வியாழன், 6 பிப்ரவரி, 2020

கோட்டை ஸ்ரீ பிரஸன்ன வெங்கடரமணா கோயில், பெங்களூரு

கோட்டே (கோட்டை) வெங்கடரமணா கோயில்

#1

ழமை வாய்ந்த இந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கோயில் பெங்களூரின் சிட்டி மார்க்கெட் அல்லது கே.ஆர் மார்க்கெட் அருகில் கிருஷ்ண ராஜேந்திரா சாலையில், பெங்களூரின் பழைய கோட்டை எல்லைக்குள், திப்பு சுல்தான் கோடைக்கால அரண்மனைக்கு அடுத்து உள்ளது.  

#2

சுவாமி வெங்கடேஸ்வரர்,  ஸ்ரீ வெங்கட ரமணாவாக இங்கே அருள் பாலிக்கிறார்.
கி.பி 1689_ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் ராஜாவாகிய சிக்க (சின்ன) தேவராஜ உடையார் கட்டிய கோயில். 

#3

பின்னாளில் இவரது மகனாகிய ஸ்ரீ காந்திரவா நரசராஜா உடையார் இக்கோயில் தினசரி பூஜைகளுக்காகவும் பராமரிப்புக்காகவும் நான்கு கிராமங்களை கோயிலின் பெயரில் எழுதி வைத்தார். கி.பி 1811_ஆம் ஆண்டில் மைசூரின் மகராஜாவாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார், திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனையில் சிறப்புத் தர்பாரை நடத்தும் முன் இந்தக் கோயிலில் முதலில் பூஜை செய்து விட்டுச் சென்றிருக்கிறார். ஸ்ரீ பிரஸன்ன வெங்கடரமணா அருள் பாலிக்கும் கர்ப்பக் கிரகத்தின் முன்னால் அழகிய நடுக்கூடம் உள்ளது. 

#4

#5


கோயிலின் உயர்ந்த கொடி மரமும், பெரிய துளசி மாடமும் அழகு சேர்க்கின்றன.

#6

#7

#8

#9

#10

தெற்கே ஆஞ்சநேயர் சன்னதியும், வடமேற்கில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி சன்னதியும் உள்ளன. கர்ப்பக் கிரகத்தின் மேல்பக்கச் சுவர்கள் வேலைப்பாடின்றி இருந்தாலும் அடிப்பாகச் சுவர் வரிசையாக கடவுளர் சிற்பங்களைக் கொண்டுள்ளது. நடுக்கூடத்தின் ஓரங்களில் காணப்படும் தூண்களில், ஒரு தூண் விட்டு ஒரு தூணில் எனக் காணக் கிடைக்கின்றன நான்கு திசைகளிலும் நோக்கியபடி இருக்கும் யாழிகளின் சிற்பங்கள். 

தினசரி ஆராதனைகள், பூஜைகள் முறையாக நடைபெற்று வரும் இக்கோயிலின் தேரோட்டம் ஒவ்வொரு வருடமும்  மே-ஜூன் மாதங்களில் தவறாமல் நடைபெற்று வருகிறது. கோயிலின் மிக முக்கியமான திருவிழாவாக இருப்பது வைகுண்ட ஏகாதேசி. அன்றைய தினத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள்.

#11

க்கோயில் அந்நாளில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத் தகவல் கோயிலில் இருந்த அறிவிப்புப் பலகையிலையே வாசிக்கக் கிடைக்கிறது.

#12 


கோயிலுக்கு எதிரே இருக்கும் மிகப் பெரிய மைதானத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் தன்  இராணுவ அணிவகுப்புகளை நடத்தி வந்திருக்கிறது. கோயிலின் நேர் பின்னே நவாப் ஹைதர் அலியால் கட்ட ஆரம்பித்து திப்பு சுல்தானால் கட்டி முடிக்கப்பட்ட அவரது கோடைக்கால அரண்மனை உள்ளது. கி.பி 1791_ஆம் ஆண்டு மூன்றாம் மைசூர் போரின் போது இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த கர்ன்வாலிஸ் பிரபுவின் உத்தரவுப்படி இந்த மைதானத்திலிருந்து திப்பு சுல்தானைக் குறி வைத்து சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டு கோயிலின் கருடத் தூணில் அடித்து சுல்தானின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. திப்பு சுல்தானுக்கு இந்தக் கோயிலின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான வழிபாட்டுத் தலமாகவும் இக்கோயில் திகழ்ந்திருக்கிறது. நவாப் ஹைதர் அலியும் இக்கோயிலின் மேல் பெரும் மரியாதை வைத்திருந்திருக்கிறார்.

#13

**
தகவல்கள்: கோயில் வளாகத்திலிருந்த அறிவிப்புப் பலகை மற்றும் விக்கிப்பீடியாவிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவை.
***

15 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.   பழைய கால கோவில் என்றாலே சுவாரஸ்யம்தான்.   கொஞ்சம் கேரள பாணி தெரிகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். கர்நாடகக் கோயில்கள் போல இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
  2. தற்சமயம் பெங்களூர் வாசமே.ஒரு அருமையான கோவிலை அறிய்த் தந்தமைக்கு வாழ்த்துகள்..அவசியம் வருகிற வாரத்தில் தரிசிக்கச் சென்றுவிடுவேன்.வாழ்த்துகளுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்புக் கிடைக்கும் போது அவசியம் சென்று வாருங்கள். நன்றி ரமணி sir.

      நீக்கு
  3. கோவில் அழகு.தகவல் அருமை.
    சரித்திர முக்கியத்துவம் உடைய கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முதல் படத்தை பார்த்தால் பார்த்த நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திப்பு அரண்மனை போயிருந்தால் இதையும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.

      நீக்கு
  5. அழகான படங்கள். ஸ்வாரஸ்யமான தகவல்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கோவிலும் அழகான சிற்பங்களும் பிரமிக்க வைக்கின்றன. அனைத்து தகவல்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  7. பிரமாதமான படங்களும் சுவாரசியமான தகவல்களும். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. வெங்கடரமணா கோயில்...மிக அழகா இருக்கிறது...
    தகவல்களும் மிக சிறப்பு...

    குறித்துக் கொண்டேன்...விரைவில் செல்கிறோம்..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin