ஞாயிறு, 3 மே, 2026

பயத்தின் எதிரொலி

 1.

‘உங்கள் கனவுகள் தேய்வதில்லை, 
அவை உங்களுடன் சேர்ந்து
பொறுமையைக் கற்றுக் கொள்கின்றன.’


2.
‘அழகு என்பது இதழ்களை விட 
ஆழமானது என்பதை 
ரோஜாக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. 
அது ஒன்றையொன்று தாங்கும் வேர்களில் 
தொடங்குகிறது.’


3.
‘இந்த உலகம் 
கனவு காண்பதற்குப் போதுமான அளவு 
விசாலமானது, பயத்தின் எதிரொலிக்கு 
இடமளிக்க இயலாத அளவிற்கு 
சிறியது.’


4.
‘நம் கனவுகள் ஒருபோதும் நம்மை 
அவசரப்படச் சொல்லாது, 
தொடர்ந்து செல்லுமாறு மட்டுமே 
கேட்டுக் கொள்ளும்.’


5.
‘ஒவ்வொரு பெண்ணும் ஒரு விடியல், 
தன்னைச் சுற்றியுள்ள உலகிற்கு 
அமைதியான நம்பிக்கையைக் 
கொண்டு வருகிறாள்.’

6.
‘பொறுமை என்பது தாமதிப்பது அல்ல, 
அது அமைதியான ஆயத்தம்.’

7.
 ‘நம் கனவுகள் ஒருபோதும் 
நம்மை விட்டுச் செல்லாது. 
நாம் அவற்றை 
எவ்வளவு விரும்புகிறோம் என்பதை மட்டும் 
சோதிக்கும்.’


8.
‘நம்மைத் தடுக்க நினைப்பவற்றைக் கடந்தே 
நாம் வளர வேண்டும்.’
*
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் 
தொகுப்பது தொடர்கிறது].
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 231
**

2 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin