திங்கள், 14 நவம்பர், 2016

ஸூப்பர் நிலா - SUPER MOON 2016

வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தந்து கொண்டிருக்கும் இன்றைய முழு நிலவு...

Exif: 1/60s,f/13, ISO400
Focal length: 300mm
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
14-11-2016 19:31:40

68 வருடங்கள் கழித்து, அதாவது 26 ஜனவரி 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு
இன்று 14 நவம்பர் 2016_ல் பூமியை மிக நெருங்கி வந்துள்ளது நிலா. பூமியிலிருந்து சுமார் 356,509 கிலோ மீட்டர் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலாவே இத்தனை காலத்தில் பூமிக்கு மிக அருகே வந்து முழு நிலா. இனி இதுபோல், இதை விடவும் சற்று நெருக்கமாக (356,448 கிலோ மீட்டர் தொலைவில்) ஒளிர்வதைக் காண நாம் பதினெட்டு ஆண்டுகள், அதாவது 25 நவம்பர் 2034 வரை காத்திருக்க வேண்டும்.  ஆகவே இந்த நிலாவைக் கண்டு களியுங்கள். மேக மூட்டமாக இருப்பின் நாளையும் கூட முயன்றிடலாம். ஓரளவுக்கு இதே அளவில் தெரியும்.

இதற்கு முந்தைய சூப்பர் நிலாக்கள் 1955,1974, 1992 and 2005, 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் வந்து கவனம் பெற்றிருந்தன. பொதுவாகக் கணித சாஸ்திரப்படி, இத்தகு முழுநிலவை Perigee full moon என்றுதான் அழைத்து வந்தார்கள். Perigee என்பது நிலவு தன் கோளப் பாதையில் சுற்றி வருகையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் குறிப்பிட்டப் புள்ளியைக் குறிப்பதாகும். சூப்பர் மூன் என்பது இந்தப் புள்ளிக்கு வரும் போது ஒரே நாளில் நிலவு பூரணத்துவம் பெற்று 30% அதிகப் பிரகாசமாகவும், 14%  பெரிதாகவும் காட்சி அளிப்பதைக் குறிப்பதாகும்.

பதிமூன்று மாதங்களுக்கொரு முறை முந்தைய மாதங்களை விட நிலவு பூமிக்கு அருகே வருவது வழக்கம்தான் எனினும் சூப்பர் மூனாக கணிக்கப்பட்டவை மிக அருகாமையில் வந்தவையாகும். அதிலும் உதித்த இரண்டே மணி நேரங்களில் பூரணமாக ஒளிர்ந்த இந்த வருட நவம்பர் நிலவை ‘எக்ஸ்ட்ரா சூப்பர்’ எனப் புகழ்ந்துள்ளது நாசா - NASA (தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் ). 

சென்ற முறைகளில் அப்பெச்சர் மோடில் முழு நிலவைப் படமாக்கி வந்த நான் இந்த முறை மேனுவல் மோடில் 1/60s,f/13, ISO400 எடுத்திருந்தேன். f stop 9,11,13 மற்றும் 18 வரையிலும் வைத்து எடுத்துப் பார்த்ததில் இதுவே மனதுக்குத் திருப்தியாக வந்திருந்தது. நிலவு அதிகப் பிரகாசமாக இருந்தது.
படம் எடுக்க விரும்புகிறவர்களுக்கு ஓரிரு ஆலோசனைகள்:
*உங்கள் லென்ஸிலிருக்கும் UV filter_யை அகற்றி விடவும்.
* ட்ரைபாடில் வைத்து எடுக்கும் பட்சத்தில் லென்ஸின் VR (vibration reduction) ஸ்விட்சை ஆஃப் செய்திடவும்
*என்னதான் ட்ரைபாடில் வைத்தாலும் விரலின் தொடுகையும் கூட சற்று கேமராவை ஆட்டம் காண வைக்கும். எனவே ரிமோட் அல்லது செல்ஃப் டைமர் உபயோகித்தால் நல்லது.


***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

12 கருத்துகள்:

 1. மிக அருமை! மேலும் அழகான படத்தை தந்ததற்கும் அற்புதமான விவரங்களைத் தெரிவித்ததற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 2. நிலவின் படம்....ஆஹா மிளிர்கிறது..அருமை

  பதிலளிநீக்கு
 3. இன்றைய செய்தித்தாளில் பார்த்தேன் பெங்களூருவில் தெரிந்த நிலவின் படம் இருந்தது உங்கள் படம் கருப்பு வெள்ளையா நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரவு வானில் வெண்ணிலா. அதனால் கருப்பு வெள்ளைப் படமாகத் தெரிகிறது.

   நன்றி GMB sir.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin