திங்கள், 17 மார்ச், 2025

ஆதி ரங்கம் - ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம்

#1


கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் ஒன்று.மைசூரிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள  மாண்டியா மாவட்டத்தில் காவேரி நதியின் தீவான ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்.  

#2


#3

வைஷ்ணவர்களின் முக்கிய தீர்த்த ஸ்தலமாகவும், ஆழ்வார் பக்தி இயக்கத்துடன் தொடர்புடையதுமாக உள்ளது. குறிப்பாக காவேரி நதி ஓரத்தில் அமைந்துள்ள  ‘பஞ்சரங்க க்ஷேத்திரங்கள்’ என அழைக்கப்படும் ஐந்து முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  காவேரி நதி ஆரம்பமான இடத்திலிருந்து  முதலில் அமைந்துள்ள கோயில் இதுவே ஆகையால் இது ‘ஆதி ரங்கம்’ என்றும் அறியப்படுகிறது.  ஸ்ரீரங்கபட்டண நகரம் இந்த கோயிலின் பெயரைக் கொண்டே உருவாகியுள்ளது.

#4

#5

984_ஆம் ஆண்டு உள்ளூர் தலைவரான திருமலையா அவர்களால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் ஹொய்சாள அரசர்களால் பராமரிக்கப்பட்டு அதன் பின்னர் விஜயநகரப் பேரரசின் ஆதரவால் மேம்படுத்தப்பட்டது. ஆகையால் ஹொய்சாளா மற்றும் விஜயநகர கலைக் நுணுக்கங்கள் இரண்டும் கலந்த வகையில் கோயிலின் கட்டுமானம் உள்ளது. மைசூர் அரசர்களான உடையார்கள் காலத்திலும் கோயில் மேலும் அழகூட்டப்பட்டது. 

கோயிலின் உயரமான ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

#6


#7  கோயிலின் உட்புறத்திலிருந்து ராஜ கோபுரம்

#8

கோவிலின் முக்கிய தெய்வமான ஸ்ரீரங்கநாதர், கருவறையில் பெரியதொரு பஞ்சமுக நாகத்தின் மேல் சயனித்த நிலையில் அருள் புரிகிறார்.

கோவிலில் ரங்கநாயகி தாயார், நரசிம்மர், சுதர்ஷன ஆழ்வார், கருடாழ்வார் மற்றும் பெரிய அளவிலான அனுமார் சன்னதிகள் உள்ளன. பெரும்பாலான கோயில்களைப் போல சன்னதிகளைப் படம் எடுக்க அனுமதி இல்லை. 

#9

#10

மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் அற்புதமான சிற்பக்கலையுடன் பல அழகிய தூண்கள், பிரகாரங்கள், மண்டபங்களைக் கொண்டுள்ளது. 

#11


#12

#13

ராமானுஜர் போன்ற பெரிய ஆழ்வார்கள் வழிபட்ட புண்ணியத் தலம். காவேரி நதியின் தீவில் அமைந்துள்ளதால் நதியில் புனித நீராடுவதற்காகவும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். 

#14

#15

இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் ரதோற்சவம் (தேர் திருவிழா) ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

#16


#17

***

2 கருத்துகள்:

  1. படங்கள் ரொம்ப ரொம்ப கவர்கின்றன. கோவிலை ஒரு முறையாவது பார்க்க விருப்பம்.

    பதிலளிநீக்கு
  2. முகத்தை மட்டும் நீட்டி எட்டிப் பார்க்கும் அந்தப் பெண்மணி என்னுடன் பணிபுரிந்த  இளைய அதிகாரி ஒருவரை நினைவு படுத்துகிறார்,  கோபுர வாசலிலும் அங்கேயே நின்று ஒரு குடும்பம் நீங்கள் படம் எடுப்பதை பார்க்கிறது!  ஆளில்லாமல் புகைப்படங்கள் எடுப்பது ஒரு வரம்தான்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin