புதன், 27 ஜூலை, 2016

வெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் (பாகம் 2)

டாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது பொன்மொழிகள் சிலவற்றின் தமிழாக்கம், எடுத்த படங்களுடன்..

1. வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதீர்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு செய்தி மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை வாசியுங்கள். வெற்றி பெற சில யோசனைகள் உதிக்கும்.  



2. ஒருவரை தோற்கடிப்பது மிக எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகக் கடினமானது.

#3
மழை பொழியும் போது எல்லாப் பறவைகளும் புகலிடம் தேடிக் கொள்கின்றன. ஆனால் பருந்தோ மேகங்களுக்கு மேலாகப் பறந்து மழையைத் தவிர்த்து விடுகிறது. பிரச்சனைகள் பொதுவானவை, அவற்றை எதிர்கொள்ளும் மனப்பான்மையில் இருக்கிறது வித்தியாசம்.
#4
இயலாதென அத்தனை எளிதில்  விட்டு விடக் கூடாது. பிரச்சனை நம்மைத் தோற்கடிக்க அனுமதிக்கலாகாது.

#5
மனிதனுக்கு அவனது சிரமங்கள் தேவைதான். வெற்றியை சந்தோஷமாக அனுபவிக்க அவை அவசியமாகின்றன.

#6
உங்கள் குறிக்கோளில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமாயின், உங்கள் இலக்கின் மேல் ஒரே சிந்தனையுடனான ஈடுபாடு இருக்க வேண்டும்.

#7
பிரச்சனைகள் உங்களை அழிப்பதற்காக வருவதில்லை. அவை உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலையும், சக்தியையும் உணர்ந்து கொள்ள உதவுகின்றன. சிரமங்கள் உணரட்டும், (சிரமப்படுத்த)  நீங்களும் சிரமமானவர் என்று.

***

கனவு.. கடும் உழைப்பு.. நம்பிக்கை -  மாணவ மணிகளுக்கு டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழிகள் 10 (பாகம் 1) இங்கே .

14 கருத்துகள்:

  1. அப்துல் கலாமின் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  2. படங்களும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் தொகுப்பும் மிக அருமை! முதலாவதும் இரண்டாவதும் மிக மிக அருமை!

    பதிலளிநீக்கு
  3. படங்களுக்கும் பொன்மொழிகளுக்கும் தொடர்பு உண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் என்றும் சொல்ல மாட்டேன். இல்லை என்றும் சொல்ல மாட்டேன்:). அவரவர் பார்வைக்கும் கருத்துக்குமே விட்டு விடுகிறேன்.

      வருகைக்கு நன்றி, GMB sir.

      நீக்கு
  4. அழகான படங்களுடன் பொன்மொழிகள் அருமை அக்கா..

    பதிலளிநீக்கு
  5. நினைவில் அகலாமல் இருக்க வேண்டிய பொன் மொழிகள்

    பதிலளிநீக்கு
  6. படங்களும் பொன்மொழிகளும் வெகு சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு