தொடர்ந்து பயணிக்க வைக்கும் எண்கள்: சென்ற மாதம் எனது Flickr புகைப்பட ஓடையின் மொத்த பக்கப் பார்வைகள் (8 மில்லியன்) 80 லட்சத்தைக் கடந்து விட்டுள்ளன. சிறிய மைல்கல் தான், ஆனால் அர்த்தமுள்ள ஒன்றாகக் கருதுகிறேன்.
புகைப்படங்கள் தங்களை ரசிக்கும் மனிதர்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பார்வையும் தொடர்ந்து சுற்றியுள்ள உலகைக் காணவும், படமாக்கவும், பகிரவும் ஊக்கமளித்து வருகின்றன.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.
*
2026-ன் அரையாண்டு முடிந்துள்ள நிலையில், ஃப்ளிக்கரின் மாதாந்திர புள்ளி விவரத் தொகுப்பையும் எனக்கான சேமிப்பாக இங்கு பதிந்து வைக்கிறேன்.
இவை, மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெறும் விவரங்களுடன், அந்தந்த மாதப் படம் ஒன்றை இணைத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்தவற்றின் தொகுப்பு:
#ஜனவரி
#பிப்ரவரி
#மார்ச்
#ஏப்ரல்
#மே
#ஜூன்
முத்துச்சரம் வலைப்பூவும் ஃப்ளிக்கர் புகைப்பட ஓடையும் 18 ஆண்டுகளைக் கடந்துவிட்டன.
பயணம் தொடரும்...
***






.jpg)
80 லட்சம் பார்வைகள். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சாதனைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். மென்மேலும் உயர்க.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு18 வருடங்கள்..... 80 லட்சம் பக்கப் பார்வைகள்...... சாதனை தான்.
பதிலளிநீக்குநெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
மிக்க நன்றி வெங்கட்.
நீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபுகைபட ப்பயணம் தொடரட்டும்.
தங்கள் வாழ்த்துகளுக்கும், சிறிய இடைவெளிக்குப் பிறகான வருகையில் சமீபத்தியப் பதிவுகள் அனைத்தையும் வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்திருப்பதற்கும் நன்றி கோமதிம்மா.
நீக்கு