ஞாயிறு, 28 ஜூன், 2015

வியாழன், 25 ஜூன், 2015

சுயம் அறிதல் - கலீல் ஜிப்ரான் (2)


கல்களின், இரவுகளின் இரகசியங்களை
அமைதியில் அறிகின்றன உங்கள் உள்ளங்கள்.
உள் மனதின் ஞான ஒலிக்காக
தாகத்தில் தவிக்கின்றன உங்கள் செவிகள்.
சிந்தனைக்கு எந்நாளும் தெரிந்தே இருப்பவற்றை
வார்த்தைகளாலும் அறிந்தே இருக்கிறீர்கள்.
உங்கள் கனவுகளின் நிர்வாண உடலை
உங்கள் விரல்களால் தொடவும் முடிகிறது.

ஞாயிறு, 21 ஜூன், 2015

தாயுமானவர்கள்.. தந்தையர் தின வாழ்த்துகள்!

ன் கேமராவில் சிறையான தந்தைமைத் தருணங்கள் பேசும் படங்களாக.. காட்சிக் கவிதைகளாக.. உங்களின் பார்வைக்கு..

#1 தாயுமானவன்..




#2 ‘என் அப்பா..’



முன்னர் முத்துச்சரத்தில் பகிராத படங்கள் பதிமூன்றை இரசிக்கும் முன் பல்வேறு சமயங்களில் பதிந்தவற்றில் இருந்து ஒரு (கொலாஜ்) தொகுப்பும்...

செவ்வாய், 16 ஜூன், 2015

சத்ரிய நிருத்யா அப்சரஸ்(கள்).. - பெங்களூர் கிராமியத் திருவிழா 2014 (பாகம் 2)

#1

நிகழ்வின் இறுதி நாள் அன்று அஸ்ஸாமிய நாட்டுப்புற நடனமான சத்ரிய நிருத்யா, குரு ஜாட்டின் கோஸ்வாமியின் சிஷ்யைகளால் வழங்கப்பட்டது.

#2

சத்ரிய நிருத்யா அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்  பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகமாக அரங்கேறுகின்றன. இது எட்டு இந்தியப் பாரம்பரிய நடனங்களுள் ஒன்றாகும். மற்ற ஏழு பரதநாட்டியம், கதக்களி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிசி, கதக் மற்றும் மணிப்புரி ஆகியன.

நான் சென்ற வேளையில்  அப்போதுதான் நிகழ்ச்சியை முடித்து விட்டு அரங்கை விட்டு வெளியே வந்திருந்தார்கள் நாட்டியக் கலைஞர்கள். கேட்டுக் கொண்டதன் பேரில் படம் எடுக்க விரும்பிய அனைவருக்கும் அழகாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

#3

எந்த ஒரு நாட்டியமும் அதற்கென்றே உரித்தான ஆடை, ஆபரணங்களால் மேலும் தனித்துவம் பெறுகின்றது. அந்த வகையில் இவர்களின் ஆபரணங்கள் இதுவரை நான் கண்டிராததாக அழகாக வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன.

இவர்களது நடன ஆடைகள் அஸ்ஸாமில் தயாராகும் ஒரு வகை பட்டினால் ஆனவை என்றும், அந்த மண்ணிற்கே உரிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுபவை. அணிகலன்களும் அஸ்ஸாமின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவையே.

பாருங்கள் இந்த குழந்தையைக் கூட இவர்களது அணிகலன் எப்படி வசீகரித்திருக்கிறதென:)?
#4

வியாழன், 11 ஜூன், 2015

நந்தி குனிதா - TOI சர்வதேச கிராமியத் திருவிழா 2014 - பாகம் 1

#1

சென்ற வருடம் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச கிராமியத் திருவிழாவைப் பற்றி ஒரு பகிர்வு... 18 படங்களுடன்..

#2

ஆகஸ்ட் மாதம் 8,9,10 தேதிகளில் ஜெயமஹால் அரண்மனையை ஒட்டிய மைதானத்தில் நடைபெற்றது இத்திருவிழா.

#3
மாட்டு வண்டி என்றால் எப்படி இருக்கும் என்பதை நகரத்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள இப்படி ஒரு ஏற்பாடு..

பல்வேறு மொழி, கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஊராகிய பெங்களூரில் இதுபோன்ற திருவிழாக்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதான்.

#4

கர்நாடகத்தின் யக்‌ஷகானா உட்பட பல இந்திய மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகளுடன் இந்தோனேஷியா, நார்வே, இலங்கை ஆகிய நாட்டுக் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.
#5

செவ்வாய், 9 ஜூன், 2015

தன்வலி அறிதல்

#1
வெற்றி பெறுவதே ஒன்றே வாழ்க்கையில் எல்லாம் என்றில்லை. வெற்றி பெற வேண்டுமென்கிற எண்ணம் போதும் நம்மைச் சரியான பாதையில் செலுத்த.


#2
சாதனையாளர்களில் பலர் வெற்றியைப் பற்றிக் கனவு கண்டதில்லை. அதற்காக உழைத்திருக்கிறார்கள்..

#3
“நீங்கள் நேசிக்கும் விஷயத்தின் அழகு நீங்கள் செய்யும் விஷயத்திலும் இருக்கட்டும்.”_ரூமி


#4
 'உங்கள் பலத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். பலவீனங்களை மிகைப்படுத்திப் பார்க்காதீர்கள்.'

ஞாயிறு, 7 ஜூன், 2015

சட்டம் போடலாம் வாங்க..

ளிப்படம் எடுக்கும் போது நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் கையாளப் படுகிற உத்திகளில் ஒன்றுதான் சட்டத்துக்குள் சட்டம் (Frame within a frame) . இதுவே ஜூன் மாத PiT போட்டிக்கான தலைப்பு.

#1
உச்சிக் கோவில்

கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள். 

#2
அருள்வாய் நீ..
அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாகச் சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன:


#3
கால் முளைத்த ஊஞ்சலுக்குள்
காட்சிகள் இரண்டு

வெள்ளி, 5 ஜூன், 2015

தன் திசையில் வெகுதூரம்.. - நவீன விருட்சத்தில்..

'காலங்களைக் கடந்து வருபவன்' சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு - ஒரு பார்வை 

விதைகளின் நோக்கம் வாழ்வின் அழகியலை, தத்துவங்களை, உண்மைகளைத் தேடுவதாக மட்டுமே இருந்து விடுவதில்லை. இத் தேடல்கள் அனுபவங்கள் சார்ந்தவையாக, கவிஞரின் ஆழ்மனதில் எழும்பும் கேள்விகளை முன் வைப்பவையாக இருக்கின்றன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin