சனி, 1 அக்டோபர், 2016

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு.. - அனைத்துலக முதியோர் தினம்

#1
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாகக் காணப்படுகிறது:

#2
கண்ணில் தெரிவது பாதி..
  ‘நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி..
உள்ளம் என்பது ஆமை’

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.
அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி,கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது:

அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.

வாழ்வதற்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.

அவர்களைப் பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.

சமூகத்திற்குச் சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.

இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.

இந்திய அளவில் இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. [தகவல்கள்: விக்கிப்பீடியா]

இருந்தாலும் இன்னமும் சாலையோரம் அவதிப்படும் முதியோர்களை நாடெங்கிலும் காண முடிகிறது. தம் தேவைகளுக்காக பிறரை அண்டி வாழாமல் உறுதியோடு உழைப்பவரையும் காண முடிகிறது. இதுவரை முத்துச்சரத்தில் பகிராத சமீபத்தில் ஃப்ளிக்கரில் பதிந்த சில படங்களின் தொகுப்பாக இந்தப் பதிவு.. முதியோர் நலமுடன் வாழப் பிராத்தனைகளுடன்..

#3
"ஒருவன் மனது ஒன்பதடா.. 
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா.."


#4
‘இருக்கும் இடத்தைவிட்டு 
இல்லாத இடம் தேடி 
எங்கெங்கோ அலைகின்றார்.. 
ஞானத்தங்கமே..!’


#5
‘அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை.. 
தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை..’
ஃப்ளிக்கர் தளத்தில் எக்ஸ்ப்ளோர் ஆன ஒளிப்படம்:
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/28815384851/
#6
‘நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு..’

#7
'எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..!'


#8
ஆன்றோரின் அனுபவம்..

#9
ஆயிரம் நூல்களுக்குச் சமம்..
*****

22 கருத்துகள்:

  1. படங்கள் அருமை மற்றும் அழகு அக்கா...

    பதிலளிநீக்கு
  2. முதல் பாட்டி கொஞ்சம் குறும்புப் பாட்டியாக இருக்கக் கூடும்!

    இரண்டாம் படத்தில் உள்ள பாட்டிக்கு உள்ளூற என்னவோ கவலை மனதை அரிக்கிறது.

    மூன்றாவது படத் தாத்தா முகத்தில் சின்னக்குறும்பு! 'எதற்கும் கவலைப் படாத - எப்பதும் மகிழ்ச்சியாய் இருக்கும்' மனோபாவம் தெரிகிறது!

    நான்காவது தாத்தா இந்த உழகைப் பார்த்து ஒரு எள்ளல் சிரிப்பு.

    ஐந்தாவது படத்திலிருப்பவருக்கு ஒன்று, அன்று விற்பனை சரியில்லை. அல்லது விற்பனை வரவை மீறிய செலவொன்று காத்திருக்கிறது. கவலை.

    அடுத்த படப்பாட்டி... யார் மேலோ சமீபத்து கோபம்.

    கடைசிப் படம் : "அவன் கிட்ட சொல்லிட்டேன்.. அவன் பார்த்துப்பான்!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் சரியே. ஒவ்வொரு மனிதருக்குள் உறங்கிக் கிடக்கும் கதைகளைப் பிரதிபலிக்கின்றன முகத்தில் தெரியும் உணர்வுகள்.

      இரண்டாவது படத்துக்கு எனக்கும் அப்படியே தோன்றியது. கவியரசரின் உள்ளம் என்பது ஆமை பாடலின் வரியான ‘நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி’ என்ற வரியைத் தலைப்பாக வைக்க நினைத்தேன். உங்கள் கருத்துக்குப் பின் இப்போது வைத்து விட்டேன்.

      நீக்கு
    2. ////இந்த உழகைப்//

      உலகை என்று படிக்கவும்!

      :))

      நீக்கு
  3. என் புகைபடமும் ஸ்ரீராமின் குறிப்புகளுடன் வந்திருக்க வேண்டாமோ நானும் ஒரு டைப்பான முதியவன்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன பிறகு சேர்க்காமல் இருக்கலாமா? 2013 தமிழ் சங்க சந்திப்புப் படங்களில் தேடியெடுத்து சேர்த்து விட்டேன். நன்றி GMB sir. ஸ்ரீராமின் குறிப்புக்குக் காத்திருப்போம்:).

      நீக்கு
    2. தோற்றத்தில் முதியவர்! மனதில் இளையவர்.

      :))

      நீக்கு
  4. ஒவ்வொரு படமும் அருமை. உபயோகமான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. என் கருத்துக்கும் மதிப்பு கொடுத்து படங்களை இணைத்ததற்கு நான் உங்களுக்கு சொல்ல விருபுவதை மின் அஞ்சலில் தெரிவிக்கிறேன் நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி ஜேம்ஸ் :). தகவல்கள் இணையத்தில் சேகரித்தவையே. சில படங்களின் தலைப்புகள் கவியரசரின் வரிகள்.

      நீக்கு