செவ்வாய், 30 டிசம்பர், 2014

சித்திரப் பாவையர் - நெல்லை ஓவியர் மாரியப்பன் - (பாகம் 1)

 #1 அம்மா என்றால் அன்பு..

ஊர் மக்களால் ‘நெல்லை ரவிவர்மா’ என அன்புடன் அழைக்கப்படும் ஓவியர் மாரியப்பனின் கைவண்ணத்தை இந்த வருட சித்திரச் சந்தையிலும் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்ததை இங்கே (2014) சொல்லியிருந்தேன். கண்டு இரசித்த ஓவியங்களின் படங்களைப் பகிர்ந்திடுவதாக வாக்கும் அளித்திருந்தேன். அடுத்த சித்திரச் சந்தை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில் நினைவு வந்து அவசரமாகப் பகிர்ந்து கொள்கிறேன் இதோ உங்களுடன், இரண்டு பாகங்களாக:)!

ரசனை மிகு மாந்தர் கூட்டம்
தொடர்ச்சியாக இது 3வது வருடம். முத்துச்சரத்தைத் தொடரும் நண்பர்கள் இவரை நன்கறிவர். புதியவர்கள் எனில் முந்தைய கண்காட்சிகளில் இவர் காட்சிப்படுத்தியிருந்த ஓவியங்களைக் காண இங்கே செல்லலாம்:  2012 (படங்கள் 1, 17, 18, 19);  2013 (காவியமா ஓவியமா?); கல்கி ஆர்ட் கேலரியில் என் கட்டுரை

கடந்த வருடங்களைப் போலல்லாமல் இவ்வருடம் இவரது ஓவியங்களைப் படமாக்குவதில் சிரமம் இருந்தது. கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இடம் ஒதுக்கப்பட்டு வருகிறவர்களைக் கவரும் வகையில், நுழைவாயில் அருகாமையில் அமைந்திருந்தது  ஸ்டால். ஓவியங்கள் எல்லாம் நிழல் சூழ்ந்த இடத்தில், சுவற்றின் மேல் வைக்கப்பட்டிருந்ததால் விரும்பியபடி கோணம் அமைக்க முடியவில்லை. மேலும் நீளவாக்கில் ஸ்டால் அமைந்திருக்க, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர் கூட்டம் ஒரு பக்கம். முடிந்த வரையில் சிறைப்படுத்தினேன் இவர் தூரிகையில் உதித்த சித்திரப் பாவையரை:

#2 கார்த்திகைப் பெண்



#3 மங்கையும் நங்கையும்

#4 பிரியமான தோழி

#5 அன்னமிட்ட கை

#6 பொற்சிலை


# ஓவியர் மாரியப்பன்

இவை அனைத்தும் ஆயில் பெயின்டிங்ஸ். இந்த முறை இவரது Water Colour - நீர் வண்ண ஓவியங்களைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது. அத்தனையும் கிராமியக் காட்சிகள். ஒவ்வொரு ஓவியமும் இரசிக்க வைத்தது. அவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்:).

***

ஓவியங்களின் ஒளிப்பட ஆக்கம்: Ramalakshmi Photography 

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இன்று 2015 சித்திரச்சந்தையில் சந்தித்த போது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டேன். நன்றி:).

      நீக்கு
  2. அழகான படங்கள்...
    ஓவியர் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை. இந்தத் திறமைகள் கடவுள் கொடுத்த வரம். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. உயிர்ப்புள்ள படங்கள்... மாரியப்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. உயிருள்ள ஓவியங்கள் அழகு! அருமை! பகிர்வுக்கு நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. உயிரூட்டமுள்ள படங்கள். திரு மாரியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். தங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  7. ஓவியரின் கைவண்ணம் சிறப்பு. உங்கள் ரசனை அதனினும் சிறப்பு. அதைவிடப் புத்தாண்டு நாளில் நாங்கள் அதைக் கண்டு மகிழச்செய்த தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது.நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin