வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் [பண்புடன் இதழ்: 10]

  


1. 
தரையில் வெயில்
சூட்டில் சுருளும் பூனை
ஓய்வெடுக்கும் நண்பகல்.

2. 
நடுநிசி சன்னல் ஓரம்
நிலவொளியில் பதியும் பாதம்
களவு போகும் இரவு.

3. 
சருகுகள் நகரும் ஒலி
தீயாகத் துடிக்கும் வால் 
வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.

4. 
தீண்டப்படாத பால் கிண்ணம், 
தூரத்து ஒலியில் துடிக்கும் மீசை 
பசியின் தவம்.

5. 
கண்ணாடியைத் தட்டும் மழை
துளித்துளியாய் ரசிக்கும் பூனை
விளையாட்டாகும் புயல்.

6. 
காகிதப் பையின் சலசலப்பு
குப்புற விழும் பூனைக்குட்டி
அவிழும் மர்மம்.

7. 
மின்னும் பால் தட்டு
வருடும் நாக்கு 
நடனமாடும் பசி.

8. 
உருளும் நூற்கண்டு
துரத்தும் பாதங்கள்
சிரிக்கும் குழப்பம்.

9. 
மங்கும் மாலை
கொட்டாவிக்குள் சிறு உலகங்கள்
பச்சைச் கண்களுக்குள் பதுங்கும் பகல்.

10. 
காற்றில் உயரும் திரைச்சீலை 
பற்றியிழுக்கும் சிறு நகங்கள்
தென்றலோடு கண்ணாமூச்சி.

11. 
கூடையின் மூலை 
உறக்கத்தில் குட்டிகள்
உறுமும் மௌனம்.

12. 
மிதந்து வரும் இறகு
மீண்டும் தவறும் பாய்ச்சல்
சிறகு விரிக்கும் கனவு.













*
குறுங்கவிதைகள், நான் எடுத்த ஒளிப்படங்களுடன்
நன்றி பண்புடன்!
***

2 கருத்துகள்:

  1. குறுங்கவிதைகள் யாவும் கண்முன்னே காட்சிகளை நிறுத்தி ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  2. பூனைகள் படமும், குறுகவிதைகளும் அருமை.
    துளி துளியாக மழையை ரசிக்கும் பூனையை பார்த்து இருக்கிறேன்.
    அந்த கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin