செவ்வாய், 30 மே, 2017

வெண்புருவக் கொண்டலாத்தி ( White-browed Bulbul ) - பறவை பார்ப்போம் (பாகம் 14)

#1

வெண்புருவக் கொண்டலாத்தி, ஒரு  கொண்டை வகைப் பறவை. ஆங்கிலப் பெயர்: White-browed Bulbul. உயிரியல் பெயர்: Pycnonotus luteolus. 
இலங்கையிலும் இந்திய தீபகற்பத்திலும் வாழ்கின்றன. தென்னிந்தியாவில் ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் காணப்படுகின்றன. வடக்கே குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் காய்ந்த பரந்த கிராமப்புற குறுங்காடுகளிலும், அடர்த்தியான புதர்களுள்ள குறுங்காடுகளிலும் மற்றும் தோட்டங்களிலும் காணப்படும்.

#2

வெண்புருவக் கொண்டலாத்தியின் நீளம் 20 செ.மீ (சுமார் 7 அங்குலம் 8) இருக்கும். உடலின் மேற்பகுதி ஆலிவ் நிறத்திலும், கீழ்ப் பகுதியின் மேற்பக்கம் வெண்மையாகவும், அடிப்பக்கம் மஞ்சளாகவும் காணப்படும். வெண் கண் புருவம், கண்களுக்குக் கீழ் வெள்ளை நிறப் பிறை வடிவம் மற்றும் மீசை போன்ற கரிய கோடு ஆகியன இவற்றின் சிறப்பு அடையாளம் எனலாம்.
உடலின் பின்பகுதி மட்டுமின்றி முகவாயும் சற்றே மஞ்சளாகக் காணப்படும். தொண்டைப் பகுதி வெண்மையாக இருக்கும். பிடரியில் மூன்று அல்லது நான்கு முடிகள் சிலிர்த்துத் தென்படும்.

#3

இவை பழங்கள், மலர்த்தேன், புழு, பூச்சி என்பவற்றை உணவாகக் கொள்ளும். அடர்த்தியான குறுங்காடுகளில் மறைந்து வாழும் இவற்றைக் காண்பது சற்றுக் கடினம். இவை புதர்கள் மற்றும் மரக்கிளைகளின் மேல் நின்று பலத்த ஒலி எழுப்பி, பின் உள் சென்று ஒளிந்து கொள்ளும். ஆனால் ஒலியின் மூலமாகவே இவற்றின் இருப்பைக் கண்டு பிடித்து விடலாம்
#4

இறகின் அமைப்பில் ஆணும் பெண்ணும் ஒரே போன்றிருக்கும். தனியாகவும் சோடியாகவும் காணப்படும்.  பங்குனி முதல் புரட்டாசி வரையான காலப்பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். வருடத்தில் இரு தடைவைகள் குஞ்சு பொரிக்கும். மரக்கிளையில் இலகுவான கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டி இரண்டு முட்டைகளை இடும். வெண்புருவக் கொண்டலாத்தி 11 வருடங்களுக்கு மேலாக வாழக் கூடியது.

#5
***

தகவல்கள்: இணையத்திலிருந்து சேகரித்தவை.
ஒளிப் படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 16 )
பறவை பார்ப்போம் (பாகம் 14)

10 கருத்துகள்:

  1. முதல் குருவியையும் நான்காவது குருவியையும் மிக அழகாய்ப் படம் பிடித்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  2. ada vivarangkalum padamum azagu. eppidi edutheengka kadaisipadam konam arputham.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அவதானிப்பு:). கடைசிப் படம் முதல் தள அறையின் சன்னலுக்குள் இருந்து எடுத்தேன், நான் நிற்பதை அது கவனித்த போது. நன்றி தேனம்மை.

      நீக்கு
  3. படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  4. குருவி அழகு.
    விவரங்கள் சேகரிப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  5. எழுத்தும் புகைப்படமும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை..
    மதுரையில் இருந்து,
    ராஜ்கண்ணன்...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin