வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உயிரோட்டம்

#1  குறுநகை
மாற்றங்கள் வரவேற்புக்குரியவை. காலத்திற்கேற்ப ‘PiT - தமிழில் புகைப்படக் கலை’ தளத்தின் அடுத்தக் கட்ட நகர்வு:

புகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது PiT தமிழில் புகைப்படக்கலை தளம் என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த Facebook https://www.facebook.com/groups/488597597986621/  குழுவின் மூலமாக தொடர முடிவாகி, இம்மாதப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#2 வெள்ளந்திச் சிரிப்பு

ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். இணையம் பயன்படுத்தும் யாவரும் பதிவுலகில் இருப்பதில்லை. ஆனால் ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் அபூர்வமே. போட்டி ஆல்பத்தில் படங்களைச் சேர்ப்பதை எளிமைப் படுத்தவே பிட் ஃபேஸ்புக் நோக்கி நகர்ந்து, இம்மாதம் இப்புதிய குழுவை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 300+ பேர்கள் ஆர்வத்துடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால் முன்னரே பிட் தளத்தில் பகிரப் படும் பதிவுகளை உடனுக்குடன் அறிந்திட https://www.facebook.com/photography.in.tamil/ எனும் ஃபேஸ்புக் பக்கம் இரு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு அதை 3300+ வாசகர்கள் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இப்பக்கத்தை ‘லைக்’ செய்து பதிவுகளைத் தொடரலாம்.

#3 புன்முறுவல்
Living things - உயிருள்ளவை ” என்பதே 2016 பிப்ரவரி போட்டிக்கு நடுவர் நவ்ஃபல் அறிவித்திருக்கும்  தலைப்பு. மனிதர்களாகவோ பிறஜீவராசிகளாகவோ இருக்கலாம். உயிரோட்டத்துடன் படங்கள் இருக்கவேண்டும் என்பது அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டிய விதி. மற்ற பொது விதிமுறைகள் இங்கே.  இப்போது சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

#4 யாரை நம்பி நான் பொறந்தேன்..


ஒவ்வொரு படத்தின் தலைப்புடனும் அதன் ஃப்ளிக்கர் பக்க இணைப்பையும் தந்துள்ளேன்...

#5 வாழ்க்கை எனும் ஓடம்


மலர்ந்த முகமே சிறந்த அணிகலன்
#6 Be light hearted

#7 'Happiness and confidence are the prettiest things you can wear' _ Taylor Swift



தாயும் சேயும்
# 8
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/24293446415/

# 9

[போட்டிக்குக் கொலாஜ் படங்கள் அனுமதியில்லை. இது பார்வைக்கு..]

# 10

#11


இதுவரை வந்த படங்களின் தொகுப்பை இங்கே காணலாம். படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 25 பிப்ரவரி 2016.

***

16 கருத்துகள்:

  1. வணக்கம் புகைப்படங்கள் அனைத்தும் அருமை
    யாரை நம்பி நான் பொறந்தேன் இணைப்பு மேலேயுள்ள புன்முறுவலுடன் இணைந்து இருக்கின்றது கவனிக்கவும் நன்றி
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமையான புகைப்படங்கள்..... போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வாவ்... படங்கள் அனைத்தும் அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. எப்படி இருக்கிறீர்கள் ஜெஸ்வந்தி? நலம்தானே? நீண்ட இடைவெளிக்குப் பிறகான உங்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி.

      நீக்கு
  5. எல்லாப் படங்களையும் ரசித்தேன். கடைசிப் படங்களை சற்று அதிகமாகவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவற்றைப் பதியும் போதே உங்களுக்குப் பிடிக்குமென நினைத்தேன்:)! நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஆயிரம் கதைகளைச் சொல்லுகின்றன புகைப்படங்கள்.வாழ்த்துகள் அருமை அம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin