ஞாயிறு, 9 ஜூன், 2024

ஊற்றெடுக்கும் ஆற்றல் - என் வீட்டுத் தோட்டத்தில்..: பாகம் 200


#1
“வாழ்க்கையில் உயர்வதற்கு முன் நீங்கள் சந்திக்கும் போராட்டம், 
நீங்கள் திரும்பிச் செல்ல விரும்பாத இடத்தை 
உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும்.”

#2
“எப்பொழுதும் உங்கள் முகத்தை 
சூரிய ஒளியை நோக்கி வைத்துக் கொள்ளுங்கள். 
நிழல்கள் உங்களுக்குப் பின்புறமாக விழும்.”
_ Walt Whitman

#3
“விடாது முயன்றிடுபவரை 
வெல்லுவது கடினம்.”


#4
“எதிர் கொள்வது, 
எப்போதும் எதிர்கொள்வது, 
கடந்து வர அதுவே ஒரே வழி. 
எதிர் கொள்ளுங்கள்.”
_ Conrad Joseph

#5
“சில நேரங்களில் நீங்கள் சரியான முடிவை எடுக்கிறீர்கள், 
சில நேரங்களில் எடுத்த முடிவை சரியானதாக மாற்றிக் கொள்கிறீர்கள்.”
_ Phil McGraw

#6
“ஆற்றல் ஊற்றெடுக்கும் 
நம் கவனம் செல்லும் திசையில்.”
_ Tony Robbins


#7
“உங்கள் மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள். 
உங்கள் நாட்கள் பிரகாசமானதாக இருக்கும்.”

#8
“உழைப்புக்கென்று ஓர் அறம் உள்ளது. 
ஓய்வுக்கென்று ஓர் அறம் உள்ளது.
இரண்டையும் கடைப் பிடியுங்கள், 
இரண்டில் எதையும் புறந்தள்ளாதீர்கள்.”
— Alan Cohen

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 200
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

10 கருத்துகள்:

  1. அனைத்து படங்களும் மிக அழகாய் இருக்கிறது. பாம்பின் வாய் பக்கம் ஒளி தெரிகிறது. நாகரத்தினம் இருப்பது போல இருக்கிறது. அணில் படம் அருமை.
    பாம்பு ஒரு தடவை வந்த போது எடுத்தீர்களா? நிறைய தடவை வந்து இருக்கிறதா?

    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப் பக்கம் ஒளிருவது நாக்கு:). அதை நீட்டி நீட்டி உள் இழுக்கையில் எடுத்தது. படங்கள் 2 மற்றும் 4_ல் இருப்பது ஒரே பாம்பு. ஆறில் இருப்பது வேறு.

      கடந்த எட்டு வருடங்களில் பல முறை வந்துள்ளன. அவசரத்திற்கு மொபைலில் எடுத்துப் பகிராத படங்களும் உள்ளன. அனுபவங்களை ஒரு பதிவாக எழுதலாம். முயன்றிடுகிறேன்.

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. எட்டிப்பார்த்து தொங்கி முயற்சித்து பார்க்கும் அணில் அழகு.  ஆமாம், பழசை மறக்கக் கூடாது இலையோ?!!

    சூரிய ஒளி கண்ணைக் குத்தாதோ...  குத்துமோ இல்லையோ, படத்திலிருக்கும் பாம்பு கொத்தாமல் இருந்தால் சரி!!

    ஓணார் ரொம்ப யோசனையுடன்தான் இருக்கிறார்.  யாரை வெல்ல முடியாமல் தவிக்கிறாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னேற்றத்திற்காகச் சொல்லப் பட்டது. கடந்து வந்த பாதையின் கசப்பை பேசுகிறது என்றும் கொள்ளலாம்.

      கண்ணாடிக் கதவுக்குப் பின்னாடி நின்று எடுத்த படங்கள் :).

      நீக்கு
  3. இப்படி எழுந்து நின்று வரவேற்றால் பயமில்லாமல் எப்படி எதிர்கொள்வது பாம்பாரை!

    கீழே குதிப்பதா, இன்னும் சிறிது நேரம் இங்கேயே நிற்பதா...   எது சரியான முடிவு என்று யோசிக்கிறது போலும் குட்டி அணில்.

    பதிலளிநீக்கு
  4. ஊற்றெடுக்கும் ஆற்றலை சட்டென கீழே தள்ளி விட்டால் நம் ஆற்றல் பெருகும், பயமில்லாமல்!!

    நாட்கள் இலகுவாக இருக்கும் படம்தான் டாப்.  என்ன ஒரு போஸ்!

    பழுத்த இலையா, வண்ணத்துப் பூச்சியா...   பற்றிக் கொண்டிருப்பது எது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழுத்த இலையின் வண்ணத்தில் ஓர் வண்ணத்துப் பூச்சி!

      நீக்கு
    2. கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்களும் சிறப்பு வாசகங்களும் மிகவும் நன்று. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin