வியாழன், 21 பிப்ரவரி, 2019

இயற்கைச் சூழலில் விலங்குகள்.. - ஜூப்ளி பூங்கா, ஜம்ஷெட்பூர் (3)

#1

ம்ஷெட்பூர் நகரின் ஜூப்ளி பூங்காவின் வளாகத்தின் உள்ளேயே ஒரு மூலையில் இருக்கிறது டாடா ஸ்டீல் உயிரியல் பூங்கா. 97 ஏக்கர் பரப்பளவில், இயற்கை விரும்பிகளை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் இந்தப் பூங்காவில் எல்லா விலங்குகளுக்கும் பிரத்தியேகமான இடங்கள் ஒதுக்கப்பட்டு, கானகத்தில் வாழ்கின்ற மாதிரியான சூழலில் பராமரிக்கப் படுவது தனிச் சிறப்பு.

2

அத்தனை விலங்குகளும் மனிதர்களைக் கண்டால் மிரண்டு விடாமல், அல்லது பாய்ந்து விடாமல் பழக்கப்படுத்தப் பட்டவை என்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுகாப்பான இடம் என உத்திரவாதம் கொடுக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான். நேருக்கு நேர் பார்க்க நேரினும் எந்தச் சலனமும் இன்றி அவை தாம் பாட்டுக்கு உலாவிக் கொண்டிருந்தன!

புலியை தூரத்திலிருந்துதான் படம் எடுத்தேன். ஆனால்  அகழிக்கு அந்தப் பக்கம் நின்ற இந்தக் கரடியை சுமார் 10, 15 அடி தொலைவிலிருந்தே படமாக்கினேன். புலியைப் போல அதுவும் நேருக்கு நேர் பார்த்த காட்சி...

#3


ஸ்லாத் பியர் என அழைக்கப்படும் இக்கரடியைக் குறித்துத் தகவல்கள் மற்றும் வேறு பல கோணங்களில் படங்கள் இங்கே:
“சும்மா கரடி விடாதே” 
தினமலர் பட்டம் இதழிலும்:
“கறுப்பு அங்கி உடுத்திய விலங்கு” 

அந்தப் பதிவில் பகிராத படம் ஒன்றும்:
#4

மான் கூட்டம்
5

கம்பீர நடை போடும்
பெரிய கொம்பன்
#6

மற்றுமோர்,

சின்னக் கொம்பன்
#7
இந்த மானின் கொம்பு சுருள் வடிவில் இருப்பதோடு அதில் வளைந்து செல்லும் வெள்ளை மற்றும் கருப்பு  கோடுகள் வித்தியாசமாக இருந்தன. என்ன வகையாக இருக்குமென இணையத்தில் தேடியதில் அறியமுடியவில்லை. அறிந்தவர்கள் சொல்லலாம்.

ஏக்கர்கள் கணக்கில் விரிந்த வனத்தின் நடுவே கால்களுக்குச் சற்று ஓய்வு.. :)
a


இங்கே அரிய வகை விலங்குகள் பலவற்றையும் பராமரித்து வருகிறார்கள்.
#8

ஒரே ஒரு மாண்ட்ரில் குரங்குக்கான ஒன்றுக்கான பிரத்தியேக இடம்:


கண்ணிலேயே அகப்படவில்லை பத்து நிமிடங்கள் காத்திருந்தும். திரும்பி வரும் போது காணக் கிடைத்தது.

தகவல்கள் சுவாரஸ்யம்.

#9

குரங்கு வகைகளின் இதுவே பெரிய வகை இனம். உடலின் நீளம் 25 முதல் 32 அங்குலம் வரை. வால் நீளம் இரண்டரை முதல் மூன்றரை அங்குல அளவு.

#10

மொத்த எடை சுமார் 11 முதல் 37 கிலோ வரையிலும்.

#11

ஆயுட்காலம் வனங்களில் 25 முதல் 30 ஆண்டுகள் என்றால் பராமரிப்பில் இருப்பவை 40 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

#12


கழியிலிருந்த நீரில் குளித்து விட்டு இறக்கைகளைக் காய வைத்துக் கொண்டிருந்த நீர்க் காக்கை:

#13

#14

சுமார் மூன்றிலிருந்து நான்கடி உயரம் வரை இருந்த இந்தப் பறவைகளை கூண்டுக் கம்பிகளுக்கு மறுபக்கமிருந்து படமாக்கியுள்ளேன்.  இவற்றின் வகையை அறிந்து கொள்ள முடியவில்லை.

#15


வலைக் கூரையைக் கொண்ட கூண்டுகளில் ஏராளமான மயில்கள் இருந்தன. மைசூர் நேச்சர் பார்க்கில் அது போன்ற உயரமான கூண்டுகளுக்குள் நாம் நுழைந்து சென்று படமெடுக்கும் வசதி இருந்தது. இங்கு அது போலில்லை. இன்னொரு பக்கம் வரிக் குதிரைகளுக்கான மைதானம். அதிக ஆழமும் பெரிய பரப்பளவும் கொண்ட பள்ளத்தில் பல வித குரங்குகள் உலாவியபடி இருந்தன. இந்த உயிரியல் பூங்காவுக்குச் செல்லும் திட்டம் இல்லாததால் அப்போது உபயோகித்து வந்த அதிக ஜூம் கொண்ட லென்ஸை (55-200mm) நான் எடுத்துச் செல்லவில்லை. பயணங்களுக்காகவே வாங்கிய (18-140mm) லென்ஸை மட்டுமே கொண்டு சென்றிருந்தேன். ஜூம் போதுமானதாக இல்லாததால் பல விலங்குகளைப் படமாக்க முடியவில்லை. சிங்கங்களையும் புலியையும் அகழி கொண்ட பெரிய மைதானங்களில் உலவ விட்டிருந்தவர்கள், சிறுத்தைகளை மட்டும் கூண்டில் வைத்திருந்தார்கள். அவற்றுக்குள்ளே நாலைந்து ஆக்ரோஷமாகச் சுழன்று கொண்டிருந்தன. கம்பிகளை ஓரளவு மறைத்து ஃபோகஸ் செய்ததில் கிடைத்த படங்கள்:

#16


சாந்தமாக இருந்த ஒன்று..

#17

நேரமின்மை காரணமாக முழுப் பூங்காவையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. நடுவில் பார்த்த சிறிய வண்ணத்துப் பூச்சிப் பண்ணையைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



***

8 கருத்துகள்:

  1. எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் விலங்குகளை சந்திக்கலாமா? ஆச்சர்யம்.

    குரங்கு வித்தியாசமாய் இருக்கிறது.

    சாந்தமாக இருக்கும் சிறுத்தையே பயமுறுத்துகிறதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலி, சிங்கம், கரடி போன்றவை இருக்குமிடங்களைச் சுற்றி அகழிகள் இருந்தன. மனிதர்களைக் கண்டால் அலட்டிக் கொள்ளாமல் தம் போக்கில் உலாவிக் கொண்டிருந்தன.

      சாந்தமாக இருக்கும் சிறுத்தை பூனை போலதானே உள்ளது:)?

      நீக்கு
  2. அழகான படங்கள்.
    அருமையான தகவல்கள்.
    வண்ணத்துப்பூச்சி பார்க்க ஆவல்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாவ் ...அத்துனை நேர்த்தி ஒவ்வொரு படத்திலும் ..அழகோ அழகு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin