புதன், 8 மார்ச், 2017

மாறி வரும் பணி உலகில் மகளிர் - பெண்கள் தின வாழ்த்துகள்!

#1

சர்வதேச மகளிர் தினத்தின் இந்த வருடக் கரு: 

Be Bold for Change
#2
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பாகங்களிலும் ஒன்றாக இந்நாளை மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான வித்தாக இருந்தது..

நீண்ட பணி நேரம்-குறைந்த ஊதியத்துக்கு எதிராக நியூயார்க் நகரில் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடிய சம்பவமே. தொடர்ந்து மற்ற நாடுகளும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக ஒரு நாளை அர்ப்பணிக்க முடிவெடுத்தன. 1913_ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் தின அமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்டக் கருவை அந்நாளுக்காக அறிவித்து வந்தபடி இருக்கிறார்கள்.


#3


இந்த ஆண்டு, “மாறி வரும் பணி உலகில் மகளிர் - 2030_ல்  பிளானட்  50-50” எனும் குறிக்கோளை எட்டும் விதமாக #BeBoldForChange கரு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு நம்மை அல்லது மகளிரை அதற்கான முயற்சிகளை எடுக்க அழைப்பு விடுக்கிறது. இந்தக் கருவானது ஐநா அமைப்பின் 2030ஆம் ஆண்டுக்கான செயல் திட்டமான இருபாலினருக்கும் சம உரிமை, பெண்களுக்கான அடிப்படை உரிமைகள், அவர்கள் தங்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்திடுவதற்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு முன்னேறப் பாதை அமைக்கிறது. பாலினம் சார்ந்த பிரச்சனைகள், தரமான இலவசக் கல்வி,  இளம்பிராயத்திலேயே குழந்தைகளின் மேம்பாட்டுக்கு அடிகோலுவது, பாலின வேறுபாடுகள் பாகுபாடுகள், விரும்பத் தகாத பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றைக் களைந்து புதிய கோளை 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப் பாடுபட அனைவரையும் அழைக்கிறது ஐநா-வின் பெண்கள் அமைப்பு.

#4
ஒன்று சேர்ந்து செயல்பட்டால்.. எதுவும் சாத்தியம்..


தோழியருக்கும், நண்பர்களின் இல்லத்துப் பெண்களுக்கும், 
அனைத்து மகளிருக்கும்  நல்வாழ்த்துகள்!
#5


***
*கொலாஜ் படங்களுக்கு நன்றி: FB Mangai group மற்றும் தோழி கீதா மதிவாணன்

10 கருத்துகள்:

  1. ஒரு புதிய முறையில் வலைப்பூவின் சாரம்

    பதிலளிநீக்கு
  2. அருமை...

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் - என்றும்...

    பதிலளிநீக்கு
  3. அறிந்த தகவலும் (மகளிர்தின தொடக்கம்) அறியாத தகவலும் (இந்த வருட தீம்)

    பதிலளிநீக்கு
  4. மகளிர்தின சிறப்பு படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு