ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

வெற்றியின் வேர்

 

#1
"வாழ்வாதாரம் என்பது ஒரு வழிமுறையல்ல, செழித்து வளர்வதற்கான பணி."


#2
"உள்ளம் உறுதியாக இருக்கும்போது, கண்கள் உலகிற்குச் சொல்கின்றன."

#3
"புரிந்து கொள்ள ஒரே மாதிரி சிந்திக்க வேண்டியதில்லை, கேட்பதற்கான அக்கறை இருந்தால் போதும்."

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பது..


#1
"ஏறுவதற்கு பயப்படாதீர்கள். நீங்கள் தடுமாறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் காணக் கிடைக்கும் காட்சிகள் அழகானவை."

#2
"ஞானம், பேசும் நேரம் வரும் வரைப் பொறுமையாக காத்திருக்கும்."
#3
"நிதானமாக இருப்பது என்பது ஒவ்வொரு விளைவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தைத் துறப்பது.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

மாயாஜாலத்தின் ஒரு கணம்

 1) 'உள்ளம் தயாராக இருக்கும்போது, அதன் விழிப்புணர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.'


2) 'மிகக் குறுகிய, பூப்பூக்கும் காலம் கூட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.  இயன்றவரை ஒளிர்ந்திடு.'

#3 'பிரகாசிக்கும் வண்ண மலர்கள் நமக்கு நினைவூட்டுகின்றன,

செவ்வாய், 29 ஜூலை, 2025

பக்ஷி காசி - ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (1)

 #1

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ளது  ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் (Ranganathittu Bird Sanctuary). ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், மைசூருக்கு வடக்கே 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கர்நாடகாவின் ‘பக்ஷி காசி’ என, பறவைகளைப் பாதுகாக்கும் புனிதமான இடம் எனும் பொருள்பட அழைக்கப்படுகிறது. 

#2  

#3


மாநிலத்தின் மிகப் பெரிய பறவைகள் காப்பகம் இதுவே.  சுமார் 40 ஏக்கர் (16 ஹெக்டேர்) பரப்பளவு கொண்டது. காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது.

1645 - 1648 ஆண்டுகளில் அப்போதைய மைசூர் மன்னர் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது இத்தீவுகள் உண்டானது. 

#4

பின்னாளில் பறவையியலாளர் சலீம் அலி, பல வகையான பறவைகள் இத்தீவுகளைத் தேடி வருவதையும், கூடு கட்டும் இடமாகக் கொண்டிருப்பதையும் கண்டறிந்து,

ஞாயிறு, 27 ஜூலை, 2025

அகத்தின் ஒளி

#1
‘சவால்கள் தடைகள் அல்ல. நமக்குள் மறைந்திருக்கும் வலிமையை விழித்து எழக் கட்டளையிடும் நினைவூட்டல்கள்.’

#2
’அமைதியில் மட்டுமே ஒருவரால் தனது ஆன்மாவின் குரலைக் கேட்க முடியும், ஆனால் அது பெரும்பாலும் மற்றவரது எதிர்பார்ப்புகளின் சத்தத்தால் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது.’

#3
’புரிந்து கொள்தல் என்பது வார்த்தைகளை அறிவதல்ல,

செவ்வாய், 15 ஜூலை, 2025

நிஜாம்களின் ராஜ்ஜியம்; படைக் கருவிகள் - செளமஹல்லா மாளிகை (ii) - ஹைதராபாத் (7)

 ஹைதராபாத் நகரில், முஸி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செளமஹல்லா மாளிகை 1951ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டு, இந்தியாவின் முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 

#1

வெவ்வேறு கூடங்களில் அரசர்களைப் பற்றிய விவரங்கள், அரசர், அரசி மற்றும் இளவரசர்களின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

#2

#3


#4
#5

#6

ஞாயிறு, 13 ஜூலை, 2025

மெளனத்தின் கனம்

உருவப் படங்களும், தன்னியல்புப் படங்களும் (portraits and candids) மனிதர்களின் உணர்வுகளையும் கதைகளையும் சொல்லும் சாளரங்கள்.  காலத்தைப் பதிவு செய்யும் அத்தகு சாட்சியங்களின் மற்றுமோர் தொகுப்பு.. படங்கள் ஒன்பதுடன்..


#1
மெளனத்தின் கனம்


#2 
பயணியின் கதைகள்: 
வரைபடங்கள், சேமிக்கும் நினைவுகள் மற்றும் 
அலைபேசித் திரைகள்

#3 
தேடுபவரின் அமைதி

ஞாயிறு, 6 ஜூலை, 2025

செல்வாக்கின் சின்னம்.. சௌமஹல்லா மாளிகை ( i ) - ஹைதராபாத் (6)

 சௌமஹல்லா மாளிகை:

#1

ஹைதராபாத் நகரில் சார்மினாருக்கு மிக அருகில் உள்ள சௌமஹல்லா அரண்மனை அல்லது சௌமஹல்லாத் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகைகளில் ஒன்று. செல்வம், வலிமை மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக

#2

ஹைதராபாத் நிஜாம், அசாஃப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இந்த அரண்மனைகள் 1750-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டன.  அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இவை நிஜாம் அரசர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளன. 

#3


#4

ஞாயிறு, 29 ஜூன், 2025

அன்பெனப்படுவது யாதெனில்..

  #1

"சத்தம் மிகுந்த உலகில், 
உங்கள் சகிப்புத் தன்மைதான் 
உண்மையான வலிமை."

#2
"சில நேரங்களில், 
கடந்த காலத்தை விட்டு வெளிவர, 
முன்னோக்கிப் பார்ப்பதுவே ஒரே வழி."


#3
"வாழ்க்கை என்பது பல பாதைகளால் நிரம்பிய பயணம்; 
அதில் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்பது கடினமானது, 
ஆயினும்

வெள்ளி, 27 ஜூன், 2025

பிளைத் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )

 

ஆங்கிலப் பெயர்:  Blyth's Reed Warbler
உயிரியல் பெயர்: Acrocephalus dumetorum 
வேறு பெயர்: பிளைத்தின் நாணல் வார்ப்ளர்

#2
பிளைத் நாணல் கதிர்குருவி ஒரு சிறிய பழுப்பு நிற பறவை ஆகும். முதன்முதலில் இப்பறவை 1849 ஆம் ஆண்டு ஆங்கில விலங்கியல் நிபுணர் எட்வர்ட் ப்ளைத்தால் முறையாக விவரிக்கப்பட்டது. அதனாலேயே  எட்வர்ட் பிளைத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. 

#3

ஞாயிறு, 22 ஜூன், 2025

ஆரோக்கியமான உணர்வு

 #1
“மனித உணர்வுகளிலேயே மிக ஆரோக்கியமானது, 
நன்றியுணர்வு.”
_ Zig Ziglar 

#2
“உங்கள் இலக்குகளை நீங்கள் அடையும் போது, 
புதிய இலக்குகளை நிர்ணயுங்கள். 
அதுவே நீங்கள் வளர்வதற்கான வழி.”


#3
“முழுமையான மலர்ச்சியிலும், 

செவ்வாய், 17 ஜூன், 2025

கோல்கொண்டா கோட்டை ( ii ) - ஹைதராபாத் (5)

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - “இங்கே

நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டிருந்த போதிலும், ஆங்காங்கே சிதைந்து போயிருப்பினும், கட்டுமானக் கலையின் அற்புதமான அழகும் பழங்காலத்தைய பொறியியல் திறனும்  ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படவே செய்கிறது. 

#1

வெற்றி நுழைவாயிலின் வெளிப்புறம்..

#2

இடப்புறச் சுவர்..

#3

வலப்புறச் சுவர்

#4 
கோட்டையின் சுற்றுச் சுவர்

#5
கோட்டையை நோக்கி..

ஞாயிறு, 15 ஜூன், 2025

நம்பிக்கையின் நிறங்கள்

 'கனவுடன் விரியக் காத்திருக்கும் ஒரு சிறிய ரோஜாவால், உலகை நம்பிக்கையின் நிறங்களால் வண்ணமயமாக்கிட முடியும்.'


#2
'ஒருவருக்கு களையாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகிய காட்டுப்பூவாகக் காட்சி தரும்.'

#3
'இயற்கையின் நம்பிக்கை மிகத் தெளிவாக வெளிப்படுகிறது

வெள்ளி, 13 ஜூன், 2025

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - ஹைதராபாத் (4)

 கோல்கொண்டா கோட்டை:

#1


#2

கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டை. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா என்பது கவனத்திற்குரியது.

#3

பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது கோல்கொண்டா. இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்டமான கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.

ஞாயிறு, 8 ஜூன், 2025

இன்றைய தெய்வீக விருந்தினர் - பிரம்மக் கமலங்கள்

 

பூர்வமாக பூக்கும் பிரம்மக் கமல மலர்களைப் பற்றித் தகவல்களுடன் முன்னரும் பலமுறை பகிர்ந்திருக்கிறேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில்..

ந்த முறை முழுதாக மூன்றாண்டு காலக் காத்திருப்பிற்குப் பிறகு தோட்டத்தின் ஒருபக்கச் செடியில் இரண்டும் மறுபக்கத்தில் நாலுமாக ஆறு மொட்டுகளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி :).

#2

#3 இரட்டையர்:

திங்கள், 2 ஜூன், 2025

அருகி வரும் மிருகம் - சிறுத்தை

உயிரியல் பெயர்:  Panthera pardus
ஆங்கிலப் பெயர்: Leopard
வேறு பெயர்: சிறுத்தைப் புலி

பூனைப் பேரினத்தைச் சேர்ந்த, புலி குடும்ப வகைகளில் சிறிய வகை விலங்காக உள்ளது சிறுத்தை. புலி, வேங்கை (சீட்டா), தென் அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இவற்றின் உடல் மெல்லியதாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஆகையாலேயே இவற்றால் வேகமாக மணிக்கு சுமார் 58 கி.மீ வேகத்தில் ஓட முடியும். ஒரு சிறுத்தை ஒரே தாவலில் 6 மீட்டர் தொலைவை அடைய முடியும்.

#2

ஞாயிறு, 25 மே, 2025

நகரின் பெருமை.. சார்மினார்.. - ஹைதராபாத் (3)

 சார்மினார்:

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதின் முக்கிய இடங்களில் முதலிடமாக, நகரின் பெருமையாகவும் அடையாளச் சின்னமாகவும் விளங்குவது சார்மினார். இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலை நயம் மிக்கக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று.

#1

[பிரபல லாட் பஜாரை நோக்கி அமைந்த கிழக்குப் புற நுழைவாயில்.]

1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக,  அதனை கொண்டாடும் நோக்கத்துடன் முகம்மது குலி குட்ப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கின்ற சாலையில் அமைந்துள்ளது. சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு என்றும் கூறப்படுகிறது.

சார்மினார் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட முதல் பல மாடிக் கட்டிடம். இதனை மையமாக வைத்தே பழமை வாய்ந்த நகரமான ஹைதராபாத் உருவாக்கப்பட்டது. இது மேல் மாடிப் பகுதியில் சிறிய பள்ளிவாசல் உள்ளது.

#2

[வடக்குப் புற நுழைவாயில்.]

உருது வார்த்தைகளான “சார் - நான்கு”, “மினார் - கோபுரம்” ஆக, “நான்கு கோபுரங்கள்” எனப் பொருள் படும்படி சார்மினார் என அழைக்கப்படுகிறது. நான்கு கோபுரங்களும் (அல்லது தூண்களும்) நான்கு வளைவுகளால் இணைக்கப்பட்டு சதுர வடிவ கட்டிடமாகத் திகழ்கிறது.

#3

புதன், 21 மே, 2025

அலெக்ஸாண்ட்ரியா கிளி ( Alexandrine Parakeet )

 பெரிய பச்சைக்கிளி:

ஆங்கிலப் பெயர்கள்: 
Alexandrine Parakeet ; 
Great-Ringed Parakeet; 
Ring-necked Parakeet

#2


உயிரியல் பெயர்: Psittacula eupatria
வேறு பெயர்கள்: ராஜ வளையக் கிளி

'பெரிய பச்சைக்கிளி' எனக் குறிப்பிடப்படும் 'அலெக்ஸாண்ட்ரியா கிளி' (Psittacula eupatria) இனம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர், வங்க தேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.

#3

மாவீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவில் பஞ்சாபிலிருந்து ஐரோப்பா வரைக்கும்

புதன், 14 மே, 2025

காட்டுக் கோழி ( Junglefowl )

ஆங்கிலப் பெயர்: Junglefowl 
உயிரியல் பெயர்: Gallus gallus 
வேறு பெயர்: சிகப்புக் காட்டுக் கோழி

சியாவைச் சேர்ந்த, காடுகளில் வாழும் கோழி இனப் பறவை.  இந்த இனத்தில் சிகப்புக் காட்டுக்கோழி, சாம்பல் காட்டுக் கோழிகள், இலங்கை காட்டுக்கோழி, பச்சைக் காட்டுக்கோழி என பல வகைகள் உள்ளன. 

பெரும்பாலும் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சாதாரண வீட்டுக் கோழிகளை விட அளவில் சற்று பெரிய பறவைகளாகவும் இருக்கும். 

#2

இந்தியாவில் காணப்படும் இந்த சிகப்புக் காட்டுக்கோழி இனமே தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என சிலரும்,

செவ்வாய், 6 மே, 2025

கருப்பு அன்னம் ( Black Swan )

 கருப்பு அன்னம்:

ஆங்கிலப் பெயர்: Black Swan
உயிரியல் பெயர்: Cygnus atratus
வேறு பெயர்: காரோதிமம் 

பிரதானமாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற, அளவில் பெரிதான நீர்ப் பறவை.

நியூசிலாந்தில் இந்த இனப் பறவைகள் ஒரு காலக் கட்டத்தில் முற்றிலுமாக அழியும் அளவிற்கு வேட்டையாடப்பட்டாலும் பின்னாளில் மீண்டும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து (வலசை) செல்கின்ற உயிரினம். 

புதன், 30 ஏப்ரல், 2025

பிர்லா மந்திர் - ஹைதராபாத் (2)

 பிர்லா மந்திர்:

#1

பிர்லா மந்திர் 280 அடி உயர நௌபத் பஹாட் எனும் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. சட்ட மன்றக் கட்டிடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த குன்று சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1976 -ஆம் ஆண்டு பிர்லா அறக்கட்டளையால் கட்டப்பட்ட கோயில். கட்டி முடிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. ராமகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுவாமி ரங்கநாதானந்தாவால் திறந்து வைக்கப்பட்டது.

#2

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin