வெள்ளி, 11 ஜூலை, 2014

வாழுங்கள்.. வாழ விடுங்கள்.. - பெங்களூர், கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 2)

பாகம் 1 இங்கே
பெங்களூரில் கைக்கொண்டஹள்ளி கிராமத்தில், சர்ஜாப்பூர் பிரதான சாலையைப் பார்த்து 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து இருக்கிறது கைகொண்டனஹள்ளி ஏரி. ஒரு சிலவருடங்களுக்கு முன் வரையிலும் மாசடைந்து, பாசிகள் படர்ந்து, குப்பைகளைக் கொட்டும் இடமாக இருந்து வந்த ஏரி இன்று பெங்களூரின் பிற ஏரிகளின் சீரமைப்புக்கு உதாரணமாகக் கைகாட்டப் படுவதோடு உலகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

#1
உடற்பயிற்சிக்காக, ரிலாக்ஸ் செய்து கொள்ள என ஏரிக்கருகே இருக்கும் பெலந்தூர் மக்கள் மட்டுமின்றி பெங்களூரின் பலபாகங்களிலிருந்தும் மக்கள் இந்த ஏரியைத் தேடி வருவதற்கு இன்னொரு காரணம் பறவைகள். வாத்து வகைகள் போக, சீரமைப்புக்குப் பிறகு காலை மாலை வேளைகளில் வரும் பறவைகளைக் கண்டு இரசிக்க பறவை நேசர்களும் புகைப்பட ஆர்வலர்களும் கூடி விடுகிறார்கள். 

#2

என் 200mm லென்ஸுக்கு சிக்கிய சில பறவைகளோடு, படங்கள் பதினேழை இந்தப் பாகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

#3 Heron


#4

#5

#6

#7 நீந்தும் பறவைகள் புள்ளிகளாய்..

#8 பைனாகுலரில் கண்டு இரசிக்கும் தம்பதியர்

#9

#10

#11

#12

குறிப்பிட்ட மாதங்களில் இங்கிருக்கும் மரங்களில் குடியேறுகின்றன பல அபூர்வ வகைப் பறவைகளும். நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நின்று ஒளிப்படமெடுக்க என தனியிடம் அமைத்திருக்கிறார்கள் இப்படி.  இந்தப் பகுதியில் காணப்பட்ட மரங்களையே சென்ற பாகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

#13

#14 முக்குளிப்பானும்..
 Little Grebe

#15 வட்டமிடும் பருந்தும்..

#16

காய்ந்த சருகுகள் ஒரு பக்கம். பச்சைப் பசும்புற்கள் மறுபக்கம். நித்தம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிற இயற்கையும், அதனோடு ஒன்றி வாழும் இன்ன பிற உயிரினங்களும் நம்மிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான்..

#17 ‘வாழுங்கள்.. வாழ விடுங்கள்..’

இந்த ஏரியைச் சீரமைக்க எப்படி மக்களும் அரசும் சேர்ந்து செயல்பட்டார்கள் என்பது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.
***
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

பெங்களூர் ஏரிகள்

20 கருத்துகள்:

  1. ஆகா... ஆகா... மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்...

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது படத்தில் லேசான நீல ஷேட்... அழகு.

    எல்லாப் படங்களும் அருமை.

    கடைசிப்படம் செயற்கைக் கூண்டா?

    பதிலளிநீக்கு
  3. கைக்கொண்டனஹள்ளி ஏரியில் இயற்கை அழகு கொஞ்சுகிறது. அதை அழகாகச் சிறைப்பிடித்திருக்கிறது உங்கள் மூன்றாவது கண். அந்தக் குட்டி வாத்து.... செம்ம...

    பதிலளிநீக்கு
  4. ஏரியைச் சீரமைத்தவிதம் தெரிந்துகொள்ள ஆவல் ராமலக்ஷ்மி. பறைவை இனங்கள் வரும் நேரமா இது. நம் ஊரிலும் இதுபோலச் செய்தால் எவ்வளவு அழகாக இருக்கும். பறவைகளின் படங்கள் மிக அழகு. பகிர்வுக்கு மிக நன்றிமா.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நித்தமும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் இயற்கையை நேர்த்தியான பதிவாக்கியமைக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  7. கருத்தினைக் கவரும் படங்களுடன்....ஆஹா அருமை! இயற்கை நேசிக்காதவர் உண்டோ! கண்களை மட்டுமல்ல நெஞ்சையும் கொள்ளை கொள்கின்றன!

    பதிலளிநீக்கு
  8. பூமியும் அதிலுள்ள இயற்கைச்சூழலும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று கூறும் நல்லதோர் பதிவு. புகைப்படங்களும் அழகு. # 14 இலிருப்பது முழுவதும் வளர்ந்த முக்குளிப்பான் (Little Grebe) எனும் பறவை.

    பதிலளிநீக்கு
  9. நித்தம் நித்தம் தன்னைப் புதுபித்துக் கொள்ளும் இயற்கையும், அதனோடு இணைந்து வாழும் உயிரினங்களும் அழகோ அழகு!.

    பதிலளிநீக்கு
  10. அக்கா...
    படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம். ஆம், செயற்கை கூண்டு. சாலையோர மரங்களில் கூட உண்டு. இது போன்ற கூண்டுகளை இயற்கை ஆர்வலர்கள் கப்பன் பார்க்கில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதையும் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. @Vijay,

    திருத்தி விட்டேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @வல்லிசிம்ஹன்,

    நன்றி வல்லிம்மா. அடுத்த பாகம் விரைவில் பகிருகிறேன்.

    பதிலளிநீக்கு