Monday, October 25, 2010

கேள்விகளைத் தேடி.. பிறழாத பிரவாகம்.. - அகநாழிகை கவிதைகள்




கேள்விகளைத் தேடி..

சிந்தனை வெளியில்
சூறாவளியாய் சுழன்றடித்து
துரத்திய சந்தேகங்களுக்கு
பதில்களைத் தேடித்தேடிப்
பயணித்துக் களைத்தவன்
ஒருபுள்ளியில்
எதைத் தேடுகிறோமென மறந்து
தேடத் தொடங்கினான்
கேள்விகளை!
*** ***


பிறழாத பிரவாகம்

ஆன்மா அழிவற்றதா
அறிந்திடும் ஆவல்
அணையாத் தீயாய்
அடங்காக் கனலாய்

விடை தெரிந்த முழுநிலவு
தான் தேய்வதைத்
தடுத்துக் கொள்ள இயலவில்லை

ரகசியம் புரிந்த ஞாயிறு
உதிக்காமல் ஓர்நாளும்
ஓய்வெடுக்க முடியவில்லை

சுழலும் பூமியுடன்
ஒட்டிக் கொண்டு சுற்றுகின்ற
ஒற்றைத் துகளாய் மனிதன்

பிடிவாதமாய்த் தொடரும் அவன்
இலக்கற்றத் தேடல்களால்

பாதிப்பு ஏதுமின்றி அண்டசாகரம்
கோடானுகோடி கோள்களின் வேகம்
விண்மீன்களின் பிரகாசம்
பிரபஞ்சத்தின் பிரவாகம்.
*** ***
படங்கள்: இணையத்திலிருந்து..


செப்-நவம்பர் 2010 அகநாழிகை பத்திரிகையில்..



நன்றி அகநாழிகை!
***











85 comments:

 1. அகநாழிகையில் கவிதை வாசித்தேன் பலநாழிகை நினைவில் நிற்கிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நானும் என் பல கேள்விகளுக்கு பதில் தேடித் தேடி களைத்திருக்கிறேன். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று கேள்விகளாக தோன்றுகிறது. பயம் உண்டானால் தடுத்துக் கொள்ள முடியவில்லை. ஓய்வெடுக்க இயலவில்லை.

  சகாதேவன்

  ReplyDelete
 3. //சுழலும் பூமியுடன்
  ஒட்டிக் கொண்டு சுற்றுகின்ற
  ஒற்றைத் துகளாய் மனிதன்//

  அருமை !

  காலையில திடீருன்னு ஒரு நினைப்பு பூமி மேல வந்துச்சு அதுக்கேத்த மாதிரியே வரிகள் :)

  ReplyDelete
 4. கவிதைகள் அற்புதம் ராமலக்ஷ்மி.

  தேடுவது எது என்று தெரியாமல் சிலநேரம் தேடுவோம்.

  படங்கள் அற்புதம்.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. //ஆன்மா அழிவற்றதா?//

  பல்லியின் ஆன்மா அதன் அறுந்துசெத்த வாலிலா அல்லது தப்பிப்பிழைத்த உடலிலா?

  ஓரொரு செல்லும் செத்துக் கழிய, புத்தம் புதுச் செல்கள் உருவாகிக்கொண்டே இருப்பதால் ஆன்மா உடல் சார்ந்ததா?

  ஒருசெல் உயிரிக்கு ஓர் ஆன்மா என்றால் பலசெல் உயிரிக்கும் ஒன்றுதானா?

  அல்லது, ஆன்மா அந்தரத்தில் உள்ளதா? பன்றியின் பல முலைபோல் அது நம்மை ஊட்டுகிறதா?

  பேய் இனம்பெருக்குமா?

  மனிதக்கொம்பைப் பொடித்து மருந்துசெய்யலாமா?

  வினவக் கூடாத வினா ஒன்றும் இல்லை. விடை கிட்டுதலும் அதைப் பொறுத்துதான்.

  ReplyDelete
 6. ஒற்றைத்துகளாய் மனிதன்.. அருமை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. தேடல்கள் தொடரும்..வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு அக்கா

  ReplyDelete
 10. அகநாழிகைக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. /*தேடத் தொடங்கினான்
  கேள்விகளை!..*/
  அருமை...

  பிறழாத பிரவாகம்... அழகாகக் கூறி உள்ளீர்கள் , ஒற்றைத் துகளாய் மனிதன் என்று...

  ReplyDelete
 12. அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழி.....

  ReplyDelete
 13. அருமையான ஆழமான கவிதைகள்...

  ReplyDelete
 14. good kavidhai.. rasithen.. vazhthukkal.

  ReplyDelete
 15. பிறழாத பிரவாகம் அருமை..
  நிலவும் ஞாயிறும் போல விடைதெரிந்த பின்னும் கூட கடமை தவறாமல் சுழண்டாகனுமே எல்லாருமே.. ஆகா ஒற்றை துகள்.

  ReplyDelete
 16. ரெண்டுமே ரொம்ப நல்லாயிருக்குங்க...கேள்விகளை தேடுவதில் நிலைத்திருக்கிறேன் நான்... அருமை.. வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 17. உங்கள் வழக்கமான கவிதைகளிலிருந்து மாறுபட்டிருப்பதாய் தோன்றியது. இதழிலேயே கண்டேன். நன்று.

  ReplyDelete
 18. அருமையான கவிதைகள்.. வாழ்த்துகள்!

  ReplyDelete
 19. தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

  http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

  ReplyDelete
 20. கவிதை வரிகள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
 21. அருமையா இருக்கு அக்கா.

  ReplyDelete
 22. congrats.

  Super பிறழாத பிரவாகம். I like it.

  ReplyDelete
 23. நல்ல கவிதை, சிந்திக்க வைத்து விட்டீர்கள்! நன்றி!!

  ReplyDelete
 24. அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. பதில்களைத் தேடி களைத்தால்,

  கேள்விகளைத்தேடுவது நியாயம்தானே!!???

  ReplyDelete
 26. அருமை, அக்கா... வாழ்த்துக்கள்! கலக்குறீங்க!

  ReplyDelete
 27. மொழியின் ஆளுமை ஆழமாகத் தெரிகிறது :) வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 28. அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 29. “விடை தெரிந்த முழுநிலவு
  தான் தேய்வதைத்
  தடுத்துக் கொள்ள இயலவில்லை
  ரகசியம் புரிந்த ஞாயிறு
  உதிக்காமல் ஓர்நாளும்
  ஓய்வெடுக்க முடியவில்லை”
  அருமையான வரிகள்!
  சிறந்த கவிதை!!

  ReplyDelete
 30. கவிதை நல்லா இருக்குங்க .

  ReplyDelete
 31. goma said...
  //அகநாழிகையில் கவிதை வாசித்தேன் பலநாழிகை நினைவில் நிற்கிறது.வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் கோமா.

  ReplyDelete
 32. சகாதேவன் said...
  //நானும் என் பல கேள்விகளுக்கு பதில் தேடித் தேடி களைத்திருக்கிறேன். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று கேள்விகளாக தோன்றுகிறது. பயம் உண்டானால் தடுத்துக் கொள்ள முடியவில்லை. ஓய்வெடுக்க இயலவில்லை.//

  பதில்கள் கிடைத்தாலும் கூட இயல்பு வாழ்வில் மாற்றங்கள் வரப்போவதில்லை. தெரிந்தும் தேடல்களும் நிற்கப் போவதில்லை. கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் சகாதேவன்.

  ReplyDelete
 33. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் புவனேஸ்வரி.

  ReplyDelete
 34. ஆயில்யன் said...
  ***/சுழலும் பூமியுடன்
  ஒட்டிக் கொண்டு சுற்றுகின்ற
  ஒற்றைத் துகளாய் மனிதன்//

  அருமை !

  காலையில திடீருன்னு ஒரு நினைப்பு பூமி மேல வந்துச்சு அதுக்கேத்த மாதிரியே வரிகள் :)/***

  நல்லது:), நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 35. செல்வராஜ் ஜெகதீசன் said...
  //வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் செல்வராஜ் ஜெகதீசன்.

  ReplyDelete
 36. கோமதி அரசு said...
  //கவிதைகள் அற்புதம் ராமலக்ஷ்மி.

  தேடுவது எது என்று தெரியாமல் சிலநேரம் தேடுவோம்.

  படங்கள் அற்புதம்.

  வாழ்த்துக்கள்!//

  கவிதைகளுடன் படத் தேர்வுகளையும் பாராட்டியிருப்பதற்கு நன்றிகள் கோமதிம்மா.

  ReplyDelete
 37. rajasundararajan said...
  //வினவக் கூடாத வினா ஒன்றும் இல்லை. விடை கிட்டுதலும் அதைப் பொறுத்துதான்.//

  இதுவும் சரிதான். கிட்டும் வரை விடையைத் தேடுவதில் வாழ்வின் பெரும் பகுதி தொலைந்தும் போகின்றன. ஆனாலும் எவரது தேடல்களும் நிற்கப் போவதில்லை என்பதே உண்மை.

  நன்றி ராஜசுந்தரராஜன்.

  ReplyDelete
 38. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //ஒற்றைத்துகளாய் மனிதன்.. அருமை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள்..//

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 39. அஹமது இர்ஷாத் said...
  //வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றி அஹமது.

  ReplyDelete
 40. பாச மலர் / Paasa Malar said...
  //தேடல்கள் தொடரும்..வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

  வாங்க பாசமலர். நன்றி.

  ReplyDelete
 41. அபி அப்பா said...
  //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!//

  மிக்க நன்றி அபி அப்பா.

  ReplyDelete
 42. சசிகுமார் said...
  //நல்ல பகிர்வு அக்கா//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 43. அமைதிச்சாரல் said...
  //அகநாழிகைக்கு வாழ்த்துக்கள்..//

  நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 44. அமுதா said...
  ***/*தேடத் தொடங்கினான்
  கேள்விகளை!..*/
  அருமை...

  பிறழாத பிரவாகம்... அழகாகக் கூறி உள்ளீர்கள் , ஒற்றைத் துகளாய் மனிதன் என்று.../***

  ரசித்தமைக்கு நன்றி அமுதா!

  ReplyDelete
 45. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழி.....//

  மிக்க நன்றிங்க நித்திலம்.

  ReplyDelete
 46. ஸ்ரீராம். said...
  //அருமையான ஆழமான கவிதைகள்...//

  நன்றிகள் ஸ்ரீராம்.

  ReplyDelete
 47. Dhosai said...
  //good kavidhai.. rasithen.. vazhthukkal.//

  நன்றிகள் தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 48. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //பிறழாத பிரவாகம் அருமை..
  நிலவும் ஞாயிறும் போல விடைதெரிந்த பின்னும் கூட கடமை தவறாமல் சுழண்டாகனுமே எல்லாருமே.. ஆகா ஒற்றை துகள்.//

  ஆமா கடமையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது:)! நன்றிகள் முத்துலெட்சுமி.

  ReplyDelete
 49. க.பாலாசி said...
  //ரெண்டுமே ரொம்ப நல்லாயிருக்குங்க...கேள்விகளை தேடுவதில் நிலைத்திருக்கிறேன் நான்... அருமை.. வாழ்த்துக்களும்..//

  மிக்க நன்றி பாலாசி. விடைகள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 50. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் டி வி ஆர் சார்.

  ReplyDelete
 51. ஆதிமூலகிருஷ்ணன் said...
  //உங்கள் வழக்கமான கவிதைகளிலிருந்து மாறுபட்டிருப்பதாய் தோன்றியது. இதழிலேயே கண்டேன். நன்று.//

  அவதானிப்பு சரியே. வெவ்வேறு பாதைகளில் பயணித்துப் பார்க்கத் தொடங்கியாயிற்று:)! நன்றி ஆதி.

  ReplyDelete
 52. "உழவன்" "Uzhavan" said...
  //அருமையான கவிதைகள்.. வாழ்த்துகள்!//

  நன்றி உழவன்.

  ReplyDelete
 53. சசிகுமார் said...
  //தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

  http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html//

  வாக்களித்தாயிற்று சசிகுமார். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 54. naveen (தமிழமிழ்தம்) said...
  //great. how can i subscribe?//

  ரீடரில் தொடரலாமே நவீன். மிக்க நன்றி.

  ReplyDelete
 55. ஈரோடு தங்கதுரை said...
  //கவிதை வரிகள் அனைத்தும் அருமை.//

  நன்றிகள் தங்கதுரை.

  ReplyDelete
 56. அப்பாவி தங்கமணி said...
  //Congrats, very nice//

  மிக்க நன்றி புவனா.

  ReplyDelete
 57. சுசி said...
  //அருமையா இருக்கு அக்கா.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 58. Vijiskitchen said...
  //congrats.

  Super பிறழாத பிரவாகம். I like it.//

  மிக்க மகிழ்ச்சி. நன்றி விஜி.

  ReplyDelete
 59. இசக்கிமுத்து said...
  //நல்ல கவிதை, சிந்திக்க வைத்து விட்டீர்கள்! நன்றி!!//

  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களைப் பதிவுலகம் பக்கம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி இசக்கிமுத்து:)!

  ReplyDelete
 60. மாதேவி said...
  //அருமை. வாழ்த்துகள்.//

  நன்றிகள் மாதேவி.

  ReplyDelete
 61. ஈரோடு கதிர் said...
  //பதில்களைத் தேடி களைத்தால்,

  கேள்விகளைத்தேடுவது நியாயம்தானே!!???//

  அட ஆமாம்! நன்றி கதிர்:)!

  ReplyDelete
 62. Chitra said...
  //அருமை, அக்கா... வாழ்த்துக்கள்! கலக்குறீங்க!//

  நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 63. கவிநயா said...
  //மொழியின் ஆளுமை ஆழமாகத் தெரிகிறது :) வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  நன்றிகள் கவிநயா:)!

  ReplyDelete
 64. மதுரை சரவணன் said...
  //அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.//

  மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 65. மனோ சாமிநாதன் said...
  ***/“விடை தெரிந்த முழுநிலவு
  தான் தேய்வதைத்
  தடுத்துக் கொள்ள இயலவில்லை
  ரகசியம் புரிந்த ஞாயிறு
  உதிக்காமல் ஓர்நாளும்
  ஓய்வெடுக்க முடியவில்லை”


  அருமையான வரிகள்!
  சிறந்த கவிதை!!/***

  நன்றிகள் மனோ சாமிநாதன்.

  ReplyDelete
 66. ஜிஜி said...
  //கவிதை நல்லா இருக்குங்க .//

  மிக்க நன்றி ஜிஜி.

  ReplyDelete
 67. தமிழ்மணத்தில் வாக்களித்த 17 பேருக்கும் இன்ட்லியில் வாக்களித்த 25 பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 68. அருமை

  வாழ்த்துகள்

  ReplyDelete
 69. @ திகழ்,

  நீண்ட இடைவெளிக்குப் பிறகான உங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்வைத் தருகின்றன. நன்றி திகழ்.

  ReplyDelete
 70. Nalla kavithaikalai thedi..
  mundtha pulliyai ungal idukkai..

  nanrakka ullathu ...

  ReplyDelete
 71. ராமலக்ஷ்மி,

  நாமும் அந்த சூரிய சந்திரர்கள் போல்தான்.

  ReplyDelete
 72. @ Thanglish Payan,

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 73. @ நானானி,

  உண்மைதான். சூரிய சந்திரராலே முடியாதது நம்மால் எங்கே.. :)? மிக்க நன்றி நானானி!

  ReplyDelete
 74. கவிதைகள் அருமை அக்கா.

  அகநாழிகையில் தொடர்ந்து உங்கள் படைப்புக்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 75. @ சே. குமார்,

  நன்றி குமார். தொடர்ந்து அல்ல. எனினும் இரண்டாவது முறை அகநாழிகையில்.

  ReplyDelete
 76. அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ராமலக்ஷ்மிக்கு இனிய வணக்கம். உங்கள் எழுத்துக்கள் படித்தேன். திளைத்தேன் இன்பத்தில். இன்னும் இன்னும் நிறைய படிக்க உங்கள் பழைய பதிவுகளில் மூழ்குகிறேன். கருத்துக்கள் பின்பு வரும். நான் உங்களிடம் கொஞ்சம் எழுத்துலகம் பற்றி பேச விரும்புகிறேன். உங்கள் வழிகாட்டுதல் எனக்கு உதவியாய் இருக்கும் என நினைக்கிறேன். மறவாமல், மறுக்காமல் தொடர்பு கொள்ள ... ( rameshrajanish@gmail.com ) அலைபேசி 9786809352. உங்களின் எழுத்தும் எழுதும் விதமும் நன்று. மிக்க நன்றி. அன்புடன் தமிழ்க் காதலன்.

  ReplyDelete
 77. @ தமிழ்க் காதலன்,

  மின்னஞ்சல் முகவரி தந்துள்ளேன். தெரிந்ததைக் கூறுகிறேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 78. விண்மீன்களின் பிரகாசம்
  பிரபஞ்சத்தின் பிரவாகம்.//
  அற்புத அர்த்தமுள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 79. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin