ஞாயிறு, 11 ஜனவரி, 2026

முழு மலர்ச்சி

 #1

'இயற்கையின் வாக்குறுதி இதழ்களில் வரையப்படுகிறது, 
மென்மையாக, பிரகாசமாக, அழகாக.'


#2
'முழு மலர்ச்சி 
தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல, 
வளர்ச்சி முழுவதும் வெளிப்படும் தருணமே அது.'

#3
'அமைதியாக உழைத்திடுங்கள், 
உங்கள் உயர்வு பேசப்படட்டும்.'

#4
'வேகத்தைக் குறைத்து 
சற்றே மெதுவாகச் செல்லுங்கள், 
மலர்கள் கூட ஒவ்வொரு இதழாகவே விரிகின்றன.'

#5
‘விழிப்புணர்வு என்பது நீங்கள் யார் என்பதை மாற்றுவது அல்ல, 
நீங்கள் யார் இல்லை என்பதை விட்டு விடுவது.’ 
- தீபக் சோப்ரா


#6
'தோட்டத்தின் வலிமை ஒரு மலரில் இல்லை, 
மாறாக அனைத்தும் ஒன்றாக மலரும் விதத்தில் 
அது வெளிப்படுகிறது.'

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 224
**

8 கருத்துகள்:

  1. படங்களும் அதற்கான வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. இலைகளின் குரல்
    மலர்களின் வழியே...

    முழுமலர்ச்சி என்பது
    முடிவுரையின்
    கடைசி கட்டமோ!

    செடிகளைத் தாண்டி
    வளரமுடியாத சோகம்
    மலர்களுக்கு என்றுமே உண்டு!

    மெல்லப்பிரிவதில்
    தள்ளிப் போகிறது
    மலர்களுக்கு
    செடியிலிருந்து பிரிக்கப்படும் 
    காலம்!

    பதிலளிநீக்கு
  3. வாடவேண்டிய மலரா, 
    வாழவேண்டிய மலரா 
    நான் யார்? 
    யோசிப்பதற்குள் முடிந்து விடுகிறது 
    மலரின் வாழ்க்கை!

    மரங்கள் மட்டுமே 
    தோட்டமாவதில்லை 
    மலர்களும் கனிகளும் 
    சேர்ந்தால்தான் 
    நோட்டம் விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
  4. படங்களும் படங்களுக்கான வரிகளும் நன்று.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin