வியாழன், 20 அக்டோபர், 2016

தூறல்: 27 - புன்னகை; வளரி; வலம்; நவீனவிருட்சம் 100

கேட்பினும் பெரிதுகேள் “புன்னகை” ஜூலை 2016, கவிதை இதழ் 76_ல்  நான் தமிழாக்கம் செய்த ஜப்பானிய கவித்துளிகள்..

#
மூலம்: மட்சுவோ பஷோ

நன்றி புன்னகை!
_____________________________________
புதிய ஆரம்பம்
"சிறுநூல் வரிசை"


புன்னகை இதழின் இணைப்பாக மலர்ந்திருக்கிறது புதிதாக சிறுநூல் வரிசை, கவிதைகள் குறித்த இரண்டு கட்டுரைகளுடன். ஆசிரியரின்  15 பக்கங்கள் கொண்ட “சிறகுகளில் மிதக்கும் கவிதைவெளி”,  வாழ்வின் அழுத்தங்களிலிருந்து விடுபட கவிதை வாசிப்பதிலும் கவிதை வடிப்பதிலும் எப்படி மனிதர்கள் அடைக்கலம் தேடுகிறார்கள், ஆறுதல் பெறுகிறார்கள் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் தான் இரசித்த பல கவிதைகளோடு.

கவிதைப் பறவை:
“ ....யாராவது எங்கிருந்தாவது தங்களை விடுவித்து சுதந்திர வெளியில் பறக்க முயற்சிக்கிறார்கள். இப்படிப் பறக்கத் துணியும் இவர்களால் உண்மையில் விடுபட்டுவிட முடியாது. வெறுமனே பேச்சிற்காக, ஒப்புக்காக விடுபட நினைக்கிறவர்கள்.. இவர்கள் படைப்பாளிகளாகவும், வாசகர்களாகவும் தஞ்சமடைவது கவிதையெனும் வெளியில்தான். .. கவிதை தன்னை எழுதுகிறவனையும், தன்னை வாசிக்கிறவனையும் ஒரே சமயத்தில் திருப்திப்படுத்தி விடுகிறபோது அது இலக்கிய உச்சம் அடைகிறது. காலா காலத்திற்கும் எல்லாப் பறவைகளையும் எதிர்கொள்கிறது. வேண்டும் அளவு தன்னை உணவாக்குகிறது. ..” - க. அம்சப்ரியா

பூனையின் கடவுள் யாராய் இருக்கக்கூடும்? :
அடுத்த கட்டுரை கவிஞர். கோசின்ரா_வின் ‘பூனையின் கடவுள்’ நூல் குறித்த பார்வை. 

சிறுநூல் வரிசையின் இந்த முதல் இதழ் சமீபத்தில் காலமான கவிஞர் வைகறை அவர்களுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
****

வணி-புரட்டாசி “வளரி” இதழில்..


___________________

நன்றி வளரி!

***

சென்ற வருடம் சரஸ்வதி பூஜை அன்று காலமான, எழுத்தாளரும் விமர்சகருமான திரு. வெங்கட்சாமிநாதனின் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது இந்த வருடம் சரஸ்வதி பூஜை அன்று “வலம்”  மாத இதழ். 

அட்டையில் 2014_ஆம் ஆண்டு நடைபெற்ற சந்திப்பின் போது நான் அவரை எடுத்த ஒளிப்படம்:
சந்தா கட்டி அச்சு இதழாகவும் வாசிக்கலாம். அல்லது கூகுள் ப்ளேயில் பணம் செலுத்தி ஆன்லைனிலும் வாசிக்கலாம். நான் கூகுள் ப்ளே மூலமாக தரவிறக்கம் செய்து வாசித்தேன். இதழில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள், சந்தா, படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி என விரிவான விவரங்கள் இங்கே:

****
டந்த இருபத்து எட்டு ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் நவீன விருட்சம் சிற்றிதழின் நூறாவது அச்சு இதழ் வெளியாகியுள்ளது. விருட்சம் இணைய தளத்தில் வெளியாகி இங்கு நான் பகிர்ந்த “தனித்துவங்கள்” கவிதையுடன் மேலும் ஒன்றாக, இரு கவிதைகள் அதில் இடம் பெற்றுள்ளன.  260 பக்கங்களுடன் வெளியாகியுள்ள இந்த இதழில்  பங்களிப்பு செய்திருப்போரின் பட்டியலையும் , இதழ் வெளியீட்டு விழா குறித்த விவரங்களையும் இங்கே காணலாம்:

அட்டையில் 
அண்மையில் காலமான 
கவிஞர் திரு. ஞானக்கூத்தன்
நவீன விருட்சத்திற்கும், ஆசிரியருக்கும், படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்!
***
திவிடுவது வெகுவாகு குறைந்த விட்ட இந்த வருடத்தில் பக்கப் பார்வைகள் சற்று விரைவாகவே அடுத்த இலட்சத்தைத் தொட்டிருக்கிறது. பதிவுகளின் எண்ணிக்கை 777_யை எட்டிய நிலையில், ஆறு இலட்சம் பக்கம் பார்வைகளைத் தாண்டியிருப்பதை இன்றுதான் கவனிக்கிறேன். ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ‘உள்ளேன் ஐயா’ என சொல்லும் விதமாகவே பதிவுகள். சில மாதங்களில் 2 அல்லது 3. ஆயினும் தினம் பலர் ஏதேனும் பதிவுகளைத் தேடி வருவது தெரிகிறது. 

இனி எப்படி என எதுவும் சொல்ல முடியவில்லை. அதிக எண்ணிக்கையில் இல்லா விட்டாலும் அவ்வப்போது பதிந்தபடி விட்டு விலகாமல் இருக்க முயன்றிடுவேன்:). 

உடன் வரும் அனைவருக்கும் நன்றி!

டத்துளி:
அகவும் மயில்

****

8 கருத்துகள்:

  1. பகிர்வுகள் அனைத்தும் அருமை ராமலெக்ஷ்மி. தொடருங்கள். :)

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    பகிர்வுகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. கோடை மழைக்கு கவித்துளிகள் ரசிக்க வைக்கிறது. நிழற்படக் கவிதை மனதைத் தொடுகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு