ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

மெளனம் பேசும்

 #1

“காலத்துக்குத் தலை வணங்குங்கள்.
வேறு எவருக்கும் தலை வணங்கும் தேவை ஏற்படாது.”


#2
“மனிதனின் மிகப் பெரிய பலம்,
தூய்மையான அன்பின் பலம்.”
_ Debasish Mridha


#3
“உங்கள் வாழ்க்கை பெரியது.
தொடர்ந்து அதை நெருங்குங்கள்.”
_ Oprah Winfrey


#4
“தூய அன்பிலிருந்து உதயமாகும் எதுவும்
பிரகாசமான அழகுடன் ஒளிரும்.”
_ Simone Weil.


#5
“நம்பிக்கை ஆற்றல் மிகுந்தது. உண்மையில் அதில் எந்த மாயமும் இல்லாதிருக்கலாம், ஆனால் உங்களுக்குத் தெரியும் எதன் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து அதை ஒரு ஒளியென உங்களுக்குள் பிடித்து வைத்திருக்கிறீர்களோ, அது நினைத்ததை நடத்தி வைக்கும், ஒரு மாயாஜாலம் போல!”
_ Laini Taylor

#6
“கேள்விக்கான பதிலை வார்த்தைகளால் சொல்ல முடியாத போது
மெளனம் பதிலளிக்கும்.
மெளனம் என்னவெல்லாம் செய்யுமெனத் தெரிந்து கொள்ள விரும்பினால்,
மெளனமாக இருங்கள்!”
_ Ernest Agyemang Yeboah

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 159

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

10 கருத்துகள்:

  1. தோட்டத்து மலர்கள் அழகு, அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தோட்டத்து மலர்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. மலர்களின் அழகு வரிகளுடன் சேர்ந்து மிளிர்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மலர்களின் படங்களும் கூட வரும் சிந்தனைகளும் அருமை. குறிப்பாக மௌனம் பற்றிய வரிகள்

    கீதா

    பதிலளிநீக்கு