ஞாயிறு, 8 அக்டோபர், 2023

சூரியனின் வாக்குறுதி

  #1

"மழைக்கான உத்திரவாதம் எப்பொழுதும் 
சூரியனின் வாக்குறுதியுடன் வருகிறது, 
வானிலைக்கும் வாழ்க்கைக்கும்."

#2
"நம்புவதற்கு அரிய எதுவோ, எங்கோ 
காத்திருக்கிறது அறிய வர.."
_ Carl Sagan

#3
"பேச்சானது வெள்ளி, மெளனம் தங்கம்." 
_ Thomas Carlyle

#4
“உங்கள் பழக்க வழக்கங்கள் உங்கள் கனவுகளோடு 
வரிசையிடவில்லையெனில்,
ஒன்று 
உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் 
அல்லது 
உங்கள் கனவை மாற்ற வேண்டும்.”

#5 
“வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் 
அடுத்தக் கட்டத்திற்கான அஸ்திவாரத்தை இடுகிறது. 
ஒவ்வொரு கட்டத்தையும் 
பொக்கிஷமாகப் பத்திரப்படுத்துங்கள்.”

#6
“உங்கள் காயங்களின் அடி ஆழத்தில் உள்ள விதைகள், 
காத்திருக்கின்றன அழகானப் பூக்களாக மலர..” 
_ Niti Majethia

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 183

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் அருமை. கடைசி படம் வரையப்பட்ட வண்ண ஓவியம் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். தகவலுக்காக, வண்ண ஓவியங்கள் பல ஒளிப்படங்களைப் பார்த்தும் வரையப்படுகின்றன.

      நீக்கு
  2. படங்கள் எல்லாம் அருமை.
    நாளின் பெரும்பகுதி நேரம் தங்கமாய் தான் இருக்கிறது எனக்கு.
    வாய் பேசவில்லயென்றாலும் மனம் பேசுகிறது, கனவில் பேசுகிறேன் அப்போது வெள்ளி.
    பொன்மொழிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெளனம், பேச்சு இரண்டுமே அவசியம்தான். அலைபேசியில் அவ்வப்போது உறவுகளை அழைத்துப் பேசுங்கள் கோமதிம்மா. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கின்றன.

    தங்கமா இருக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் வெள்ளியாக மாறிவிடுகிறது! ஆனால் வெள்ளியோடு மனம் சிங்க் ஆக மாட்டேங்கிறது!!! அது வேறு ஒரு ட்ராக்கில்!!

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin