புதன், 5 ஆகஸ்ட், 2020

முதல் கனி.. கன மழை.. அதிசய மலர்..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (77)
#1

நான்கு வருடங்களில் பல முறைகள் முயன்றும் 3,4 அடிகள் வளர்ந்து பின் சரியாக வராமல் போய்க் கொண்டிருந்தது தோட்டத்தில் பப்பாளி. இந்த முறை அருகருகே இரண்டு மரங்கள் ஆறடி உயரம் தாண்டி வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு மரம் குடை போல விரிந்து பரந்து, காயும் கனியும் பூவுமாக. முதல் விளைச்சலின் முதல் கனி.. வெட்டிய பிறகு தெரிய வந்தது விதையற்ற வகை (Parthenocarpic) என்பது. சுவை அபாரம்!

#2



ப்போது பெங்களூரின் சீதோஷணம் பிரமாதமாக உள்ளது, மழையும் சாரலும் குளிர்ந்த காற்றுமாக. 


சென்ற வாரத்தில் பெய்த கனமழை காணொளியாக..




#4

தென்னை மரத்துக்கு இடப் பக்கம் மாமரமும், வலப் பக்கம் ஜாம்ருல் மரமும் ட்ரிம் செய்யப்பட்டு மீண்டும் வளர்ந்து வருகின்றன. தோட்டத்தின் நடுப்பக்கம் வரை கிளைபரப்பி நின்ற கொய்யா பல முறைகள் கிளிகளையும் பார்பட் பறவைகளையும் படமாக்க உதவியிருக்கிறது. அதுவும் ட்ரிம் செய்யப்பட்டு மீண்டும் வளர்ந்து வருகிறது ஒன்றுக்கு, இரண்டு மரங்களாக. 

காணொளியில் வலப்பக்கம் அடர்ந்து தெரியும் வரிசையில் கருவேப்பிலை, சிகப்பு செம்பருத்தி, ஆழ் சிகப்பு அடுக்குச் செம்பருத்தி, இரண்டு வகை மஞ்சள் செம்பருத்தி, தொட்டியில் இளஞ்சிகப்பு செம்பருத்தி, முருங்கை, உயர்ந்த மரமாக வெள்ளை செம்பருத்தி, மஞ்சள் ஆல்டர், நித்திய கல்யாணி செடிகள், நீருற்றின் அருகே ஸ்பைடர் லில்லி, சிகப்பு ஜெரானியம், இட்லிப்பூ, தொட்டிகளில் 3 வெவ்வேறு வண்ணங்களில் ரோஜாக்கள் என பட்டியல் நீள்கிறது. அவ்வப்போது கத்திரி, வெண்டை, பச்சை மிளகாய், பசலைக் கீரை போடுவதுண்டு. தற்போது விளைச்சலில்... 


மணத் தக்காளிக் கீரை..
#5

ழை பெய்து ஓயும் பகல் நேரங்களில் தோட்டத்தை ஒரு வலம் வருவது வழக்கம். ஆம், கேமராவுடன்தான். நீர்த் துளிகள் சொட்டும் இலைகளையும், மலர்களையும், மரங்களையும் ஈரமான புல்தரையில் கால் பதித்து நடந்து ரசிப்பதும் படங்கள் எடுப்பதும் ஒரு சுகம். இன்றும் அப்படியே. 

#6


15-20 பூக்கள் வரைப் பூத்து உயர்ந்து நின்ற வெள்ளைச் செம்பருத்தி மரத்தைத் தாண்டிச் சென்று,  திரும்புகையில் தற்செயலாகதான் கண்ணில் பட்டது இந்த அதிசயப் பூ...

#7


மரத்தின் மற்ற மலர்கள் எல்லாம் வெண்ணிறத்தில் இருக்க, இது மட்டும் கீழேயிருந்த இளஞ்சிகப்பு நித்திய கல்யாணிப் பூக்களிடமிருந்து நிறத்தைக்  கடன் வாங்கிக் கொண்டதோ என எண்ணும் படியாக இனிய ஆச்சரியம் அளித்தது. 

#8

பொதுவாக இரு வண்ணம் கொண்ட செம்பருத்திகள் உண்டு, நடுவே ஒரு வண்ணமும் இதழ்கள் ஒரு வண்ணமுமாக. ஆனால் இப்படிப் பாதிக்குப் பாதி வெவ்வேறு வண்ணங்களில் நீங்கள் யாரேனும் பார்த்திருக்கக் கூடும், நான் இப்போதுதான் பார்க்கிறேன்.. .

#9

***

13 கருத்துகள்:

  1. காணொளி என்று நீங்க சொல்லி இருக்கும் இடம் காலியாக இருக்கிறது எந்த வித ஒரு காணொளியும் இல்லை... தகவலுக்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை நீங்கள் அலைபேசி மூலமாக வாசிக்கிறீர்கள் எனில் பதிவின் முடிவில் “View web version" என்றொரு ஆப்ஷன் இருக்கும், பாருங்கள். அதை க்ளிக் செய்து பக்கத்தைப் புதுப்பித்தால், காணொளி தெரிந்திட வாய்ப்புள்ளது.

      நீக்கு
    2. எனக்கு கணினியிலேயே காணொளி வேலை செய்தது.

      நீக்கு
  2. மண்ணை நனைக்கும் மழையின் சுகம் தனிதான்.  அந்த சுகங்களை படங்களில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.  அந்த இரட்டை நிற செம்பருத்தி ஆச்சர்யம்.  நானும் பார்த்ததில்லை.  காணொளி சுகம்.

    பதிலளிநீக்கு
  3. மழையில் நனைந்த தோட்டம் அழகு.
    முகநூலில் பார்த்தேன். காணொளியும் ரசித்தேன்.

    இரு வண்ணம் கொண்ட செம்பருத்தி கீழ் பக்கம் மட்டும் தான் இரண்டு கலர்.மேல் பகுதியில் வெள்ளை கலர் தானே இருக்கிறது!
    நீங்கள் சொன்னது போல் கீழ் பகுதி மட்டும் நித்தியகல்யாணி செடி பக்கத்தில் இருப்பதால் அந்த வண்ணம் வர வாய்ப்பு இருக்கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா.

      மேலே இரண்டரை இதழ்கள் இளஞ்சிகப்பிலும் கீழே மீதிப் பாதி வெள்ளையிலுமாக உள்ளது (படம் 8_ல் மரத்தின் கீழ் பகுதியில் பார்க்க). ஒருவேளை நித்திய கல்யாணியின் வேர்களோடு இந்தவேர் சேர்ந்திருக்கக் கூடுமென்கிறார் ஃபேஸ்புக்கில் ஒருவர். முதன் முறை இப்படிப் பார்த்ததால் ஆச்சரியம் ஏற்பட்டது:).

      நீக்கு
  4. ஆஹா ...ஆஹா ,.....


    செம்பருத்தியில் அழகு கொட்டி கிடக்கிறது ...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin