வியாழன், 7 அக்டோபர், 2010

தோழமை - வல்லமையில்..



‘காலத்துக்கேற்ப மாறவே மாட்டாயா?’
கடந்து செல்லும் மனிதரில்
எவரேனும் ஒருவர்
கணை தொடுத்த வண்ணமாய்

‘முயன்றுதான் பார்ப்போமே’
முளைவிட்ட பிரயத்தனங்கள்
தளிர்விடும் முன்னே உயிர்விட..
திகைத்து நின்ற வேளையில்

‘ஏன் மாற வேண்டும்?
நீ நீயாகவே இரு
பிடிக்கிறது அதுவே எனக்கு’
காலை வெயிலின் இதமென
கனிவாக நட்பொன்று சொல்ல

சட்டென்று மொட்டவிழ்ந்தாற்போல்
முகிழ்ந்தது மாற்றம்

ஊற்றெடுத்த உற்சாகத்தில்
படபடத்துத் திறந்த மனதினுள்ளிருந்து
அணிவகுத்து மேலெழுந்த
பலநூறு பட்டாம்பூச்சிகளின்
எழில் வண்ண
சிறகோவியங்களில் பிரமித்து

கிளம்பிய கைதட்டல்களில்
வந்தது பெருமிதம்
தோள்நின்ற தோழமையை நினைத்தே.
***

படம்: இணையத்திலிருந்து..

69 கருத்துகள்:

  1. அருமையான கவிதை வரிகள்... வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  2. // மேலெழுந்த
    பலநூறு பட்டாம்பூச்சிகளின்
    எழில் வண்ண
    சிறகோவியங்களில்..!!//

    அடடா...!! கவிதை மிக அருமை...!

    பதிலளிநீக்கு
  3. இதே படத்தை, இன்றைய என் பதிவில் பயன் படுத்தி உள்ளேன். ஆச்சர்யமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. //கிளம்பிய கைதட்டல்களில்
    வந்தது பெருமிதம்
    தோள்நின்ற தோழமையை நினைத்தே.//

    அக்கா.. நானும் கை தட்டினேன்.. கேட்டுச்சா??

    பதிலளிநீக்கு
  5. \\சுசி said...

    //கிளம்பிய கைதட்டல்களில்
    வந்தது பெருமிதம்
    தோள்நின்ற தோழமையை நினைத்தே.//

    அக்கா.. நானும் கை தட்டினேன்.. கேட்டுச்சா??//

    :) me too..

    பதிலளிநீக்கு
  6. ***‘காலத்துக்கேற்ப மாறவே மாட்டாயா?’***

    தோழமை மாறாதுதான்! ஆனால் "தோழர்/தோழியர்" மாறத்தான் செய்றாங்க! :( எல்லோரும் என் போல் துரதிஷ்டசாலியா இருக்கனும்னு இல்லையே என்ற எண்ணமும் வருகிறது :)

    நல்ல கவிதைங்க, ராமலக்ஷ்மி :)

    Those kittens are cute! :)

    பதிலளிநீக்கு
  7. ‘ஏன் மாற வேண்டும்?
    நீ நீயாகவே இரு
    பிடிக்கிறது அதுவே எனக்கு’
    காலை வெயிலின் இதமென
    கனிவாக நட்பொன்று சொல்ல

    ..... sweet! அருமையான கவிதை அக்கா... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. லஷ்மிக்கா....நட்பின் வார்த்தைகள் மனதில் பட்டுத் தெறிக்கிறது கவிதையில்!

    பதிலளிநீக்கு
  9. //தோள்நின்ற தோழமை//

    தோள் அணைத்து
    இருக்கும் தோ(ழ)ளமை -

    உங்கள் கவிதைக்கு எற்ற படம்.
    பாராட்டுக்கள்.

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  10. தோழமை பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க , படம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு, நானும் பூஸாரை வைத்து பதிவுபோடும் ஒரு தோழியை இப்ப பதிவு போடுவதில்லை, இதை பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்து விட்டது

    பதிலளிநீக்கு
  11. தோழமை ஆழம் கூறும் நல்ல கவிதைங்க மேடம்.. வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு
  12. அருமையான கவிதைங்க. தோழமை என்று சொன்னாலே மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்குமே......அதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது உங்கள் கவிதை....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கவிதை அருமை. படத்தைப் பார்க்கும்போது "அபவுட் டர்ன்" என்று சொல்லத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  14. ||தளிர்விடும் முன்னே உயிர்விட.||

    மெருகேறி வரும் வார்த்தைகள் அழகு

    பதிலளிநீக்கு
  15. ஹை.. நல்லாருக்கு.

    (ஆனா ரொம்ப பழைய தீம்)

    பதிலளிநீக்கு
  16. \\‘ஏன் மாற வேண்டும்?
    நீ நீயாகவே இரு
    பிடிக்கிறது அதுவே எனக்கு’
    காலை வெயிலின் இதமென
    கனிவாக நட்பொன்று சொல்ல\\
    அருமையான கவிதை வரிகள்... வாழ்த்துகள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  17. இனிமையான அருமையான கவிதை வரிகள்!

    பதிலளிநீக்கு
  18. "தோள்நின்ற தோழமை" படமும் சேர்ந்து நின்று மெருகு கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. தோழமை கவிதை அருமை ராமலக்ஷ்மி.

    தோழமையை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நன்று.

    //ஏன் மாற வேண்டும்?
    நீ நீயாகவே இரு
    பிடிக்கிறது அதுவே எனக்கு//

    நன்று.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. ராமலெட்சுமி அக்கா அருமையான கவிதைங்க.

    பதிலளிநீக்கு
  21. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    //அருமையான கவிதை வரிகள்... வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.//

    மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

    பதிலளிநீக்கு
  22. kutipaiya said...
    //தோழமை..அருமை!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. எம் அப்துல் காதர் said...
    ***/ // மேலெழுந்த
    பலநூறு பட்டாம்பூச்சிகளின்
    எழில் வண்ண
    சிறகோவியங்களில்..!!//

    அடடா...!! கவிதை மிக அருமை...!/***

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. தமிழ் உதயம் said...
    //இதே படத்தை, இன்றைய என் பதிவில் பயன் படுத்தி உள்ளேன். ஆச்சர்யமா இருக்கு.//

    எனக்கும் ஆச்சரியமே. ஃப்ரென்ட்ஷிப் எனத் தேடிய போது கூகுள் கொடுத்த ஒன்று:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சுசி said...
    ***//கிளம்பிய கைதட்டல்களில்
    வந்தது பெருமிதம்
    தோள்நின்ற தோழமையை நினைத்தே.//

    அக்கா.. நானும் கை தட்டினேன்.. கேட்டுச்சா??***

    நல்லாக் கேட்டுச்சு சுசி:))! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  26. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    **//:) me too..//**

    சரிதான்:)! நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  27. வருண் said...
    //***‘காலத்துக்கேற்ப மாறவே மாட்டாயா?’***

    தோழமை மாறாதுதான்! ஆனால் "தோழர்/தோழியர்" மாறத்தான் செய்றாங்க! :( எல்லோரும் என் போல் துரதிஷ்டசாலியா இருக்கனும்னு இல்லையே என்ற எண்ணமும் வருகிறது :)

    நல்ல கவிதைங்க, ராமலக்ஷ்மி :)

    Those kittens are cute! :)//

    நட்புக்கும் அதிர்ஷ்டம் வேண்டுமென்பார்கள். உண்மையாக இருக்கலாம்!

    கிடைத்த படத்தின் ஃபைல் சைஸ் சின்னதாக இருந்தாலும் அந்த அழகுப் பூனைக்குட்டிகளுக்காகவே தேர்வு செய்தேன்:)! நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  28. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //அருமையான கவிதை//

    நன்றி டி வி ஆர் சார்!

    பதிலளிநீக்கு
  29. Chitra said...
    **/‘ஏன் மாற வேண்டும்?
    நீ நீயாகவே இரு
    பிடிக்கிறது அதுவே எனக்கு’
    காலை வெயிலின் இதமென
    கனிவாக நட்பொன்று சொல்ல

    ..... sweet! அருமையான கவிதை அக்கா... வாழ்த்துக்கள்!/**

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  30. ஹேமா said...
    //லஷ்மிக்கா....நட்பின் வார்த்தைகள் மனதில் பட்டுத் தெறிக்கிறது கவிதையில்!//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  31. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //கவிதை மிக்க நன்று.//

    மிக்க நன்றிங்க புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  32. சகாதேவன் said...
    **/ //தோள்நின்ற தோழமை//

    தோள் அணைத்து
    இருக்கும் தோ(ழ)ளமை -//

    :)!

    //உங்கள் கவிதைக்கு எற்ற படம்.
    பாராட்டுக்கள்.//

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  33. Jaleela Kamal said...
    //தோழமை பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க , படம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு, நானும் பூஸாரை வைத்து பதிவுபோடும் ஒரு தோழியை இப்ப பதிவு போடுவதில்லை, இதை பார்த்ததும் அவங்க ஞாபகம் வந்து விட்டது//

    உடனே தொடர்பு கொண்டு நலம் விசாரியுங்கள் ஜலிலா:)! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  34. அன்புடன் அருணா said...
    //அருமை!பூங்கொத்து!//

    மிக்க நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  35. க.பாலாசி said...
    //தோழமை ஆழம் கூறும் நல்ல கவிதைங்க மேடம்.. வாழ்த்துக்களும்..//

    மிக்க நன்றி பாலாசி.

    பதிலளிநீக்கு
  36. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    //அருமையான கவிதைங்க. தோழமை என்று சொன்னாலே மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்குமே......அதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது உங்கள் கவிதை....வாழ்த்துக்கள்.//

    உண்மைதான். இங்கே பட்டாம்பூச்சிகள் மாற்றத்தின் குறியீடுகளாகவும்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம். said...
    //கவிதை அருமை. படத்தைப் பார்க்கும்போது "அபவுட் டர்ன்" என்று சொல்லத் தோன்றுகிறது.//

    நன்றி ஸ்ரீராம்:))!

    பதிலளிநீக்கு
  38. ஈரோடு கதிர் said...
    ***||தளிர்விடும் முன்னே உயிர்விட.||

    மெருகேறி வரும் வார்த்தைகள் அழகு***

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  39. ஆதிமூலகிருஷ்ணன் said...
    //ஹை.. நல்லாருக்கு.

    (ஆனா ரொம்ப பழைய தீம்)//

    நன்றி ஆதி! எதை சொல்லாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் அன்று, புதிதாய் நாம் சொல்ல இன்று:)? ஹி..!!

    பதிலளிநீக்கு
  40. V.Radhakrishnan said...
    //கவிதை மிகவும் நன்று.//

    நன்றிங்க ராதாகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  41. சசிகுமார் said...
    //அருமை வாழ்த்துக்கள் அக்கா//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  42. அம்பிகா said...
    ***/\\‘ஏன் மாற வேண்டும்?
    நீ நீயாகவே இரு
    பிடிக்கிறது அதுவே எனக்கு’
    காலை வெயிலின் இதமென
    கனிவாக நட்பொன்று சொல்ல\\
    அருமையான கவிதை வரிகள்... வாழ்த்துகள் ராமலக்ஷ்மி/***

    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  43. எஸ்.கே said...
    //இனிமையான அருமையான கவிதை வரிகள்!//

    மிக்க நன்றி எஸ் கே.

    பதிலளிநீக்கு
  44. Sriakila said...
    //நல்லாருக்கு.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. ப்ரியமுடன் வசந்த் said...
    //அருமைங்க மேடம்!//

    நன்றி வசந்த்.

    பதிலளிநீக்கு
  46. மாதேவி said...
    //"தோள்நின்ற தோழமை" படமும் சேர்ந்து நின்று மெருகு கொடுக்கிறது.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  47. கோமதி அரசு said...
    //தோழமை கவிதை அருமை ராமலக்ஷ்மி.

    தோழமையை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நன்று.

    //ஏன் மாற வேண்டும்?
    நீ நீயாகவே இரு
    பிடிக்கிறது அதுவே எனக்கு//

    நன்று.

    வாழ்த்துக்கள்!//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  48. சே.குமார் said...
    //ராமலெட்சுமி அக்கா அருமையான கவிதைங்க.//

    நன்றிகள் குமார்.

    பதிலளிநீக்கு
  49. அப்பாவி தங்கமணி said...
    //Lovely கவிதை//

    நன்றி புவனா!

    பதிலளிநீக்கு
  50. தமிழ் மணத்தில் வாக்களித்த 22 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 31 பேருக்கும் என் நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  51. இது என் முதல் பிரயாசம், உங்கள் கவிதை-கருத்தரையில். ஆரம்பமே அமர்களமாக வரவேற்கிறது இக்கவிதை.
    தோழ் குடுப்பது தோழமை மட்டுமே தோழி! அதை உங்கள் கவிதையின் மூலம் உணர்த்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  52. @funmachine - தமிழமிழ்தம்,

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin