சனி, 14 மார்ச், 2026

தூறல்: 49 - ஒரு கணம் காக்கும் பொறுமை

ஃப்ளிக்கரில் பதிந்து, இங்கு பதியாதவை, எங்கும் பகிராதவை எனப் பல படங்கள் சேர்ந்து விட்டுள்ளன. அவ்வப்போது அவற்றை (random)  சார்பற்றப் பகுப்பாக, தூறல் பகிர்வாகத் தொகுத்திட எண்ணியுள்ளேன். 

பயணங்களில் எடுத்த படங்கள் சில..:

சென்ற மாதம் தூத்துக்குடி வழியாக நெல்லைக்குச் சென்றிருந்த போது ஜூலை 2025_ல் பிரதம மந்திரியால் திறக்கப்பட்டு, ஆகஸ்ட் 2025 முதல் இயங்கத் தொடங்கிய வாகைகுளம் புதிய விமான நிலையத்தில் இறங்கினோம். பழைய விமான நிலையத்தை விடப் பல மடங்கு பெரிதாகவும் கலா ரசனையுடனும் கட்டப்பட்டள்ளது. அங்கே எடுத்த படங்கள் சில:

#1


#2 
கடலும் வானும் வரவேற்கும் சுவர்சித்திரம்

[இன்னும் இருந்த பல கலைப் படைப்புகளைப் படமாக்க நேரம் இருக்கவில்லை.]

#3 
முத்து நகரத்திற்குப் பொருத்தமாக, அலங்காரக் கப்பல்..

 #4

**

பெங்களூர், இறக்கைகளுக்கு கீழே..

#5

#6 
கோடுகளாக சாலைகளும்.. வீடுகளாக மக்கள் வாழ்வும்..

பெங்களூர் கெம்பகெளடா சர்வதேச விமான நிலையத்தில்..: 

#7 
அவளது மனஉறுதி ஒரு நதி. அமைதியானது, ஆழமானது, தடுக்க முடியாதது.

#8 
பிரபஞ்சத்தின் காவலரும் ஆழ்வார்களும்..

**

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு திருமண நிகழ்வுக்காகச்  சென்றிருந்த போது மாலை கிடைத்த நேரத்தில் மாமல்லபுரம் சென்று வரத் தீர்மானித்தோம். 15 வருடங்களுக்கு முன் சென்றது. மீண்டும் அங்கே சிற்பங்களைப் படமாக்கலாம் என dslr கேமராவை எடுத்துச் சென்றிருந்தேன். விடுதியிலிருந்து கிளம்பும் போது நீலமாக இருந்த வானம் போகப் போக கருமேகங்கள் சூழ்ந்து கனத்த மழைக்கான அறிகுறியைக் காட்டிக் கொண்டிருந்தது. அங்கே போய் இறங்கியதும் மழை வருமெனத் தெரிந்தும், வண்டியில் எப்போது வைத்திருக்கும் குடைகளை எடுத்துக் கொண்டு, முடிந்த வரை சில சிற்பங்களையாவது படம் எடுத்து விடலாம் எனக் கடற்கரைக் கோயிலை நோக்கி நடந்தோம். ஆனால் அதன் அருகே செல்லும் முன்னரே பெரும் இடி தொடர்ந்து முழுங்க, பறவைகள் படபடத்துப் பறக்க, மிக அருகே சுமார் இருபதடி தூரத்தில் இருந்த மரத்தின் மேல் இடி மின்னலாக வெட்டி இறங்கியதைக் காணும், ஒரு கணம் அச்சத்தில் உறைந்திடும் அனுபவம் கிட்டியது. 

#9


#10

கோயிலை ஒரு சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

#11


#12

திரும்பி வந்து இடியும் மழையும் சற்றே குறையட்டுமென மரத்தடியில் நின்றிருக்கையில், மழையின் ஊடாகத் தெரிந்த கோயிலின் காட்சி.

#13


**

மைசூர் விடுதி ஒன்றில்..

#14 
சட்டத்துக்குள் சட்டம் (ஒளிப்படக்கலையில் கோணம் அமைப்பதில் கையாளப்படும் ஒரு அழகிய உத்தி):


#15  
சிறு நம்பிக்கை நெடுந்தூரம் அழைத்துச் செல்லும்.”

[மலர்சூடிய சக்கரங்கள் காத்திருக்கின்றன இளவரசர்களுக்காகவும் இளவரசிகளுக்காகவும். இதற்கு முந்தைய படத்தில் ‘யார் முதலில் சவாரி செல்வது?’ எனப் பேசிக் கொண்டிருக்கும் சிறாரைக் கண்டு பிடியுங்கள்.]


#16 
அமைதியான பாதை, அமைதியாகும் மனம்.

#17 
வன தெய்வம்

#18 
"ஓடும் உலகை அவள் துரத்தவில்லை; அது கடந்து செல்ல அமைதியாக அனுமதிக்கிறாள், அதன் சத்தத்தைக் கண்டு புன்னகைக்கிறாள்."

#19 
"ஒரு கணம் காக்கும் பொறுமை, பேரிடரைத் தடுக்கக் கூடும். ஒரு கணம் காட்டும் அவசரம், வாழ்க்கையையே அழிக்கக் கூடும்."

**

பெங்களூர் நகர் உலாவில்..:

#20 
பிரபல UB City.. வாகனத்திலிருந்து ஒரு பார்வை..


#21  
பழைய சென்னை சாலையில்.. கட்டிடக் கலை அமைப்பால்.. சிறப்பால்.., கடந்து செல்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கோபாலன் மால்..

#22 
புத்தகக் கடைகள் அருகி வரும் காலத்தில், வொயிட்ஃபீல்ட் நெக்ஸஸ் நேபர்ஹூட் மாலில் பல காலமாக இயங்கி வரும் க்ராஸ் வொர்ட் புத்தக நிலையம்..
"புத்தகக் கடையில்லாத ஊர், ஊரே இல்லை." 
_ Neil Gaiman


**

படத்துளிகள்:

#23
ஒரு பார்வையில் அனைத்தையும் சொல்லும் கண்கள்

#24
அமைதியான அழகன்
(தங்கையின் செல்லம் மைலோ)
***

14 கருத்துகள்:

  1. விமான நிலைய சித்திரங்கள் அழகு.  போலவே விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும்.  

    பெண் சிற்பமும், வரியும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. சட்டென எடுக்கப்பட்ட படபடக்கும் பறவைகள் படம் உங்கள் திறமையைச் சொல்கிறது.  மாடர்ன் ஆர்ட் போல இருக்கிறது.

    கோவிலின் படங்கள் அழகு.  பூச்சக்கர சைக்கிளையும் கண்டேன்.  பின் சென்று சிறார்களை கண்டேன்!  சைக்கிள் வித்தியாசமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. அமைதியான பாதையும், வனதேவதையும் அழகு,

    ​'அவள்' அனுமதிக்கும் பாதையும் படமும் அழகாகத்தான் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. கடைசி படத்தில் இருக்கும்  செல்லத்தின் பார்வையில்தான் எத்தனை ஏக்கம்..  எப்போதும் ஒரு ஏக்கத்துடன் இருக்குமோ மைலோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா தெரிகிறது? எப்போதும் கூல் ஆக இருக்கும். இந்தப் படத்தில் கூட, ‘என்ன படம் எடுக்கணுமா? சீக்கிரமா எடுத்துக்கோ, நான் தூங்கணும்’ என்றுதான் சொல்கிறது :)! எடுத்ததும் தூங்கியும் விட்டது.

      நீக்கு
  5. சரியாகப் புரிந்து கொண்டு வெளியிட்டதற்கு நன்றி!
    :))

    பதிலளிநீக்கு
  6. அலுவலகம் செல்வது உங்கள் கடமை 
    ஆனால் 
    கொடுமையாயிருக்கிறது எனக்கு இந்தத் 
    தனிமை 

    புரிகிறது...
    ஓடவேண்டும் நமக்கு அன்றாடப் பாடு 
    காத்திருப்பேன் நானும் 
    நீ வரும்வரை ஏக்க விழிகளோடு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்துக்கான கவிதையாக, வரிகள் அருமை. ஆனாலும் தகவலுக்காக..:). மைலோவுக்கு இப்போது தனிமையே கிடையாது. தங்கை மகள் வெளிநாடு படிக்கச் சென்று விட்டார் என்றாலும் தங்கை மற்றும் கணவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில்தான் இருக்கிறார்கள், எப்போதும் மைலோவுடன்:).

      மைலோ பற்றி சொல்ல நிறைய உள்ளது. இயலும் போது பகிர்ந்து கொள்கிறேன்.

      கடைசிப் படத்தை ஃப்ளிக்கரில் பகிர்ந்த போது மைலோவின் காலர், டை எல்லாம் பார்த்து ஒருவர் “IAS officer" போல இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்:).

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அழகு. செல்லத்தின் படங்கள் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
  8. விமான நிலைய படங்கள் அழகு. வாகை குளம் சாரின் அத்தை இருந்த ஊர். இப்போது அத்தை மகன் இருக்கிறார்.
    இடி நேரத்தில் மரத்தடியில் நிற்க கூடாது என்பார்கள். பக்கத்தில் இடிவிழுவது பார்க்க பயங்கரமாக இருந்து இருக்குமே!
    தங்கையின் செல்லம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 90_களில் விமான நிலையம் வந்ததிலிருந்து வாகைகுளம் அறியப்பட்ட, முக்கிய ஊராகி விட்டது.

      நாங்கள் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்த போது திடீரென சற்று தொலைவிலிருந்த மரத்தில் இறங்கியது இடி. ஆம், இடி இடிக்கும் போது மரத்தடியில் நிற்பதோ மழைக்காக என ஒதுங்குவதோ ஆபத்தே.

      கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin