ஞாயிறு, 10 மே, 2026

ஏறுதலும் இறங்குதலும்

#1
'தயாரான மனங்கள், தருணம் வரும்போது வேகமாகச் செயல்படும்.'


#2. 
'நயம் என்பது சுதந்திரமாக இயங்குவதில் மட்டுமல்ல, எதைப் பற்றிக் கொள்கிறோம் என்பதிலும் உள்ளது.'


#3.
'பயத்தை வெல்ல ஒரே வழி, அதன் வழியாக ஏறிச் செல்வதே.'


#4. 
'உலகத்தைப் பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள், அதன் புயல்களையும் இலகுவாகக் கடந்து செல்கிறார்கள்.'

#5. 
'சில நேரங்களில், வளர்ச்சி என்பது பயணங்களுக்கு இடையிலான அமைதியான தருணங்களில் நிகழ்கிறது.'

#6.
'முன் முடிவுகளும் தீர்ப்புகளும் விலகி, புரிதல் தொடங்குகையில் பிணைப்பு மலர்கிறது.'


#7.
'கீழே இறங்குவது என்பது தோல்வியன்று. உயரத்தில் கிடைத்த ஞானத்தை உலகிற்குத் திரும்பக் கொண்டு வருவது.'


#8.
'பட்டாம்பூச்சிகளின் சுதந்திரம் அவற்றின் சிறகுகளில் இல்லை; கூட்டை விட்டு வெளியேறும் துணிச்சலில்தான் உள்ளது.'
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 232
*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது.]
*

2 கருத்துகள்:

  1. தோட்டத்துக்கு வ்னஹ்த விருந்தாளிகள் எல்லோரும் அருமை.
    அவர்கள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
    பூனையார் மிக கோபமாக இருப்பது போல இருக்கே! அல்லது தூக்கத்தில் கொட்டாவி விடுகிறதா?

    அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. முருங்கை மரத்தில் ஏறும் பாம்பு திகில் என்றால் சிரிக்கும் பூனை புன்னகை!  படங்கள் ரொம்ப அருமை.  வரிகளும் சுவாரஸ்யம்,  தோட்டத்து படங்களை இப்போது புதிய பார்வையுடன் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin