அன்றாட வாழ்வில் இன்றைக்கும் ஏதாவது ஓரிடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவலங்களைக் கண்டு அயர்ந்து போகும் நாம் எங்கேனும் நல்ல மாற்றங்கள் நிகழுகையில் போற்றுதல் முறைதானே!
அப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...?
அப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப் பட்டதாக மகிழ்வுடன் வெளியிட்டிருந்த பேட்டியை Times of India-வில் படித்து அறிந்த போது போற்றிப் பாடியது.
முடிவும்
விடிவும்
சிவகாசி சீமையிலிருந்து
சிறப்பான செய்தி ஒன்று!
சித்திரங்கள் தீட்ட வேண்டிய
சின்னஞ்சிறு கைகள்
சிதறி வெடிக்கும் மருந்துகளைச்
செய்து வந்த அவலங்கள்
முடிவுக்கு வந்ததென்று
முத்தாய்ப்பாய் செய்தியொன்று-அம்
முத்துக்களின் முன்னேற்றத்துக்கு
முகவுரையாய் வந்ததின்று!
மத்தாப்பாய் மலர வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மத்தாப்புத் தயாரிப்பில்
மகிழ்ச்சிகளைத் தொலைத்த
மாசு இன்று பல
நல்ல மனங்களால்
தூசு தட்டப் பட்டு
துலங்குவது குதூகலமே.
கற்றிருந்தால்
கல்பனா சாவ்லா போல்
விண்வெளியை ஆராயும்
வித்தகர்களாய்
விளைந்திருக்கக் கூடிய
வித்துகள்!
கல்வி என்பதே
கானல் கனவாகிப் போனதால்
வான்வெளியில்
வாண வேடிக்கைக்கு வெடிகள்
வார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்டக்
குருத்துகள்!
இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!
பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!
எழுபது ஆண்டுகளாய்
இத் தொழிலிலே
ஈட்டிய பணம் யாவும்
எத்தனை
எளிய பிஞ்சுகளின்
எதிர்காலத்தை
ஏய்த்துப் பிரட்டியது என்பதை
எண்ணி உணர்ந்த-இன்றைய
எஜமானர் வர்க்கம்
ஏற்றமிகு சமுதாயம் கண்டிட
ஏக மனதாய் பாடுபடுவது
போற்றுதலுக்குரியதே!
அரசு அரட்டியதால் மட்டுமின்றி
மனசும் அரற்றியதால் வந்தது
இந்த மாற்றமே!
உலகம் தூற்றியதால் மட்டுமின்றி
உறங்கிக் கிடந்த மனசாட்சியும்
விழித்துக் கொண்டதாலும்
விளைந்தது
இந்த ஏற்றமே!
ஆட்சியாளரே தருகிறார்
சாட்சி இன்று:
தன்னிறைவு நோக்கித்
தடம் புரளாமல்
பயணிக்கிறது சிவகாசி-
பருவத்தே பயின்றிடப்
பாடசாலைகளும்
கருத்துடன் கற்றிடக்
கல்லூரிகளும்
தொழிலிலே தேர்ந்திடப்
பயிற்சி கூடங்களுமாய்ப்
பல்கிப் பெருகி...
பெருமை சேர்கிறது.
வேலை வாய்ப்புக்கும்
குறைவேது?
விதவிதமாய்
வெடிவெடித்து
வேடிக்கையாய்
கேளிக்கைகளைக்
கொண்டாடிட-
உலகமே இருக்கிறது
இவர் ஒருவரையே
எதிர் பார்த்து...
வாழ்வும் வளமாகிறது.
இப்போது
உழைப்புக்கு ஊதியங்களும்
லாபமாய் லகரங்களும்
உறுத்தல்கள் ஏதுமின்றி
உண்மையின் பாதையிலே!
வெறுப்புக்கு இடம் கொடாமல்
வெற்றியினை நோக்கி
வேக நடை போடுவது-இரண்டு
வர்க்கங்களுமே!
*** *** *** *** ***
ஆனால் இந்நிலை இன்றும் அங்கு தொடர்கிறதா..?
அன்று ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று எனைத் தூண்டிய அதே TOI, தீபாவளி அன்று (அக்டோபர் 27,2008 நாளிதழில்) இந்த வருடம் பட்டாசு அதிகமாக விற்பனை ஆகாததற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருந்தது. அதில் ஒன்றாக.. இன்னும் குழந்தைகள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தப் படுவதாக வந்த தகவல்களால் மக்களில் சிலர் இந்த முறை பட்டாசைப் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
அன்று போற்றி எழுதியது பொய்யாகிப் போகாது மறுபடி மெய்பட வேண்டும். அங்கு மட்டுமின்றி எங்கும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் முற்றிலுமாய் முற்றுப் பெற வேண்டும்.
குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. கடந்த மாதம் பெங்களூரில் மட்டும் இரண்டு சம்பவங்கள் காவலர் மற்றும் மீடியாவின் கவனத்துக்கு வந்து குழந்தைகள் மீட்கப் பட்டனர்.
இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.
படங்கள்: இணையத்திலிருந்து
August 28, 2003 திண்ணை இணைய இதழில் "சிவகாசி சித்திரங்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. 2 ஜூன் 2009 யூத் விகடன் இணைய தளத்திலும்:
அப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...?
அப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப் பட்டதாக மகிழ்வுடன் வெளியிட்டிருந்த பேட்டியை Times of India-வில் படித்து அறிந்த போது போற்றிப் பாடியது.
முடிவும்
விடிவும்
சிவகாசி சீமையிலிருந்து
சிறப்பான செய்தி ஒன்று!
சித்திரங்கள் தீட்ட வேண்டிய
சின்னஞ்சிறு கைகள்
சிதறி வெடிக்கும் மருந்துகளைச்
செய்து வந்த அவலங்கள்
முடிவுக்கு வந்ததென்று
முத்தாய்ப்பாய் செய்தியொன்று-அம்
முத்துக்களின் முன்னேற்றத்துக்கு
முகவுரையாய் வந்ததின்று!
மத்தாப்பாய் மலர வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மத்தாப்புத் தயாரிப்பில்
மகிழ்ச்சிகளைத் தொலைத்த
மாசு இன்று பல
நல்ல மனங்களால்
தூசு தட்டப் பட்டு
துலங்குவது குதூகலமே.
கற்றிருந்தால்
கல்பனா சாவ்லா போல்
விண்வெளியை ஆராயும்
வித்தகர்களாய்
விளைந்திருக்கக் கூடிய
வித்துகள்!
கல்வி என்பதே
கானல் கனவாகிப் போனதால்
வான்வெளியில்
வாண வேடிக்கைக்கு வெடிகள்
வார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்டக்
குருத்துகள்!
இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!
பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!
எழுபது ஆண்டுகளாய்
இத் தொழிலிலே
ஈட்டிய பணம் யாவும்
எத்தனை
எளிய பிஞ்சுகளின்
எதிர்காலத்தை
ஏய்த்துப் பிரட்டியது என்பதை
எண்ணி உணர்ந்த-இன்றைய
எஜமானர் வர்க்கம்
ஏற்றமிகு சமுதாயம் கண்டிட
ஏக மனதாய் பாடுபடுவது
போற்றுதலுக்குரியதே!
அரசு அரட்டியதால் மட்டுமின்றி
மனசும் அரற்றியதால் வந்தது
இந்த மாற்றமே!
உலகம் தூற்றியதால் மட்டுமின்றி
உறங்கிக் கிடந்த மனசாட்சியும்
விழித்துக் கொண்டதாலும்
விளைந்தது
இந்த ஏற்றமே!
ஆட்சியாளரே தருகிறார்
சாட்சி இன்று:
தன்னிறைவு நோக்கித்
தடம் புரளாமல்
பயணிக்கிறது சிவகாசி-
பருவத்தே பயின்றிடப்
பாடசாலைகளும்
கருத்துடன் கற்றிடக்
கல்லூரிகளும்
தொழிலிலே தேர்ந்திடப்
பயிற்சி கூடங்களுமாய்ப்
பல்கிப் பெருகி...
பெருமை சேர்கிறது.
வேலை வாய்ப்புக்கும்
குறைவேது?
விதவிதமாய்
வெடிவெடித்து
வேடிக்கையாய்
கேளிக்கைகளைக்
கொண்டாடிட-
உலகமே இருக்கிறது
இவர் ஒருவரையே
எதிர் பார்த்து...
வாழ்வும் வளமாகிறது.
இப்போது
உழைப்புக்கு ஊதியங்களும்
லாபமாய் லகரங்களும்
உறுத்தல்கள் ஏதுமின்றி
உண்மையின் பாதையிலே!
வெறுப்புக்கு இடம் கொடாமல்
வெற்றியினை நோக்கி
வேக நடை போடுவது-இரண்டு
வர்க்கங்களுமே!
*** *** *** *** ***
ஆனால் இந்நிலை இன்றும் அங்கு தொடர்கிறதா..?
அன்று ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று எனைத் தூண்டிய அதே TOI, தீபாவளி அன்று (அக்டோபர் 27,2008 நாளிதழில்) இந்த வருடம் பட்டாசு அதிகமாக விற்பனை ஆகாததற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருந்தது. அதில் ஒன்றாக.. இன்னும் குழந்தைகள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தப் படுவதாக வந்த தகவல்களால் மக்களில் சிலர் இந்த முறை பட்டாசைப் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
அன்று போற்றி எழுதியது பொய்யாகிப் போகாது மறுபடி மெய்பட வேண்டும். அங்கு மட்டுமின்றி எங்கும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் முற்றிலுமாய் முற்றுப் பெற வேண்டும்.
குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. கடந்த மாதம் பெங்களூரில் மட்டும் இரண்டு சம்பவங்கள் காவலர் மற்றும் மீடியாவின் கவனத்துக்கு வந்து குழந்தைகள் மீட்கப் பட்டனர்.
இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.
படங்கள்: இணையத்திலிருந்து
August 28, 2003 திண்ணை இணைய இதழில் "சிவகாசி சித்திரங்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. 2 ஜூன் 2009 யூத் விகடன் இணைய தளத்திலும்:
2003 சரி. ஆனா, இப்பவும் அப்படிதான் இரூக்கா சிவகாசியில்?
பதிலளிநீக்குயாராவது வெவரம் தெரிஞ்சவங்க சொன்னா தெரிஞ்சுக்கலாம்.
///பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துடன் தமிழ்மணம் கருவிப் பட்டையில் வாக்கையும் பதிந்து செல்லுங்களேன்.//
பதிஞ்சாச்சு ;)
நல்ல கருத்துக்கள் கூறும் அருமையான கவிதை.
பதிலளிநீக்கு/* பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!/
இது தொடர வேண்டும்.
/* இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.*/
ஒவ்வொருவரும் குழந்தை தொழிலாளர் தம் சுற்றுப்புறத்தில் இல்லாது பார்த்துக் கொண்டால் விரைவில் விடியல் வரும்.
பக்குவம் இல்லாத பழைய தலைமுறை பணத்துக்காகப் பச்சிளம் பாலகரைப் பட்டாசுச் சாலையிலே பயன் படுத்தியது பாவம் என்று- படித்துத் தேர்ந்த புதிய தலைமுறை புரிந்து கொண்டது புண்ணியமே
பதிலளிநீக்கு///////////////////////////////////////
கண்டிப்பாக.............
குழந்தைகள் வேலைக்கு போனால்தான் அடுத்த குழந்தைக்கு ஏற்பாடு செய்ய முடியும். நிறைய குழந்தை, நிறைய வேலை, நிறைய சம்பளம்
பதிலளிநீக்கு//இல்லாமையால்
பதிலளிநீக்கு'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!
//
அழகாய் அமைந்த வரிகள்!
அழகாகவே அமையட்டும் அவர்கள்தம் வாழ்வும் !
நன்றி அக்கா பகிர்ந்துக்கொண்ட கவிதைக்கு!
SurveySan said...
பதிலளிநீக்கு//2003 சரி. ஆனா, இப்பவும் அப்படிதான் இரூக்கா சிவகாசியில்?//
அப்படித்தான் சொல்கிறது TOI. ஒருவேளை ஓரிரு இடங்களில் மறுபடி இம்முறை தலைதூக்கி விட்டதா, தெரியவில்லை:(!
//யாராவது வெவரம் தெரிஞ்சவங்க சொன்னா தெரிஞ்சுக்கலாம்.//
அதேதான் நானும் எதிர்ப் பார்த்துக் காத்திருக்கிறேன். நல்ல செய்தியா சொல்லட்டும்.
//பதிஞ்சாச்சு ;)//
நன்றி. பதிவு பலரையும் சென்றடைந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படட்டுமே. அமுதா எவ்வளவு அழகாய் விடியலுக்கு வழி சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
//வாண வேடிக்கைக்கு வெடிகள்
பதிலளிநீக்குவார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்டக்
குருத்துகள்!//
நல்லாருக்கு ராமலஷ்மி, கவிதையின் வரிகள்! நல்ல எண்ணங்கள்!
//இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!//
ம்ம்..:(
//அன்று போற்றி எழுதியது பொய்யாகிப் போகாது மறுபடி மெய்பட வேண்டும். அங்கு மட்டுமின்றி எங்கும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் முற்றிலுமாய் முற்றுப் பெற வேண்டும்.
//
ஆமாம்! ஆனா எப்படித் தெர்ஞ்சுக்கரது, அவங்க சொல்றதை நம்ப வேண்டிய நிலை! பெற்றோர்களிடையேயும் இந்த விழிப்புணர்வு தேவை!
அப்பப்போ இது மாதிரி கவிதை எழுதி மனதை கனக்க வச்சிடறீங்க! ஓட்டுப் போட்டுட்டேன்!
பதிலளிநீக்குஇதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்
பதிலளிநீக்குகண்டிப்பாக.
கருத்துக்களை ஏந்தி வரும் இந்தக் கவிதையும் அருமை.
இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!
அழகியல் வரிகள்
நல்ல கவிதை. ஓட்டுப் போட்டுட்டேன்.
பதிலளிநீக்குசமூகத்தை மாற்ற இயலா விட்டாலும் நம்மை சுற்றி எந்த குழந்தைத் தொழிலாளர்களும் இல்லாமல் பார்த்துக்கலாம்!
பதிலளிநீக்குநல்ல பதிவு.!
பதிலளிநீக்குகுழந்தை தொழிலாளர் முறை
பதிலளிநீக்குதற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக
அல்லது ஒழிக்கப்பட்டு வருவதாக தான்
தோன்றுகிறது! இங்கே சென்னையில்
டீக்கடை போன்ற இடங்களில் சிறுவர்களை
வேலைக்கு வைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய சிலரை
காவல் துறை தண்டித்தும் இருக்கிறது!
இதற்கெல்லாம் ''அன்று'' ''உங்களைபோன்றவர்கள்''
செய்த சில ''காரியங்களுக்கும்'' பங்கு இருக்க
கூடும்!
/இல்லாமையால்
பதிலளிநீக்கு'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!/
அருமையான வரிகள்
அமுதா said...
பதிலளிநீக்கு//நல்ல கருத்துக்கள் கூறும் அருமையான கவிதை. //
நன்றி அமுதா.
///* பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!/
இது தொடர வேண்டும். ///
இன்றைய தலைமுறை இந்த விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை. சிந்திக்கிறார்கள்.
///* இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.*/
ஒவ்வொருவரும் குழந்தை தொழிலாளர் தம் சுற்றுப்புறத்தில் இல்லாது பார்த்துக் கொண்டால் விரைவில் விடியல் வரும்.//
ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள். நம்மால் இயன்றது என எண்ணி ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தால் போதுமே. உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுவதால் இதைச் சொல்கிறேன். ஒரு 4 வருடம் முன் என்னிடம் சில காலம் வேலை செய்த பெண்மணி 8ஆம் வகுப்புடன் தன் பெண்ணின் படிப்பை நிறுத்தி விட்டு எம் குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டில் குழந்தையைப் பார்க்கும் வேலைக்குச் சேர்த்து விட்டு விட்டார். ஜூன் பாதி தாண்டியதும் விவரம் தெரிய வந்த நான் அதிர்ச்சி அடைந்த விவரம் கேட்ட போது தற்போது வீடு மாற்றியதால் அட்வான்சுக்கு நிறைய செலவு, வாடகை அதிகமாகி விட்டது, இவளும் சம்பாதித்தால் சவுகரியம் என்கிற ரீதியில் ஏதேதோ காரணங்கள் சொல்ல, நான் எடுத்துக் கூறி அவ்வருட பள்ளி ஃபீஸ், மற்றும் சீருடைக்கான செலவுகளை ஏற்று மீண்டும் 9ஆம் வகுப்பில் சேர்த்து விட்டேன். இப்போது அவர் மகள் பி.யூ இரண்டாம் வருடத்தில் நன்றாகவும் படித்து வருகிறாள்.
ஆனால் சிறு வயதிலிருந்தே பள்ளி வாசனையே தெரிய வாய்ப்பின்றி போன குழந்தைகளுக்கு அரசு அவரது வயதைப் பொருட்படுத்தாது கல்வி அளிக்க ஏதேனும் வழிவகை செய்திருக்கிறதா தெரியவில்லை. தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பாவது ஏற்படுத்திக் கொடுக்கப் பட வேண்டும்.
SUREஷ் said...
பதிலளிநீக்கு//பக்குவம் இல்லாத பழைய தலைமுறை பணத்துக்காகப் பச்சிளம் பாலகரைப் பட்டாசுச் சாலையிலே பயன் படுத்தியது பாவம் என்று- படித்துத் தேர்ந்த புதிய தலைமுறை புரிந்து கொண்டது புண்ணியமே
///////////////////////////////////////
கண்டிப்பாக.............//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SUREஷ்.
SUREஷ் said...
பதிலளிநீக்கு// நிறைய குழந்தை, நிறைய வேலை, நிறைய சம்பளம்//
இதென்னவோ உண்மைதான். முதலில் வறுமையின் மேல் பழியைப் போட்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட ஆவன செய்ய வேண்டும். நல்ல கருத்துக்கு நன்றி.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு// //இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!//
அழகாய் அமைந்த வரிகள்!
அழகாகவே அமையட்டும் அவர்கள்தம் வாழ்வும் !////
நன்றி ஆயில்யன். உங்கள் நல்லாசி அவர்களது வாழ்வில் ஒளியேற்றட்டும்.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு// //வாண வேடிக்கைக்கு வெடிகள்
வார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்டக்
குருத்துகள்!//
நல்லாருக்கு ராமலஷ்மி, கவிதையின் வரிகள்! நல்ல எண்ணங்கள்!////
நன்றி முல்லை.
இல்லையா பின்னே, அவர்கள் இழந்த வசந்தங்களையும் வாய்ப்புக்களையும் எவராலாவது திருப்பித் தர இயலுமா?
////இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!//
ம்ம்..:(////
அவ்வையின் சொல் இவர்கள் வாழ்வில் அர்த்தமற்றேதான் போனது
:(!
//ஆனா எப்படித் தெர்ஞ்சுக்கரது, அவங்க சொல்றதை நம்ப வேண்டிய நிலை!//
எல்லா விஷயங்களிலும் அப்படித்தான். ஆனால் இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை முல்லை. சில செய்தி சேனல்கள் [தமிழ் அல்ல] இது போன்ற விஷயங்களை உள் வரை சென்று விவரமறிந்து ஒளிபரப்புகிறார்களே.
// பெற்றோர்களிடையேயும் இந்த விழிப்புணர்வு தேவை!//
இதுதான் முக்கியம்.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//அப்பப்போ இது மாதிரி கவிதை எழுதி மனதை கனக்க வச்சிடறீங்க! ஓட்டுப் போட்டுட்டேன்!//
நன்றி முல்லை. ஒரு நாலு பேரையாவது இப்பதிவின் சிந்தனைகள் சென்றடையட்டுமே.
அமிர்தவர்ஷினி அம்மா said...
பதிலளிநீக்கு//*இதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்*
கண்டிப்பாக.
கருத்துக்களை ஏந்தி வரும் இந்தக் கவிதையும் அருமை.//
கருத்துக்கு நன்றி அமித்து அம்மா.
//*இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!*
அழகியல் வரிகள்//
வாழ்வின் அழகிய பருவத்தை இல்லாமையால் இழந்த நிலை கண்டு இளகி வந்த வரிகள்.
கபீஷ் said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை. ஓட்டுப் போட்டுட்டேன்.//
மிக்க நன்றி கபீஷ்:)!
தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//சமூகத்தை மாற்ற இயலா விட்டாலும் நம்மை சுற்றி எந்த குழந்தைத் தொழிலாளர்களும் இல்லாமல் பார்த்துக்கலாம்!//
ஒவ்வொருவரும் இதைக் கருத்தில் கொண்டாலே பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. நல்ல கருத்துக்கு நன்றி தமிழ் பிரியன்.
தாமிரா said...
பதிலளிநீக்கு//நல்ல பதிவு.!//
நன்றி தாமிரா.
ஜீவன் said...
பதிலளிநீக்கு//குழந்தை தொழிலாளர் முறை
தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக
அல்லது ஒழிக்கப்பட்டு வருவதாகதான்
தோன்றுகிறது!//
நல்ல செய்தி சொல்கிறீர்கள்.
//இங்கே சென்னையில்
டீக்கடை போன்ற இடங்களில் சிறுவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள்.//
தொடரட்டும் இந்த அச்சம்.
//சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய சிலரை காவல் துறை தண்டித்தும் இருக்கிறது!//
காவல்துறையின் கண்காணிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். நான் பதிவில் குறிப்பிட்டிருந்த மாதிரி காவல் துறை தலையீட்டால்தான் பெங்களூரில் இரண்டு குழந்தைகள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு வந்த கொடுமையிலிருந்து மீட்கப் பட்டார்கள். இவர்களை வேலைக்கு வைப்பவர்கள் ஒரே ஒரு கணமேனும் அந்தக் குழந்தையின் முதத்தில் தங்கள் குழந்தைகளைக் கண்டால் போதும். இந்த அவலத்துக்கு ஒரு முடிவு பிறக்கும்.
//இதற்கெல்லாம் ''அன்று''
''உங்களை போன்றவர்கள்'' செய்த சில ''காரியங்களுக்கும்'' பங்கு இருக்க கூடும்!//
நம்மால் இயன்றது நடைமுறையில் நம்மைச் சுற்றி நடப்பதைத் தட்டிக் கேட்பதும் விழிப்புணர்வை ஏற்படுத்த எழுத்தினை பயன்படுத்துவதும்தான்:)!
கருத்துக்கு மிக்க நன்றி ஜீவன்.
திகழ்மிளிர் said...
பதிலளிநீக்கு// /இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!/
அருமையான வரிகள்//
நன்றி திகழ்மிளிர். தாங்கள் இழப்பதின் அருமை என்ன என்பதைக் கூட உணர இயலாத இவர்களின் நிலை.. எல்லோர் இதயத்தையும் தொட்டு விட்டதாலேயே, பலருக்கும் இவ்வரிகள் பிடித்து விட்டிருக்கிறது. உங்களுக்கும்.
வெடித்துச் சிதறும் பட்டாசு ஒளியில் பச்சிளம் குழந்தைகளின் மகிழ்ச்சியும் எதிர்காலமும் வெடித்துச் சிதறுவதை யாராவது ஒருவர் புரிந்து கொண்டாலும் போதுமே அந்த ஒருவர் பலராகி பலர் பல்லாயிரமாகி ஆவன செய்யலாமே.கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஒருவர் கூட இல்லையென்றுதானே தெரிகிறது.நல்லவை வெளிவர நாளாகும் போலிருக்கிறது.
பதிலளிநீக்கு//இல்லாமையால்
பதிலளிநீக்கு'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!//
ஔவையின் ஜாடையில்
ஓவியம் தீட்டி
கோர்வையாய் கல்வியில்
குழந்தைநலன் காட்டி
ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது மத்தாப்பு செய்யும் பிஞ்சுக்களின் நலன் கருதி கவிபாடியதற்கு வாழ்த்துக்கள்.
படிக்க வேண்டிய வயதில் பல குழந்தைகள் இன்னும் கொடுமையான வேலைகளை தான் செய்து கொண்டு இருகின்றhர்கள். வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இது போன்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக அரசு எதையாவது செய்து தான் ஆக வேண்டும்.
பதிலளிநீக்குஎங்கு பார்க்கினும் ஊழல் என்று வந்த போது குழந்தைகளை பற்றி யார் கவலைப்பட போகிறhர்கள். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுதானே முக்கியம். இது போன்ற விஷயங்கள் அலசப்பட வேண்டும்.
சிறhர்களை பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். கல் உடைக்கும் வேலைக்கோ, பட்டாசு வேலைக்கோ அல்ல. என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் நினைக்கிறேன். அரசியல்வாதிகள் அந்த அளவிற்கு மக்களை வறுமையின் பிடியில் வைத்திருக்கிறhர்கள், இப்போது கூட.
அக்கா உங்கள் பதிவில் நல்ல பொது நல கருத்துகள் தொடர்ந்து வலம் வர தொடங்கியதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.
//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது//
பதிலளிநீக்குஇவர்களும் தீவிரவாதிகளை போல மோசமானவர்கள் தான். இவர்களால் எப்படி குழந்தைகளை கொடுமைபடுத்த முடிகிறதோ! மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாதது தான்.
நல்ல பதிவு ராமலக்ஷ்மி
ராமலஷ்மி!
பதிலளிநீக்குஉங்கள் அழகான வரிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..சதங்காவின் இவ்வரிகள்
//ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது மத்தாப்பு செய்யும்//
goma said...
பதிலளிநீக்கு//வெடித்துச் சிதறும் பட்டாசு ஒளியில் பச்சிளம் குழந்தைகளின் மகிழ்ச்சியும் எதிர்காலமும் வெடித்துச் சிதறுவதை யாராவது ஒருவர் புரிந்து கொண்டாலும் போதுமே அந்த ஒருவர் பலராகி பலர் பல்லாயிரமாகி ஆவன செய்யலாமே.//
சரியாகச் சொன்னீர்கள். அந்தப் புரிதலும் இவ்வருடம் பட்டாசு விற்பனை குறைந்ததற்கு ஒரு காரணம் என்கிறது TOI.
//கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஒருவர் கூட இல்லையென்றுதானே தெரிகிறது.நல்லவை வெளிவர நாளாகும் போலிருக்கிறது.//
எல்லா நல்ல மாற்றங்களும் ஏன் பொது நலத் திட்டங்களும் கூட வந்த வேகத்தில் வாபஸ் பெறப் படுவது நம் நாட்டின் சோகங்களில் ஒன்று.
நல்லவை நடக்கும் என நம்புவோம். நம்மால் ஆனதை செய்வோம். கருத்துக்கு மிக்க நன்றி கோமா!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//ஔவையின் ஜாடையில்
ஓவியம் தீட்டி
கோர்வையாய் கல்வியில்
குழந்தைநலன் காட்டி//
சொல்லுங்க சொல்லுங்க அப்புறம்..
//ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது
மத்தாப்பு செய்யும்
பிஞ்சுக்களின் நலன் கருதி//
அருமை அருமை சதங்கா. நான் மட்டுமா மயங்கினேன் நானானியும்தான் பாருங்க. திகழ்மிளிருக்கான பதிலில் இதைத்தான் “தாங்கள் இழப்பதின் அருமை என்ன என்பதைக் கூட உணர இயலாத இவர்களின் நிலை..” எனக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சோகத்தை உங்களுக்கே உரித்தான எளிய நடையில் மனதில் தைக்குமாறு சொல்லியிருக்கிறீர்கள்.
//கவிபாடியதற்கு வாழ்த்துக்கள்.//
பதில் கவிதைக்கு பலநூறு நன்றிகள்!
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//படிக்க வேண்டிய வயதில் பல குழந்தைகள் இன்னும் கொடுமையான வேலைகளை தான் செய்து கொண்டு இருகின்றhர்கள்.//
ஆமாம் ஆனந்த். இந்த நிலையில் மாற்றம் தெரிவதாக ஜீவன் சொல்லியிருப்பது ஒரு ஆறுதலான செய்தி.
//வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இது போன்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக அரசு எதையாவது செய்து தான் ஆக வேண்டும்.
எங்கு பார்க்கினும் ஊழல் என்று வந்த போது குழந்தைகளை பற்றி யார் கவலைப்பட போகிறhர்கள். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுதானே முக்கியம். //
மறுக்க முடியாத உண்மை:(! குழந்தைகளை வேலைக்கு வைப்பவர்களுக்கான தண்டனையைக் இன்னும் கடுமையாக்கலாம் அரசு. செய்யுமா?
//சிறhர்களை பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். கல் உடைக்கும் வேலைக்கோ, பட்டாசு வேலைக்கோ அல்ல. //
இதை பெற்றவர்களும் உணர வேண்டும். வறுமையைக் காரணம் காட்டி வேலைக்கு அனுப்பாது அரசு பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
//என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் நினைக்கிறேன். .//
”சரியான” என்பது ரொம்பச் சரி. விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் ”சரியான” முறையில் இல்லை. அரசும் மதிய உணவுத் திட்டம் போன்றவற்றின் மூலம் வறுமையில் வாடுபவர்கள் ’ஒருவேளை சாப்பாடாவது பிள்ளைக்குக் கிடைக்குமே’ எனக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்க்கிறது. ஆனால் சில பெற்றவர்கள் எண்ணம் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது. பிள்ளைகள் வேலைக்குப் போனால் தங்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு எனக் கணக்குப் போடுகிறார்கள்.
//அக்கா உங்கள் பதிவில் நல்ல பொது நல கருத்துகள் தொடர்ந்து வலம் வர தொடங்கியதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. //
பதிவுகளுக்கு தொடரும் உங்கள் விரிவான நல்ல கருத்துக்களுக்கும் நன்றி ஆனந்த்.
உங்க கவிதைக்கு நான் பரம ரசிகை.
பதிலளிநீக்குஓட்டு போட்டுட்டேன்.
கிரி said...
பதிலளிநீக்கு//*//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது//
இவர்களும் தீவிரவாதிகளை போல மோசமானவர்கள் தான்.//*//
சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் கிரி.
//இவர்களால் எப்படி குழந்தைகளை கொடுமைபடுத்த முடிகிறதோ!//
ஒரே ஒரு கணம் கூட அக்குழந்தைகள் முகத்தில் அவர்தம் குழந்தைகளின் முகம் தெரியவே தெரியாதா என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
//மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாதது தான்.//
நிதர்சனம்:(!
//நல்ல பதிவு ராமலக்ஷ்மி//
நன்றி, தங்கள் கருத்துக்களுக்கும்.
நானானி said...
பதிலளிநீக்கு//*//ராமலஷ்மி!
உங்கள் அழகான வரிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..சதங்காவின் இவ்வரிகள்
//ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது மத்தாப்பு செய்யும்//*//
சாப்பிடட்டும் சாப்பிடட்டும். அதில் முதல் சந்தோஷம் எனக்கே:). அவர் கவிதைகளின் பரம விசிறி அல்லவா நான்? சொல்ல வந்த விஷயத்தை எளிய வார்த்தைகளில் பொட்டில் அடித்த மாதிரி வடித்திருக்கிறார். நன்றி சதங்கா.
நன்றி நானானி.
ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குபுதுகைத் தென்றல் said...
//உங்க கவிதைக்கு நான் பரம ரசிகை.//
வாங்க தென்றல், சந்தோஷம்:)!
//ஓட்டு போட்டுட்டேன்.//
மிக்க நன்றி:)!
////இல்லாமையால்
பதிலளிநீக்கு'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!///
அருமையான படைப்பு..
இந்த மாற்றங்கள் நிலைக்க வேண்டும்..
//சாப்பிடட்டும் சாப்பிடட்டும். அதில் முதல் சந்தோஷம் எனக்கே:). அவர் கவிதைகளின் பரம விசிறி அல்லவா நான்? சொல்ல வந்த விஷயத்தை எளிய வார்த்தைகளில் பொட்டில் அடித்த மாதிரி வடித்திருக்கிறார். நன்றி சதங்கா.//
பதிலளிநீக்குஇப்படி சொல்வதற்கும் பெரிய மனது வேண்டும். ரொம்ப சந்தோசமா இருக்கு. சொல்ல நினைப்பதை (எல்லோர் மனதுக்குள்ளும் புகுந்து) அப்படியே வரிகளில் கொண்டு வந்து அசத்துவது பெரிய கலை. அதை சிறப்பாக நீங்கள் செய்ய, நானெல்லாம் வரிசையில் ஓரம் நின்றும் ரசிக்கும் ரசிகன் அளவே.
தங்கராசா ஜீவராஜ் said...
பதிலளிநீக்கு////இல்லாமையால்
'இளமையில் கல்'வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!///
அருமையான படைப்பு../
மிக்க நன்றி.
//இந்த மாற்றங்கள் நிலைக்க வேண்டும்..//
இதுதான் நமது அவா.
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//இப்படி சொல்வதற்கும் பெரிய மனது வேண்டும். ரொம்ப சந்தோசமா இருக்கு.//
உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன். மிகையல்ல.
//சொல்ல நினைப்பதை (எல்லோர் மனதுக்குள்ளும் புகுந்து) அப்படியே வரிகளில் கொண்டு வந்து அசத்துவது பெரிய கலை. அதை சிறப்பாக நீங்கள் செய்ய, நானெல்லாம் வரிசையில் ஓரம் நின்றும் ரசிக்கும் ரசிகன் அளவே.//
ஆக ஒவ்வொருவர் பாணி ஒவ்வொரு விதம். அதை மற்றவர் ரசித்துப் பாராட்டுவதில் கிடைக்கின்ற ஊக்கம் நம்மை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. சரிதானே சதங்கா:)?
நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை சகோதரி.
பதிலளிநீக்குபட்டாசுத்தொழிற்சாலையில் தற்பொழுதும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனரா?
தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பீடித் தொழில்நிறுவனங்கள் கூட இப்படித்தான்.
ஆந்திராவின் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டித் தொழிற்சாலைகளுக்கு இன்னும் தமிழகக் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் அனுப்பப்படுவதை அல்லது அதற்காகக் கடத்தப்படுவதை அறிகிறேன். அரசு ஏதாவது தீவிர நடவடிக்கை எடுத்தால் இதனைத் தடுக்கமுடியாதா?
//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமன்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. //
இது உலகம் முழுதும் பரவலாக உள்ள நிலை. அவரவர் தயை கூர்ந்து சிறுவர்களிடம் அன்பு செலுத்துவது ஒன்றே தான் இச் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஒரே வழி.
சிறுவயதிலேயே துன்புறும் இப் பிஞ்சு உள்ளங்களின் காயங்களைக் காலமும் ஆற்றாது. வடுக்கள் எப்பொழுதும் இருக்கும். அவைதான் பல இடங்களிலும் வன்முறைகளாக வெடிக்கும்.
நல்ல பதிவு சகோதரி.
எம்.ரிஷான் ஷெரீப் said...
பதிலளிநீக்கு//நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை சகோதரி.//
நன்றி ரிஷான்.
//பட்டாசுத்தொழிற்சாலையில் தற்பொழுதும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனரா?//
அப்படித்தான் TOI சொல்கிறது.
//தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பீடித் தொழில்நிறுவனங்கள் கூட இப்படித்தான்.//
அரசின் சட்டம் இன்னும் கடுமையாக வேண்டும். இல்லாவிடில் இது தொடரும்.
//ஆந்திராவின் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டித் தொழிற்சாலைகளுக்கு இன்னும் தமிழகக் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் அனுப்பப்படுவதை அல்லது அதற்காகக் கடத்தப்படுவதை அறிகிறேன். அரசு ஏதாவது தீவிர நடவடிக்கை எடுத்தால் இதனைத் தடுக்கமுடியாதா?//
கண்டிப்பாக முடியும். சிறுவர்களை வேலைக்கு வைப்பவர்களுக்கு தண்டனைகள் மிகக் கடுமையாக்கப் பட வேண்டும். தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவதிலும் பரம்பரைக்குப் பணம் சேர்ப்பதிலும் செலுத்தும் கவனத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் இது போன்ற விஷயங்களில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
//*//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமன்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. //
இது உலகம் முழுதும் பரவலாக உள்ள நிலை. அவரவர் தயை கூர்ந்து சிறுவர்களிடம் அன்பு செலுத்துவது ஒன்றே தான் இச் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஒரே வழி.*//
ஆமாம் ரிஷான். அந்தக் குழந்தைகளின் முகத்தில் ஏன் இவர்களால் தங்கள் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் எனது ஆதங்கமும்:(!
//சிறுவயதிலேயே துன்புறும் இப் பிஞ்சு உள்ளங்களின் காயங்களைக் காலமும் ஆற்றாது. வடுக்கள் எப்பொழுதும் இருக்கும். அவைதான் பல இடங்களிலும் வன்முறைகளாக வெடிக்கும்.//
மிக மிகச் சரியான கருத்து. 'நான் துன்புறுத்தப் பட்ட போது என் மீது யார் காட்டினீர்கள் இரக்கம்? இப்போது என் மனதில் அது எப்படிச் சுரக்கும்'
என இவர்கள் வன்முறையின் பாதையில் சென்று விடுவதுதான் நடக்கிறது:(!
//நல்ல பதிவு சகோதரி.//
சிந்திக்கத் தூண்டும் தங்கள் நல்ல கருத்துக்களுக்கும் நன்றி ரிஷான்.
வழமைபோல் சில விஷயங்கள்:
பதிலளிநீக்கு1. அருமையான கருத்து கொண்ட கவிதை
2. சிறப்பான பின்னூட்டங்கள்
3. ரிஷானின் ஆழமான பார்வை
4. எப்போதும்போல கடைசியாக வரும் நான் :)
வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//வழமைபோல் சில விஷயங்கள்:
1. அருமையான கருத்து கொண்ட கவிதை
2. சிறப்பான பின்னூட்டங்கள்
3. ரிஷானின் ஆழமான பார்வை
4. எப்போதும்போல கடைசியாக வரும் நான் :)
வாழ்த்துக்கள்.//
எப்போது வந்தாலும் தந்து செல்லும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அனுஜன்யா:).
அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!
பதிலளிநீக்குதேவா.
thevanmayam said...
பதிலளிநீக்கு//அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!
தேவா.//
நன்றி மருத்துவரே!
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//வழமைபோல் சில விஷயங்கள்:
1. அருமையான கருத்து கொண்ட கவிதை
2. சிறப்பான பின்னூட்டங்கள்
3. ரிஷானின் ஆழமான பார்வை
4. எப்போதும்போல கடைசியாக வரும் நான் :)
வாழ்த்துக்கள்.//
அனுஜன்யா, உங்களுக்கும் பின்னால் நான். அதோட சதங்காவின் வரிகளையும் சேர்த்துக்கறேன். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
கவிநயா said...
பதிலளிநீக்கு//அனுஜன்யா, உங்களுக்கும் பின்னால் நான். அதோட சதங்காவின் வரிகளையும் சேர்த்துக்கறேன். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//
வாழ்த்துக்கும் வழி மொழிந்திருக்கும் கருத்துக்கும் சதங்காவின் வரிகளைச் சேர்த்து ரசித்தமைக்கும் என் நன்றிகள் பல கவிநயா.
என்ன சொல்ல...?
பதிலளிநீக்குசமீபத்தில் நான் (ரொம்ப லேட்டாய்) படித்த சிந்திக்கத் தூண்டும் பதிவு.
அப்பவே படிக்காம மிஸ் பண்ணிட்டேனேன்னு மனசு வருத்தமா இருக்கு.
@ அந்தோணி முத்து,
பதிலளிநீக்குஆமாங்க, எல்லோருமேதான் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.