ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

ஆன்மாவின் நடனம்

#1
சோம்பிக் கிடக்கும் உள்ளம் அறிவதில்லை 
தன் தேவை என்னவென்பதை!

#2
“எதிர்காலம் என்பது நாம் நுழையும் ஒன்றல்ல.
நாம் உருவாக்கும் ஒன்று.”
_ Leonard I. Sweet

#3
உங்களுடையதென நினைத்து ஒன்றை நீங்கள்
இறுகப் பற்றியபடி இருப்பீர்களானால்
கிடைக்க வேண்டிய மற்ற பலவற்றை நழுவ விட நேரும்.
 _  Dave Matthews Band

#4
“ஒவ்வொரு பூனைக்குப் பின்னும்
ஒரு புலி உள்ளது.”

#5
“சிரிப்பென்பது 
ஆன்மா நடனமாடும் ஒலி.”
_Jarod Kintz


#6
“அதிகம் தெரிந்திருப்பின்
கொஞ்சமாகப் பேசினால் போதும்.”
_  Jim Rohn

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 160

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***


 

7 கருத்துகள்:

  1. வரிகளுக்கு மிக பொருத்தமாய் படங்கள்.  பூனைகள் எப்போதும் அழகானவை.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மிக அருமை.நானும் மகள் வீட்டுத்தோட்டத்தில் அணில், பூனை படங்கள் எடுத்து இருக்கிறேன்.
    வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. சமீபத்தில் தாங்கள் பகிந்திருந்த அணில் படங்களைப் பார்த்தேன். அருமையாக இருந்தன.

    நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  4. அணில் பதிவும் போட்டு விட்டேன்

    பதிலளிநீக்கு
  5. பூஸார் படங்களும் அணிலின் படமும் செம. பூஸார்கள் அழகோ அழகுதான். நன்றாகப் போஸ் கொடுத்திருக்காங்க!!!

    வாசகங்களும் எல்லாமே சூப்பர்.

    அணிலைப் படம் எடுப்பது கஷ்டம்தான் டக்கென்று ஓடிவிடுவார்!

    ஏரியில் ஒரு மரத்தில் அணில் விளையாடியதைக் காணொளி எடுத்திருக்கிறேன். இன்னும் போடவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு