ஞாயிறு, 9 அக்டோபர், 2016

உங்கள் சொந்தத் தீர்மானங்கள்... - ஆப்ரகாம் லிங்கன் பொன்மொழிகள்

#1
மற்றவருக்கு சுதந்திரத்தைத் தர மறுப்பவர் தாம் சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதியற்றவர்.

2.
எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால் அவை ஒவ்வொரு தினமாகவே நம்மை வந்தடையும்.

3.
எப்போதும் நினைவிருக்கட்டும்,
உங்கள் சொந்த தீர்மானங்கள் வெற்றி அடைவதென்பது வேறு எதை விடவும் முக்கியமானது.

#4
இறுதியில், எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமாகாது, வருடங்களில் இருக்கும் வாழ்வே கணக்கில் வரும்.

#5
உங்கள் பாதங்களைச் சரியான இடத்தில் பதிக்கிறீர்களா என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள், பின் திடமாக நில்லுங்கள்.
#6
மனிதர்கள் தாங்களாகச் செய்து கொள்ள முடிகிற, செய்ய வேண்டிய வேலைகளை அவர்களுக்காக நிரந்தரமாக  நீங்கள் உதவிக் கொண்டிருக்க முடியாது.
_ஆப்ரகாம் லிங்கன்

***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..

6 கருத்துகள்:

  1. இரண்டுமே, அதாவது படங்களும், வரிகளும் - சிறப்பு. ஆனால் தனித்தனியாக! ஐந்தாவது பட வரிகள் மிஸ்டர் நட்வர்லால் கிளைமேக்ஸை நினைவு படுத்துகிறது!

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசமான படங்கள்.. பொன்மொழிகள் கூடுதல் சிறப்பு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு