Wednesday, November 18, 2020

சொர்க்கத்தின் ஒரு பகுதி..

குழந்தைகள் தினத்தையொட்டி பதிந்திட நினைத்து, நான்கு நாட்கள் தாமதமாக இன்று இப்பதிவு. சென்ற நவம்பர் முதல் இந்த நவம்பர் வரையிலுமாக என் ஃப்ளிக்கர் பக்கத்தில் பதிந்த மழலைச் செல்வங்களின் கருப்பு-வெள்ளைப் படங்களின் தொகுப்பு..


#1
பிள்ளைக் கனியமுதே..#2
“ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா.. 
உலகையே மாற்ற வல்லவை.” 
_ மலாலா யூசப்சையி

#3
“ஒரு தேர்வோ ஒரு மதிப்பெண்ணோ 
நமது மொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்க அனுமதிக்காது இருப்போம்!”

#4
“Twinkle Twinkle Little Star”


#5
“சின்னஞ்சிறு குழந்தைகளின் 
நம்பிக்கை நிறைந்த, களங்கமற்ற 
கண்களின் வழியாக 
உலகைப் பாருங்கள்!”


#6
  “ஒவ்வொரு குழந்தையுடனான உங்கள் சந்திப்பும் 
தெய்வீக ஏற்பாடே." 
_ Wes Stafford


#7
“குழந்தைகள் வடிவமைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. 
மொட்டவிழ்க்கும் மலர் போல 
மெல்ல மெல்லத் திறக்கப்பட வேண்டியவர்கள்.”


#8
“சொர்க்கத்தின் ஒரு பகுதியை 
பூமியில் நமக்குக் கொண்டு தருகிறார்கள் 
குழந்தைகள்!”

#9
குழந்தைகள் தின வாழ்த்துகள்!


மகிழ்ச்சியாக ஓடியாடித் திரிந்த குழந்தைகள் நண்பர்களைச் சந்திக்க முடியாமல் வீட்டிலே அடைபட்டும், ஆன் லைன் வகுப்புகளைச்  சிரமப்பட்டு சமாளித்துக் கொண்டும் இருக்கிறார்கள். கூடிய விரைவில் கொரானா வைரஸ் முற்றிலுமாய் அழிந்து, தொற்றுநோய் அச்சங்கள் விலகி, மீண்டும் பள்ளிகள் திறந்து, பாதுகாப்பான உலகில், சுத்தமான சூழலில் மழலைகள் ஆனந்தத்தில் திளைக்கப் பிரார்த்திப்போம்!

***

8 comments:

 1. ஏற்கெனவே இன்றைய குழந்தைகள், அந்நாளைய குழந்தைகள்போல் வெளியிடங்களில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பு குறைந்து வந்த நாளில் இந்தத் தீ நுண்மி காரணமாகவும் இப்படி பாக்கி இருந்த கொஞ்ச நஞ்ச விளையாட்டு சந்தோஷமும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பது வருத்தம்தான்.

  வழக்கம்போலவே படங்களும், வாசகங்களும் அருமை.

  ReplyDelete
 2. குழந்தைகள் அழகு. கருப்பு வெள்ளை அழகு. இரண்டும் சேர்ந்த நிலையில் மிகவும் அழகு.

  ReplyDelete
 3. படங்கள் எல்லாம் மிக அழகு. வண்ணம் ஒரு அழகு. கருப்பு வெள்ளை ஒரு அழகு.
  குழந்தைகள் எல்லாம் இப்போது கொஞ்சம் விளையாட ஆரம்பித்து விட்டார்கள் எங்கள் வளாகத்தில்.
  பள்ளிகள் திறக்கும் காலம் வர வேண்டும் அதுதான் இப்போது எல்லோர் வீடுகளிலும் எதிர்ப்பார்ப்பு.
  இறைவன் விரைவில் அருள வேண்டும்.

  ReplyDelete
 4. படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன. அதுவும் கறுப்பு வெள்ளையாக. ரசித்தேன்.

  ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் அனைத்தும் உண்மைதான்.

  ஆனால் நாங்கள் இருக்கும் பகுதியில் குழந்தைகள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லுவது கடைநிலை வாழ்க்கை வாழும் குழந்தைகள். மற்றவர்கள் எல்லாம் வீட்டிற்குள் முடக்கப்பட்டு...

  எனக்கு மற்றொன்றும் தோன்றுகிறது குழந்தைகள் இப்போதைய காலகட்டத்தில் போட்டி உலகில் ரொம்பவே மகிழ்ச்சியைத் தொலைக்கிறார்களோ தொலைக்க வைக்கப்படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சமீபமாக எங்கள் குடியிருப்பில் மாலை வேளைகளில் மாஸ்க் அணிந்தபடி குழந்தைகள் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வது சரியே. பொதுவாகவே நம் காலத்தைப் போலன்றி குழந்தைகள் போட்டிகள் சூழ்ந்த உலகில் மிகுந்த மன அழுத்தங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin