சனி, 22 மார்ச், 2014

உலக தண்ணீர் தினம்: நீர் சேமிப்பு.. நீருக்காகக் காத்திருப்பு.. - ஓவியங்கள் ஆறு

இன்று உலக தண்ணீர் தினம். வருடத்தில் ஓர் நாள் நீர் வளத்தைக்  காக்கவென அனுசரிக்கப்படும் இத்தினத்துக்காக என்றில்லாமல் கடந்த பதினைந்து வருடங்களாக (1999_லிருந்து) “நீர் சேமிப்பு, நீருக்கான காத்திருப்பு” (SAVE WATER, WAITING FOR WATER) இந்த இரண்டு கருக்களை மட்டுமே எடுத்துக் கொண்டு சுமார் நானூறு ஓவியங்களைப் படைத்திருக்கிறார், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீஷாய்ல் பாட்டில்.
#1

கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் வசிக்கும் இவரை 2014 பெங்களூர் சித்திரச் சந்தையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது

# 2

மற்ற மாநிலங்களை விட நீர் வளம் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தாலும் கூட விவசாயிகள் மழை வராவிட்டால் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இயற்கையை மதித்து, காடுகளை.. மரங்களை.. இருக்கும் நீர் வளங்களை.. நாம் காக்காமல் போனால் நீருக்காகக் காத்தே இருக்கும் நிலை வருமென்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டுமென்பதே தன் நோக்கம் என்கிறார்.
#3



# 4 மழை வருமோ..

கிராமங்களை விடவும் நகரங்களில் நீரை வீணாக்கும் வழக்கம் அதிகமாகக் காணப்படுவதாக வருத்தப்பட்டார்.

#5

விழிப்புணர்வுக்காக இப்படி இவர் வரைகிற ஓவியங்கள் எல்லாமே விற்று விடுவதாகத் தெரிவித்தார்.
#6
சென்ற வருடம் மட்டும் சுமார் 50 ஓவியங்கள் விற்பனையானதாகவும், தான் சொல்ல நினைக்கு விஷயம்.., வாங்குபவர்களால் பரவலாக இன்னும் பல பேரைச் சென்றடைவதில் மனதுக்குத் திருப்தி கிடைக்கிறது என்றும், எல்லாவற்றுக்கும் மேலாகத் தண்ணீரை தான் மிகவும் நேசிப்பதாகவும் சொன்னார்.

#7

# இவரது பிஸினஸ் கார்டின் வடிவமைப்பும் கூட நீருக்கானக் காத்திருப்புடன்..

நீரின்றி அமையாது உலகு..
***

தொடர்புடைய முந்தைய பதிவு:
உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக 

10 கருத்துகள்:

  1. நீரின்றி அமையாது உலகு....

    சிறப்பான ஒரு ஓவியர் - அவரது நோக்கமும் நல்ல நோக்கம்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தன் திறமையை இவ்வளவு நல்ல நோக்கத்துக்காக செலவழிக்கும் இவரைப் பாராட்டாமல் இருக்க முடியுமா. அபூர்வமானா சிந்திக்கும் திறன் கொண்டவராக இருக்கிறார். வாழ்த்துகள்.அவரை அறிமுகாம் செய்ததற்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. தண்ணீருக்கு காத்து இருப்பு இல்லா நிலை வேண்டும்.

    வையகம் வாழ நீர் ஆதாரங்களை காத்து விழிப்புடன் செயல்பட்டால் இந்த நிலை வராமல் காத்துக் கொள்ளலாம்.
    அருமையான ஓவியாங்கள் சென்றுஅடைய வேண்டியவர்களை சென்று அடைந்து ஆவணம் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் ஓவியருக்கு.
    பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீஷாய்ல் பாட்டில் அவர்களின் எண்ணங்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அழகிய ஓவியங்கள். சிலர் இப்படி ஒரு பொதுநோக்குடன் அமைந்துவிடுகிறார்கள். பாராட்டப் படவேண்டியவர்.

    பதிலளிநீக்கு