புதன், 8 ஜூலை, 2015

நீங்களே உங்களது நீதிபதி..

#1
ஓம் ஸ்ரீ சாய் ராம்
“உங்களின் படத்திற்கு முதல் நீதிபதி நீங்கள். இது தான் என்று இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என யாராகவும் இருக்கலாம்.  இயற்கை காட்சிகளாக இருக்கலாம். எந்த வகையான படமாகவும் இருக்கலாம்.   அவற்றில் இருந்து மிகச் சிறப்பாக நீங்கள் கருதும் படங்கள் பத்தைத் தேர்ந்தெடுத்து அதில் இருந்து அதி சிறப்பு என்று  உங்களுக்குப் பிடித்த  ஒன்றை நீங்கள்  போட்டிக்கு அனுப்புங்கள்.” என்று சொல்லி விட்டார் இந்த மாத போட்டிக்கான நீதிபதி.

#2
நீங்களே உங்களது நீதிபதி..
PiT தளத்தில் அறிவிப்புப் பதிவு இங்கே.

ஆக முதல் சுற்றுப் படங்களாய் உட்கார்ந்து ஒரு பத்தைத் தேர்ந்தெடுங்கள். அதிலிருந்து ஒரு அதிசிறப்பை அனுப்பி வையுங்கள்.

2000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் பக்கத்திலிருந்து எதை என்று மாதிரிக்காகத் தேர்ந்தெடுப்பது? அதுவுமில்லாமல் காக்கைக்கும் தன் குஞ்சு.. போல என் கேமரா பிடித்த எல்லாமே எனக்குப் பொன் குஞ்சாகதான் தெரிகிறது:). ஆகையாலே சமீபத்தில் பதிந்தவற்றிலிருந்து.. முத்துச்சரத்தில் பதியாததாகத் தெரிவு செய்து பத்து படங்கள் பார்வைக்கு இங்கே....

#3
ஓம் க்ஷிப ஸ்வாஹா..
#4

செவ்வாய், 7 ஜூலை, 2015

நான் இறக்கவிருந்த இரவில்.. - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (7)

நான் இறக்கவிருந்த இரவில்
வியர்த்துக் கொண்டிருந்தேன் என் படுக்கையில்.
கேட்க முடிந்தது என்னால்
வெட்டுக்கிளியின் கீச்சொலியையும் 
வெளியில் பூனையின் சண்டையையும்.
உணர முடிந்தது என்னால்
மெத்தையின் வழியே என் ஆன்மா 
நழுவி விழுவதை.

ஞாயிறு, 28 ஜூன், 2015

வியாழன், 25 ஜூன், 2015

சுயம் அறிதல் - கலீல் ஜிப்ரான் (2)


பகல்களின், இரவுகளின் இரகசியங்களை
அமைதியில் அறிகின்றன உங்கள் உள்ளங்கள்.
உள் மனதின் ஞான ஒலிக்காக
தாகத்தில் தவிக்கின்றன உங்கள் செவிகள்.
சிந்தனைக்கு எந்நாளும் தெரிந்தே இருப்பவற்றை
வார்த்தைகளாலும் அறிந்தே இருக்கிறீர்கள்.
உங்கள் கனவுகளின் நிர்வாண உடலை
உங்கள் விரல்களால் தொடவும் முடிகிறது.

ஞாயிறு, 21 ஜூன், 2015

தாயுமானவர்கள்.. தந்தையர் தின வாழ்த்துகள்!

என் கேமராவில் சிறையான தந்தைமைத் தருணங்கள் பேசும் படங்களாக.. காட்சிக் கவிதைகளாக.. உங்களின் பார்வைக்கு..

#1 தாயுமானவன்..




#2 ‘என் அப்பா..’



முன்னர் முத்துச்சரத்தில் பகிராத படங்கள் பதிமூன்றை இரசிக்கும் முன் பல்வேறு சமயங்களில் பதிந்தவற்றில் இருந்து ஒரு (கொலாஜ்) தொகுப்பும்...

செவ்வாய், 16 ஜூன், 2015

சத்ரிய நிருத்யா அப்சரஸ்(கள்).. - பெங்களூர் கிராமியத் திருவிழா 2014 (பாகம் 2)

#1

நிகழ்வின் இறுதி நாள் அன்று அஸ்ஸாமிய நாட்டுப்புற நடனமான சத்ரிய நிருத்யா, குரு ஜாட்டின் கோஸ்வாமியின் சிஷ்யைகளால் வழங்கப்பட்டது.

#2

சத்ரிய நிருத்யா அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்  பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகமாக அரங்கேறுகின்றன. இது எட்டு இந்தியப் பாரம்பரிய நடனங்களுள் ஒன்றாகும். மற்ற ஏழு பரதநாட்டியம், கதக்களி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிசி, கதக் மற்றும் மணிப்புரி ஆகியன.

நான் சென்ற வேளையில்  அப்போதுதான் நிகழ்ச்சியை முடித்து விட்டு அரங்கை விட்டு வெளியே வந்திருந்தார்கள் நாட்டியக் கலைஞர்கள். கேட்டுக் கொண்டதன் பேரில் படம் எடுக்க விரும்பிய அனைவருக்கும் அழகாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

#3

எந்த ஒரு நாட்டியமும் அதற்கென்றே உரித்தான ஆடை, ஆபரணங்களால் மேலும் தனித்துவம் பெறுகின்றது. அந்த வகையில் இவர்களின் ஆபரணங்கள் இதுவரை நான் கண்டிராததாக அழகாக வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன.

இவர்களது நடன ஆடைகள் அஸ்ஸாமில் தயாராகும் ஒரு வகை பட்டினால் ஆனவை என்றும், அந்த மண்ணிற்கே உரிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுபவை. அணிகலன்களும் அஸ்ஸாமின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவையே.

பாருங்கள் இந்த குழந்தையைக் கூட இவர்களது அணிகலன் எப்படி வசீகரித்திருக்கிறதென:)?
#4

வியாழன், 11 ஜூன், 2015

நந்தி குனிதா - TOI சர்வதேச கிராமியத் திருவிழா 2014 - பாகம் 1

#1

சென்ற வருடம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச கிராமியத் திருவிழாவைப் பற்றி ஒரு பகிர்வு... 18 படங்களுடன்..

#2

ஆகஸ்ட் மாதம் 8,9,10 தேதிகளில் ஜெயமஹால் அரண்மனையை ஒட்டிய மைதானத்தில் நடைபெற்றது இத்திருவிழா.

#3
மாட்டு வண்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை நகரத்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள இப்படி ஒரு ஏற்பாடு..

பல்வேறு மொழி, கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஊராகிய பெங்களூரில் இதுபோன்ற திருவிழாக்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதான்.

#4

கர்நாடகத்தின் யக்‌ஷகானா உட்பட பல இந்திய மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுடன் இந்தோனேஷியா, நார்வே, இலங்கை ஆகிய நாட்டுக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.
#5

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin