ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

சூரியக் கீற்றுகள்

 #1

“சகோதரன் நம் இதயத்திற்குக் கிடைத்த அன்பளிப்பு,
ஆன்மாவுக்குக் கிடைத்த நண்பன்.”

#2
சகோதரனை விடச் சிறந்த தோழன் வேறெவருமில்லை,
சகோதரியை விடச் சிறந்த தோழி  வேறெவருமில்லை.

#3
“வாழ்க்கை எங்கே உங்களை நடுகிறதோ
அங்கே நளினத்துடன் மலருங்கள்.”
24 ஜனவரி, உலகப் பெண் குழந்தைகள் தினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்


#4
“புன்னகைகள்,
வாழ்வைப் பிரகாசமாக்கும்
சூரியக் கீற்றுகள்.”

#5
“எதுவும் சாத்தியம் சூரிய ஒளியும்
சற்றே இளஞ்சிவப்பு நிறமும் இருந்து விட்டால்.”

#6
“உங்கள் கனவுகளின் திசையில்
தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள்.”

#7
“ஆகச் சிறந்த புன்னகையை அடித்துக் கொள்ள
எதுவுமில்லை.”

#8
“பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கை!
கடக்கும் ஒவ்வொரு வருடத்திலும்
நீ மென்மேலும் பிரகாசிக்கிறாய்!”
சென்ற மாதம் மருமகளின் பிறந்ததினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம்.

#9
“சகோதரன் சகோதரி உறவென்பது
என்றும்
ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருப்பது.”

*

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 162

**

அத்தையாக குழந்தைகளின் அழகிய பருவத்தை ஆவணப்படுத்தியுள்ளேன்:)!படம் ஒன்றில் இருப்பதும் என் மருமக்களே.  தம்பி (பெரியம்மா மகன்) குழந்தைகள். 

**

9 கருத்துகள்:

  1. இளவரசர் இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது.  இளவரசியை முன்னர் பார்த்த நினைவு இல்லை!  வழக்கம்போல வரிகளும் படங்களும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பயணங்கள் சமீப காலமாகக் குறைந்து விட்ட படியால் மருமகனை ஒவ்வொரு பருவத்திலும் படம் எடுக்க வாய்த்தது போல் மருமகளை எடுக்க வாய்க்கவில்லை. ஆயினும் முன்னர் பல பதிவுகளில் பகிர்ந்து வந்துள்ளேன். அவற்றில் சில:
      *https://tamilamudam.blogspot.com/2017/12/blog-post_22.html
      *https://tamilamudam.blogspot.com/2018/09/blog-post_16.html (படங்கள்: 3,4,5,6)
      *https://tamilamudam.blogspot.com/2018/11/blog-post_14.html (படங்கள்: 4,5)
      *https://tamilamudam.blogspot.com/2019/11/blog-post_13.html (படங்கள்: 9,10,12)

      நன்றி ஸ்ரீராம்:)!

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் மனதைக்கவர்கின்றன! கள்ளமில்லா மனதின் பிரதிபலிப்பு!

    அத்தையாக ஆவணப்படுத்தியது மனதை நெகிழ்வித்தது! குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு. வழமை போல படங்கள் நேர்த்தியாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. மருமக்களைப்பார்த்து நாள் ஆச்சு. இப்போது நன்றாக வளர்ந்து இருப்பார்கள். அவர்களின் மலர்ந்த முகங்களும், நீங்கள் சொல்லிய வாசகங்களும் மிக அருமை.
    உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக எப்போதும் இந்த புன்னகையோடு இருக்கட்டும்.
    மழலை பூக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி கோமதிம்மா.

    ஆம். தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு