ஒளிப்படக் கலையின் 177_வது வருடம். 19 ஆகஸ்ட், இன்று உலக ஒளிப்பட தினம். தத்தமது உலகத்தை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளும் அத்தனை ஒளிப்படக் கலைஞர்களுக்கும் நல்வாழ்த்துகள்!
“நீங்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஏன் பல ஒளிப்படக் கலைஞர்களுக்கும் சரி, ஓவியர்களுக்கும் சரி கருப்பு வெள்ளைப் படங்கள் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு..?” சமீபத்திய பதிவொன்றில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி. வர்ணங்கள் அழகு. வர்ண மயமானது வாழ்க்கை.
இருப்பினும் அதை அப்படியே பதிவு செய்வதை விடுத்து ஏன் கருப்பு வெள்ளையில் காட்ட வேண்டும்?
இதற்குப் பல காரணங்கள். வண்ணப் படங்கள் எடுக்கும் வசதி இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைக்கும் ஏன் நம் மனதை விட்டு அகலாமல் நிற்பதை மறுக்க முடியாது. கருப்பு வெள்ளைப் படங்களில்
வண்ணங்களால் ஏற்படும் கவனச் சிதறல் தவிர்க்கப்பட்டு கருப்பொருளின் மேல் கவனம் குவிகிறது. ஒளியும் நிழலும் சிறப்பாக வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை மற்றும் சாம்பல் வண்ணங்களின் கலவையை சரி வரக் கொண்டு வருவதிலிருக்கும் சவால் பிடித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் இருக்கும் தனிப்பட்ட இரசனையின் வெளிப்பாடாகவும் அமைந்து போகின்றன கருப்பு வெள்ளைப் படங்கள்.
குறிப்பாக மனிதர்களின் உணர்ச்சிகளைத் துல்லியமாகக் காட்டுவதிலும் வல்லமை வாய்ந்தவை கருப்பு வெள்ளை portrait படங்கள். ‘இல்லையென சொல்லமுடியுமா?’ கேட்கிறார்கள் இவர்கள்:
#1
#2
#3
#4
#5
என் முதல் கேமரா |

‘எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும்..’
‘இரவானால் பகலொன்று வந்திடுமே..’
#3
‘நம்பிக்கை என்பது வேண்டும்.. நம் வாழ்வில்..’
#4
‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா..’
#5
‘மகிழ்ச்சி..!’
*****
அட்டகாசமா இருக்கு ஒவ்வொன்னும்!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குவண்ணமெதற்கு ராமலக்ஷ்மியின் கை வண்ணமிருக்கும் போது? கருப்பு வெள்ளையே போதுமே அவர்க்கு சிறப்பாய்க் காட்டிட எடுத்திடும் படங்களை!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதங்களுக்கு என் ஒளிப்படதின வாழ்த்துகளும் வணக்கங்களும் Sir.
படங்கள் அருமை ராமலெக்ஷ்மி !
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
நீக்குகருப்பு வெள்ளை படங்கள் அழகு.
பதிலளிநீக்குஉலக ஒளிப்படதினத்திற்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குவிளக்கமும்
பதிலளிநீக்குஅதற்கு ஆதாரமாய்ப் படங்களும்
மிகவும் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி sir.
நீக்குஅட்டகாசம்.....
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குஆஹா... அட்டகாசம் அக்கா...
பதிலளிநீக்குஎன்னைக்குமே கறுப்பு வெள்ளையின்னாலே தனிக்கலைதான்...
நன்றி குமார்.
நீக்கு