ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சொற்திறன்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (80)
பறவை பார்ப்போம் - பாகம் (52)


#1
“உங்களுக்குச் சவாலாக இருப்பவற்றைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்; 
மாறாக உங்கள் குறைபாடுகளுக்குச் சவால் விடுங்கள்!”
― Jerry Dunn

#2
பாட விரும்புகிறர்களுக்கு 
எப்போதும் ஒரு பாடல் கிடைத்து விடுகிறது!

#3
“உங்கள் மனதிலிருப்பதை 
நா சரியாக வெளிப்படுத்துமானால் 
நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்.”

வியாழன், 3 செப்டம்பர், 2020

உழுவோர் உழைப்பால் உலகோர் பிழைப்பார்

ஊர் முடக்கம் தொடங்கிய நாளிலிருந்து குடியிருப்பு வளாகத்தில் நடைப் பயிற்சி செய்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டது. முதலிரு மாதங்கள் பலரும் வெளியில் வரவே யோசித்தார்கள். அப்போது கை கொடுத்தது அவரவர் வீட்டு மொட்டை மாடிகள். இப்போது நட்புகளோடு சேர்ந்து முகக் கவசத்துடன் முன் போலவே நடைப் பயிற்சி செய்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ முகக் கவசத்துடன் நடைப் பயிற்சி செய்வது சீரான சுவாசத்திற்கு இடையூறாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆகையால் மொட்டை மாடியிலேயே தொடருகிறேன். அப்படிச் செல்லும் வேளையில் பின்பக்கமிருக்கும் வயல் வெளியில் கடந்த 4,5 மாதங்களாக நடக்கும் உழவு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடிந்தது.  அதன் மேல் சுவாரஸ்யமும் ஏற்பட்டது. பரந்து விரிந்த வானம், பஞ்சுப் பஞ்சாக மேகக் கூட்டம், பச்சை வயல், செம்மண் பூமி, அதில் உழவு, நடவு என அவ்வப்போது படமாக்கிய சிலபல காட்சிகளின் தொகுப்பு இங்கே. 

#1
“உங்கள் மனநிலை எப்படி இருப்பினும், 
இயற்கைக்கு அருகே எப்போதும் 
அமைதியாக உணர்வீர்கள்!”


#2
பரம்படித்த நிலம்
(மண் பரப்பில் உள்ள கட்டிகளை உடைத்து 
சீராக மண்ணைப் பரவச் செய்தல்)

#3
“உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

உன்னுள் ஓடும் நதி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (79)

#1
“அழகென்பது குறைகள் அற்றதன்று. 
அது உங்கள் குறைகளையும் தாண்டி மிளிர்வது.”

#2
“போட்டி இல்லையேல், 
வளர்ச்சி இல்லை.”
_Bela Karolyi

புதன், 26 ஆகஸ்ட், 2020

இருவாச்சி விருந்து - நவீன விருட்சம் 113_வது இதழில்..

இருவாச்சி விருந்து



பூனை சாமர்த்தியமானது.
உயிர்த் தொகையைக் குறைப்பதில்
பெரும்பங்கு வகிப்பது.
பூனை வேகமாகப் பாயும் போது
இரையும் நொடியில் மாண்டு போகிறது.
பூனைக்கு அதிகமாய் பசியெடுக்கும் போது
இரைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கிறது.

புதன், 19 ஆகஸ்ட், 2020

181_வது உலக ஒளிப்பட தினம்

ஆகஸ்ட் 19, இன்று 181_வது உலக ஒளிப்படதினம். 
#1
உலக ஒளிப்பட தினம் ஒளிப்படக்கலையின் வரலாற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், நிகழ்காலத்தில் கலையைக் கொண்டாடவும், வருங்காலத்திற்கு ஒரு வழித்தடமாக அமையவும் 1839_ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் லூயி டகர் என்பவரின் கண்டுபிடிப்பான டகரியோடைப் எனும் ஒளிப்படக்கலைக்கான வழிமுறையை 9 ஜனவரி 1836 அன்று ஃப்ரெஞ்ச் அகடமி ஆஃப் சயின்ஸ் வெளியிட்டது. சில மாதங்கள் கழித்து பிரான்ஸ் அரசாங்கம் அந்தக் கண்டுபிடிப்பை உலகிற்கு இலவசப் பரிசாக வழங்கியது. அந்த நாளே கடந்த 181 வருடங்களாக உலக ஒளிப்பட தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தினத்திற்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படங்கள்:

#2
“உங்களது மிக முக்கியமான ஒளிப்படக் கருவி 
உங்களது கண், இதயம் மற்றும் ஆன்மா!”

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஒற்றை நூலிழை

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (78)
#1
"மழையின் துளிகள் 
மண்ணுக்கு மட்டுமல்ல 
மனதுக்கும் ஆறுதல்"
_ Moulima Chatterjee


#2
உங்கள் இதயம் சொல்லும் வழியில் செல்லாதிருக்க 
எந்த ஒரு காரணமும் இல்லை.

_Steve Jobs 

#3
"உண்மையில் எந்த வார்த்தைகளை விடவும் 
உரக்கப் பேசும் சக்தி வாய்ந்தது

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

நீயொன்றும் மரமில்லை..

#1
புதுத் தளிர்களை எதிர் நோக்கி நிற்கும் மரங்கள் 
கற்பிக்கின்றன 
இறந்த காலத்தை எப்படிக் கடந்து வருவதென்பதை.. 

#2
“உறுதியான வேர்களைக் கொண்ட மரங்கள்
புயல்களைப் புன்னகையோடு எதிர்கொள்கின்றன!”

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin