சனி, 25 மே, 2013

உன்னிடத்தில் என்னை விட்டு.. - ரோஜாப் பூந்தோட்டம் - கபினி ( இறுதிப் பாகம்)

‘பேசும் படங்கள்’ பகுப்பின் நூறாவது பதிவு. ஏன் இந்தப் பெயரில் தொகுக்கத் தொடங்கினேன் என்பது இறுதியில்..

இப்போது நுழையலாம் பூங்காவினுள்..

[14_ல் ஓரிரு படங்கள் முன்னர் சில பதிவுகளில் பகிர்ந்திருந்தாலும், கபினி தோட்டத்து மலர்கள் என்ற வகையில் மீண்டும் இடம் பெறுகின்றன.]

#1 அரும்பும் மலரும்..

#2 முகம் மலர்ந்து..



#3 வெண்மையும் மென்மையும்..


#4 விடியும் பொழுதில் விழி திறக்கிறது..


#5 சுருட்டி விட்ட இதழ்களுடன்..


#6 வசீகரிக்கும் இளம் வண்ணத்தில்..


#7 காலைப் பனியில்..

#8 குளித்து நிற்கும் மற்றொன்று

#9 சோம்பல் முறிக்கிறதோ இளம் வெயிலில்..?
 

#10 இரட்டை ரோஜா

#11 ரோஜா மலரே..

 #12 ராஜக்குமாரி

#13 வார்த்தை இல்லை வர்ணிக்க..

#14 நேற்று இன்று நாளை..
***

மே 2008-ல் வலைப்பதிவு ஆரம்பித்த போது PiT அறிமுகமாகி அதற்கான போட்டிப்பதிவுகள் மட்டுமே புகைப்படத் தொகுப்புகளாக இருந்து வந்தன முத்துச்சரத்தில். கலையின் நுணுக்கங்களில் கவனம் செலுத்த ஆர்வம் ஏற்பட்டக் காலமும். இப்படியாக ஒன்றரை வருடங்கள் சென்ற நிலையில் டிசம்பர் 2009-ல் தேவதை இதழ் என் வலைப்பூ குறித்த அறிமுகத்தைப் ‘பேசும் படங்கள்’ எனத் தலைப்பிட்டுத் தந்த ஊக்கமே என்னை அதே பெயரில் புகைப்படப் பதிவுகளை வகைப்படுத்தித் தொகுக்கத் தூண்டுதலாக அமைந்தது. PiT போட்டிக்கான பதிவுகள் இதில் அடங்கா. அவை தனியாக 55.  பயணங்கள் உட்பட மற்ற புகைப்படப் பகிர்வுகள் பேசும் படங்களாக (Label) இத்தோடு 100 ஆகின்றன!
‘எது எதற்குதான் கணக்கு வைப்பது என்றில்லையா?’ என என்னை நானே கேட்டுக் கொண்டாலும் இந்தக் கணக்குகள் உற்சாகம் தருபவையாக இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்:)!
***

கபினி: பாகம் ஒன்று; இரண்டு; மூன்று.


29 கருத்துகள்:

  1. பேசும் படங்கள் பகுப்பின்
    நூறாவது பகிர்வுக்கும்
    அதனை ஒரு வண்ணமயமான
    பதிவாக்த் தந்து எங்களை
    மகிழ்வித்தமைக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மலர்ந்தும் மலராத
    நேத்துப் பறிச்ச ரோஜா...
    காட்டு ரோஜா.... முகத்தைக் காட்டு ரோஜா..

    என்று டி எம் எஸ் குரலில் பாடல் வரிகள் மனதில் தோன்றுகின்றன. படங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. //இதே பெயரில் 100 வது லேபில்// நிச்சயம் உற்சாகம் தரும் கணக்குதான். மலரினால் மலரும் மனங்கள்! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்...தொடருங்கள்....!

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு ரோஜாவும் அருமை...

    நூறாவது பகிர்வுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. மனசை அள்ளிக்கொண்டு போகிற அழகு. ரோஜா மாத்திரம் அல்ல. அதன் அழகை ரசித்த ராமலக்ஷ்மியின் அன்பு . அதை அந்த ரோஜாக்கள் நன்றி சொல்கின்றன.
    நிறைந்த மனதோடு உங்கள் கலை மென்மேலும் வளர் ஆசிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  7. அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள். பாரட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. காலைப் பனியில் குளித்த சிவப்பு ரோஜாவும், ஒளிவீசும் மஞ்சள் ரோஜாவும் மனதைப் பறித்தன. மற்றவையும் சிறப்பே. ஒரு செஞ்சுரியென்ன.. இன்னும் பல செஞ்சுரிகள் உங்களிடமிருந்து வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!

    பதிலளிநீக்கு
  9. கண்ணை விலக்க இயலவில்லை கபினித்தோட்டத்து மலர்களிடமிருந்து. சிதறிக்கிடக்கும் அழகைச் சிறைப்படுத்திய கண்களுக்கும் கைகளுக்கும் கருவிக்குமாய் அநேக பாராட்டுகள் ராமலக்ஷ்மி.. நூறைத்தாண்டியும் படங்கள் பேசிக்கொண்டிருக்கட்டும் எம்மோடு எண்ணிக்கையற்று.

    பதிலளிநீக்கு
  10. நூறாவ‌து பேசும் ப‌டங்க‌ள் ப‌திவுக்கு வாழ்த்துக‌ள் மேட‌ம்.. ம‌ல‌ர்க‌ள் உண்மையாக‌வே பேசுகின்ற‌ன.

    பதிலளிநீக்கு
  11. @ஸ்ரீராம்.,

    அன்றைய தினம் அவர் பாடிய பலபாடல்கள் எல்லோர் மனதிலும் அஞ்சலியாக.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  12. பேசும் படங்கள் 100க்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.உங்களுக்கு மட்டும் உற்சாகம் தரவில்லை ராமலக்ஷ்மி எங்களுக்கும் தான் உங்கள் பேசும்படங்கள் மகிழ்ச்சியை, உற்சாகத்தை தருகிறது.
    மலர்களிலே பலநிறம் கண்டேன் திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன் என்று பாடத் தோன்றுகிறது.
    ரோஜாக்கள் எல்லாம் அழகு, அற்புதம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. @கோமதி அரசு,

    வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு