ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

ஒளியும் வழியும்

 #1

"கவனச் சிதைவுகளைப் பட்டினி போடுங்கள்.
கவனக் குவிப்புக்கு உணவளியுங்கள்."
தேன் சிட்டு (Purple-rumped Sunbird)

#2
"காத்திருக்காதீர்கள்.
நீங்கள் நினைப்பதை விடவும்
வேகமாக செல்கிறது வாழ்க்கை."
வெண் கன்னக் குக்குறுவான் (White-cheeked Barbet)

#3
"ஒளி உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், வீட்டுக்கான வழியை நீங்கள் கண்டடைவீர்கள்."
தேன் சிட்டு (Purple-rumped Sunbird)

#4
"நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ
அதுவும் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது."
இந்திய சாம்பல் இருவாச்சி ( Indian Grey Hornbill )

#5
"எந்தவொரு குறிப்பிடத்தக்க இலக்கையும் அடைய வேண்டுமெனில்,
உங்களது வசதி வட்டத்திலிருந்து நீங்கள் வெளியே வந்தாக வேண்டும்."
_ Hyrum W. Smith
தேன் சிட்டு (Purple-rumped Sunbird)

#6
"என்னிடத்தில் எந்த தனித் திறனும் இல்லை.
நான் கொண்டிருப்பதெல்லாம் பேரார்வம் மட்டுமே."
_ Albert Einstein.
காட்டுச் சிலம்பன் - Jungle Babbler
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 161
பறவை பார்ப்போம்.. - பாகம்: 96
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்,
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

9 கருத்துகள்:

  1. இன்று ஒரு வாசகம் இரண்டு முறை வந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டுப் போனதுதான் (படம்:3) தலைப்புக்கான வாசகம். சரி செய்து விட்டேன். நன்றி ஸ்ரீராம்:)!

      நீக்கு
  2. வரிகளும் பிரமாதம்.  படங்களும் தெளிவு, அழகு.  வரிகள் கொடுத்து படங்கள் கொடுத்தபின் படங்களின் கீழ் சிறிய எழுத்துகளில் பூக்களின் பெயர்களையும், பறவை இனத்தையும் கூட எழுதி சேமிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நானும் பெயர் சேர்க்க நினைப்பதுண்டு. இங்கே பகிரும் பறவைகளைப் பற்றி முழுவிவரங்களுடன் முன்னரே பகிர்ந்திருப்பதால் தவிர்த்து விட்டிருந்தேன். பூக்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க பல app வசதிகள் உள்ளன. ஆயினும் கூட சில வகைப் பூக்களின் சரியான பெயர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாகவே உள்ளது.

    இந்தப் பதிவில் பறவைகளின் பெயர்கள் உங்கள் பரிந்துரையின் படி சேர்க்கப்பட்டுள்ளது:)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  இப்போதும் பெயர்கள் என் அல்லது எங்கள் நினைவில் நிற்காது!  ஆனால் எப்போது படம் பார்த்தாலும் கீழே பெயர் பார்த்துக் கொள்ளலாம்!

      நீக்கு
  4. பறவைகள் அவற்றின் பெயருடன் கொடுத்திருப்பதற்கு நன்றி. படங்கள் அத்தனையும் அழகு. தேன்சிட்டு கவிழ்ந்து இருக்கும் படம் அட்டகாசம். வாசகங்கள் அனைத்தும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படங்கள் எல்லாம் அருமை. பறவைகளின் பேருடன் பதிவு போட்டது நல்லது. முன்பு தனி பதிவாக போட்டு இருந்தாலும் மீண்டும் போட்டது மகிழ்ச்சி.
    முதல் வாசகம் , தேன்சிட்டு படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர்களைத் தொடர்ந்து அளிக்க முயன்றிடுகிறேன். நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin