திங்கள், 23 டிசம்பர், 2024

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை - சாந்தி மாரியப்பனின் "நிரம்பும் வெளியின் ருசி"

  

நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை 

வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். 'தமிழ் மணம்' திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் பொற்காலத்தில், மெல்லிய அங்கதம் இழையோடும் தன் அழகிய எழுத்து நடை மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் தோழி சாந்தி மாரியப்பன். அவரது மூன்றாவது நூலாகிய இத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவரது ‘அமைதிச்சாரல்’ வலைப்பூவில் வெளியாகி நல்ல வரவேற்பையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெற்றவை. ‘நிரம்பும் வெளியின் ருசி’யாக அவை மீண்டும் சுவைக்கக் கிடைத்திருப்பது நற்பேறு. 

வெள்ளி, 20 டிசம்பர், 2024

காரைக்குடி: கானாடுகாத்தான் அரண்மனை வெளிப்புறத் தோற்றம் மற்றும் அருகாமை இடங்கள்

 #1


தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி மற்றும் கொத்தமங்கலம் போன்ற பல இடங்களில் செட்டிநாட்டு வீடுகள் உள்ளன என்றாலும் ‘செட்டிநாட்டு அரண்மனை’ என அழைக்கப்படும் கானாடுகாத்தான் அரண்மனை அவற்றுள் புகழ் பெற்றதாகத் திகழ்கிறது. இது சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கானாடுகாத்தான் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 

#2

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

வெவ்வேறு உலகம்

  #1

"கையிலிருக்கும் வேலையின் மேல் 
உங்கள் அத்தனை கவனத்தையும் குவித்திடுங்கள். 
மையத்தில் குவியாமல் 
சூரியனின் கதிர்கள் எரியூட்டுவதில்லை."
_ Alexander Graham Bell

#2
"வலுவான கனவுகளுக்கும் தேவை 
அடங்காத உற்சாகம் என்பதை உறுதிப்படுத்துகிறது, 
வான் நோக்கிய இருவாச்சிப் பறவையின் 
மூர்க்கமான முழக்கம்."

#3
"எதையும் கற்றிட மிகப் பெரிய தேடலாக இருப்பது ஆர்வமே. 
எதைப் பற்றியேனும் அறிந்திட ஆவல் கொண்டால்,

செவ்வாய், 10 டிசம்பர், 2024

ஸ்ரீ லெட்சுமி விலாஸ் - ஆத்தங்குடி அரண்மனை - பாகம் 2

 பாகம் 1: “இங்கே.”

அரண்மனையின் உட்பகுதியில் அழகிய பெரிய  முற்றம் உள்ளது. 

#1 பிரதான அறையிலிருந்து முற்றுத்துக்குள் நுழையும் வழி:

#2 நீல வானும் சூரிய ஒளிக் கம்பளமும்..:

(உட்புறத்திலிருந்து வெளிவாயில் நோக்கி எடுக்கப்பட்ட படம்)

#3 அகன்ற பார்வையில்..


#4 உப்பரிகை

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஆத்தங்குடி அரண்மனை லெட்சுமி விலாஸ் - பாகம் 1

 பிள்ளையார்பட்டி வரை வந்ததும், பயணத் திட்டத்தில் இல்லாத காரைக்குடி, ஆத்தங்குடி ஆகியனவும் திடீரெனப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. காரைக்குடி கானாடுகாத்தான் அரண்மனையைப் படம் எடுக்க நான் விரும்பிய போது, அங்கு உள்ளே செல்ல முன் அனுமதி இல்லை பெற்றிருக்க வேண்டுமெனத் தெரிய வர,  அதே போன்ற மற்றொரு அரண்மனையான  ஆத்தங்குடி லெட்சுமி விலாஸ் சென்று வந்தோம். 

ஆத்தங்குடி (டைல்ஸ்) தரைக் கற்களுக்கும் பெயர் பெற்ற ஊர். சுற்றி வர ஊரின் பல இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நாம்  சென்று பார்க்கலாம். அடுத்து காரைக்குடி செல்ல வேண்டியிருந்த அவசரத்தினால் தவறவிட வேண்டியதாயிற்று. அடுத்த முறை செல்ல வாய்த்தால் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்தாயிற்று. ஆத்தங்குடி அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப் பட்டிருக்கும் வெவ்வேறு விதமான தரைக் கற்களைக் குறிப்பாகக் கவனித்தால் இங்குள்ள இத்தொழிலின் சிறப்பு புரிய வரும். படங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இரண்டு பாகங்களாக பகிருகிறேன்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் உள்ள ஆத்தங்குடி எனும் செட்டிநாட்டுச் சிற்றூரில் உள்ளது  ஆத்தங்குடி அரண்மனை. லெட்சுமி விலாஸ் மற்றும் பெரிய வீடு என்றும் இது அழைக்கப்படுகிறது. 

#1

தெருவின் தொடக்கத்தில் பரந்து விரிந்து நிற்கும் இந்த அரண்மனை சிறிய நுழை வாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. 

#2 இடப்புறம்:


#3 வலப்புறம்:


நுழை வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும். உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

#4 தேக்கு மர நிலைக்கதவுகள்:

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

வார்த்தைகளற்ற உரையாடல்

  #1

"உலகமே சொல்லலாம் 
வெளிச்சம் உள்ளது, ஆகாயத்தில் வானவில் உள்ளது, 
சூரியன் உதிக்கின்றது என, 
ஆனால் எனது கண்கள் மூடியிருந்தால் 
எனக்கு அது எப்படிப் பொருள்படும்?"
_ Osho

#2
"பூனை உங்கள் கண்களை நேராக பார்க்கையில், 
அது உற்று மட்டும் பார்க்கவில்லை - 

ஞாயிறு, 24 நவம்பர், 2024

இன்றைய ஆசிர்வாதங்கள்

 #1

"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது. 
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."

#2
"உங்கள் வாக்குறுதி 
யாரோ ஒருவரின் நம்பிக்கை. 
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்."
 _ Tarang Sinha

#3
"விடையைக் கண்டு பிடிப்பதில் அல்ல,

செவ்வாய், 12 நவம்பர், 2024

திருமலை நாயக்கர் மஹால் - மதுரை

 #1

திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அரண்மனை வாயிலினுள் நுழைந்ததும் காணப்படுகிற இந்தப் பரந்த முற்றமானது சுமார் 41,979 சதுர அடிகளைக் கொண்டு, சுற்றி வர உயர்ந்த வட்ட வடிவத் தூண்களால் சூழப்பட்டு பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது.

#2


#3

ஞாயிறு, 10 நவம்பர், 2024

வானவில் வண்ணங்கள்

  #1

"ஒவ்வொரு பொம்மைக்கும் 
சொல்ல ஒரு கதை உள்ளது."

#2
"சூரியனுக்கு நிகராகப் பிரகாசிக்கட்டும் 
உனது புன்னகை!"


#3
"சிறுமியருக்குச் சிறந்த தோழர்கள் 
அவர்தம் பொம்மைகள்."

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

ஓய்வு நேரம்

  #1

"அனைவரும் ஒன்றாக முன்னோக்கி நகர்ந்தால், 
வெற்றி தானாக வந்து சேரும்."  
_ Henry Ford

#2

"யாரையும் கண்மூடித்தனமாகத் தொடராதீர்கள், 
உண்மையைத் தொடருங்கள்.
_ Brian Michael Good


#3
"எப்போதும் மற்றவர்களுக்காக இருங்கள், 
அதே நேரம்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

யோக நரசிம்மர்; திருமோகூர் காளமேகப் பெருமாள்; மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்கள்

 யோக நரசிம்மர் திருக்கோயில்

#1

துரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை ஊராட்சியின் கீழ்வரும் யானைமலையின் அடிவாரத்தில் நரசிங்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது யோக நரசிங்கப் பெருமாள் கோயில் (அல்லது) யோக நரசிம்மர் திருக்கோயில்.

#2


பெருமாள் எடுத்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம், முதன் முதலில் இங்குதான் எடுக்கப்பட்டதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. அதன் பொருட்டு இங்கு இந்த யோக நரசிம்மர் கோயில் அமைந்ததாகவும், ஏறத்தாழ 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான கோயில் என்றும் கூறப்படுகிறது.

#3

புதன், 23 அக்டோபர், 2024

அப்பா வீடு திரும்புகிறார் - திலீப் சித்ரே - சொல்வனம் இதழ்: 328


அப்பா வீடு திரும்புகிறார்

என் அப்பா பின்மாலைப் புகைவண்டியில் பயணிப்பார்
மஞ்சள் ஒளியில்  அமைதியான பயணிகளுக்கு நடுவே நின்றபடி
கவனிக்காத அவரது கண்களை புறநகர்கள் நழுவிக் கடந்து செல்லும் 
அவரது சட்டையும் கால்சட்டையும் நனைந்திருக்க 
அவரது கருப்பு மழை மேல்அங்கி சேறினால் கறை படிந்திருக்க

வெள்ளி, 18 அக்டோபர், 2024

கள்ளழகர் திருக்கோயில் - கோபுர தரிசனம்

 #1

ஏழு நிலை ராஜகோபுரம்

மதுரையில் இருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் அழகர்கோயில் கிராமத்தில் உள்ளது அழகர் மலை. அழகர் மலையிலிருந்து வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்று வணங்கப்படும் கள்ளழகர். 

#2

#3

இக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்று. சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோயில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது. துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.  

#4

கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல்லாலான மதில் சுவர் இக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்து ஒரு கோட்டையைப் போல் காட்சி அளிக்கிறது.

சனி, 12 அக்டோபர், 2024

நவராத்திரியில் நான் பார்த்த கொலுக்கள் 6 - விஜய தசமி வாழ்த்துகள்!

 இந்த வருடம் பார்த்த கொலுக்களின் தொகுப்பு.. 

#1
‘பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு.’

தங்கை வீட்டுக் கொலுவிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒவ்வொரு வருட கொலுவிலும்  மைசூர் தசரா, மகாபாரதம், கிருஷ்ணாவதாரம் என ஏதேனும் ஒரு கருவை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றவாறு இருக்கிற பொம்மைகளை வைத்துக் காட்சிகள் அமைத்து வருவார். 

#2


இந்த வருடம்  ‘கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் பண்புகள்’ எனும் கருவையொட்டி காட்சிகளை அமைத்து குறிப்பிட்ட தலைப்புகளை ஒவ்வொரு காட்சிக்கு அருகிலும் வைத்திருந்தது வந்தவர்களைக் கவர்ந்தது.  கொலுவின் கருவை பெரிய அளவில் பிரின்ட் செய்து ஒரு பக்க சுவரில் மாட்டியிருந்தது வந்தவர்கள் கொலு அமைப்பைப் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது:

#3

*

*

கடந்த வருடங்களில் அனைத்துக் காட்சிகளையும் படமெடுத்து முந்தைய கொலுப் பதிவுகளில் பகிர்ந்து விட்டிருந்த படியால் இந்த முறைத் தனித்தனியாக அவற்றை எடுக்கவில்லை. காணொலியாக இங்கே பார்க்கலாம்:
[நான் இங்கே வலையேற்றிய காணொலி வேலை செய்யவில்லை. ஆகையால் ஃபேஸ்புக் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.]

#4

[பொம்மைகளை நன்கு ரசிக்க, படங்களை (Click)  சொடுக்கிப் பார்க்கவும் :).] 

#5 முழுக் காட்சி:

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

வளரொளி நாதர் திருக்கோயில் - வைரவன் பட்டி - பாகம்: 2

 பாகம் 1: இங்கே

#1 
நுழைவாயிலும் ஐந்து நிலை ராஜ கோபுரமும்

#2
கொடி மரம்

#3
கொடி மரம் இருக்கும் சுற்றுப் பிரகாரத்தின்
கூரை ஓவியங்கள்


ட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகப் போற்றப்படும் இத்திருக்கோயில் கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், கொடி மரம், அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்றுப் பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம் மற்றும் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளைக் கொண்டுள்ளது.

விநாயகருக்கு சிறிய கோபுரத்துடன் தனி மண்டபம் உள்ளது. மேலும் யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வைரவர் பீடம், வைரவர் தீர்த்தம், போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

#4
வளரொளி நாதரைப் பார்த்து அமர்ந்திருக்கும் நந்தியின் மண்டபமும்..,
கூரை ஓவியங்கள், சிற்பத் தூண்களுடன்
அற்புதமாகக் காட்சியளிக்கும்
பிரதான மண்டபமும்..

திங்கள், 23 செப்டம்பர், 2024

வைரவன்பட்டி வைரவர் திருக்கோயில் - கோபுர தரிசனம் - வைரவர் தீர்த்தம்

 #1

மதுரையிலிருந்து பிள்ளையார்ப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ளது வைரவன்பட்டி. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் மற்றும் வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.  தற்போது இத்தலத்திற்கு வடுகநாதபுரி , வடுகநாதபுரம் , வைரவர் நகர் ,  வைரவமாபுரம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.

#2 

இடப்பக்கம் சிறிய கோபுரத்துடன் காணப்படுவது விநாயகர் மண்டபம்

இக்கோயிலின் மூலவராக வளர் ஒளி நாதர் எனப்படும் வைரவர் சுவாமி உள்ளார். தாயார் வடிவுடையம்பாள். தலவிருட்சம் ஏறழிஞ்சில் மரம். தல தீர்த்தம் வைரவர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

#3

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அறுபடை வீடுகளில் முதல்படை வீடு - திருப்பரங்குன்றம் - கோபுர தரிசனம்

 #1

 "குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு"

திருப்பரங்குன்றத்தின் திருக்கோபுரத்தை முன்னர் 2015_ல் மதுரை சென்றிருந்த போது வெளியிலிருந்து எடுத்து 'இந்தப் பதிவில்..'  பகிர்ந்திருந்தாலும் அப்போது கோயிலுக்குள் செல்ல வாய்க்கவில்லை. இந்த முறை கோபுர தரிசனத்துடன் கோயிலுக்கு உள்ளேயும் சிறந்த தரிசனம் கிடைத்தது. 

#2

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே!

நான் எடுத்த படங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து சேகரித்த தகவல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளேன்:

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

சின்ன விஷயங்கள்

 #1

வாழ்க்கை என்பது உண்மையில் 
ஒன்றை அடுத்து ஒன்றென, 
இத்தருணங்களால் ஆன கொத்து!”
_ Rebecca Stead

#2
“மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றாது, 
ஆனால் எதிர்காலத்தை விரிவாக்கும்.”

#3 
"நீங்கள் 
எப்போதும் தயாராகவும்,

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் - கோபுர தரிசனம்.. உற்சவ மூர்த்தி திருவீதி உலா..

 #1

திருக்கோபுரமும் திருக்குளமும்

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு இரு தினங்கள் முன்னதாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது. ஓரளவுக்குக் கூட்டம் இருந்தாலும் கூட பக்தர்களை நிதானமாக தரிசிக்க அனுமதித்தது மனதுக்கு நிறைவைத் தந்தது. கோயிலுக்குள்ளே படங்கள் அனுமதியில்லை ஆதலால் கோபுர தரிசனமும், உற்சவ மூர்த்தியின் பவனியும் படங்களாக உங்கள் பார்வைக்கு..

#2

ராஜகோபுரம்

கீழ் வரும் தகவல்கள்.. விக்கிபீடியாவிலிருந்து:

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 கிமீ  தொலைவில் அமைந்த பழமையான குடைவரைக் கோயில். சிறிய மலையின் அடிவாரத்தில் உள்ளது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

எதுவரையிலும்?

#1

“வருங்காலத்தை முன்மதிப்பிட சிறந்த வழி, 
அதை சேர்ந்து உருவாக்குவதே.”
 _ Peter Drucker


#2

“எது வரையிலும் நீங்கள் முயன்றிட வேண்டும்? 
அது வரையிலும். 
உங்கள் இலக்குகளை அடையும் வரையிலும், 
உங்கள் தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் வரையிலும்,

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

நிரந்தர நண்பர்கள்

 #1

“பூவின் இதழ்களைப் பறிப்பதன் மூலம் 
அவளது அழகினை நீங்கள் பருக முடியாது.”
 _ Rabindranath Tagore

#2
“உங்கள் அமைதியான மனமே 
உங்கள் சவால்களுக்கு எதிரான இறுதி ஆயுதம். 
ஆக ஆசுவாசமாகுங்கள்.”
_ Bryant McGill


#3
“என்னில் நீங்கள் காணும் அழகு,

சனி, 17 ஆகஸ்ட், 2024

கிண்ணலா பொம்மைக் கலையும்.. நூறு வயது சிலையும்..

 #1

மிகப் பழமையானதும் அதிகம் அறியப்படாததும் ஆன கிண்ணலா பொம்மைக் கலை  15-16_ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடகாவின் கோபல் மாவட்டத்திலுள்ள கிண்ணல் எனும் இடத்தில் தோன்றியிருக்கிறது. இந்தக் காலக் கட்டமானது விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த மன்னர்கள் இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சிற்பிகள், கலைஞர்கள், கைவினைப் பொருள் வல்லுநர்களை தம் தலைநகரமாகிய ஹம்பிக்கு வர வழைத்தபடி இருந்த நேரம்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

தலையங்க வாசம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..

முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..

கடந்த பத்தாண்டுகளாக ‘நமது மண்வாசம்’ இதழில் அதன் ஆசிரியர் ப. திருமலை அவர்கள் எழுதி வந்த தலையங்கங்களின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் ‘தலையங்க வாசம்’ நூலுக்கு! 

கூவும் தூங்கணாங்குருவியும்.. அதன் கூடும்..!

கல்கி தீபாவளி மலரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த இப்படம் மறக்க முடியாதபடி மனதில் பதிந்து விட்டதாக ‘நமது மண்வாசம்’ ஆசிரியர் கேட்டு வாங்கி பெற்றுக் கொண்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பின் அட்டையில் இடம் பெற்றிருக்கும் அணிந்துரையை வழிமொழிகிறேன். நூலை பெற்றிடத் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி: 

*

பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில் என் ஒளிப்படம் இடம் பெறுவது, இத்துடன் ஒன்பதாவது முறை. 

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

*வடக்கு வாசல் (2012)

அடைமழைஇலைகள் பழுக்காத உலகம் - எனது நூல்கள் (2013)

*கலைமகள் (2015)

*கிழக்குவாசல் உதயம் (2016)

*கலைமகள் (2018)

*கிழக்குவாசல் உதயம் (2019)

*அப்பாவின் வேட்டி - கவிதைத் தொகுப்பு (2019)

***

ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாம் தேடும் மாற்றம்

  #1

"நாம் மற்றவருக்காகவோ 
அல்லது மற்றதொரு நேரத்திற்காகவோ 
காத்திருப்போமாயின் 
மாற்றங்கள் வருவதில்லை. 
நாம் காத்திருப்பது நமக்காகவே. 
நாம் தேடும் மாற்றம் நாமே."
_ Barack Obama


#2
"உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்காதே. 
வெளியேறு, 
வாழ்வை உணர்ந்திடு."
_ Rumi


#3
"செல்லும் பாதையை நம்புங்கள்.