செவ்வாய், 9 ஜூன், 2026

நரிகளுக்காக - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (28) - பண்புடன் இணைய இதழில்..

 

னக்காக வருந்தாதீர்கள்.
நான் திறமையான,
திருப்தியான மனிதன்.

மற்றவர்களுக்காக வருந்துங்கள்
அமைதியின்றி நெளிபவர்கள்,
குறை சொல்பவர்கள்

தங்கள் வாழ்க்கையை
மேசை நாற்காலிகளை அடிக்கடி
இடம் மாற்றுவதைப் போல
மறுசீரமைத்தபடி இருப்பவர்கள்.

ஞாயிறு, 7 ஜூன், 2026

வெகு தூரம் செல்லத் துணிந்தவர்

 #1. "சில நேரங்களில் நாம் திட்டமிட்ட வாழ்க்கையை விட்டுவிட வேண்டியிருக்கிறது, நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதற்காக."


#2.  "இதயத்திடம் அழகான, கவித்துவமான விஷயங்களைப் பேசுவதற்கான ஒரு தெய்வீக வழி, இசை." _ Pablo Casals 


3. "நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதை விட,

செவ்வாய், 2 ஜூன், 2026

பேரன்பின் சாட்சியங்கள் - அமுதவல்லி நாராயணனின் ‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து...

ன்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பு ஒரு உயிர்ப்புள்ள நாட்குறிப்பைத் திறந்து வைப்பது போல் உணர வைக்கிறது. கவிதை என்பது, அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது எனும் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் எண்ணத்தையும்; மிகச் சிறந்த மனங்களின் மிக மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும் எனும் P.B. ஷெல்லியின் கூற்றினையும்; கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி எனும் வில்லியம் ஹாஸ்லிட்டின் பார்வையையும் மெய்ப்பிக்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வலைப்பூக்களின் வசந்தகாலத்தில் ‘என் வானம்’ வலை தளத்தில் இருபது ஆண்டுகளாக எழுதி வரும் அமுதா என்ற அமுதவல்லி நாராயணனின் இந்த நெடும்பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன் என்பதையும், தொகுப்பாக அவரது கவிதைகளை வாசிக்கக் காத்திருந்தேன் என்பதையும் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.


108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. எதைக் குறிப்பிடுவது, எதைத் தவிர்ப்பது எனும் திகைப்பை ஏற்படுத்தும் கவிதைகள்.

என்ன பிடிக்கும் என கேட்காமலே
பிடித்ததை செய்வாள் அம்மா

என்ன பிடிக்கும் என நான்
எல்லோரையும் கேட்டு செய்வேன்

என்ன பிடிக்கும் எனக்கு என
எவரும் கேட்கவில்லை என்றுணர்ந்து

அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என
கேட்டபொழுது...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin