ஞாயிறு, 1 மார்ச், 2020

உரத்துச் சொல்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (69) 

#1
“இது நான், 
இதோ இங்கே இருக்கிறேன்
நீங்கள் நினைத்தும் பார்த்திராதபடி
முன்னை விடவும் வலிமையாக..!”


#2
“உங்கள் வசதி வளையத்தை விட்டு 
வெளியே வரும்போதுதான் 
வாழ்க்கை ஆரம்பமாகிறது.”

#3
“சவால்கள் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகின்றன. 
அவற்றை வெல்வது
 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன.”


#4
“உங்கள் இலக்கை அடைந்ததற்காக ஒரு போதும் வருந்த நேரிடாது.
முயற்சியைக் கை விட்டதற்கும்
இன்னும் கடுமையாக முயன்றிடாததற்குமே நீங்கள் வருந்த நேரிடும்.” 


#5
“உறக்கம் 
அனைத்தையும்
 ஆற்றுப் படுத்தி விடுகிறது.”

#6
“மெளனம் கடவுளின் மொழி. 
மற்றன யாவும் மோசமான மொழிபெயர்ப்பு.”
_ Rumi

#7

“உரத்துச் சொல்லிய உடன் 
எல்லா விஷயங்களும் சற்றே மாறிதான் விடுகின்றன.”

#8
“உங்கள் இலக்கை அடைய 
எதுவும் தடையாக இராதபடிப் 
பார்த்துக் கொள்ளுங்கள்"


*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1அணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..  
2அடுத்தக் கட்டம் 
3. சொல்வதற்குக் கதைகள் இருக்கட்டும் 
***

10 கருத்துகள்:

  1. அணில் சொல்லியிருக்கும் கருத்துகள்( ! ) .   ஒவ்வொன்றுக்கும் அணிலின் போஸ் ரசிக்கத் தக்கதாயிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்றோர் சொன்ன கருத்துகளுக்கு அணிலின் படங்கள்!

      நன்றி ஸ்ரீராம்:)!

      நீக்கு
  2. அணிலார் கவர்கிறார். விதம் விதமாக எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது எடுத்த படங்களின் தொகுப்பு. நன்றி வெங்கட்.

      நீக்கு
  3. அணில் படங்களும் சொல்லிய வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அணிலாறும் , வாசகங்களும் மனதை நிறைகின்றன...

    பதிலளிநீக்கு
  5. படங்களும் வாசகங்களும் கவர்கின்றன.
    எங்கள் வீட்டில் அணிலார் இரு குட்டிகளுடன் :) வாழ்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடியாடும் அணில்களைக் காண்பது மனதுக்கு இதம். குட்டிகள் வளரட்டும்:).

      நன்றி மாதேவி.

      நீக்கு