ஞாயிறு, 7 ஜூன், 2015

சட்டம் போடலாம் வாங்க..

ளிப்படம் எடுக்கும் போது நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் கையாளப் படுகிற உத்திகளில் ஒன்றுதான் சட்டத்துக்குள் சட்டம் (Frame within a frame) . இதுவே ஜூன் மாத PiT போட்டிக்கான தலைப்பு.

#1
உச்சிக் கோவில்

கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள். 

#2
அருள்வாய் நீ..
அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாகச் சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன:


#3
கால் முளைத்த ஊஞ்சலுக்குள்
காட்சிகள் இரண்டு



வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி, பைக் கண்ணாடி, வண்ண மூக்குக் கண்ணாடி, ஸ்மார்ட் ஃபோன் ஆகியவற்றில் சப்ஜெக்டின் பிம்பங்களை கொண்டு வருதலும் ஒரு உத்தி. பயணத்தின் போது இவ்வகைக் காட்சிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும். ஜன்னல் அல்லது நுழைவாயில் ஊடாகத் தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், மலைகள், மரங்களைப் படமாக்கலாம். பரந்த மரக்கிளைகளையே கூடச் சட்டமாக்கி விடலாம். உங்கள் கற்பனைக்கு வானம்தான் எல்லை!

#4
எடுத்த படங்களிலிருந்து தேடி ஒரு சிலவற்றை மாதிரிக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன். இதற்கென்றே நீங்கள் களத்தில் இறங்கும் போது சிந்தித்து அசத்தலான படங்களைத் தர முடியும்.

#5
பழங்காலக் கோட்டையும் 
இளவேனிற்காலத்தை எதிர் நோக்கி மரமும்

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூன் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே.

#6
வட்ட நிலா சட்டத்தைத் தாங்கி..

படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளில் இம்மாதம் முதல் மாற்றம் அறிவிப்பாகியுள்ளது.
hall84eyes@photos.flickr.com எனும் முகவரிக்கும்; CC-யை photos_in_tamil@yahoo.in எனும் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
***

[PiT தளத்தில் இன்று பதிந்த பதிவின் பகிர்வு.]

9 கருத்துகள்:

  1. மாதிரி படங்களே மனதை விட்ட அகலாத படங்கள்...!

    பதிலளிநீக்கு
  2. சட்டம் போடுன்னு ஒரு 'சட்டம்'போட்டுட்டீங்களே!!!

    தேடணும் தேடிப்பார்க்கணும். எதாவது அகப்படுமுன்னு நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. ஆகா
    மாதிரிப் படங்களே இவ்வளவு அழகு என்றால்.....

    பதிலளிநீக்கு
  4. போட்டியாளர்களின் படங்களை அங்கு வந்து பார்க்கவில்லை எனினும் மாதிரிப் படங்கள் மனதில் தங்கி விட்டன. குறிப்பாக முதல் படம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin