அட்டைப் படமாக..
நான் எடுத்த ஒளிப்படம்..
நறுமுகைப் பதிப்பக வெளியீடாக...
நூல் வெளியீட்டு விழா 9 ஜூலை 2016_ல் புதுவையில் நடைபெற உள்ளது. கவிஞருக்கும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்!
2013ஆம் ஆண்டில் ‘மின்மினிப்பூச்சிகள்’ ஷக்தி பிரபாவுக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சாராக் கூட்டம் பற்றி 12_ஆம் தூறலில் நானும், இங்கே ‘எண்ணிய முடிதல் வேண்டும்’ பக்கத்தில் ஷைலஜாவும் பகிர்ந்திருந்தோம். அப்போது பதிய விட்டுப் போன படங்கள் சேமிப்புக்காக இங்கே:
# தமிழ்ச் சங்கம் வாசலில்..
#
‘சிறிய கேமராவிலும் சிறந்த படங்கள் கிடைக்குமா?’ என்ற ஷக்தியின் கேள்விக்கு ‘ஏன் முடியாது’ என மிகத் தீவிரமாக பதிலளித்துக் கொண்டிருக்கிறேன்:)! 2008-10 வரை பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்த பல படங்கள் சிறிய கேமராக்களில் எடுத்தவையே.. என என் அனுபவத்தை அள்ளி வழங்கிய வேளையில் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த படம்:)! சர்வைஞர் நூலகத்துக்கு முன்னாலிருந்த கூடத்தில் நடைபெற்றது இந்த சந்திப்பு.
படத்துளி:
நான் எடுத்த ஒளிப்படம்..
நறுமுகைப் பதிப்பக வெளியீடாக...
***
வல்லமை மின்னிதழில் மூன்றாவது முறையாக, கவி படைக்கத் தேர்வாகியுள்ள எனது படம்:
தேர்வு செய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும்
வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.
கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் என் வாழ்த்துகள்.
***
ஆல்பம்:
2012ஆம் ஆண்டில் வல்லமை ஆசிரியர் குழுவினரோடு ஒரு சந்திப்பு. ஐந்தாம் தூறலில் பகிர்ந்திருந்த மேலிருக்கும் படத்தோடும் மேலும் இரண்டு படங்கள்:
இடமிருந்து வலமாக: வா. மணிகண்டன்; ஐயப்பன் கிருஷ்ணன்; நான்; சாந்தி மாரியப்பன் மற்றும் அண்ணா கண்ணன் |
# வல்லமை நிர்வாகி திரு அண்ணா கண்ணனிடமிருந்து முதல் வல்லமையாளர் விருதினைப் பெறுகின்றேன்...
நன்றி வல்லமை !
***
2013ஆம் ஆண்டில் ‘மின்மினிப்பூச்சிகள்’ ஷக்தி பிரபாவுக்கு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சாராக் கூட்டம் பற்றி 12_ஆம் தூறலில் நானும், இங்கே ‘எண்ணிய முடிதல் வேண்டும்’ பக்கத்தில் ஷைலஜாவும் பகிர்ந்திருந்தோம். அப்போது பதிய விட்டுப் போன படங்கள் சேமிப்புக்காக இங்கே:
# தமிழ்ச் சங்கம் வாசலில்..
என் க்ளிக்கில்.. ஷக்தி, ஷைலஜா, ஸ்வர்ணலக்ஷ்மி.. |
இடமிருந்து வலமாக: திருமால், திரு. முகமது அலி, ஓம் ஸ்ரீ, GMB sir, ஸ்வர்ணலக்ஷ்மி, நான், ஷக்தி, ஷைலஜா மற்றும் ஹரிகி sir |
சமீபமாக முத்துச்சரத்தில் பதிவிடுவதில் ஏற்பட்டிருக்கும் நீண்ட இடைவெளியை உங்களில் சிலர் கவனித்திருக்கக் கூடும். ஒன்றரை மாதங்களுக்கு முன் புது வீட்டுக்கு மாறியுள்ளேன். அதையொட்டிய வேலைகளால் இணையம் வருவதே குறைந்து விட்டிருந்தது. தற்போது ஃப்ளிக்கரில் மீண்டும் பதிய ஆரம்பித்து விட்டேன். மெல்ல மெல்ல இங்கும் பழையபடி பதிய வேண்டும். பார்க்கலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது. பெங்களூர் வந்த நாளிலிருந்து அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்க்கை. இந்திரா நகர், மல்லேஸ்வரம் பிறகு ஆர்.டி. நகரில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் மகனது பள்ளிக்கு பக்கமாக இருக்கட்டுமென வாங்கிய ஃப்ளாட்டினில் இருந்து இப்போது தனித் தோட்டத்துடன் கூடிய புதிய வில்லாவுக்கு இடம் பெயர்ந்திருக்கிறோம். கல்லூரி, மேல்படிப்பு எல்லாம் வேறு வேறு இடங்களில் என்றாகி, இப்போது வேலை நிமித்தம் மகன் வெளியூர் சென்று விட்ட நிலையில் அங்கே தொடர்வதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. ஒரு காலத்தில் கணவர் நாற்பது நிமிடங்களில் சென்று வர முடிந்த அலுவலகத்திற்கு, கூடிக் கொண்டே இருக்கும் பெங்களூரின் போக்குவரத்து நெரிசலால் ஒன்றரை.. அல்லது இரண்டு மணி நேரம் கூட ஆக ஆரம்பித்து விட்டது. இப்போதைய இடம் அலுவலகத்திற்கு மிகப் பக்கம். இத்தனை காலமும் ஒரே தளத்தில் எல்லா அறைகளுமாய் இருந்து விட்டு, சிலபல உடல் நலப் பிரச்சனைகளுடன் ஏறி இறங்க முடியுமா என்பது முதலில் ஒரு தயக்கமாக இருந்து வந்தது. எந்த மாற்றத்தையும் எதிர் கொள்ளும் போது ஏற்படுகிற இப்படியான தயக்கங்களைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் இங்கு வந்தபின் பழகி விட்டது. பிரச்சனை இல்லை. அதுவுமில்லாமல் ஆயிரம் சதுர அடியிலான தோட்டம் பிடித்தமானதாக இருக்கிறது. இரு வருடங்களுக்கு முன் வாங்கும் போது கன்றாக இருந்த மா, தென்னை, பன்னீர் ஆப்பிள் (Jamrul), எலுமிச்சை, மாதுளை, கொய்யா, செம்பருத்தி, முருங்கை, கருவேப்பிலை இன்னபிற யாவும் இப்போது மரங்களாகிக் பூத்துக் காய்த்துக் கொண்டிருக்கின்றன. சுத்தமான காற்று, அமைதியான இடம். விதம் விதமான பறவைகளின் சங்கீதம். பொன் வண்டுகளின் ரீங்காரம். தேனீக்களின் ஆரவாரம்..
ஆக என் கேமராவுக்கு தினசரி வேலை:). எடுக்கும் படங்களை ஃப்ளிக்கரின் “என் வீட்டுத் தோட்டத்தில்..” எனத் தனியாக ஒரு ஆல்பம் தொடங்கி சேமிக்க ஆரம்பித்திருக்கிறேன். முத்துச்சரத்திலும் அதே பகுப்பில் அவ்வப்போது தொகுப்பாகப் பகிருகிறேன்.
ஆக என் கேமராவுக்கு தினசரி வேலை:). எடுக்கும் படங்களை ஃப்ளிக்கரின் “என் வீட்டுத் தோட்டத்தில்..” எனத் தனியாக ஒரு ஆல்பம் தொடங்கி சேமிக்க ஆரம்பித்திருக்கிறேன். முத்துச்சரத்திலும் அதே பகுப்பில் அவ்வப்போது தொகுப்பாகப் பகிருகிறேன்.
***
படத்துளி:
பனை நுங்கு
***
அனைத்து விஷயங்களுக்கும் வாழ்த்துகள். மீண்டும் பதிவுகள் தொடங்கி இருப்பதற்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குவாரத்துக்கு ஒன்றிரெண்டேனும் பகிர்ந்திட எண்ணுகிறேன்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.... தொடரட்டும் பதிவுகள்.....
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றசங்கமம் ஷக்தியின் பிரிவுபசாரக் கூட்டமா தெரியாதே. ஆட்சேபணை இல்லை என்றால் உங்கள் முகவரியை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பவும் சந்திக்க முடியாமலா போய்விடும்?
பதிலளிநீக்குஅனுப்புகிறேன் sir. அவசியம் சந்திக்கலாம். நன்றி.
நீக்குவாழ்த்துக்கள்! தொடருங்கள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபுதுவீட்டிற்கு போனதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவல்லமையாளர் விருதுக்கு வாழ்த்துக்கள்.
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு