திங்கள், 17 டிசம்பர், 2012

தூறல்:10 - பொதிகையில் ‘பொன்னான முதுமை’; இளம் கலைஞர்; நவீன விருட்சம்; குங்குமம்


தினகரன் வசந்தத்தில் திரு. நடராஜன் கல்பட்டு அவர்களுடனான என் நேர்காணலை வாசித்து விட்டு அவரைப் பொதிகை தொலைக்காட்சியின் ‘பொன்னான முதுமை’ நிகழ்ச்சிக்காகப் பேட்டி காணமுடிவு செய்த தூர்தர்ஷன் இயக்குநர் திரு ஸ்ரீனிவாசன், பத்திரிகையின் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டு திரு. நடராஜன் அவர்களின் அலைபேசி எண்களை வாங்கிக் கொண்டிருந்தார் சில மாதங்கள் முன்னர்.

சென்ற வாரம் சென்னையிலிருக்கும் திரு நடராஜன் அவர்களின் இல்லத்தில் படப்பிடிப்பு முடிந்தது.
‘தினகரன் கட்டுரையைப் படித்ததுமே உங்களைப் பேட்டி காண வேண்டுமென்கிற ஆவல் ஏற்பட்டது’ என திரு ஸ்ரீனிவாஸன் சொன்னதாக மகிழ்வுடன் மடல் செய்திருந்தார் திரு நடராஜன். எனக்கும் அதில் மகிழ்ச்சி:).

#1
திரு நடராஜன் கல்பட்டு தம்பதியர். பெங்களூரிலிருக்கும் அவர்களது மகளது இல்லத்தில் சந்தித்த போது..


பேட்டி இரு பகுதிகளாக நாளை மறுதினம் டிசம்பர் 19 மற்றும் 26 தேதிகளில் மதியம் 3:30 மணியளவில் ஒளி பரப்பாக உள்ளன.

மீண்டும் இரு பகுதிகளும் இம்மாதம் 21 மற்றும் 28 தேதிகளில் நள்ளிரவு 12-00 மணிக்கு மறு ஒளி பரப்பாக உள்ளன.

காணத் தவறாதீர்கள்!

பேட்டியோடு அவர் எடுத்த ஒளிப்படங்களையும் நிகழ்ச்சியில் காண்பிக்க இருக்கிறார்கள்.

பொன்னான முதுமையைப் போற்றுவோம்:)! 
***
------------------------------------------------------------------------------------------------------------------------
#2
விருப்பப்பாடமாகப் புகைப்படக்கலையைக் கற்றுக் கொள்ளலாம் எனப் பள்ளி அறிவித்த போது “நானும் பெரிம்மா மாதிரி ஃபோட்டோ எடுக்கணும்” என சேர்ந்து விட்டிருந்தாள் நான்காம் வகுப்பில் இருக்கும் தங்கை மகள்.

 #3

ஆரம்பநிலை என்பதால் தற்போது படம் எடுக்கப் பழகுவது P&S-ல்.
ஆர்வத்துடன் கோணம் பார்ப்பது எனது கேமராவில்.
சமீபத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 'LIFE ON CAMPUS' எனும் தலைப்பில் நடந்த புகைப்படப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்திருக்கிறது அவளுக்கு.  எடுத்தது எடுத்தபடி எந்த ப்ராஸஸும் செய்யாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் முக்கிய விதி. குழந்தைகள் இன்னும் ஃபோட்டோஷாப் பழகாத நிலையில், பெரியவர்கள் படத்தில் கைவைக்க நேர்ந்தால் நியாயமாக இருக்காதே :)!

#4  
A Fine Balance between Work and Fun


புகைப்படத்துக்கான அசத்தலான வாசகமும் அவளுடையதே. இசை(பியானோ), டென்னிஸ், ஸ்கேட்டிங் எல்லாவற்றிலும் ஆர்வம். குறிப்பாக வாசிப்பே சுவாசிப்பாக வளருகின்றாள். [அணிந்திருக்கும் கண்ணாடியே சாட்சி:)! ]. இவள் ஆங்கிலத்தில் எழுதிய முதல் சிறுகதை அமெரிக்காவிலிருந்து குழந்தைகளின் படைப்புகளைக் கொண்டே வெளியாகும் “Amazing Kids” பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

#5  http://mag.amazing-kids.org/
 கதையை வாசிக்க: http://mag.amazing-kids.org/2012/11/30/me-flippy-the-fish/

இளம் கலைஞரை வாழ்த்துவோம்:)!
*** 
---------------------------------------------------------------------------------------------------------------------------
வீனவிருட்சம் தளத்தில் வெளியான எனது புதிய அத்தியாயம் கவிதை அதன் (2012 செப்டம்பர்) 91வது இதழிலும் இடம் பெற்றிருக்கிறது. ஆசிரியருக்கு நன்றி! 

23-ஆம் ஆண்டில் அடிவைத்துள்ள நவீன விருட்சத்திற்கான ஆண்டுச் சந்தா ரூ.60-யை இணையம் மூலமாகவும் செலுத்திடலாம்: 

Name of the account - Navinavirutcham 
Account No: 462584636 
Bank: Indian Bank Branch - Ashok Nagar, Chennai. 

உங்கள் முகவரியை navina.virutcham@gmail.com எனும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
***
-----------------------------------------------------------------------------------------------------------------------------

26 நவம்பர் குங்குமம் வலைப்பேச்சில் எனது ஃபேஸ்புக் நிலைமொழி!

#6
நன்றி குங்குமம்!
#7


நன்றி பரண்!
 ***
-----------------------------------------------------------------------------------------------------------------------
#8  படத்துளி
 தென்றல் காற்றே.. மெல்ல வீசு..
***

30 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி!

    பொதிகை நிகழ்ச்சி பார்க்க வாய்ப்பில்லை. நண்பர்களிடம் சொல்கிறேன்.

    சம்யுக்தாவிற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    எல்லோரும் ஆங்கிலத்தில் கதைப் படிப்பது சிரமம். தாங்கள் கதையினை மொழி பெயர்த்து இங்கு வெளியிட்டிருக்கலாமே?!

    பதிலளிநீக்கு
  2. தங்கை மகள்!! ஒரு வாரிசு உருவாகிறது!! உங்களைப் போலவே, புகைப்படம்-எழுத்து இரண்டிலும் ஆர்வமிருப்பது மிகவும் மகிழ்ச்சி.

    அவ்வப்போது அவள் எடுத்த படங்களையும் பகிருங்கள்.



    பதிலளிநீக்கு
  3. தங்கை மகளுகு வாழ்த்துகள்.கட்டாயம் திரு நடராஜன் பேட்டியப் பார்க்கிறோம்.

    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. குட்டிப்பொண்ணுக்கு வாழ்த்துகளை சொல்லுங்க..நல்லா இருக்கு படமும் வாக்கியமும்.. அதுலயும் அவ உங்களபோலவே கலக்கிட்டா..:)

    பதிலளிநீக்கு

  5. உங்களுக்கு, மற்றும் சம்யுக்தாவுக்கு வாழ்த்துகள். குட்டிப் பெண்ணின் முதல் பாய்ச்சலே 16 அடியைத் தாண்டுகிறதே!

    பதிலளிநீக்கு
  6. ஜூனியர் ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துகளைச் சொல்லிருங்க :-))

    பதிலளிநீக்கு
  7. ஆஹா தங்கை பெண்ணையும் இழுத்தாச்சா? அவ எடுத்த போட்டோ சூப்பர்; நல்ல கற்பனை திறன் + ரசனை இருக்கு !வாழ்த்துக்களை சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
  8. பொன்னான முதுமை அருமை. பொதிகையில் பார்க்கிறேன்.
    தங்கை மகள் சம்யுக்தாவுக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் திறமை வளர்ப்பதில் சிறந்தவர் அல்லவா!சம்யுக்தாவுக்கு
    அதற்கு சாட்சி தங்கை மகள் சம்யுக்தா
    சாட்சி.
    பகிர்ந்து கொண்ட அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  9. தங்கை மகள் தங்க மகள் சம்யுக்தாவுக்கு வாழ்த்துகள்!

    சாந்தா மற்றும் நடராஜன்

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. @அமைதி அப்பா,

    நன்றி.

    செய்திருக்கலாமோ:)?

    உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. @ஹுஸைனம்மா,

    நிச்சயமாக:)! கோணங்கள் அருமையாக அமைக்கிறாள்.

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  13. @நடராஜன் கல்பட்டு,

    உங்கள் வாழ்த்துகளை அவளிடம் சேர்த்து விடுகிறேன்:)! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @semmalai akash,

    நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள்:)!

    பதிலளிநீக்கு
  15. @geethasmbsvm6,

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அக்கா...
    ரொம்ப சந்தோஷமா இருக்கு. கலக்குங்க...
    இன்னும் வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்.
    உங்களைப் போல வரத்துடிக்கும் சின்ன மருமகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. இளம் கலைஞருக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு