைக் குறுக்கிடுகிறது.
இன்னும் கொஞ்சம் பிற்தயாரிப்பு செய்து அனுப்புங்கள் சகோதரி :)
அதிரை ஜமால் said...
பதிலளிநீக்கு//வந்தாட்ச்சி...//
வருகைக்கு நன்றி அதிரை ஜமால்:)!
அதிரை ஜமால் said...
பதிலளிநீக்கு//\\பார்த்துப் பழகு
நேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
நீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்- சென்று நீ
சேர்கின்ற கூட்டத்தார்
வசதிக்கும் வாய்ப்புக்கும்
வளைந்து நெளிந்த
குறுக்குப் பாதையைத்
தேர்ந்தெடுப்பவரானால்!\\
ம்ம்ம் ... நல்லாயிருக்கே.//
அப்போ இனி பார்த்தேதான் பழகுவீங்க:)!
அதிரை ஜமால் said...
பதிலளிநீக்கு//\\அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
கண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!\\
வார்த்தைகள் அழகாயிருக்கு.
ஆனால் பார்த்தால் பயமாயிருக்கு.////
கவிதை வரிகளின் தைரியத்தில்தான் சாய்ந்தமர்ந்தும் சரிந்து படுத்தும் ஓய்வெடுக்கிறார் ஓங்கி விழுந்த நிழலில்! ஆகையால் பயப்படத் தேவையில்லை:)!
//[ஹலோ பாறை]
அழகாயிருக்கிறாய்
பயமாயிருக்கிறது.//
ஹலோ ஜமால்
அழகாச் சொல்லியிருக்கீங்க
மீண்டும் வாங்க:)!
முதல் படத்திற்குத்தான் என் பரிசு.
பதிலளிநீக்குசகாதேவன்
நானானி said...
பதிலளிநீக்கு//ரெண்டாவது படமும் குருவியின் குடையும் நல்லாருக்கு. இப்ப என்ன செய்வீங்க...இப்ப என்ன செய்வீங்க?//
இப்ப என்ன செய்ய இப்ப என்ன செய்ய:(?
ஒரே வாக்குச் சீட்டில் இரண்டு ஓட்டுப் போடறீங்களே:))!
சரி மனதில் வைக்கிறேன்.
//வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!//
பங்களிப்புக்கே வந்தேன். வாழ்த்துக்களுக்கும் நன்றி நானானி.
நானானி said...
பதிலளிநீக்கு//இப்பல்லாம் நானும் மீ த ஃபஸ்ட் வரேன்!!//
ஜஸ்ட் மிஸ்ட். அதனால் என்ன? எப்ப வந்தாலும் எனக்கு வேண்டியது உங்கள் மேலான கருத்தும் மிதமான வாழ்த்தும் அன்பான ஆசியும்:)!
நானானி said...
பதிலளிநீக்கு//அது என்னோட வெல்லக்கட்டி பாறையல்லோ?//
அதே அதே. உங்க பதிவில் பார்த்திருக்கிறேன். அந்த வெல்லக்கட்டியின் அடியில் ஒரு ஆட்டுக் குட்டியுடன்.
அதிரை ஜமால் said...
பதிலளிநீக்கு//\\கடலும் வானும் அலையும் மணலும்
மரமும் நிழலும் புல்லும் செடியும்..
உள்ளம் துள்ளுது நெஞ்சை அள்ளுது !\\
கடலில் மட்டுமல்ல
உங்கள் வலையிலும்
வார்த்தை அலை மோதுது.\\
படங்களை மட்டுமின்றி கூடவே அவற்றிற்கான வரிகளையும் ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி ஜமால்.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//அந்த முதல் போட்டோ போட்டிக்கு அனுப்பத் தகுதியானது...ரொம்ப நல்லாருக்கு.//
பாராட்டுக்கும் அக்கறையான பரிந்துரைக்கும் மிக்க நன்றி அருணா.
Photography said...
பதிலளிநீக்கு//nice :)
-Surveysan//
Thank you Surveysan:)!
இந்த ஒரு சொல் போதும்:)!
தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//அக்கா, வந்துட்டேன்.. கவிதைகளெல்லாம் சூப்பரா இருக்கு... ;)//
நன்றி தமிழ் பிரியன். அப்போ படங்கள்:)?
//பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நினைப்புக்கு ஒரு சல்யூட்!//
ஆமாம் அதிலேயே கிடைத்து விடுகிறதல்லவா மனநிறைவு:)?
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு//வரிவரியாய் இருக்கும் முதல் படம் அனுப்புங்க போட்டிக்கு//
பரிந்துரையைக் கவனத்தில் கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சின்ன அம்மிணி.
ஆத்தாடி இம்புட்டு இருக்கா புகைப்படத்துல! என்னோட சாய்ஸ் முதலும், குருவியும். ஆனா வல்லுனர்கள் கருத்துப்படி, இரண்டாவது படம் இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, பாபுலர் சாய்ஸ் உங்க புகைப்படங்கள்தான். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனுஜன்யா
goma said...
பதிலளிநீக்கு//என் தேர்வு இரண்டாவது படம்.
முதல் படத்தில் கதவின் தாள்பாழ் நிழலைப் பாழ் படுத்திகிறது
வாழ்த்துக்கள்//
வாங்க கோமா. அமலும் இதையே சொல்லியிருக்கிறார்.
”கதவு” படத்துக்கு ஒரு முழு விளக்கம் கொடுக்கிறது என்பது எனது வேறுபட்ட பார்வை.
ஆனால் இரண்டாவது படத்துக்கான பரிந்துரைகள் ரிஷானுடையதையும் சேர்த்து இத்துடன் நான்காகி விட்டது.
கவனம் வைக்கிறேன்.
வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமா!
எனக்கு புடிச்சது
பதிலளிநீக்குகுருவியின் குடை!
எனக்கு கூட போட்டா புடிக்கனும்னு
ஆசை இருக்கு!
இப்போதைக்கு என்கிட்டே யாராவது
எதையாவது,தூக்கி ''போட்டா புடிப்பேன்''
மத்த எல்லா படங்களும்
நல்லா இருக்கு அம்மா!!
ரொம்ப அழகா வந்திருக்குப்பா..
பதிலளிநீக்கு\\வளைந்து குழைந்த திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன நேர்க்கம்பியின் நிழல்கள்//
சூப்பர்..
முதல் படம் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
எனத்த சொல்ல
பதிலளிநீக்குஉங்களுக்குள்ள இப்படி ஒரு கலைஞனா
சுட்டுத்தள்ளீடிங்க போங்க
எனக்கு நாலாவது படம் பிடிச்சிருக்கு
வாழ்துக்கள் :-))
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//எல்லாமே சூப்பர்.//
அப்போ நான் பாஸ்:)!
//எனக்குப் பிடிச்சது குருவியும் குடையும்:-))))//
பறவைகளும் விலங்குகளும் உங்கள் செல்லங்கள் ஆச்சே:)! பிடிக்கக் கேட்கணுமா?
அடர்த்தி அதிகம் இல்லாத மரம். ஆகையால் நிழலில் அழுத்தம் இல்லை.இந்த அழுத்தமே காண்ட்ராஸ்ட் அதிகரித்துக் கொண்டு வந்தது. இல்லாவிடில் அது குருவி அல்ல மைனா என்பதும் தெரியும்:))!
கிரி said...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி வெறும் பங்களிப்பு என்ற வார்த்தை என்பது உங்கள் அடக்கம்.//
பரிசுக்கெல்லாம் அப்பாற்பட்டு பங்களிப்பிலும் ஒரு பரவசம் இருக்கிறதுதானே:)?
//உண்மையிலேயே போட்டிக்கான படங்கள் சிறப்பாக இருக்கிறது.//
நன்றி கிரி.
//ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் தரும் படத்தின் தரம் அதிகரித்து கொண்டு செல்கிறது. வாழ்த்துக்கள்//
நீங்கள் எல்லோரும் கொடுக்கின்ற ஊக்கமே என்னை மேலும் கவனமாக இருக்கச் செய்கிறது. வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அமுதா said...
பதிலளிநீக்கு//படம் எல்லாமே அருமை. அதே போல வரிகளும்....//
படங்களுடன் வரிகளையும் ரசித்தமைக்கு நன்றி அமுதா.
Amal said...
பதிலளிநீக்கு//படங்கள் அனைத்தும் மிக அழகு!
வெற்றிபெற வாழ்த்துகள்!!!//
நன்றி அமல். உங்களிடமிருந்து வந்துள்ள இந்தப் பாராட்டே எனக்கு வெற்றி பெற்ற மாதிரிதான்:)!
//
goma said...
என் தேர்வு இரண்டாவது படம்.
//
நினைத்தேன், goma சொல்லிட்டாங்க
:-)//
இரண்டாவது படத்தை அதன் pattern-காக தேர்வு செய்தேன்.
முதல் படமே தலைப்புக்குப் பொருத்தமாக எனக்கு இப்போதும் படுகிறது.
அந்தக் கதவு படத்தை முழுமையாக விளங்க வைக்கிறது என்றால் அதன் கைப்பிடி படத்துக்கு ஒரு 'leading point' ஆக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. கண்ணாடியில் தெரியும் மரங்களின் பிம்பம் கூடுதல் சிறப்பாய் தெரிகிறது.
திரும்ப இந்தப் பதிவு பக்கம் வர நேர்ந்தால் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்:)!
நிழல்கள் மீது தங்களுக்கு இருக்கும் காதல் புரிகிறது. தொடருங்கள்.
பதிலளிநீக்குஎனது வலைப்பக்கத்தைப் பார்வையிட தங்களை அன்போடு அழைக்கிறேன்.
www.kalyanje.blogspot.com
kalangii@gmail.com
நன்றி
அன்புடன்
கல்யாண்
முதல் நான்கு படங்களும் நன்றாக இருக்கின்றன. வெற்றி பெற வாழ்த்து.
பதிலளிநீக்குஎனக்கு photography பத்தி எதுவும் தெரியாது. குருவியின் குடை கவிதையா இருக்கு. so cute!!!
பதிலளிநீக்குஎனக்குப் பிடிச்சது குருவியோட குடை. அப்புறம் இந்த வரிகள் -
பதிலளிநீக்கு//அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
கண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!//
வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
எல்லாப்படமும் அருமை {வழமையான TV நடுவர்களின் வாக்குமுலம்போலில்லாமல்....}
பதிலளிநீக்கும்...ம்.... முதல்படம்தான் பிடித்திருக்கிறது.. காரணங்களுக்கு அப்பால் கவிதைபோல் இருக்கிறது....
//ரெண்டாவது படமும் குருவியின் குடையும் நல்லாருக்கு. இப்ப என்ன செய்வீங்க...இப்ப என்ன செய்வீங்க?
பதிலளிநீக்குவெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!//
இந்த ஆட்டத்திற்கு நான் வரலைப்பா ... படங்களில், என்னோட சாய்ஸ் ரெண்டாவது தான்.
நிழல்களின் வரிகள் அனைத்துமே அற்புதம். படத்தைப் பார்க்க வருகிறோமோ இல்லையோ, கவிகள் படிக்கவாவது எல்லோரும் வரணும் இங்கு.
வழக்கம் போல கலக்கிட்டீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு\\ //நேர்ப் பாதையிலே செல்லுபவனாய்
நீ இருந்தாலும்
பார்ப்பவருக்கு இந்நிழல் போலவே
கேள்விக்குறியாவாய்-///
அற்புதமான வரிகள்!\\
நன்றி ஆயில்யன். பாருங்களேன், நிழல்களின் வடிவம் எவ்வளவு அழகாய் கேள்விக்குறி போலவே தெரிகிறது!
//அழகாய் இருக்கிறது நிழல்கள் படங்களும் கவிதைகளும்!//
நன்றி:)!
//எனக்கு பிடித்தது கவிதையாய் இருக்கும் நேர்கம்பியின் நெளிந்த நிழல்கள் :)//
அந்த நான்காவது படத்தை உங்களுக்குப் பிறகு பலரும் பரிந்துரைத்திருக்கிறார்கள்:)!
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//ரொம்ப பிடிச்சது முதல் இரண்டும், குருவியும்!//
பலருக்கும்:)!
//நீங்க சொல்லலைன்னா குருவியை நான் கவனிச்சிருக்கவே மாட்டேன்! :-)//
அந்தக் (மைனாக்) குருவிக்காகவே எடுத்த படம்ங்க அது.
//படங்களும், வார்த்தைச் சரமும் அழகு!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
ரொம்ப நன்றி முல்லை.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு\\//வெள்ளிக் கம்பிகளாய் அருவி//
படமும் அங்கே நானிருக்கிற பீலிங்கைத் தருகிறது! நல்ல படம்!\\
அருவியிலே கை நனைத்து ஓடையிலே கால் நனைக்கலாம் என
கூடவே ஒரு நினைப்பும் ஓடுதா:)?
எம்.ரிஷான் ஷெரீப் said...
பதிலளிநீக்கு//படங்கள் அழகு..//
பாராட்டுக்கு நன்றி ரிஷான்.
//போட்டிக்கு அனுப்ப 2,3 ஆவது படங்கள் பொறுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.//
பரிந்துரைக்கு நன்றி. நீங்கள் 3 எனக் குறிப்பிட்டது இப்போது 4-வதுக்கு நகன்று விட்டது:)! ஒளி வந்த வழி [source] படத்தில் இல்லாதது ஒரு குறையாகப் பட, இந்த டிசம்பரில் அதிர்ஷ்ட வசமாய் சூரியனாரும் ஜன்னல் வழியே மறுபடி எட்டிப்பார்க்க, பதிவிட்ட பிறகு மறுபடி படம் எடுத்து மூன்றாவதாய் அதை இணைத்தேன். இதுதான் மூன்று நான்கான கதை:)!
//முதல் படத்தில் ஜன்னலின் பின்புறம் தெரியும் காட்சியும் கதவும் கொக்கியும் கருவினைக் குறுக்கிடுகிறது.//
அப்படியா சொல்கிறீர்கள்? அமலுக்கான பதிலையே தருகிறேன். அந்தக் கதவு படம் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்பதை விளக்குவதாகவும் கைப்பிடி படத்துக்கு ஒரு leading point ஆகவும் தோன்றியது எனக்கு. இருந்தாலும் நீங்கள் சொல்வதையும் கவனத்தில் கொள்கிறேன். இன்னும் யோசிக்க 3 தினங்கள் உள்ளன அல்லவா:)?
சகாதேவன் said...
பதிலளிநீக்கு// முதல் படத்திற்குத்தான் என் பரிசு.//
தாருங்கள், உங்கள் பரிசை இதோ இப்போதே வாங்கிக் கொள்கிறேன்:)!
வல்லுநர் உங்கள் பார்வையில் முதல் படமே முன்னணியில் இருக்கிறது. கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//ஆத்தாடி இம்புட்டு இருக்கா புகைப்படத்துல! என்னோட சாய்ஸ் முதலும், குருவியும். ஆனா வல்லுனர்கள் கருத்துப்படி, இரண்டாவது படம் இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. எது எப்படியோ, பாபுலர் சாய்ஸ் உங்க புகைப்படங்கள்தான். வாழ்த்துக்கள்.//
அக்கறையுடன் செய்திருக்கும் பரித்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அனுஜன்யா.
ஜீவன் said...
பதிலளிநீக்கு// எனக்கு புடிச்சது
குருவியின் குடை!//
குருவியும் க்யூட். அதன் குடையும் க்யூட். சரி.
//எனக்கு கூட போட்டா புடிக்கனும்னு
ஆசை இருக்கு!//
ஸ்டார்ட் காமிரா!
//இப்போதைக்கு என்கிட்டே யாராவது
எதையாவது,தூக்கி ''போட்டா புடிப்பேன்''//
:))! சரி நான் ஒரு காமிராவைத் தூக்கி போட்டதா நினைச்சுக்கோங்க. புடிச்சிட்டீங்களா?...ரைட். இப்ப படம் புடிக்க ஆரம்பிங்க:)!
நம்மை எல்லாம் ஊக்கப் படுத்ததான் இருக்கிறாங்க PiT குழுவினர். அடுத்த போட்டியில் நீங்களும் இருக்குறீங்க. சொல்லிட்டேன்.
//மத்த எல்லா படங்களும்
நல்லா இருக்கு அம்மா!!//
நன்றி ஜீவன்!
முத்துலெட்சுமி-கயல்விழி said...
பதிலளிநீக்கு// ரொம்ப அழகா வந்திருக்குப்பா..//
நன்றி முத்துலெட்சுமி.
// \\வளைந்து குழைந்த திரைச்சீலை மேலே
நெளிந்தே விழுகின்றன நேர்க்கம்பியின் நிழல்கள்//
சூப்பர்..\\
தேங்க் யூ.
திகழ்மிளிர் said...
பதிலளிநீக்கு// முதல் படம் அருமை
வாழ்த்துகள்//
வாழ்த்துக்கும் பரிந்துரைக்கும் நன்றிங்க.
கார்த்திக் said...
பதிலளிநீக்கு// எனத்த சொல்ல
உங்களுக்குள்ள இப்படி ஒரு கலைஞனா
சுட்டுத்தள்ளீடிங்க போங்க
எனக்கு நாலாவது படம் பிடிச்சிருக்கு
வாழ்துக்கள் :-))//
நன்றி கார்த்திக்:)! நாலாவது படம் ஆயில்யன் ரிஷான் ஆகியோருக்கும் பிடித்திருக்கிறது.
kalyan kumar said...
பதிலளிநீக்கு//நிழல்கள் மீது தங்களுக்கு இருக்கும் காதல் புரிகிறது. தொடருங்கள்.//
அட அப்படியெல்லாம் ஏதுமில்லை. இதுவரை கவனிக்காத நிழலைக் கவனிக்க வைத்தது PiT. அவர்களுக்குதான் சொல்லணும் நன்றி.
//எனது வலைப்பக்கத்தைப் பார்வையிட தங்களை அன்போடு அழைக்கிறேன்.//
வருகிறேன். கருத்துக்கும் நன்றி கல்யாண்.
An& said...
பதிலளிநீக்கு//முதல் நான்கு படங்களும் நன்றாக இருக்கின்றன. //
ஒட்டு மொத்தமாக நிழல்களுக்காகவே முயற்சித்த முதல் நான்கிற்கும் மார்க் கொடுத்து விட்டீர்கள். முயற்சி திருவினையாகிறதா பார்ப்போம்:)!
//வெற்றி பெற வாழ்த்து.//
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி An&.
கபீஷ் said...
பதிலளிநீக்கு//எனக்கு photography பத்தி எதுவும் தெரியாது. குருவியின் குடை கவிதையா இருக்கு. so cute!!!//
குருவிக்கு இன்னொமொரு ரசிகர்:)!
நன்றி கபீஷ்.
கவிநயா said...
பதிலளிநீக்கு//எனக்குப் பிடிச்சது குருவியோட குடை. //
அந்தக் குருவி கிடைத்தால் சொல்கிறேன்:
’குருவி குருவி கொஞ்சம் நில்
உன்னை ரசித்தவர் எத்தனை பேர்
பார்த்து செல்!’ என:)!
//அப்புறம் இந்த வரிகள் -
//அடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்
கண்ணனின் வெண்ணெய் உருகாது
பிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்
பள்ளம் நோக்கிப் பாயாது!//\\
நானும் ரசித்து இட்ட வரிகள்:)!
\\வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.\\
நன்றி கவிநயா வாழ்த்துக்களுக்கும்.
தங்கராசா ஜீவராஜ் said...
பதிலளிநீக்கு//எல்லாப்படமும் அருமை {வழமையான TV நடுவர்களின் வாக்குமுலம்போலில்லாமல்....}//
ஹா ஹா. நன்றி. உங்கள் நகைச் சுவை உணர்வை ரசித்தேன்:)!
//ம்...ம்.... முதல்படம்தான் பிடித்திருக்கிறது..//
ம்...ம்.... நானும் அந்த சிந்தனையில்தான் இருக்கிறேன்:)!
//காரணங்களுக்கு அப்பால் கவிதைபோல் இருக்கிறது....//
உங்கள் கருத்தும் கவிதையாக இருக்கிறது. நன்றி ஜீவராஜ்.
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//ரெண்டாவது படமும் குருவியின் குடையும் நல்லாருக்கு. இப்ப என்ன செய்வீங்க...இப்ப என்ன செய்வீங்க?//
இந்த ஆட்டத்திற்கு நான் வரலைப்பா ...//
வரலைன்னா விட்டிருவோமா:)?
//படங்களில், என்னோட சாய்ஸ் ரெண்டாவது தான்.//
சிந்திக்கிறேன்:)!
//நிழல்களின் வரிகள் அனைத்துமே அற்புதம். படத்தைப் பார்க்க வருகிறோமோ இல்லையோ, கவிகள் படிக்கவாவது எல்லோரும் வரணும் இங்கு.
வழக்கம் போல கலக்கிட்டீங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
வழக்கம் போல ரசித்துப் பாராட்டியிருக்கீங்க சதங்கா. வாழ்த்துக்கும் அக்கறையான பரிந்துரைக்கும் மிக்க நன்றி.
அக்கா, கவிதைகளெல்லாம் சூப்பரா இருக்கு...
பதிலளிநீக்குராமலஷ்மி ! உங்க காமிராவும் கவிதை பேசுமோ ! ரசித்தேன் மிகவும் நிழல்களையும் நிஜத்தையும்(படம்தொடர்பான வார்த்தைகளையும்)!
பதிலளிநீக்குகடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//அக்கா, கவிதைகளெல்லாம் சூப்பரா இருக்கு...//
நன்றி ஆனந்த். படங்கள் எப்படி இருக்குன்னு சொல்லவில்லையே:)?
ஷைலஜா said...
பதிலளிநீக்கு//ராமலஷ்மி ! உங்க காமிராவும் கவிதை பேசுமோ !//
ஹிஹி, பேசாட்டாலும் செல்லமா தலையில தட்டி பேச வைத்துப் பார்ப்பதில் ஒரு திருப்தி:)!
//ரசித்தேன் மிகவும் நிழல்களையும் நிஜத்தையும்(படம்தொடர்பான வார்த்தைகளையும்)!//
உங்க கருத்தும் கவி பாடுது. ரொம்ப நன்றி ஷைலஜா:)!
புகைப்படங்களும் ..கவிதையும் மிக அருமை ...
பதிலளிநீக்குமுதல் இரண்டு படங்களும் மிக அருமை ..
வாழ்த்துக்களுடன் ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
நல்ல காலம் படங்களுக்கு தலைப்பும் வெக்கிற போட்டியா இல்லே! இப்ப எங்களுக்கும் ஒரு சான்ஸ் இருக்கு! எந்தப்படம் நல்லா இருக்குன்னு இப்ப சொல்லி என்ன புண்ணியம். அனுப்பிட்டீங்களே!
பதிலளிநீக்குஜன்னல் கர்டன் என்னோட தேர்வு!
படம் எல்லாம் நல்லா இருக்கு
பதிலளிநீக்குநானும் உங்க ஊருதான்
Vishnu... said...
பதிலளிநீக்கு//புகைப்படங்களும் ..கவிதையும் மிக அருமை ...
முதல் இரண்டு படங்களும் மிக அருமை ..
வாழ்த்துக்களுடன் ...//
கருத்துக்கும் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஷ்ணு.
திவா said...
பதிலளிநீக்கு//நல்ல காலம் படங்களுக்கு தலைப்பும் வெக்கிற போட்டியா இல்லே!//
:)!
//இப்ப எங்களுக்கும் ஒரு சான்ஸ் இருக்கு! எந்தப்படம் நல்லா இருக்குன்னு இப்ப சொல்லி என்ன புண்ணியம். அனுப்பிட்டீங்களே!//
அதனால் என்ன திவா? ஒவ்வொருத்தர் சொல்கிற கருத்தும் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது அல்லவா?
//ஜன்னல் கர்டன் என்னோட தேர்வு!//
மிக்க நன்றி. பலருக்கும் அது பிடித்துப் போனதில் எனக்கு மகிழ்ச்சியே.
சங்கரராம் said...
பதிலளிநீக்கு//படம் எல்லாம் நல்லா இருக்கு
நானும் உங்க ஊருதான்//
நம்ம ஊரா? ரொம்ப சந்தோஷம்:). முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சங்கரராம்.