வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஆகாசப் பறவைகள் - ‘தி இந்து’ காமதேனு பொங்கல் சிறப்பிதழில்..

‘தி இந்து’ குழுமத்திலிருந்து ஞாயிறு தோறும் வெளிவரும் காமதேனுவின் பொங்கல் சிறப்பிதழில்.. எனது கவிதை..

ஆகாசப் பறவைகள்

மைதியான அதிகாலைச் சூரியனின்
ஆரஞ்சுத் தீட்டல்களுக்கு நடுவில்
விரைகின்றன ஆகாயத்தில்  சத்தமின்றி.
உறங்கும் உலகத்திற்குக் கேட்பதில்லை
மென் சிறகுகளின்
மேலும் கீழுமான அசைவு.
காற்று கடத்தி வருகிற
அவற்றின் விதம் விதமான அழைப்பில்
மெல்ல விடிகிறது பொழுது.
மேகப் பொதிகளுக்குக் கீழ்
வயல்களுக்கு மேல்
வாய்க்கால்களுக்கு மேல்
நகரங்களுக்கு மேல்
கிராமங்களுக்கு மேல்
குன்றுகளுக்கும் குளங்களுக்கும் மேல்
எண் திசைகளிலும் பறக்கின்றன
பல அளவுகளில், பல வண்ணங்களில்.
சில காண அரிதானவை
சில அன்றாடம் பார்ப்பவை
வனப்பு சேர்ப்பவை வசீகரமானவை.
அண்டமே தமக்கானதாய்
ஆனந்தமாய்த் திரிந்தவை
இன்று காலூன்றிக் களைப்பாற
இரவு வந்தால் இளைப்பாற 
கூடமைத்துக் குடும்பம் வளர்க்க
மிச்சமிருக்கும் மரங்களைத் தேடி
தவிப்போடு அலைந்தாலும்,
விருட்சங்களுக்கான
விதைகளைச் சுமந்து
எச்சங்களாய் விதைத்து
பறக்கின்றன புதிர்களாய்
புகார்கள் ஏதுமின்றி.
***

மீண்டும் ஒரு முறை’ என் கவிதைக்கான படம் நிழற்சாலையின் படமாக..
நன்றி காமதேனு!
***

15 கருத்துகள்:

  1. அருமையான கவிதை! கவிதை 'காமதேனு 'வில் பிரசுரமானதற்கு அன்பு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. இப்போது தான் பார்த்தேன். 1000 பதிவுகள் நிறைவடைந்ததற்கு, அந்த இனிய சாதனைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  3. கவைதை அருமை.
    காமதேனு வில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    //மிச்சமிருக்கும் மரங்களை தேடி //

    இதை படிக்கும் போது கவலையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா!

      பல பறவைகளுக்கு வீடுகளாய் இருந்த பெருமரங்கள் வெட்டி சாய்க்கப்படுவதை நாமே பார்க்கிறோமே :( !

      நீக்கு
  4. காமதேனுவில்வெளியானதற்கு வாழ்த்துகள்.   கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  5. முணுமுணுப்பின்றி கடமையைச் செய்வதில் சற்றும் சலிப்பின்றி பறக்கும் பறவைகள் மிக அழகு. நம்பிக்கை வரிகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அவற்றுக்குச் சலிப்பே கிடையாது.

      கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆகாசப் பறவைகள் அருமை. காமதேனுவில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.
    "இருக்க இடம் தேடி.... அவையும் புது வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டன.பால்கனி சாடி சிறு மரங்களிலேயே கூடு கட்டி வாழ்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

      நீக்கு
  7. புகார்கள் ஏதுமின்றி... உண்மை. மனிதர்கள் தான் எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

    நல்ல கவிதை. காமதேனுவில் வெளியீடு - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin