செவ்வாய், 6 அக்டோபர், 2009

சத்திய சோதனை



பரீட்சை எழுதப்
போகிறீர்களா?
இருக்கிறதா இது-
பார்த்தபிறகே அனுமதி.

அன்றாடம் செல்லும்
அலுவலகம்தான் என்றாலும்
போட்டால்தான் திறக்கும்
வாயிற்கதவுகள்.

ஓட்டுச்சாவடியில்
இல்லை ஏதும் அடாவடி
என்றால்
அதிர்ஷ்டசாலி நீங்கள்-
காட்டிவிட்டு அழுத்தி
வரலாம் பொத்தானை.

விமான நிலையத்தில்
வேண்டியிருந்தது.
வலைவழி பதிந்த
பயணச் சீட்டாயின்
இரயிலிலும்
வேண்டுமிப்போது.

கால ஓட்டத்தில்
சுயநலமான தேடலில்
ஒரு சிலராலோ
பெரும்பாலினராலோ
தொலைத்தபடியே
வரப்பட்டது-
ஆறறிவு படைத்ததாய்
அறியப்படும் மனிதனின்
நல்ல அடையாளங்களாய்க்
கருதப்பட்ட-
உண்மையும் நேர்மையும்.

இதுதான் நான்
நான்தான் இது
நாளும் நிரூபிக்க-
நம்மோடு இப்போது
இருந்தாக வேண்டும்..
இணைபிரியாது எப்போதும்-
அடையாள அட்டைகள்!
***



இங்கு வலையேற்றிய பின் இக்கவிதை 19 அக்டோபர் 2009 யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது:



‘ஹலோ நான்தாங்க’:


*மூன்று தினங்களுக்கு முன்னர் ‘காந்தி ஜெயந்தி’! நாடெங்கிலும் மக்கள் நாமெல்லாம் மிக்க மகிழ்வுடன் கொண்டாடி விட்டோம்தானே.., வார இறுதியோடு சேர்த்துக் கிடைத்த அரசு விடுமுறையாக?

65 கருத்துகள்:

  1. //ஓட்டுச்சாவடியில்
    இல்லை ஏதும் அடாவடி
    என்றால்
    அதிர்ஷ்டசாலி நீங்கள்-
    காட்டிவிட்டு அழுத்தி
    வரலாம் பொத்தானை.//

    உண்மைதானுங்க....

    கடைசியா சொன்னது நிதர்கனம்...

    கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  2. //
    கால ஓட்டத்தில்
    சுயநலமான தேடலில்
    ஒரு சிலராலோ
    பெரும்பாலினராலோ
    தொலைத்தபடியே
    வரப்பட்டது-
    ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.-//

    அடையாள அட்டையின் ரிஷிமூலத்தையும் இன்றைய யதார்த்ததையும் அழகாகக் கூறி விட்டீர்கள்..

    நமது அடையாளங்களை நாம் தொலைத்தே விட்டதால்,
    இன்றைக்கு அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன..

    பதிலளிநீக்கு
  3. //ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.//

    எதார்த்த வரிகள்

    பதிலளிநீக்கு
  4. //
    ஓட்டுச்சாவடியில்
    இல்லை ஏதும் அடாவடி
    என்றால்
    அதிர்ஷ்டசாலி நீங்கள்-
    காட்டிவிட்டு அழுத்தி
    வரலாம் பொத்தானை.
    //

    யதார்த்த நிலை அப்பட்டமாக வெளி வந்துள்ளது உங்களின் வரிகளில்...

    பதிலளிநீக்கு
  5. //
    இதுதான் நான்
    நான்தான் இது
    நாளும் நிரூபிக்க-
    நம்மோடு இப்போது
    இருந்தாக வேண்டும்..
    இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்!
    //

    சரியாச் சொன்னீங்க அடையாளம் இல்லை என்றால், நாமும் இல்லை.

    கவிதை வரிகளில் போட்டி போட்டுகொண்டு யதார்த்தம் ஆட்சி செய்கின்றது.

    சகோதரி உங்க போட்டோ அருமை!

    என்ன ஒரு போஸ்
    என்ன ஒரு லுக்கு
    தொலை நோக்கு பார்வையோ :))

    சூப்பர் போங்க :))

    பதிலளிநீக்கு
  6. கவிதை வரிகளும்.... புகைப்படமும் அழகு...

    பதிலளிநீக்கு
  7. ***கால ஓட்டத்தில்
    சுயநலமான தேடலில்
    ஒரு சிலராலோ
    பெரும்பாலினராலோ
    தொலைத்தபடியே
    வரப்பட்டது-
    ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.***

    என்ன செய்றது? நம்மைத் தெரிந்த, நம் தரம், மற்றும் அடையாளங்கள் அறிந்த உலகம் சிறிதாகிக்கொண்டே போகிறது. நம்மைத் தெரியாத் மற்றும் "நேர்மை, உண்மை" னா என்ன கேக்கிற உலகம் மிகப் பெரிதாகிக்கொண்டு போகிறது.

    ஊருக்காக நாம் காட்டும் அடையாளங்கள், "உண்மை நேர்மை" போன்ற அடையாளங்களை மறைக்கலாம் ஆனால் அழிக்க முடியாதுனு நினைக்கிறேன் :)

    ***
    தன்னம்பிக்கையும், மன தைரியமும் தெரிகிறது படத்தில் உள்ள அந்த சிறுமியின் பார்வையில்:-)))

    பதிலளிநீக்கு
  8. நீங்க எங்க அக்காங்குறதுதான் எங்களுக்கு அடையாள அட்டை :)

    பதிலளிநீக்கு
  9. //அன்றாடம் செல்லும்
    அலுவலகம்தான் என்றாலும்
    போட்டால்தான் திறக்கும்
    வாயிற்கதவுகள்.//

    அவ்வ்வ்வ்... சம்மர்னா பரவால்ல.. விண்டர்ல கொடுமை அடுத்தவங்க கார்டோட வரும்வரை காத்திருப்பது...

    //கால ஓட்டத்தில்
    சுயநலமான தேடலில்
    ஒரு சிலராலோ
    பெரும்பாலினராலோ
    தொலைத்தபடியே
    வரப்பட்டது-
    ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.//

    அருமை...

    //இதுதான் நான்
    நான்தான் இது
    நாளும் நிரூபிக்க-
    நம்மோடு இப்போது
    இருந்தாக வேண்டும்..
    இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்!//

    காலப்போக்கில் உறவுக்கொன்று, நட்புக்கொன்று என்றும் வந்து விடுமோ????

    //வார இறுதியோடு சேர்த்துக் கிடைத்த அரசு விடுமுறையாக?//

    நச்...

    பதிலளிநீக்கு
  10. //இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்!//

    கண்டிப்பா.. அடையாள அட்டை இல்லன்னா ஆளே இல்லை

    பதிலளிநீக்கு
  11. //ஹலோ நான்தாங்க’//

    ஹலோ இது நான் தாங்க

    பதிலளிநீக்கு
  12. உண்மையும் நேர்மையும் மட்டுமே அடையாளம் என மிகச்சிறப்பாய் கூறியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  13. சின்னப்புள்ளையில் கொஞ்சம் இருமாப்போடுதான் இருந்தீர்களா?

    என்ன அழகு

    இருக்க கூடியதுதான் அதுவும் திருநெல்வேலியில் பிறந்து அதுகூட இல்லையினா எப்படி

    சரியா சகோதரி?

    பதிலளிநீக்கு
  14. நம்மை அடையாள அட்டைக்குள் அடைத்துவிட்டது விதி :)

    பதிலளிநீக்கு
  15. // இதுதான் நான்
    நான்தான் இது
    நாளும் நிரூபிக்க-
    நம்மோடு இப்போது
    இருந்தாக வேண்டும்..
    இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்! //


    அடா.... அடா.... அடா.... அடையாள அட்டைக்கு ஒரு கவிதையா..... !! கலக்குறீங்க சகோதரி...!!

    இப்பவெல்லாம் இது ஒரு பேஷனா போச்சு... !! சாப்ட்வேர் ஷியாமா , விக்கி முதல் ... கோயமேடு காய்கறி விக்குற குப்பம்மா , முனியப்பன் வரை இப்போ எல்லோருமே கழுத்துல ஐ.டி கார்டோடதான் . இதெல்லாம் பரவால்ல பேபி சிட்டிங் ( Pre. K.G ) படிக்குற சின்ன ... சின்ன ... பிஞ்சு குழைந்தைகளுக்கு கூட கழுத்துல நீளமா ஐ.டி கார்ட தொங்க விட்டுடுறாங்க... பாக்கவே பாவமா இருக்கு..!!


    அடேங்கப்பா... போட்டோவுல இவ்ளோ கோவமா இருக்கீங்க...!! " ஒரு வேல ஸ்மைல் ப்ளீஸ் யாருமே சொல்லுலியா.. " :-) !!!

    பதிலளிநீக்கு
  16. காதலிக்க நேரமில்லை வந்த ஆண்டு மாதிரி இருக்கே...சல்வார் ஃபேஷன் சொல்கிறது.
    என்ன லுக்கு விடுறே...ன்னு கேக்ற மாதிரி நிக்கிறீங்களே

    பதிலளிநீக்கு
  17. // goma said...

    காதலிக்க நேரமில்லை வந்த ஆண்டு மாதிரி இருக்கே...சல்வார் ஃபேஷன் சொல்கிறது.
    என்ன லுக்கு விடுறே...ன்னு கேக்ற மாதிரி நிக்கிறீங்களே///


    அதே ! :)))

    என்ன லுக் ம்ம் சீக்கிரம் போட்டோவை புடிங்க அப்படின்னு சொல்ற மாதிரியே இருக்கு :))


    அடையாள அட்டை பத்தி சொல்றதுன்னா சைக்கிள் ஷாப் வைச்சிருக்கிற கேரக்டர்ல கவுண்ட்மணி ஒரு படத்துல சொல்லுவாரே - நீ யாருடா நாயி? நானும் இந்த ஊருதானுங்க! இந்த ஊருதான்னா??? அப்படின்னு தொடரும் அந்த நிலைமைதான்!

    பதிலளிநீக்கு
  18. ராமலக்ஷ்மி மேடம்...

    மிக அழகாக யதார்த்தத்தை படம் பிடித்துள்ளீர்கள்...

    நம் சொந்த அடையாளங்களை தொலைத்த போது, இது போன்ற அடையாளங்கள் தேவைப்படுகிறது...

    இன்றைய இந்தியாவின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து காட்டிய பதிவு...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  19. கவிதாயினியே, பின்னூட்டம் எல்லாம் பார்த்ததும் எழுத நினைத்தேன்.

    சத்தியமா இது சாதனைதான்.

    போட்டோ பார்த்தால் என் பேத்தி மாதிரியே இருக்கு.

    பதிலளிநீக்கு
  20. அடையாள அட்டை இல்லாமல் இனி உலகமே இல்லை.

    அப்புறம் சத்தியசோதனை என்றதும் எனக்கு கவுண்டமணி தான் நினைவிற்கு வராரு :-) (காந்தி மன்னிப்பாராக)

    அப்புறம் படம் போட்டு தாக்குறீங்க....சூப்பர்

    பதிலளிநீக்கு
  21. சின்ன வயசுல கோபக்கார புள்ளையா இருந்து இருப்பீங்க போல இருக்கே ..கொஞ்சம் டெர்ரரா பார்க்கறீங்க :-)))

    பதிலளிநீக்கு
  22. கவிதை வரிகள் நிதர்சனமான உண்மை
    ராமலக்ஷ்மி.

    குட்டி ராமலக்ஷ்மி தீவிரமாக என்ன
    யோசிக்கிறார்?

    பதிலளிநீக்கு
  23. //கால ஓட்டத்தில்
    சுயநலமான தேடலில்
    ஒரு சிலராலோ
    பெரும்பாலினராலோ
    தொலைத்தபடியே
    வரப்பட்டது-
    ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.

    //

    தொலைத்த தொலைக்கின்ற பலவற்றுள் முதலாவதானதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    அடையாள அட்டைக்கே ஒரு பெருமை :))

    தீவிரமான யோசனைகளை அப்போதே சொல்கிறீர்களே முகத்தில்.

    பதிலளிநீக்கு
  24. க.பாலாஜி said...

    ***/ //ஓட்டுச்சாவடியில்
    இல்லை ஏதும் அடாவடி
    என்றால்
    அதிர்ஷ்டசாலி நீங்கள்-
    காட்டிவிட்டு அழுத்தி
    வரலாம் பொத்தானை.//

    உண்மைதானுங்க..../***

    எல்லா இடத்திலேயும்தான் காணாது போய்விட்டதே உண்மையும் நேர்மையும்:(!

    //கடைசியா சொன்னது நிதர்சனம்...

    கவிதை அருமை...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி.

    பதிலளிநீக்கு
  25. ஈ ரா said...
    //அடையாள அட்டையின் ரிஷிமூலத்தையும் இன்றைய யதார்த்ததையும் அழகாகக் கூறி விட்டீர்கள்..//

    நன்றி ஈ ரா!

    //நமது அடையாளங்களை நாம் தொலைத்தே விட்டதால்,
    இன்றைக்கு அடையாள அட்டைகள் தேவைப்படுகின்றன..//

    அது இல்லாமல் எங்கும் செல்ல முடியாது என்கிற நிலையில் நாம்.

    பதிலளிநீக்கு
  26. தமிழ் பிரியன் said...

    //Padam superkka :)//

    சரியாப் போச்சு, அப்போ பதிவைப் படிக்கவேயில்லையா:)? Anyway, நன்றி:)!

    பதிலளிநீக்கு
  27. கதிர் - ஈரோடு said...

    ***/ //ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.//

    எதார்த்த வரிகள்/***

    கருத்துக்கு நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  28. RAMYA said...
    //சரியாச் சொன்னீங்க அடையாளம் இல்லை என்றால், நாமும் இல்லை.

    கவிதை வரிகளில் போட்டி போட்டுகொண்டு யதார்த்தம் ஆட்சி செய்கின்றது.//

    நன்றி ரம்யா.

    // சகோதரி உங்க போட்டோ அருமை!
    தொலை நோக்கு பார்வையோ:))//

    அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது:)!

    பதிலளிநீக்கு
  29. ஆ.ஞானசேகரன் said...

    //கவிதை வரிகளும்.... புகைப்படமும் அழகு...//

    பாராட்டுக்கு நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  30. வருண் said...
    //என்ன செய்றது? நம்மைத் தெரிந்த, நம் தரம், மற்றும் அடையாளங்கள் அறிந்த உலகம் சிறிதாகிக்கொண்டே போகிறது. நம்மைத் தெரியாத் மற்றும் "நேர்மை, உண்மை" னா என்ன கேக்கிற உலகம் மிகப் பெரிதாகிக்கொண்டு போகிறது.//

    அழகாய் சொல்லி விட்டீர்கள். இதை நாமும் இப்போது யதார்த்தமாய் எடுத்துக் கொண்டு போய் கொண்டிருக்கிறோம் பாருங்கள்.
    -------------------------------

    //ஊருக்காக நாம் காட்டும் அடையாளங்கள், "உண்மை நேர்மை" போன்ற அடையாளங்களை மறைக்கலாம் ஆனால் அழிக்க முடியாதுனு நினைக்கிறேன் :)//

    நல்லது, ஏனென்றால் உண்மையும் நேர்மையும் முழுக்கவும் மறைந்தால் அப்புறம் உலகம் என்னத்துக்காகும் என கற்பனை செய்யவே முடியவில்லையே!
    ---------------------------
    ***
    //தன்னம்பிக்கையும், மன தைரியமும் தெரிகிறது படத்தில் உள்ள அந்த சிறுமியின் பார்வையில்:-)))//

    அப்படிப் போடுங்க:))!

    பதிலளிநீக்கு
  31. எம்.எம்.அப்துல்லா said...

    // நீங்க எங்க அக்காங்குறதுதான் எங்களுக்கு அடையாள அட்டை :)//

    இது ரொம்ப நல்லாயிருக்கே:)!

    பதிலளிநீக்கு
  32. சுசி said...

    ***/ //அன்றாடம் செல்லும்
    அலுவலகம்தான் என்றாலும்
    போட்டால்தான் திறக்கும்
    வாயிற்கதவுகள்.//

    அவ்வ்வ்வ்... சம்மர்னா பரவால்ல.. விண்டர்ல கொடுமை அடுத்தவங்க கார்டோட வரும்வரை காத்திருப்பது.../***

    இப்படியெல்லாம் வேறு நடக்கிறதா:)?
    -------------------------

    //காலப்போக்கில் உறவுக்கொன்று, நட்புக்கொன்று என்றும் வந்து விடுமோ????//

    பயம் காட்டாதீர்கள் சுசி, ஹூம், எதுவும் நடக்கலாம்தான்!
    -----------------------

    ***/ //வார இறுதியோடு சேர்த்துக் கிடைத்த அரசு விடுமுறையாக?//

    நச்.../***

    கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  33. நசரேயன் said...

    ***/ //இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்!//

    கண்டிப்பா.. அடையாள அட்டை இல்லன்னா ஆளே இல்லை/***

    அதிலும்தான் எத்தனை வித அட்டைகள்??

    பதிலளிநீக்கு
  34. நசரேயன் said...

    ***/ //ஹலோ நான்தாங்க’//

    ஹலோ இது நான் தாங்க/***

    :))))!

    பதிலளிநீக்கு
  35. பிரியமுடன்...வசந்த் said...

    //உண்மையும் நேர்மையும் மட்டுமே அடையாளம் என மிகச்சிறப்பாய் கூறியிருக்கிறீர்கள்//

    அதைத் தொலைத்ததால்தானே இப்போது சுமந்து திரிகிறோம் அட்டைகளை?

    பதிலளிநீக்கு
  36. பிரியமுடன்...வசந்த் said...

    // சின்னப்புள்ளையில் கொஞ்சம் இறுமாப்போடுதான் இருந்தீர்களா?//

    சின்னப் புள்ளன்னு சொல்லிட்டாலே அங்கே இறுமாப்புக்கு இடமில்லை,ஆமா:)!

    //என்ன அழகு//

    நன்றி.

    // இருக்க கூடியதுதான் அதுவும் திருநெல்வேலியில் பிறந்து அதுகூட இல்லையினா எப்படி

    சரியா சகோதரி?//

    எங்க ஊர் மக்கள் பழக இனிமையானவங்க, அங்கு ஃபேமஸா இருக்கும் அல்வாவைப் போலவே:))!

    பதிலளிநீக்கு
  37. சின்ன அம்மிணி said...

    //நம்மை அடையாள அட்டைக்குள் அடைத்துவிட்டது விதி :)//

    ரொம்பச் சரி அம்மிணி:)!

    பதிலளிநீக்கு
  38. உண்மைதான்,
    அடையாள அட்டைகளே நமது முகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  39. அந்த போட்டோ இருக்கிற குட்டி பாப்பா யாருங்க ?

    பதிலளிநீக்கு
  40. லவ்டேல் மேடி said...
    //அடா.... அடா.... அடா.... அடையாள அட்டைக்கு ஒரு கவிதையா..... !! கலக்குறீங்க சகோதரி...!!//

    தட.. தட.. தட... வென வந்து கருத்து சொல்லிச் செல்லும் உங்களை விடவா:))? நன்றி மேடி:)!

    //இப்பவெல்லாம் இது ஒரு பேஷனா போச்சு... !! சாப்ட்வேர் ஷியாமா , விக்கி முதல் ... கோயமேடு காய்கறி விக்குற குப்பம்மா , முனியப்பன் வரை இப்போ எல்லோருமே கழுத்துல ஐ.டி கார்டோடதான் .//

    யெஸ்:)!

    //இதெல்லாம் பரவால்ல பேபி சிட்டிங் ( Pre. K.G ) படிக்குற சின்ன ... சின்ன ... பிஞ்சு குழைந்தைகளுக்கு கூட கழுத்துல நீளமா ஐ.டி கார்ட தொங்க விட்டுடுறாங்க... பாக்கவே பாவமா இருக்கு..!!//

    உண்மைதான்:)!

    //அடேங்கப்பா... போட்டோவுல இவ்ளோ கோவமா இருக்கீங்க...!! " ஒரு வேல ஸ்மைல் ப்ளீஸ் யாருமே சொல்லுலியா.. " :-) !!!//

    ஆளாளுக்கு இதையே கேட்கிறீர்களே? அதை எடுத்தபோது என்ன மூடில் இருந்தேன் என எனக்கே நினைவில் இல்லை, ஏதோ பின்குறிப்புக்குக் குரல் கொடுக்கப் பொருத்தமாய் இருக்கிறதே எனத் தேர்ந்தெடுத்தேன்:)!

    பதிலளிநீக்கு
  41. goma said...

    //காதலிக்க நேரமில்லை வந்த ஆண்டு மாதிரி இருக்கே...சல்வார் ஃபேஷன் சொல்கிறது.//

    அட, ஆமாம். நீங்க சொன்னா நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். நான் கூட ஆச்சரியப் பட்டிருக்கிறேன் இன்றைய ஃபேஷன் அப்போது எப்படி என:)?

    பதிலளிநீக்கு
  42. ஆயில்யன் said...

    // ம்ம் சீக்கிரம் போட்டோவை புடிங்க அப்படின்னு சொல்ற மாதிரியே இருக்கு :))//

    இருக்கலாம்:)!

    //அடையாள அட்டை பத்தி சொல்றதுன்னா சைக்கிள் ஷாப் வைச்சிருக்கிற கேரக்டர்ல கவுண்ட்மணி ஒரு படத்துல சொல்லுவாரே -//

    கிரியும் இதையே குறிப்பிட்டிருக்கிறாரென நினைக்கிறேன். எனக்கு அந்த காமெடி ட்ராக் பார்த்த நினைவில்லையே?

    பதிலளிநீக்கு
  43. ஆயில்யன் said...

    // ம்ம் சீக்கிரம் போட்டோவை புடிங்க அப்படின்னு சொல்ற மாதிரியே இருக்கு :))//

    இருக்கலாம்:)!

    //அடையாள அட்டை பத்தி சொல்றதுன்னா சைக்கிள் ஷாப் வைச்சிருக்கிற கேரக்டர்ல கவுண்ட்மணி ஒரு படத்துல சொல்லுவாரே -//

    கிரியும் இதையே குறிப்பிட்டிருக்கிறாரென நினைக்கிறேன். எனக்கு அந்த காமெடி ட்ராக் பார்த்த நினைவில்லையே? ஏதாவது ஒரு சேனல் உபயம் செய்யாமலா போய்விடும்:)? கவனிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  44. R.Gopi said...
    //மிக அழகாக யதார்த்தத்தை படம் பிடித்துள்ளீர்கள்...

    நம் சொந்த அடையாளங்களை தொலைத்த போது, இது போன்ற அடையாளங்கள் தேவைப்படுகிறது...//

    தேவை மட்டுமல்ல அத்தியாவசியம் என்றும் ஆகி விட்டதே.

    //இன்றைய இந்தியாவின் நிலையை அப்பட்டமாக தோலுரித்து காட்டிய பதிவு...

    வாழ்த்துக்கள்....//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  45. சகாதேவன் said...

    //கவிதாயினியே, பின்னூட்டம் எல்லாம் பார்த்ததும் எழுத நினைத்தேன்.

    சத்தியமா இது சாதனைதான்.//

    பாராட்டுக்கு நன்றி!

    //போட்டோ பார்த்தால் என் பேத்தி மாதிரியே இருக்கு.//

    [இருக்காதா பின்னே:)?]. கேட்க சந்தோஷமாய் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  46. கிரி said...

    //அடையாள அட்டை இல்லாமல் இனி உலகமே இல்லை.//

    இதுதான் இன்றைய என்றைய நிலையும் இனி.

    //அப்புறம் சத்தியசோதனை என்றதும் எனக்கு கவுண்டமணி தான் நினைவிற்கு வராரு :-) (காந்தி மன்னிப்பாராக)//

    ஆயில்யன் குறிப்பிட்ட அதே காமெடி ட்ராக் போலிருக்கிறது.

    //அப்புறம் படம் போட்டு தாக்குறீங்க....சூப்பர்//

    அப்படின்னு சொல்லிட்டு...

    //சின்ன வயசுல கோபக்கார புள்ளையா இருந்து இருப்பீங்க போல இருக்கே ..கொஞ்சம் டெர்ரரா பார்க்கறீங்க :-)))//

    இப்படியும் சொல்லலாகுமோ? சரியோ:)?

    பதிலளிநீக்கு
  47. அபி அப்பா said...

    // arumaiyaana kavithai , nitharsanamana unmai,
    photo supero super!!!//

    Thank you Abi appa!

    பதிலளிநீக்கு
  48. கோமதி அரசு said...

    //கவிதை வரிகள் நிதர்சனமான உண்மை
    ராமலக்ஷ்மி.//

    மிக்க நன்றி.

    //குட்டி ராமலக்ஷ்மி தீவிரமாக என்ன யோசிக்கிறார்?//

    வேறென்ன, இப்படியாகி விட்டதே நாட்டு நிலைமை என்றுதான்:)!

    பதிலளிநீக்கு
  49. சதங்கா (Sathanga) said...
    //தொலைத்த தொலைக்கின்ற பலவற்றுள் முதலாவதானதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//

    நன்றி சதங்கா.

    //அடையாள அட்டைக்கே ஒரு பெருமை :))//

    அதென்னவோ உண்மை:)!

    //தீவிரமான யோசனைகளை அப்போதே சொல்கிறீர்களே முகத்தில்.//

    அப்போ, பதிவுக்குப் பொருத்தம்தானே:)?

    பதிலளிநீக்கு
  50. r.selvakkumar said...

    //உண்மைதான்,
    அடையாள அட்டைகளே நமது முகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.//

    அழகாய் சொல்லி விட்டீர்கள் தங்கள் கருத்தை. நன்றி செல்வக்குமார்.

    பதிலளிநீக்கு
  51. Jeeves said...

    //அந்த போட்டோ இருக்கிற குட்டி பாப்பா யாருங்க ?//

    ஆகா.., 'அடையாளம்' தெரியலையா:)? என்ன செய்வது அந்தக் காலத்தில் அடையாள அட்டை வந்திருக்கவில்லை. இருந்திருந்தால் மாட்டிக் கொண்டே போஸ் கொடுத்திருக்க மாட்டேன்:))?

    பதிலளிநீக்கு
  52. தலைப்பு மிக அருமை. :-)
     
    நான் தான் இவர் என்று நம்மை நாமே ஆதாரப்பூர்வமாகச் சொல்ல அட்டை இப்போது அவசியமாகிவிட்டது. காரணம் அந்த அளவிற்கு நாட்டில் ஏமாற்றங்கள் நடைபெற்கின்றன என்பதும் கவலை அளிக்கும் செய்தியே.

    பதிலளிநீக்கு
  53. " உழவன் " " Uzhavan " said...

    // தலைப்பு மிக அருமை. :-)//

    முதலில் ‘தொலைந்து போனவை’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். கடந்த வாரம் காந்தி ஜெயந்தியை ஒட்டிதான் திடீரெனத் தீர்மானித்தேன் இந்தத் தலைப்பை.

    பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  54. //இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்//

    அருமையான வரிகள், முன்பே படித்து ஓட்டு, போட்டு விட்டேன்,
    வாரஇறுதியில் வீட்டில் இருந்துதான் பின்னூட்டம் போட முடிகிறது.

    மிக நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  55. சிங்கக்குட்டி said...

    ***/ //இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்//

    அருமையான வரிகள், முன்பே படித்து ஓட்டு, போட்டு விட்டேன்,/***

    நன்றி சிங்கக்குட்டி, நானும் கவனித்தேன் தமிழிஷில் உங்கள் பெயரை!

    //வாரஇறுதியில் வீட்டில் இருந்துதான் பின்னூட்டம் போட முடிகிறது.//

    நினைவாக மறுவருகை செய்து கருத்தினை பகிர்ந்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  56. பா.ராஜாராம் said...

    //அருமைங்க.//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராஜாராம்.

    பதிலளிநீக்கு
  57. மிக மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  58. @ நட்பு வலை,
    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  59. @ சந்தனமுல்லை,

    தங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  60. //கால ஓட்டத்தில்
    சுயநலமான தேடலில்
    ஒரு சிலராலோ
    பெரும்பாலினராலோ
    தொலைத்தபடியே
    வரப்பட்டது-
    ஆறறிவு படைத்ததாய்
    அறியப்படும் மனிதனின்
    நல்ல அடையாளங்களாய்க்
    கருதப்பட்ட-
    உண்மையும் நேர்மையும்.//

    ஆமாம், வருத்தமான விஷயம்தான் :(

    //இதுதான் நான்
    நான்தான் இது
    நாளும் நிரூபிக்க-
    நம்மோடு இப்போது
    இருந்தாக வேண்டும்..
    இணைபிரியாது எப்போதும்-
    அடையாள அட்டைகள்!//

    நாம் தொலைஞ்சாலும் பரவாயில்லை, அட்டையை தொலைச்சா வம்புதான்!

    நல்லா எழுதியிருக்கீங்க ராமலக்ஷ்மி.

    'ஹலோ நான்தாங்க' பொண்ணு ரொம்ப க்யூட்! :)

    பதிலளிநீக்கு
  61. கவிநயா said...
    //நாம் தொலைஞ்சாலும் பரவாயில்லை, அட்டையை தொலைச்சா வம்புதான்!//

    அப்படித்தான் இருக்கிறது காலம்!

    //நல்லா எழுதியிருக்கீங்க ராமலக்ஷ்மி.

    'ஹலோ நான்தாங்க' பொண்ணு ரொம்ப க்யூட்! :)//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  62. மின்னஞ்சல் வழியாக..:
    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'சத்திய சோதனை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th October 2009 09:36:02 AM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/121856

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin