#1
"ஏறுவதற்கு பயப்படாதீர்கள். நீங்கள் தடுமாறினாலும், ஒவ்வொரு கட்டத்திலும் காணக் கிடைக்கும் காட்சிகள் அழகானவை."
#2
"ஞானம், பேசும் நேரம் வரும் வரைப் பொறுமையாக காத்திருக்கும்."
#3
"நிதானமாக இருப்பது என்பது ஒவ்வொரு விளைவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற விருப்பத்தைத் துறப்பது. வாழ்க்கையின் போக்கில் நம்பிக்கை வைப்பதில் அமைதியைக் கண்டடையுங்கள்."
#4
"உங்கள் கவனம் செல்லுமிடத்தில் ஆற்றலும் பாயும்."
#5
"நீங்கள் எவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நின்றிடாது இருக்கும் வரை." _ Confucius
#7
"வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பது -
இலக்கின் திசையில் உறுதியுடன் நகருங்கள்,
அதே நேரம் ஒவ்வொரு பாதையிலும் தகவமைந்து கொள்ளுங்கள்."
#8
"ஞானம் என்பது எப்போது சுருண்டு கொள்ள வேண்டும், எப்போது எழுந்து நிற்க வேண்டும் எனத் தெரிந்து வைத்திருப்பது."
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 213
[பாம்புகள்.. மழைக்காலம் வந்து விட்டால் அவ்வப்போது கண்ணில் தென்படுவார்கள். அமைதியாகத் தோட்டத்தைக் கடந்து செல்வார்கள். படங்கள் 4,5_ல் இருப்பது rat snake எனப்படும் சாரைப் பாம்பு. படங்கள் 6,7,8_ல் இருப்பது spectacled cobra எனும் நாகப் பாம்பு. வீட்டுக்குள் இருந்தபடி கண்ணாடி கதவு வழியே எடுத்த படங்கள்தாம்:).]
**
வரிகள் வெகு பொருத்தம்.
பதிலளிநீக்குமுதல் படத்தில் இருக்கும் உயிரினத்தின் கண்களில் தெரிவது ஒரு களைப்பு! நாகப்பாம்பா? உங்கள் தோட்டத்திலா? கண்ணாடி வழியாக படமெடுத்தீர்களா? தெளிவிபாக இருக்கிறது. சரி.. தோட்டத்தில் இப்படி சாதாரணமாக பாம்பு உலாவுவது பயமாக இல்லையா? எச்சரிக்கையாக இருங்கள்.
படங்களும் அதற்கு வரிகளும் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஓ! உங்க வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் வருமா? ஆ! ஆமாம் மழைக்காலத்தில் அவை வெளியில் வரும்தான். உங்கள் பகுதி பாறைகளும் மரங்களும், வயல்களும் அல்லது காடுகள் அடர்ந்த பகுதியோ?
படங்கள் அட்டகாசம்!
அதுவும் கண்ணாடி வழியாகவா எடுத்தீங்க? நம்ப முடியாத அளவிற்குத்தெளிவு. ஒரு கண்ணாடிச் சுவர் விளம்பரம் வருமே கண்ணாடி இருப்பதே தெரியாமல் இருப்பதாக, வாளியில் இருக்கும் தண்ணீரை ஊஊற்றிக் காட்டும் விளம்பரம், அது நினைவுக்கு வந்தது.
வீட்டுக்குள் பாம்புகள் வருமா?
கீதா
பாம்புகளைப் பார்த்ததும் ஊர் நினைவு வந்தது. அப்போதெல்லாம் சர்வ சகஜமாகப் பாம்புகள் நடமாடிய ஊரில் இருந்தோம். வீட்டின் பின் புறம், வீட்டிற்குள், தபால் பெட்டிக்குள் என்று. சாரை, நாகப்பாம்பு, பச்சைப்பாம்பு, கண்ணாடி விரியன், எட்டடி விரியன் என்று பல. வயல்களும் தோப்புகளும், ஆறும் வாய்க்கால்களும் நிறைந்த ஊர்.
பதிலளிநீக்குஅப்போது நேரில் பார்த்தப்ப கூட இல்லாத பயம் இப்போது படத்தில் பார்த்ததும் கொஞ்சம் வந்தது.
கீதா
படங்களும் வரிகளும் நல்ல பொருத்தம். அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு