திங்கள், 28 செப்டம்பர், 2020

உங்கள் குரல்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (81)  

பறவை பார்ப்போம் - பாகம் (54)

ஜூன் மாதத்தில் ‘திசை மாறிய பறவைகள்’ பதிவில் பெற்றோரைக் காணாத் தவித்த இந்திய சாம்பல் இருவாச்சிப் பறவையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதே பறவைதான் இது. அடுத்த ஓரிரு வாரங்களும் எங்கள் குடியிருப்பின் மரங்களில் அங்கும் இங்குமாகத் தனித்து அல்லாடிக் கொண்டிருந்த போது எடுத்த படங்கள். கால இடைவெளி விட்டு ஒவ்வொரு படமாக ஃப்ளிக்கரில் பதிந்த போது தோழி ஒருவர் கேட்டார் “அபூர்வமாய்க் காணக் கிடைக்கும் இருவாச்சிப் பறவை இப்போதெல்லாம் அடிக்கடி உங்கள் தோட்டத்திற்கு வருகிறதா?” என்று. ‘இல்லை’, ஒரே நேரத்தில் எடுத்தவற்றைதான் இடைவெளி விட்டுப் பகிர்வதாகச் சொன்னேன். பிறகு யோசித்துப் பார்க்கையில் சென்ற வருடமும் இந்த வருடமும் சரியாக ஜூன் மாதத்தில் இருவாச்சி ஜோடி எங்கள் குடியிருப்பின் கடைசி வீட்டுத் தோட்டத்து மரத்தில் கூடு கட்டி, குஞ்சுகள் வெளிவந்ததும் சில வாரங்களில் விட்டுவிட்டுப் போயிருப்பது கவனத்திற்கு வந்தது. இப்போது இந்தக் குஞ்சுப் பறவையும் சில காலம் இங்கே சுற்றித் திரிந்து காணாது போய் விட்டது. இனி இவற்றை அடுத்த ஜுன் மாதம் எதிர்பார்க்கலாமோ? 

விதம் விதமாக போஸ் கொடுத்த இருவாச்சியின் படங்களுடன் பொன்மொழிகளின் தமிழாக்கம்:

#1
பலன்களின் மேல் கவனத்தை வை, 
தடைகளின் மேல் அல்ல!


#2
“அழகென்பது உங்களை நீங்களே ஆராதிப்பது. 
உங்களை நீங்கள் விரும்பும் போதுதான்

புதன், 16 செப்டம்பர், 2020

அதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)

#1

பெங்களூரின் கைக்கொண்டன(ர)ஹள்ளி ஏரிக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு வாரயிறுதி நாளில் சென்றிருந்த போது எடுத்த படங்கள்.. என்றைக்கு நோய்த்தொற்று அச்சம் நீங்கி இந்தப் பறவைகளைப் போல சுத்தமானக் காற்றைச் சுவாசித்து, சுதந்திரமாக வெளியில் சென்று வரப் போகிறோமோ, எனும் ஏக்கம் எழத்தான் செய்கிறது!

#2

இந்த ஏரியைப் பற்றி 6 ஆண்டுகளுக்கு முன், தொடராக 3 பதிவுகள் இட்டிருந்தேன். அதிலொரு பதிவில் எப்படி அப்பகுதி மக்கள் மாநகராட்சியுடன் கைகோர்த்து ஏரியைத் தூர் வாரி, புனரமைப்பு செய்து மக்களுக்கும், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரனங்களுக்கும் பயனாகும்படி செய்தார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்தேன்:

ஆறு ஆண்டுகள் இடைவெளியில் பராமரிப்பு மோசமில்லை என்றாலும் அன்று பார்த்தது போல பசுமை சூழ்ந்த பூச்செடிகள், சீரான நடை பாதை ஆகியன இப்போது இல்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆனால் ஏரியில் நீரும், பறவைகளின் வரவும் எப்போதும் போலவே உள்ளன. இது போன்ற பெரிய ஏரிகளிலுள்ள பறவைகளைப் படமாக்க 300mm ஜூம் வசதி போதுமானதாக இல்லை. இருந்தாலும் எடுத்த படங்களில் சில தொகுப்பாக இங்கே..

#3
காலை வெயிலில்
குளிர் காயும்
கூழைக்கடா

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

மனந்தடு மாறேல்

லெபக்ஷி கோயிலுக்குச் சென்றிருந்த போது படமாக்கிய வானரர்களின் படங்களை இங்கே பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மீதிப் படங்களும்.. 

#1
"எந்த ஒரு வானரமும் வாழைப் பழத்தை அடைந்து விட முடியும்.
ஆனால் மனிதன் மட்டுமே வானத்து நட்சத்திரங்களை அடைய முடியும்."




#2
"உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றைக் குறித்துக் கவலை கொள்ளாதீர்கள்."

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சொற்திறன்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (80)
பறவை பார்ப்போம் - பாகம் (52)


#1
உங்களுக்குச் சவாலாக இருப்பவற்றைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்
மாறாக உங்கள் குறைபாடுகளுக்குச் சவால் விடுங்கள்!”
― Jerry Dunn

#2
பாட விரும்புகிறர்களுக்கு 
எப்போதும் ஒரு பாடல் கிடைத்து விடுகிறது!

#3
“உங்கள் மனதிலிருப்பதை 
நா சரியாக வெளிப்படுத்துமானால் 
நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்.”

வியாழன், 3 செப்டம்பர், 2020

உழுவோர் உழைப்பால் உலகோர் பிழைப்பார்

ர் முடக்கம் தொடங்கிய நாளிலிருந்து குடியிருப்பு வளாகத்தில் நடைப் பயிற்சி செய்பவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டது. முதலிரு மாதங்கள் பலரும் வெளியில் வரவே யோசித்தார்கள். அப்போது கை கொடுத்தது அவரவர் வீட்டு மொட்டை மாடிகள். இப்போது நட்புகளோடு சேர்ந்து முகக் கவசத்துடன் முன் போலவே நடைப் பயிற்சி செய்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ முகக் கவசத்துடன் நடைப் பயிற்சி செய்வது சீரான சுவாசத்திற்கு இடையூறாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆகையால் மொட்டை மாடியிலேயே தொடருகிறேன். அப்படிச் செல்லும் வேளையில் பின்பக்கமிருக்கும் வயல் வெளியில் கடந்த 4,5 மாதங்களாக நடக்கும் உழவு வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடிந்தது.  அதன் மேல் சுவாரஸ்யமும் ஏற்பட்டது. பரந்து விரிந்த வானம், பஞ்சுப் பஞ்சாக மேகக் கூட்டம், பச்சை வயல், செம்மண் பூமி, அதில் உழவு, நடவு என அவ்வப்போது படமாக்கிய சிலபல காட்சிகளின் தொகுப்பு இங்கே. 

#1
“உங்கள் மனநிலை எப்படி இருப்பினும், 
இயற்கைக்கு அருகே எப்போதும் 
அமைதியாக உணர்வீர்கள்!”


#2
பரம்படித்த நிலம்
(மண் பரப்பில் உள்ள கட்டிகளை உடைத்து 
சீராக மண்ணைப் பரவச் செய்தல்)

#3
“உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?”